Kohu Srikugan SK

Kohu Srikugan SK

Share

Magazine

13/06/2026

St. Anthony's Shrine Colombo 13

13/06/2026

St. Anthony's Shrine Colombo 13

13/06/2026

பிட்டியம்பதியாளுக்கு இன்று கொடியேற்ற பெருவிழா…..

11/06/2026

இன்று தொடங்கும் உலகக்கிண்ண உதைபந்தாட்டம்

மூன்று நாடுகள் இணைந்து முதற்தடவையாக நடாத்தும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள், இன்று மெக்சிக்கோ நாட்டின் மெக்கிக்கோ சிற்றி மைதானத்தில் ஆரம்பக்கொண்டாட்டங்களுடன் தொடங்குகிறது.

முதற்போட்டியில் மெக்சிக்கோ தென்னாபிரிக்காவோடு மோதவிருக்கிறது.

மெக்கசிக்கோவில் இன்று தொடங்கும் போட்டியைத் தொடர்ந்து , நாளை கனடாவிலும் நாளைமறுதினம் அமெரிக்காவிலும் முதற்போட்டிகள் பிரமாண்ட ஆரம்ப விழாக்களுடன் தொடங்கவிருக்கின்றன.
மொத்தத்தில் வட அமெரிக்க தென்னமரிக்க கண்டங்கள் உள்ளடக்கியதாக இருபெரும் கண்டங்களில் நடைபெறும், உதைபந்தாட்ட உலகக்கிண்ண போட்டிகளாகவும் இது பதிவாகிறது.

இந்தத்தடவை, மேலும் நான்கு நாடுகள் சுற்றுப்போட்டிக்குள் உள்ளே வர , மொத்தமாக 48 நாடுகள் இந்த உலகக்கிண்ணத்துக்காக மோதவிருக்கின்றன.
அதனடிப்படையில் 104 போட்டிகளைக்கொண்ட இந்த உலகக்கிண்ணப் போட்டிகள்,
ஒருமாதம் கடந்த- 39 நாள்களைக்கொண்ட ஒரு நீண்டநாள் உதைபந்தாட்ட கொண்டாட்டமாக இருக்கும்.

ஒவ்வொரு குழுக்களிலும் முதலிரண்டு இடம்பெறும் அணிகளோடு ,12 குழுக்களில் முன்னணியில் 8 இடங்களில் இருக்கும் மூன்றாமிட அணிகளும் இணைந்து ,
சுற்று 32 போட்டியில் மோதி அவற்றில் வெற்றிபெற்ற 16 அணிகளும் மோதி எட்டாகி , பின்னர் நான்காகி , இறுதிப்போட்டி வரும் ஜூலைமாதம் 19 ம் திகதி , அமெரிக்காவின் நியூயோர்க்கில் , நியூஜேர்சி மைதானத்தில் நடக்கும்.

இந்தத் தடவையும் பல்வேறு எதிர்வுகூறல்கள் இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்மில்லாத உலகக்கிண்ணமாக இந்தத்தடவையும் இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.

கடந்த வருடம் பிரான்ஸ் பனால்டி வாய்ப்பில் கிண்ணத்தை தவறவிட , நட்சத்திரவீரர் மெஸ்ஸியின் ஆஜென்ரீன அணி கிண்ணத்தை வெற்றிகொண்டது வரலாறானது.
அதுபோலத்தான் இந்தத்தடவையும் , வலுவான அணிகள் என்ற பார்வையில் ஸ்பெயின்,பிரான்ஸ் ,இங்கிலாந்து,
ஜேர்மனி ,போர்த்துக்கல், பிரேசில் ஆஜென்ரீனா,மெக்சிக்கோ ,உருகுவே,நெதர்லாந்து ,குரெசியா,மொரோக்கோ,என்று அணிகளை பட்டியலிடுகின்றார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

