Portal Rasmi SJKT ST Philomena Convent

Portal Rasmi SJKT ST Philomena Convent

Share

School

21/05/2026
Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 21/05/2026

Student Skill Development மற்றும் Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (Pertama) ஏற்பாட்டில் மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் துணையுடன் மாவட்ட அளவிலான Srinivasa Ramanujan Maths Competition (SRMC) 2026 எனும் போட்டி கடந்த 19 ஏப்ரல் 2026 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் நமது பள்ளி மாணவிகள் சிலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அம்மாணவிகளுக்கு வெற்றி பதக்கத்தை எடுத்து வழங்கிட Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (PERTAMA) தலைவர் திரு. விஜய் அவர்கள் நம் பள்ளிக்குச் சிறப்பு வருகையளித்தார். பரிசினை வழங்கிய திரு. விஜய் அவர்களுக்கும் வெற்றி பெற்ற நமது பள்ளி மாணவிகளுக்கும் SPC குடும்பத்தினரின் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

Student Skill Development dan Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (PERTAMA) dengan sokongan Persatuan Guru Besar SJKT Malaysia telah menganjurkan pertandingan peringkat daerah Srinivasa Ramanujan Maths Competition (SRMC) 2026 pada 19 April 2026. Dalam pertandingan tersebut, beberapa orang murid perempuan sekolah kami telah mengambil bahagian dan berjaya memperoleh kemenangan yang membanggakan.

Bagi menyampaikan pingat kemenangan kepada para murid, Presiden Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (PERTAMA) iaitu En.Vijay telah hadir khas ke sekolah kami. SPC sekeluarga mengucapkan setinggi-tinggi tahniah dan syabas kepada murid-murid yang berjaya serta merakamkan penghargaan kepada Encik Vijay atas kesudian beliau menyampaikan hadiah kepada para pemenang.

21/05/2026

தமிழ் மொழியின் செம்மையையும், திருக்குறள் நூலின் உயர்ந்த அறப்பொருள்களையும் மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் தேசிய திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சி கடந்த 17.05.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நமது பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று திருக்குறள்களை தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒப்புவித்தனர். அவர்களின் திறமையும் தன்னம்பிக்கையும் அனைவரையும் கவர்ந்தது.

Dengan tujuan memupuk kecintaan terhadap keindahan bahasa Tamil serta menghayati nilai-nilai murni yang terkandung dalam Tirukkural, Program Menghafaz dan Melafazkan Tirukkural Peringkat Kebangsaan telah berlangsung dengan jayanya pada 17.05.2026. Dalam program tersebut, murid-murid sekolah kami telah mengambil bahagian dengan penuh semangat serta melafazkan tirukkural dengan jelas dan penuh penghayatan. Kebolehan dan keyakinan mereka berjaya menarik perhatian semua yang hadir serta menyerlahkan keunggulan bahasa dan budaya Tamil. Penyertaan cemerlang para murid turut mendapat pujian daripada guru-guru dan ibu bapa.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 17/05/2026

15.05.2026 அன்று நமது பள்ளியின் துணைத்தலைமையாசிரியர் திருமதி சுபா காந்தி முத்து அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியை திருமதி சுபா காந்தி அவர்கள் இப்பள்ளிக்கு ஆற்றிய பங்கு மிகவும் பெரிது. அவற்றைப் போற்றும் வகையில் அவருக்கு இப்பணி நிறைவு விழா சிறப்பாக நடத்தப்பட்டது. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கு ஆலோசகராகவும் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் நமது பள்ளியின் மேம்பாட்டிற்குப் பல வழிகளில் துணைப்புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியை திருமதி சுபாகாந்தி அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்விற்குச் சிறப்பு வருகையளித்த பிற பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், தன் பணியைச் செவ்வனே செய்த ஆசிரியை திருமதி சுபாகாந்தி அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Pada 15.05.2026, majlis persaraan Penolong Kanan sekolah kami, Puan Subar Gandi Mutho telah berlangsung dengan meriah dan penuh penghormatan. Beliau telah banyak menyumbang jasa dan bakti kepada masyarakat serta sekolah sepanjang tempoh perkhidmatannya. Sebagai tanda penghargaan terhadap segala pengorbanan dan sumbangan beliau, majlis persaraan ini telah diadakan dengan penuh istimewa.
Beliau juga merupakan seorang penasihat yang dihormati dalam kalangan guru serta pembimbing terbaik kepada para murid. Selain itu, beliau turut memainkan peranan penting dalam pelbagai usaha pembangunan dan kemajuan sekolah.
Pihak sekolah ingin merakamkan setinggi-tinggi penghargaan dan ucapan terima kasih kepada para guru besar, guru-guru dari sekolah lain, rakan-rakan serta ahli keluarga yang sudi hadir bagi memeriahkan majlis ini. Sekalung penghargaan juga ditujukan khas kepada Puan Subar Gandi atas segala jasa, dedikasi dan komitmen beliau sepanjang menjalankan tugas dengan cemerlang.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 08/05/2026

