San Ramon Tamil School - SRTS
San Ramon Tamil School (SRTS) is a 501(c)(3) nonprofit dedicated to preserving one of the world’s oldest living languages.
Serving the SF Bay Area for over 12 years, we offer Tamil programs for children and adults, powered by passionate volunteers.
05/20/2026
#2026
05/13/2026
05/13/2026
05/13/2026
05/09/2026
இறுதி வாரம் 32
அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றைய தன்னார்வலர்களுக்கு வணக்கம்.
இந்த வாரத்தோடு நிகழும் கல்வியாண்டு நிறைவுறுகிறது. கடந்த 31 வாரங்களும் நீங்கள் வந்திருந்து பள்ளி சிறப்பாக இயங்க ஒத்துழைத்தமைக்கு நன்றி. இறுதித்தேர்வு இந்த வாரம் நடைபெறும், வினாத்தாள்கள் வழக்கமான வழியில் உங்களை வந்தடையும். இறுதித்தேர்வு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும், வினாத்தாட்களை மதிப்பீடு செய்து வலை தளத்தில் பதிவேற்றம் செய்த பிறகே நீங்கள் பள்ளியிலிருந்து வெளியேற வேண்டும்.
புத்தகங்களை திருப்பியளித்தல்: ஆசிரியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட புத்தகங்கள் மற்ற இணைப்புகளை தவறாமல் அலுவலகத்தில் திரு பாலாஜி அவர்களிடம் திருப்பியளியுங்கள். வகுப்பு பட்டய சான்றிதழ்களில் ஆசிரியர்கள் கையொப்பம் இட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தவறாது ஒப்பமிடுங்கள். நன்றி!
கடந்த வாரம் பண்பாட்டுத் திருநாள் வெகு சிறப்புடன் நடைபெற நீங்கள் அளித்த பேராதரவும் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது.
உங்களின் வருகையை திறன்பேசி மூலம் பதிவு செய்யுங்கள். உங்களிடம் திறன் பேசி இல்லையெனில் சக தன்னார்வலரின் திறன்பேசி மூலமும் நீங்கள் பதிவு செய்யலாம்.
வழக்கம் போல் காலை வணக்கத்துடன் பள்ளி தொடங்கும். இந்த வாரம் மழலையர் 1 மாணவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். (ஆசிரியர் திருமிகு சிந்து அவர்கள்), மழை இருப்பின் உள்ளரங்கில் நடை பெறும்(MPR), வரும் கல்வியாண்டின் முதல்வர் திருமிகு ஆனந்தி சுரேஷ் அவர்கள் காலை வணக்கக்கூட்டத்தை ஒருங்கிணைத்து இயக்குவார்.
கவனத்தில் கொள்ளவேண்டிய நாள்கள்:
இறுதித்தேர்வு நாள் மே 10, 2026
பட்டமளிப்பு/ஆண்டு விழா மே 17, 2026
முதல்வர்கள் (நாதன் இராமநாதன், இந்திரா தங்கசாமி)
சான் ரமோன் தமிழ்ப்பள்ளி
05/02/2026
வாரம் 31
அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றைய தன்னார்வலர்களுக்கு வணக்கம்.
பள்ளி வழக்கமான நேரத்தில் 31ஆம் வாரத்திற்கான பாடத்திட்டத்தோடு தொடங்கும். மதிப்பெண்கள், மாணாக்கர்களின் திறன் பற்றிய மதிப்பீடுகளை பள்ளி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.
நன்றி: தன்னார்வலர் கூடுகைக்கு வகை வகையான உணவுகளோடு வந்திருந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி!
உங்களின் வருகையை திறன்பேசி மூலம் பதிவு செய்யுங்கள். உங்களிடம் திறன் பேசி இல்லையெனில் சக தன்னார்வலரின் திறன்பேசி மூலமும் நீங்கள் பதிவு செய்யலாம்.
வழக்கம் போல் காலை வணக்கத்துடன் பள்ளி தொடங்கும். இந்த வாரம் அடிப்படை நிலை பிரிவு அ மாணவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். (ஆசிரியர் திருமிகு மீனாள் அவர்கள்), மழை இருப்பின் உள்ளரங்கில் நடை பெறும்(MPR), வரும் கல்வியாண்டின் முதல்வர் திருமிகு ஆனந்தி சுரேஷ் அவர்கள் காலை வணக்கக்கூட்டத்தை ஒருங்கிணைத்து இயக்குவார்.
இந்த வாரம் பண்பாட்டுத் திருநாள் நிகழ இருக்கிறது, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை இதில் பங்கேற்று பயனுற அறிவுறுத்துங்கள்.
கவனத்தில் கொள்ளவேண்டிய நாள்கள்:
பண்பாட்டுத் திருநாள் கொண்டாட்டம் மே 03, 2026
இறுதித்தேர்வு நாள் மே 10, 2026
பட்டமளிப்பு/ஆண்டு விழா மே 17, 2026
முதல்வர்கள் (நாதன் இராமநாதன், இந்திரா தங்கசாமி)
சான் ரமோன் தமிழ்ப்பள்ளி
வாரம் 30
அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றைய தன்னார்வலர்களுக்கு வணக்கம்.
பள்ளி வழக்கமான நேரத்தில் 30ஆம் வாரத்திற்கான பாடத்திட்டத்தோடு தொடங்கும். மதிப்பெண்கள், மாணாக்கர்களின் திறன் பற்றிய மதிப்பீடுகளை பள்ளி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.
நினைவூட்டல்: தன்னார்வலர் கூடுகை, மதிய உணவிற்காக தன்னார்வலர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளும் நிகழ்வு ஞாயிறு அன்று, தவறாமல் வருக!
உங்களின் வருகையை திறன்பேசி மூலம் பதிவு செய்யுங்கள். உங்களிடம் திறன் பேசி இல்லையெனில் சக தன்னார்வலரின் திறன்பேசி மூலமும் நீங்கள் பதிவு செய்யலாம். வழக்கம் போல் காலை வணக்கத்துடன் பள்ளி தொடங்கும். இந்த வாரம் வகுப்பு 7அ மற்றும் 7ஆ பிரிவு மாணவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். (ஆசிரியர் திருமிகு ஆனந்தி திருமிகு ஶ்ரீபிரியா அவர்கள்), மழை இருப்பின் உள்ளரங்கில் நடை பெறும்(MPR)
கவனத்தில் கொள்ளவேண்டிய நாள்கள்:
தன்னார்வலர் கூடுகை ஏப்ரல் 26 காலை 11:30-1:30 பகல்
பண்பாட்டுத் திருநாள் கொண்டாட்டம் மே 03, 2026
இறுதித்தேர்வு நாள் மே 10, 2026
பட்டமளிப்பு/ஆண்டு விழா மே 17, 2026
முதல்வர்கள் (நாதன் இராமநாதன், இந்திரா தங்கசாமி)
சான் ரமோன் தமிழ்ப்பள்ளி
04/18/2026
Dear Volunteers,
Thank you to all of you who took the time to join us yesterday. Your selfless service is deeply appreciated not just on special days, but every single week and every day throughout the year. It is your passion and love for our culture and language that truly drives us forward.
I truly regret missing the fun artistic performances where our volunteers showcased their incredible talents. The success of the show was made possible only because of the tireless efforts of so many volunteers. Without your support, we could not have pulled off this event. My sincere gratitude and heartfelt appreciation go out to every volunteer and to the ex-officio members of CTA/ITA who graciously honoured our invitation.
Congratulations to our 2026-27 Principal Designate, Ms. Anandi Suresh. I am very much looking forward to working closely with you in the coming years.
Narthan, you have been a key pillar in bringing structure and excellence to SRTS over the past years. Thank you for all the enablement and support you provided this year, along with every other dedicated volunteer.
I also extend my warm thanks to the entire Board for their relentless support in making this year a grand success. With just a few weeks remaining, let us all come together to celebrate Heritage Day on May 03rd and Annual Day on May 17th. I would love to see each one of you at these events. Of course, we continue to rely on your valuable support in the next academic year as well.
Thank you once again for your unwavering commitment!
-with thanks
Indira thangasamy
Principal, SRTS
தகைசால் தன்னார்வலர்களுக்கு வணக்கம்!,
நேற்று எங்களுடன் இணைந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்க, உங்களின் தொண்டினைப்போற்றிப் பாராட்ட ஒரு வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி. உங்கள் தன்னலமற்ற தொண்டினை நேற்று மட்டுமல்ல, ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் ஆண்டு முழுவதும் நாம் அங்கீகரித்துப் பாராட்டி மகிழ்கிறோம். நமது பண்பாடு மற்றும் மொழியின் மீதான உங்கள் ஆழமான ஆர்வமும் அன்பும்தான் எங்களை முன்னோக்கி இயக்குகிறது.
எங்கள் தன்னார்வலர்கள் தங்கள் அற்புதமான கலைத்திறன்களை வெளிப்படுத்திய நடத்திய நிகழ்வுகளை நான் தவறவிட்டதற்கு வருந்துகிறேன். நிகழ்ச்சியின் வெற்றிக்கு பல தன்னார்வலர்களின் அயராத உழைப்பு மட்டுமே காரணம். உங்கள் உதவி இல்லையென்றால் இந்த நிகழ்வை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. அனைத்து தன்னார்வலர்களுக்கும், எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு வருகை தந்து சிறப்பித்த CTA/ITA-வில் தொண்டாற்றிய தன்னார்வலர்க்கும் எனது உளமார்ந்த நன்றியும் பாராட்டும்.
2026-27 ஆண்டுக்கான முதல்வர் தேர்வாக தெரிவு செய்யப்பட்ட திருமதி ஆனந்தி சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வரும் ஆண்டுகளில் உங்களுடன் இணைந்து இணக்கமாகப் பணியாற்ற ஆவலுறுகிறேன்.
நாதன் அவர்கள், இவ்வாண்டு மட்டுமல்லாது கடந்த ஆண்டுகளிலும் சிறப்பாக தொண்டாற்றி SRTS உருப்பெற நீங்கள் முக்கிய தூணாக இருந்தீர்கள். இந்த ஆண்டு நீங்கள் வழங்கிய அனைத்து உதவிகளுக்கும், மற்ற தன்னார்வலரது சார்பாகவும் மனமார்ந்த நன்றி.
இந்த ஆண்டை திறம்பட இயக்க ஒத்துழைப்பளித்த நம் இயக்குநரவை உறுப்பினர் அனைவருக்கும் எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளன. மே 3ஆம் தேதி பண்பாட்டுத் நாளையும், மே 17ஆம் தேதி ஆண்டு விழாவையும் கொண்டாட ஒன்றிணைவோம். இந்த நிகழ்வுகளில் உங்களை அனைவரையும் கண்ணுற ஆவலுடன் உள்ளேன். நிச்சயமாக, அடுத்த கல்வியாண்டை வெற்றிகரமாகத் தொடர உங்கள் அனைவரின் சமரசமில்லா தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறோம்.
உங்கள் அன்பிற்கும் தன்னலமில்லா தொண்டூழியத்திற்கும்,அர்ப்பணிப்புக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி!
-நன்றியுடன்
இந்திரா தங்கசாமி
04/18/2026
வாரம் 29
அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றைய தன்னார்வலர்களுக்கு வணக்கம்.
பள்ளி வழக்கமான நேரத்தில் 29ஆம் வாரத்திற்கான பாடத்திட்டத்தோடு தொடங்கும். ஏப்ரல் மாதத்திற்கான மாற்றுத்தேர்வுகள் காலை 9 மணிக்கு நடைபெறும் மாற்றுத்தேர்வெழுத விரும்புவோர் காலை 9மணிக்கே வந்து பயன்பெறவும். மதிப்பெண்கள், மாணாக்கர்களின் திறன் பற்றிய மதிப்பீடுகளை பள்ளி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.
நன்றி: தன்னார்வலர் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி.
உங்களின் வருகையை திறன்பேசி மூலம் பதிவு செய்யுங்கள். உங்களிடம் திறன் பேசி இல்லையெனில் சக தன்னார்வலரின் திறன்பேசி மூலமும் நீங்கள் பதிவு செய்யலாம். வழக்கம் போல் காலை வணக்கத்துடன் பள்ளி தொடங்கும். இந்த வாரம் அடிப்படை நிலை பிரிவு ஆ மாணவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். (ஆசிரியர் திருமிகு சண்முகப்பிரியா அவர்கள்), மழை இருப்பின் உள்ளரங்கில் நடை பெறும்(MPR)
கவனத்தில் கொள்ளவேண்டிய நாள்கள்:
ஏப்ரல் மாத மாற்றுத்தேர்வு (இந்த வாரம்)
பண்பாட்டுத் திருநாள் கொண்டாட்டம் மே 03, 2026
இறுதித்தேர்வு நாள் மே 10, 2026
பட்டமளிப்பு/ஆண்டு விழா மே 17, 2026
முதல்வர்கள் (நாதன் இராமநாதன், இந்திரா தங்கசாமி)
சான் ரமோன் தமிழ்ப்பள்ளி
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
San Ramon, CA
94582