அதைவிட உலகக்கிண்ண உதைபந்துக்கு ஒரு சென்ஷர் வேறு பொருத்தப்பட இருக்கிறதாக சொல்லப்படுகிறது.
அது ஆட்டத்தில் எல்லா உதைகளையும் பதிவு செய்யும். பந்தை தொட்டார்களா? காலை தொட்டார்களா? , தடக்கி விழுந்தார்களா? அல்லது வேணுமென்றே விழுந்து நடிக்கிறார்களா? என்பதை எல்லாம் இலகுவாகவே இனி கண்டுபிடிக்க வாய்ப்பாக இருக்குமோ என்னவோ!

மொத்தத்தில் இன்று தொடங்கும் 23 வது உலகக்கிண்ணம் , பலத்த எதிர்பார்ப்புடன் மெக்சிக்கோ நகரை நோக்கி உலக விளையாட்டு ரசிகர்களை நகர்த்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை

10/06/2026

குடிநீர் போத்தல்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று (10) முதல் அதிகரிப்பு.
500ml - 999ml - 80/-
1L - 1.499L - 120/-
1.5L - 1.999L - 150/-
2L - 2.499L - 180/-
5L - 6.999L - 400/-

10/06/2026

வீரவன்ச - கம்மன்பில தலைமையில் சத்தியாக்கிரகம் என்ற பெயரில் புறக்கோட்டையில் நடந்து வந்த கூத்து முடிவுக்கு வந்து இருக்கிறது.

சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவதாகக் கூறிக் கொண்ட ஆசாமிகள் விசாரணை அதிகாரிகளிற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளிற்கும் எதிராக அச்சுறுத்தல் விடுத்து அவர்களின் மன தைரியத்தைக் குலைத்துப் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

இத்தனைக்கும் இவர்கள் வெறும் பத்துப் பதினைந்து பேர்.

ஏன் இந்தக் கும்பலை துரத்தாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருந்தது.

வீரவன்சவின் தம்பி, நாற்பது வாகனங்களை சட்டவிரோதமாகப் பாவித்த விவகாரத்தில் வெளிநாடு செல்லத் தடை என்ற அறிவிப்பும், வீரவன்சவின் ஊடகச் செலாளர் 22ம் திகதி வரை விளக்கமறியல் என்ற அறிவிப்பும் இன்று காலையில் ப்ரேக்கிங் நியூஸாக முதலில் வந்தது.

அத்தோடு பயங்கரவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து சலே காய்நகர்த்திய விவகாரம் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக வாசிக்கப்பட்டது.புலனாய்வு ஊடகவியலாளர்கள் உட்பட ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாய் ஆர்வம் உள்ள அனைவரும் தெரிந்து வைத்திருக்கும் கதை இது. அதைத்தான் அமைச்சர் ஆனந்த விஜேபால புதிதாய் வாசித்து இருந்தார்.

அந்த அறிவிப்போடு சத்தியாக்கிரகம் முடிவுக்கு வந்துவிட்டது.ஒரு கண்ணீர்ப் புகை செலவின்றி ஆட்களைக் காலி செய்துவிட்ட்டார்கள்.

சீ ஐ டி பணிப்பாளர் ஷானி அபேசகரவை தலைமை விசாரணைக் குழுவில் இருந்து அகற்றித் தனக்கு முறையான அறை ஒன்றைத் தரும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றார் சாலே.

ஷானியின் வதை முகாமில் இருந்து சலே அகற்றப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என்றிருந்தார் விமல் வீரவன்ச.

கடைசியில் எதுவும் நடக்கவில்லை.

சலே பெப்ரவரி 25 முதல் தடுப்புக்காவலில் இருக்கிறார். முதல் மூன்று மாதங்களிலும் அவர் எந்த முறைப்பாடும் செய்யவில்லை.ஆனால் தன் ஆஸ்தான குரு ஜீ கோட்டாபயவிற்கு பயணத் தடை விதிக்கப்பட்ட பிறகுதான் அசாதாரண கோலங்களைக் காட்டினார். யாரோ வெள்ளை ஆடையில் வந்து தன்னைச் சித்திரவதை செய்வதாகக் கூறினார். உண்மையில் அது இறந்து போன ஆவிகளோ தெரியாது.

