Islamic Daily Reminders
Nearby schools & colleges
West Bay –Dafna-district, United Nation Street, opposite to the Lebanese School
அல் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ் வழியில் முழு நேர இஸ்லாமிய ஊடகம்.
Friday Jumma khutba live telecast from Masjid Babaker galvihara Road Dehiwala
As Sheikh Shakir Abbasi
Title: Muharram and the pious predecessors
Date: 19 June 2026
#இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கை நெறி ..
#குடும்பம் முதல் ஆட்சி வரை முறையான ஒழுக்கவியலை கற்றுக்கொடுக்கும் உயரிய வாழ்வியல் நெறிமுறை..
#தனிமனித,சமூக ரீதியான ஒழுக்கசீர்கேடுகளும் அநாச்சாரங்களும் இடம்பெறுவதற்கான வாயிலை பார்த்து பார்த்து மூடும் வாழ்க்கை நெறி..
#அல்லாஹ்வின் வார்த்தைகளையும் (அல்குர்ஆன்)
நபி (ஸல்)அவர்களின் வார்த்தைகளையும்
(ஹதீஸ்)
தெளிவாக தேடி படிப்பதன் மூலமே அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் விளங்கிக்கொள்ள முடியும்.
#சினிமாவின் மூலம் இஸ்லாத்தின் உயரிய ஒழுக்கவியலை ஒருபோதும் காட்சிப்படுத்தமுடியாது.!
அதிலிருந்து இஸ்லாம் ஒவ்வொன்றுக்கும் வகுத்த ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளவும் முடியாது.
#اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ
திண்ணமாக, #அல்லாஹ் நீதி செலுத்தும்படியும்
#நன்மை செய்யும்படியும் #உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளை யிடுகின்றான். மேலும், #மானக்கேடான, #வெறுக்கத்தக்க, மற்றும் #அக்கிரமமான செயல்களை விலக்குகின்றான். நீங்கள் படிப்பினை பெறும் பொருட்டு உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான்.
( 16:90)
18/06/2026
"நேர்வழியில் தொடர்ந்து பயணிக்க 10 காரணிகள்"
#ஒரு பெற்றோராக,
ஒரு ஆசானாக பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்க வேண்டிய மிக முக்கிய ஒழுக்க நெறிமுறைகள்...
1. #அந்தரங்க உரிமைகளைப் பேணுதல் (அனுமதி கேட்டல்)
ஆண், பெண் பிள்ளைகள் சிறு வயது முதலே பிறரின் அந்தரங்கங்களை மதித்து நடக்கப் பழக்க வேண்டும். குறிப்பாக வீட்டின் உள்ளே பெற்றோரின் அறைகளுக்குள் நுழையும் போது அனுமதி கேட்கும் ஒழுக்கத்தை அல்குர்ஆன் வலியுறுத்துகின்றது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ...
" #நம்பிக்கையாளர்களே! உங்களது அடிமைகளும், உங்களில் இன்னும் பருவ அடையாத சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் (அறைக்குள் நுழைய) அனுமதி கேட்கட்டும்..."
(24: 58)
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில்....
" #அல்லாஹ் இந்த வசனத்தில் விவேகம் உள்ள சிறுவர்கள் தங்களின் பெற்றோரின் அந்தரங்க நேரங்களை மதித்து, அனுமதி கேட்டு நுழைவதை விதியாக்கியுள்ளான். இது பிள்ளைகளுக்குச் சிறு வயது முதலே கற்பிக்கப்பட வேண்டிய ஒழுக்கத்தின் ஆரம்பப்படியாகும்."
(தப்ஸீர் இப்னு கஸீர்)
2. #படுக்கைகளைப் பிரித்தல்..
ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் 10 வயதை அடையும் போது, அவர்கள் தனித்தனி படுக்கைகளில் உறங்குவதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது. இது அவர்களுக்குள் பாலியல் விழிப்புணர்வையும், தற்காப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ، وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ»
"உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுகையை ஏவுங்கள். பத்து வயதாகும் போது (தொழாமல் இருந்தால்) அதற்காக அவர்களைக்டியுங்கள். மேலும், அவர்களது படுக்கைகளைப் பிரித்து விடுங்கள்."
(ஸுனன் அபீதாவூத்
ஹதீஸ் எண்: 495.)
இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது.. " #ஆண்-ஆண் பிள்ளைகள், #பெண்-பெண் பிள்ளைகள் அல்லது #ஆண்-பெண் பிள்ளைகள் யாராக இருந்தாலும் 10 வயதை அடைந்துவிட்டால் அவர்களது படுக்கைகளைப் பிரிப்பது பெற்றோரின் மீது கடமையாகும். ஒரே படுக்கையில் அவர்கள் படுக்கக் கூடாது."
3. பார்வையைப் பேணுதலும் வெட்கமும்..
பருவ வயதை நெருங்கும் ஆண், பெண் பிள்ளைகளுக்குத் தங்களின் பார்வைகளைப் பாதுகாக்கவும், வெட்க உணர்வை வளர்த்துக் கொள்ளவும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ...
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْن مِنْ أَبْصَارِهِنَّ..
"நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்; தங்கள் கற்புகளையும் காத்துக் கொள்ளட்டும்... நம்பிக்கையாளர்களான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்..."
(24 : 30-31)
«الْإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ»
"ஈமான் (இறைநம்பிக்கை) என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அதில் 'வெட்கம்' என்பது ஈமானின் ஒரு முக்கியக் கிளையாகும்."
(ஸஹீஹ் புகாரி)
4. ஆடை ஒழுக்கம்
ஆண் பிள்ளைகள் ஆண்களுக்குரிய ஆடைகளையும், பெண் பிள்ளைகள் பெண்களுக்குரிய கண்ணியமான ஆடைகளையும் அணிய வேண்டும்.
ஒரு பாலினத்தவர் மறு பாலினத்தவரைப் போல் ஆடை அணிவதையோ, நடப்பதையோ இஸ்லாம் வன்மையாகத் தடுக்கிறது.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»
"பெண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்."
(ஸஹீஹ் புகாரி)
பிள்ளைகளின் உடலமைப்பு, ஆடை மற்றும் பேச்சு முறைகளில் மாற்றுப் பாலினத்தின் சாயல் வராதவாறு சிறு வயது முதலே பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
5. பெற்றோரிடம் உறவாடும் ஒழுக்கம்.
சமூக ஒழுக்கத்தின் அடித்தளம் வீட்டிலிருந்தே துவங்குகிறது. பெற்றோரிடம் பிள்ளைகள் பேசும் போது பயன்படுத்த வேண்டிய சொற்களை அல்குர்ஆன் வரையறுக்கிறது.
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا
#பெற்றோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ளும் படி நாம் மனிதனுக்கு கட்டளையிட்டோம்...
அவர்களுடன் கண்ணியமான முறையில் பேச கற்றுக்கொடுக்க வேண்டும்.
அவர்களின் உள்ளம் புண்படும்படியான வார்த்தைகளை பேசுவது கூடாது என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.
...فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا
"...அவ்விருவரையும் நோக்கி 'சீ' என்று (சலிப்பாகச்) சொல்லாதே! அவர்களை அதட்டாதே! அவர்களிடம் கண்ணியமான வார்த்தையையே பேசு!"
(17: 23)
6. சமூக ஒழுங்கு.
சமூகத்தின் ஒரு அங்கமாக போகும் குழந்தைக்கு, பிற மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய பண்பொழுக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
ஆண், பெண் பிள்ளைகள் அந்நியர்களுடன் பழகும் போது பேண வேண்டிய மிக முக்கிய ஒழுக்கங்களை லுக்மான் (அலை) அவர்கள் தன் மகனுக்குக் கூறிய அறிவுரையாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது:
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا... وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ...
லுக்மான் (அலை) அவர்கள் தனது சமூக ஒழுக்கத்தை மிக அழகாக கற்றுக்கொடுக்கின்றார்கள்...
#எனது மகனே..!
" #மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே!
#பூமியில் பெருமையாக நடக்காதே!..
#உனது நடையில் நடுத்தரத்தைப் பேணிக் கொள்;
#உனது குரலைத் தாழ்த்திக் கொள்!"
(31 : 18-19)
7.பிறர் வீட்டுக்குள்/அது உறவுகள் வீடாக இருக்கலாம்,அண்டை வீடாக இருக்கலாம் எதுவாக இருப்பினும் மூன்று முறை ஸலாம் சொல்லி அனுமதி கேட்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அனுமதி கிடைக்காத போது திரும்பி விட வேண்டும் என்ற பண்பாட்டை சொல்வதுடன் அனுமதி இல்லாமல் பிறர் வீட்டிற்குள் நுழையும் பழக்கம் தவறு என்பதை சுட்டிக்காட்டுவதோடு அதன் நன்மை தீன்மைகளையும் தெளிவுபடுத்த வேண்டும்.
"تحفة المودود في احكام المولود"
என்ற இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களின் நூலில்,
பிள்ளை வளர்ப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:
" #பிள்ளைகள் சிறு வயதில் பழகும் பழக்கவழக்கங்களே அவர்கள் பெரியவர்களான பின்னும் நிலைத்திருக்கும். எனவே, சிறு வயதிலேயே பொய், பொறாமை, திருட்டு, ஆபாசப் பேச்சுக்கள், வரம்பு மீறிய ஆடம்பரங்கள் ஆகியவற்றிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும். இதில் கோட்டை விட்டால், பிற்காலத்தில் அவர்களைச் சீர்திருத்துவது மிகக் கடினமாகிவிடும்."
இந்த ஒழுக்கக் கோவைகளை வெறும் சட்டங்களாகக் கற்பிக்காமல், பிள்ளைகளுடன் சிநேகப்பூர்வமாக உரையாடி, அவற்றின் அவசியத்தைப் புரிய வைப்பதே இன்றைய சமுதாயச் சீரழிவுகளிலிருந்து நம் சந்ததிகளைக் காப்பதற்காண அரணாகும்.!
#பெற்றோரின் முன்மாதிரி..!
" #சில தவறுகள்"
" #அவன் இன்னும் சிறியவன்"
என்ற சொல்லில் இருந்தே தொடங்குகின்றன.
பிள்ளைகளை வளர்ப்பது என்பது ஒரு சாதாரண வேலையல்ல.
அது #உங்கள் வாழ்நாள் திட்டம்.
அது #உங்கள் மறுமை ஏட்டில் எழுதப்படுகிறது.
#நீங்கள் இறந்த பிறகும் அது ஒளியாகத் தொடரலாம் அல்லது
#முடியாத ஒரு துக்கமாக மாறலாம்.
சிலர் ஒரு வியாபார ஒப்பந்தத்தை இழப்பதைக் கண்டு வருந்துகிறார்கள், ஆனால் தன் மகனை/மகளை நேர்வழியில் இருந்து பிறழ்வதைக் குறித்து கவலைப்படுவதில்லை. அவனது மதிப்பெண்களைப்பற்றி கேட்கும் அவர்கள்,
அவனது தொழுகையைப் பற்றி கேட்பதில்லை.
தன் மகன் இறைவனை நினைவு கூர்வதையோ அல்லது அல்குர்ஆனைத் திறப்பதையோ, படிப்பதையோ..,
பார்க்காமலேயே, அவன் ஒரு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ
இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
(66:6)
#குழந்தை வளர்ப்பு என்பது ஒரு வெற்றிகரமான குழந்தையை உருவாக்குவது மட்டுமல்ல;
மாறாக, #தனிமையில் இருக்கும் போது இறைவனை அறிந்துகொள்பவனாகவும், ஒவ்வொரு சந்தர்பத்திலும் அவனுக்கு அஞ்சுபவனாகவும்,
தனிமையில் பாவம் செய்ய சந்தர்ப்பம் அமையும் போது அல்லாஹ்வை அஞ்சி தன்னை பாதுகாத்துக்
கொள்ளக்கூடியவனாகவும்
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் கெட்டுப் போகும்போது
ஈமானிய உணர்வுடன் உறுதியாக இருக்கக்கூடிய செயற்படக்கூடிய ஒரு ஈமானிய ஆளுமை கொண்ட மனிதனை உருவாக்குவதே ஆகும்.!
பிள்ளை வளர்ப்பு என்பது முன்மாதிரியில் இருந்து தொடங்குகிறது;
எனவே, நீங்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்து விடுங்கள்.!
16/06/2026
முஹர்ரம் மாதம் மற்றும் ஆஷுரா நோன்பு
முஹர்ரம் மாதம் புனிதமான 4 மாதங்களில் ஒரு மாதமாகும். ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகும். அல்லாஹ்வின் மாதம் என நபியவர்கள் கூறிய மாதமாகும்.
━━━━━━━━━━━━━━━
1️⃣ முஹர்ரம் மாத நோன்பின் சிறப்பு:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
(இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 2157).
━━━━━━━━━━━━━━━
2️⃣ ஒரு வருட சிறு பாவங்களுக்குப் பரிகாரமாகும்:
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என நபியவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 2152). ஹதீஸின் ஒரு பகுதி.
━━━━━━━━━━━━━━━
3️⃣ ஆரம்பத்தில் நபியவர்கள் நோற்குமாறு கட்டளையிட்ட நோன்பு:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப் படும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்; (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் ‘‘(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!” எனக் கூறினார்கள்.
(புஹாரி 1893).
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை.
(முஸ்லிம் 2080).
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளை யிட்டார்கள். ரமளான் நோன்பு கடமை யாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பு (கட்டாயம் என்பது) கைவிடப்பட்டது.
(புஹாரி 1892).
━━━━━━━━━━━━━━━
4️⃣ அறியாமை காலத்தில் நோற்கப்பட்ட நோன்பு:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 2073).
━━━━━━━━━━━━━━━
5️⃣ கஃபாவுக்கு புதிய திரைச்சீலை மாற்றப்படும் நாளாக இருந்தது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளான் நோன்பு கடமையாக்கப்படு வதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அதுதான் கஅபாவுக் குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளான் நோன்பைக் கடமையாக்கியபோது, “யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்பு கிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்பு கிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி 1592).
━━━━━━━━━━━━━━━
6️⃣ அறிவிப்பாளர் மூலம் அறிவிக்கப்பட்டது:
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளன்று ஒருவரை அனுப்பி, ‘‘(இன்று) சாப்பிட்டுவிட்டவர் (இரவுவரை தமது நோன்பை) ‘முழுமை யாக்கட்டும்!› அல்லது ‘நோற்கட்டும்!› சாப்பிடாமல் இருப்பவர் (நோன்பைத் தொடரட்டும்) சாப்பிட வேண்டாம்!” என்று மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.
(புஹாரி 1924).
━━━━━━━━━━━━━━━
7️⃣ சிறுவர்களையும் நோன்பு நோற்க வைத்தார்கள்:
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரி களின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘‘(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட் டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன் பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
(புஹாரி 1960).
━━━━━━━━━━━━━━━
8️⃣ நபியவர்கள் சிறப்பித்து நோற்ற ஒரு நோன்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஆஷூரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் ரமளான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை."
(புஹாரி 2006).
━━━━━━━━━━━━━━━
9️⃣ மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாக நோற்ற நோன்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள்... (தொடர்ச்சி)
யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.
(புஹாரி 3397).
━━━━━━━━━━━━━━━
🔟 ஆஷுரா நோன்பின் படித்தரங்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் என்பது அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கின்ற நாளாக இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்த நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்கும்படி (முஸ்லிம் களுக்கு) உத்தரவுமிட்டார்கள். ரமளான் (நோன்பின் கட்டளை) வந்தபோது ஆஷூரா தினம், விரும்பி யவர்கள் நோன்பு நோற்கவும் செய்யலாம்; விரும்பாதவர்கள் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்ற நிலைக்கு வந்து விட்டது.
(புஹாரி 3831).
━━━━━━━━━━━━━━━
1️⃣1️⃣ முஹர்ரம் 9வது நாள் நோன்பு நோற்றல்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
(முஸ்லிம் 2088).
━━━━━━━━━━━━━━━
குறிப்பு:
புஹாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெறும் செய்திகள் ரஹ்மத் பதிப்பக தமிழாக்கத்திலிருந்து.
✍️ நட்புடன்
அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
2024/07/07
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Al Sad
Doha