Majlis Sukan Sekolah Daerah Kinta Utara ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் நமது பள்ளி மாணவிகள் சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.
Plate Event பிரிவில் மாணவி ராகவர்ஷினி மகேஸ்வரன் சிறப்பாக விளையாடி முதல் நிலையில் வென்றுள்ளார்.

P12 பிரிவில் மாணவி கிருபாகரி நல்ல ராஜ் ஆறாம் இடத்தையும், மாணவி நாவியா நாகராஜன் எட்டாம் இடத்தையும் பெற்று Majlis Sukan Sekolah-Sekolah Perak (MSSPK) மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

Tahniah diucapkan kepada murid-murid yang telah mengharumkan nama sekolah dalam pertandingan skuasy peringkat Majlis Sukan Sekolah Daerah Kinta Utara.
Bagi kategori Plate Event, murid Raagavarsheneey Magasvaran telah berjaya muncul sebagai Johan.
Manakala dalam kategori P12, Kerubahkery R Nalla Raj telah memperoleh tempat keenam dan Naaviah Nagarajan p**a berjaya mendapat tempat kelapan.
Syabas dan tahniah turut diucapkan kerana Kerubahkery dan Naaviah telah berjaya melayakkan diri ke pertandingan peringkat Majlis Sukan Sekolah-Sekolah Perak (MSSPK).
Semoga kejayaan ini menjadi inspirasi kepada murid-murid lain untuk terus cemerlang dalam bidang sukan dan kokurikulum.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 07/05/2026

வடகிந்தா மாவட்ட அளவிலான 'Bridge Building' எனும் போட்டியின் முதல் சுற்றில் நமது பள்ளி மாணவிகள் லித்திக்காஸ்ரீ யமுனேஸ்வரன், கிருபாகிரி நல்ல ராஜ் மற்றும் ஞானஅரசி மதிவண்ணன் ஆகியோர் சிறப்பாகக் கலந்து கொண்டு இரண்டாம் நிலையில் வெற்றி வாகை சூடியுள்ளனர். வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர் திருமதி பூங்கொடி அவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.🌹

Pertandingan Bridge Building peringkat daerah Kinta utara telah menyaksikan murid-murid sekolah kita, Littikkasrie Yamuneswaran, Kerukery Nalla Raj dan Nyaanaarasi Mathivannan, berjaya menyertai saringan 1 pertandingan tersebut dengan cemerlang serta meraih tempat kedua.
Tahniah dan syabas diucapkan kepada para murid atas kejayaan yang membanggakan ini. Penghargaan turut diberikan kepada guru pembimbing, Puan Punggodi, atas usaha dan dedikasi beliau dalam melatih para peserta.
Semoga kejayaan ini menjadi inspirasi untuk terus melakar kecemerlangan pada masa akan datang. Seluruh warga SPC mengucapkan setinggi-tinggi tahniah dan penghargaan. 🌹

07/05/2026

Terengganu International Science Fair (TISF) எனும் புத்தாக்க போட்டியில் நமது பள்ளி மாணவி தர்வினா லிங்காஸ்வரன் சிறப்பாகக் கலந்து கொண்டு தங்க பதக்கம் பெற்றுள்ளார். மாணவி மேலும் இத்துறையில் சிறந்து விளங்க SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

Terengganu International Science Fair (TISF) merupakan pertandingan inovasi yang telah disertai dengan cemerlang oleh murid sekolah kita, Tharrviena Lingaswaran, dan berjaya meraih pingat emas. Kejayaan ini sekali gus mengharumkan nama sekolah.
Semoga murid ini terus cemerlang dan melakar lebih banyak kejayaan dalam bidang sains serta inovasi. Tahniah dan syabas diucapkan daripada seluruh warga SPC atas pencapaian yang membanggakan ini.

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 04/05/2026

மலேசிய சைவ சமயப் பேரவை ஏற்பாட்டில் கோலாலம்பூர் செந்தோசா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டின் தேசிய அளவிலான திருமுறை பெருவிழா போட்டியில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த நமது பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடி சுழற்கிண்ணத்தைப் பெற்றனர்.

யாஷ்னா கஜேந்திரன் - இரண்டாம் பரிசு

சஞ்சனா வினோத் - மூன்றாம் பரிசு

கஜோரிக்கா விநாயகசேகரன் - நான்காம் பரிசு

சிறப்பாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்கும் அதிக பங்கேற்பு இருத்தமைக்கு நமது பள்ளிக்குச் சுழற்கிண்ணம் வழங்கப்பட்டதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

மேலும், மலேசிய சைவ சமயப் பேரவை மற்றும் ஈப்போ சைவ சமய மன்ற தலைவருமான உயர்த்திரு டாக்டர் பழனியப்பன் எட்டி கவுண்டர் அவர்களுக்கும் நமது பள்ளியின் சமய வகுப்பு ஓதுவார் உயர்த்திரு ஐயா சண்முகம் ஆர்த்தன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறோம்.

Dalam Pertandingan Thirumurai Peringkat Kebangsaan Tahun 2026 yang dianjurkan oleh Majlis Saiva Malaysia dan diadakan di Sekolah Tamil Sentosa, Kuala Lumpur, para pelajar perempuan dari sekolah kita yang mewakili negeri Perak telah menunjukkan prestasi cemerlang serta berjaya merangkul kemenangan dan seterusnya membawa p**ang piala pusingan.
Senarai pemenang:
Yashna Kajendran – Tempat Kedua
Sanjana Vinoth – Tempat Ketiga
Kajorikka Vinayagasekaran – Tempat Keempat
Tahniah dan syabas diucapkan kepada semua pelajar atas pencapaian cemerlang ini. Selain itu, sekolah kita turut dianugerahkan piala pusingan atas penyertaan yang aktif dan memberangsangkan. Setinggi-tinggi penghargaan dan ucapan tahniah daripada keluarga SPC kepada semua pelajar yang terlibat.
Kami juga ingin merakamkan setinggi-tinggi penghargaan kepada Majlis Saiva Malaysia serta Presidennya, Yang Berbahagia Dr. Palaniyappan Etti Gounder, dan juga kepada guru kelas agama sekolah kita, Yang Dihormati Tuan Shanmugam Aarthan, atas segala usaha dan bimbingan yang telah diberikan.

30/04/2026

நமது பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் மேகவர்ஷினி த/பெ சுரேந்திரன், பிரதிஷா, அனுபிரதா த/பெ தர்மபாலன், கேஷவி த/பெ கார்திகன் ஆகியோர் புந்தோங் தேசியப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் ஆரம்பப் பள்ளிகளுக்கிடையிலான 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளனர்.
சிறப்பாகக் கலந்து கொண்டு நமது பள்ளிக்குப் பெருமையைச் சேர்த்த மாணவிகளுக்கு SPC குடும்பத்தினரின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

KESHAVI A/P KARTHIGAN, ANUPRATHA A/P THARMABALAN, MEGAVARSHINI A/P SURENTHIRAN, PRADEESHA telah berjaya memenangi Naib Johan dalam Acara 4×100 Meter larian antara sekolah rendah di Sukan Tahunan SK Buntong. Warga SPC mengucapkan tahniah dan syabas!

Photos from Portal Rasmi SJKT ST Philomena Convent's post 30/04/2026

மலேசிய கல்வி இலாகாவின் 10 நிமிடம் வாசிக்க வாரீர் எனும் திட்டத்தின்படி 23.04.2026 - அன்று அனைத்து SPC குடும்பத்தினரும் காலை மணி 11.00 முதல் 11.10 வரை இவ்வாசிப்புத் திட்டத்தில் கலந்து கொண்டு வாசித்தனர்.
Program Jom Baca Bersama 10minit telah dilaksanakan di SPC. Seluruh warga SPC telah meluangkan masa selama 10 minit untuk membaca.

Want your school to be the top-listed School/college in Ipoh?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


NO 45 B, Jalan SILIBIN
Ipoh
30100

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00