மேலும் சாப்பாடு சரி இல்லை என்றார். அறையில் எலி ஓடுது என்றார். சாப்பாட்டைத் துறந்தார்.

சலே மீது சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசேட மனநல தடயவியல் மருத்துவ குழுவை கொழும்பு கோட்டை இன்று நீதவான் நீதிமன்றம் நியமித்துள்ளதாம்.

சலே தன் ஐ போன் மற்றும் லேப்டப்பின் பாஸ்வேர்டுகளை இதுவரை வழங்கவில்லை என்கிறது சீ ஐ டி. இதுவே எம்மைப் போன்ற சாமானியர்களாய் இருந்தால் என்ன ஆகி இருக்கும். ஆக, சலே மீது இன்னும் ஒரு கீறலும் விழவில்லை. ஆனால் சலே இற்கு எதிராக வழங்கப்பட்ட ரகசிய சாட்சியங்களால் தான் அவர் உண்மையைச் சொல்ல நொறுக்கப்பட்டு இருக்கிறார்.

உண்மையில் இலங்கையில் இதுவரை PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான கைதிகளில் சுரேஷ் சாலே அளவிற்கு சூபர் லக்சரி கைதியாக யாருமே இருந்ததில்லை.மில்க் டொபி, ப்ரைட் ரைஸ், ப்ரெஷ் மில்க் எல்லாம் வழங்கப்பட்டதாகவும் சுரேஷ் சாலே ஆஸ்கார் நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் கோட்டை நீதிமன்றத்தில் சொல்லி இருந்தார்.

சலே எப்படியும் தடுப்புக்காவலிற்குத்தான் செல்லவேண்டி இருக்கிறது.

அப்படி அல்லாமல்

ப்ரூனே சுல்தானின் மாளிகையில் இருக்கும் ஒரு அறையை உருவாக்கி அதில் இத்தாலி கட்டிலும் இங்கிலாந்து மெத்தையும் போட்டு மைசூர் சந்தனத்தில் மாலைப் பொழுதில் நீராடப் பிரம்மாண்டமான சரிகை வேலைப்பாடுகளுடன் ஒரு குளியலறையும் அமைத்து இடைக்கிடை ஒட்டகப் பால் அல்வாவும் காஷ்மீர் அப்பிளுமா கொடுக்க முடியும்.

10/06/2026

இயக்குநர் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

09/06/2026

தற்போது இலங்கையில்!!!!

09/06/2026

🚨உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மற்றும் திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியல் தொடர்புள்ள நபர்கள் குழு ஒன்று, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளில் மறைமுகமாகத் தலையிட்டு, இடையூறு விளைவிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தடுப்புக் காவல் உத்தரவுகளின் பேரில் தமது காவலில் இருந்த முன்னாள் புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலேவை, அவரது உடல்நிலையைக் கருத்திற் கொண்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

இவ்வாறு மறைமுகமாகத் தலையிட்டு, இடையூறு விளைவிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியால் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, முன்னர் வெளியிடப்படாத அரசியல் தொடர்புகள் அம்பலமாவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு நியாயமான சந்தேகம் இருப்பதாக (CID) நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தது.

31/05/2026

Ceypetco fuel prices will be increased from midnight today (30/05).

Auto Diesel increased by Rs.15 to Rs.407

Super Diesel by Rs.20 to Rs.478

Petrol Octane 92 by Rs.24 to Rs 434

Octane 95 by Rs. 25 to Rs.495

Kerosene by Rs.20 to Rs.285

Want your public figure to be the top-listed Public Figure in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo