Sashikala Raviraj

Sashikala Raviraj

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sashikala Raviraj, Political Candidate, Jaffna.

Nadaraja Raviraj, a member of the Tamil National Alliance (TNA) and a human rights lawyer, was shot in Colombo at close range by unidentified gunman on a motorbike at around 8.30am on November 10 2006 as he got into his car after giving a TV interview.

18/05/2025

அழிந்து போ பேரினவாதமே
😭
பேரினவாதம் தன் கோரக் கரங்களால் விழிகளைப்
பிடுங்கி வீசியது
குரல்வளைகளை நெரித்து
கொன்றொழித்து
குண்டுகள் வீசி
குற்றுயிராக்கியது
போதாதென்று
இறுதி யுத்தத்திலே
தாய் என்றும்
சேய் என்றும்
கர்ப்பிணி என்றும்
கன்னிப் பெண் என்றும்
பாராமல்
கடலிலும் தரையிலும்
தஞ்சமடையச் சொல்லி
தமிழ் இனப்
படுகொலை செய்த
பேரினவாதமே!
நீ அழிந்தே போய்விடு.
என்றும் உங்கள்
-அஷ்ரப் -
சாவகச்சேரி

18/05/2025

மே18,முள்ளிவாய்க்கால் - யுத்தத்தின் முடிவல்ல, நீதிக்கான தொடக்கம்!

18/05/2025
16/11/2024

அன்பிற்கினிய யாழ்- கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வாக்காளப் பெருமக்களே,
நடைபெற்ற பொதுத்தேர்தலில் நான் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கோடு இரவு பகலாக உழைத்த ஆதரவாளர்கள், தொண்டர்கள் , வாக்காளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்றும் மக்கள் சேவையில் உங்களுக்காக பணியாற்றுவேன் என்பதனையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் .
நன்றி
இங்கனம்
சசிகலா இரவிராஜ்.

11/11/2024

11/11/2024
அன்புசால் யாழ்- கிளிநொச்சி மாவட்ட வாக்காளர் பெருமக்களே,
படுகொலை செய்யப்பட்ட முன்னைநாள் நாடளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜ் அவர்களின் துணைவியராகிய திருமதி ரவிராஜ் சசிகலா ஆகிய நான் 2024ம் ஆண்டு பாரளுமன்ற பொதுத்தேர்தலில், யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் சங்குச் சின்னத்தில் இலக்கம் 7இல் போட்டியிடுகிறேன்.
அண்மையில் சில நாட்களாக எனது பேராதரவாளர்களாகிய வாக்காளப் பெருமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சில வக்குரோத்து அரசியல் கட்சிகளால் எனது சின்னம்-கட்சி தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி சில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக, எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்பதனையும், எனது சின்னமாகிய சங்குச் சின்னத்திற்கும், விருப்பு இலக்கமாகிய 7க்கும் வாக்களிப்பதன் மூலம், என்னை நீங்கள் பாரளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யலாம் என்பதனை மீண்டும் உங்களுக்கு அன்புரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கும் செல்வோம்! எதிலும் வெல்வோம்!
நன்றி

இவ்வண்ணம்,
மக்கள் சேவையில்

திருமதி ரவிராஜ் சசிகலா
சின்னம் - சங்கு
விருப்பிலக்கம் – 7

11/11/2024

கிளிநொச்சி பிரச்சார நடவடிக்கையின் போது.
#ஜனநாயகதமிழ்த்தேசியகூட்டணி #சசிகலாரவிராஜ்

11/11/2024

திருமதி இரவிராஜ் ச சிகலா அவர்கள் தனது பிரச்சாரப் பணிகளுக்காக மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்து , கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைந்தார் . அவருரோடு இணைந்து பயணம் செய்த மக்கள் அவருடைய எளியையைப் பாராட்டி , முன்னோரு காலத்தில் பருத்தித்துறைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த திரு துரைரத்தினம் அவர்களோடு ஒப்பிட்டு இத்தகைய எளிமையாளர்களே மக்கள் தலைவர்களாக வரவேண்டும் என பேசிக்கொண்டார்கள்.

Photos from Sashikala Raviraj's post 11/11/2024

கிளிநொச்சி மாவட்டத்தில் திருமதி இரவிராஜ் அவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று நடந்தது .
அதிகளவான ஆதரவாளர்கள் பங்கேற்றனர் .
மாமனிதரின் எண்ணங்களைச் சுமந்தவர்களாக கிளிநொச்சி மக்கள் காணப்படுகிறார்கள்.
#ஜனநாயகதமிழ்த்தேசியகூட்டணி #சசிகலாரவிராஜ்

11/11/2024

2024 -11-11 ஈழநாடு பத்திரிகை செய்தி.

11/11/2024

2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் சங்கு சின்னத்திற்கு வாக்களிப்போம். விருப்பு வாக்காக 7 ஆம் இலக்கத்திற்கு புள்ளடி இடுங்கள்.
#ஜனநாயகதமிழ்த்தேசியகூட்டணி #சசிகலாரவிராஜ்

10/11/2024

மாமனிதர் நடராசா இரவிராஜ் அவர்களின் பாதையில் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு , தமிழர்களின் தேசியப்பிரச்சனையை கொண்டு செல்லக் கூடிய , அறிவும் ஆற்றல் நிறைந்தவராக திருமதி இரவிராஜ் ச சிகலா அவர்கள் காணப்படுகிறார் . இதனை நேற்று அவர் வழங்கிய சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி பறைசாற்றுகிறது .

10/11/2024

இரவிராஜ் அவர்களின் கோட்டையில் ஆதரவு மாறாதா குரல் ..
#ஜனநாயகதமிழ்த்தேசியகூட்டணி #சசிகலாரவிராஜ்

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Jaffna