H.M.Hanees
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.M.Hanees, Tutor/Teacher, Trincomalee.
12/05/2026
அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
கிண்ணியா கல்வி வலய முள்ளிப்பொத்தானைக் கோட்ட தி/ கிண்/ அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் நீண்ட காலத் தேவையாக இருந்த புதிய வகுப்பறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை (12.05.2026) பாடசாலை முதல்வர் S.M. நஸீர் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
மேற்படி அடிக்கல் நாட்டு விழாவின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களும் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களும் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி S.R.ஹசந்தி அம்மையார், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. முனவ்வரா நளீம் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் A.H.M. அக்மல், முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஹாஷிக், கிண்ணியா பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ஆசிரியர் M.E.M. றாபிக் மற்றும் EPSI இணைப்பாளர் M.M. இபாதுல்லா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நட்டனர்.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினர், பிரஜா சக்தி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
12/04/2026
பல்கலைக்கழகத்திற்கு தேர்வான முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.
முள்ளிப்பொத்தானை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 2026.04.12 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பாடசாலை அதிபர் திருமதி M.B. றிஸ்வானா அவர்களின் தலைமையில் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சேருவில சுகாதார வைத்திய அதிகாரியும், திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும், கட்சியின் கல்வி, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் விவகார பணிப்பாளர் Dr. ஹில்மி முஹைதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதியாக முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் M.M.M. அப்பாஸ் (SLEAS) அவர்களும், கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாவட்ட செயற்குழுவின் செயலாளர் விவசாய போதனாசிரியர் E.L. அனீஸ், தம்பலகாமம் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் A.H. றஹீம், முன்னால் அதிபர் A.S. அமானுல்லா, ஆசிரியப் பெருந்தகைகள், பிரதேச பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
20/03/2026
🌙✨ ஈத் முபாரக்! ✨🌙
16/03/2026
மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் சமூக, கலாச்சார மற்றும் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை தம்பலகாமத்தில் இடம்பெற்ற ACMC இன் Future Leader “Islamic Life Studies” கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும் 2026.03.16 ஆம் திகதி அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சேருவில சுகாதார வைத்திய அதிகாரியும், திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும், கட்சியின் கல்வி, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் விவகார பணிப்பாளர் Dr. ஹில்மி முஹைதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கிண்ணியா பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் A.R.M. அஸ்மி, மாவட்ட செயற்குழுவின் செயலாளர் விவசாய போதனாசிரியர் E.L. அனீஸ், தம்பலகாமம் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் A.H. றஹீம், கிண்ணியா பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் அப்துல் ஹாதி, தி/ கிண்/ அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய பிரதி அதிபர் A. அல் பாஸீஸ், திடீர் மரண விசாரணை அதிகாரி T. றியால், சமூக செயற்பாட்டாளர் இளம் தொழிலதிபர் AM Motors உரிமையாளர் அமீன் துவான், விளையாட்டு பயிற்றுவிப்பாளர் A.M. ஆஷிக், ஆசிரியப் பெருந்தகைகள், பிரதேச பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
13/02/2026
"ரமழானை முறையாக திட்டமிடுவோம்" செயலமர்வு.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் இல ED/09/12/06/05/01-2026 மற்றும் 11.09.2025 ஆம் திகதிய 30/2025 இலக்க சுற்றுநிருபத்திற்கமைவாக றமழான் விடுமுறைக் காலத்தை விளைதிறன்மிக்கதாகப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல் செயலமர்வு "ரமழானை முறையாக திட்டமிடுவோம்" எனும் தொனிப்பொருளில் பொறுப்பாசிரியர் M.A.M. சனூஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் இன்று 2026.02.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் S. முகம்மட் நஸீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. முனவ்வரா நளீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
11/02/2026
🛡️ 🅐🅐🅐 𝓐𝓬𝓪𝓭𝓮𝓶𝔂
📍𝓐𝓻𝓪𝓯𝓪 𝓝𝓪𝓰𝓪𝓻, 𝓣𝓱𝓪𝓶𝓹𝓪𝓵𝓪𝓴𝓪𝓶𝓪𝓶
⚽ A.M. Ashik
(School Sport Coach)
📞 +94 77 054 4880
📐 L.M. Musharrif (B.Sc)
📞 +94 76 080 0310
📜 H.M. Hanees
SLTS (History), BA, PGDE (Merit)
📞 +94 75 767 9477
10/02/2026
பணி நிறைவு பாராட்டு விழா.
ஓய்வு பெற்றுச் செல்லும் முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் A. மஹ்ரூப் சேர் மற்றும் கிண்ணியா வலயக் கல்வி பணிமனையில் ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் EPSI இணைப்பாளராகவும் கடமையாற்றிய A.S. அனீபா சேர் ஆகியோரின் பணி நிறைவுப் பாராட்டு விழா (10.02.2026) தி/ கிண்/ அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய முதல்வர் S.M. நஸீர் சேர் தலைமையில் நடைபெற்றது.
10/02/2026
அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய தரம் 11 மாணவர்களின் “ஆட்சி நாகரிகம்” சஞ்சிகை வெளியீட்டு விழா.
கிண்ணியா கல்வி வலய முள்ளிப்பொத்தானைக் கோட்ட தி/ கிண்/ அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய தரம் 11 மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் முகமாக 2026.02.10 ஆம் திகதி "ஆட்சி நாகரிகம்" எனும் நாமம் சூடிய வரலாறுப் பாட சஞ்சிகை பாடசாலை முதல்வர் S.M. நஸீர் தலைமையில் வெளியிடப்பட்டது.
பாடசாலை முதல்வர் S.M. நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் A. மஹ்ரூப் அவர்களும் கௌரவ அதிதியாக கிண்ணியா வலயக் கல்விப் பணிமனையின் ஓய்வுபெற்ற ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் A.S. அனீபா அவர்களும் கலந்துகொண்டு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்தார்கள்.
சஞ்சிகையின் முதல் பிரதியை பாடசாலை முதல்வர் S.M. நஸீர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சஞ்சிகை பொறுப்பாசிரியர் H.M. ஹனீஸ் அவர்களின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலில் சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெரும் முயற்சியால் "ஆட்சி நாகரிகம்" எனும் நாமம் சூடிய வரலாறுப் பாட சஞ்சிகை வெளியிடப்பட்டது.
இச்சஞ்சிகை வெளிவருவதற்கு ஒத்துழைப்பு நல்கி வாழ்த்துரை வழங்கிய முள்ளிப்பொத்தானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் A. மஹ்ரூப் சேர், அணிந்துரை வழங்கிய பாடசாலையின் அதிபர் S.M. நஸீர் சேர், பிரதி அதிபர் உரை வழங்கிய பிரதி அதிபர் A. அல் பாஸீஸ் சேர் மற்றும் தரம் 11 இன் வகுப்பாசிரியர் M.U. மஷாஹிர் சேர் ஆகியோருக்கும் தமது முழுமையான பங்களிப்புக்களை வழங்கிய சஞ்சிகைக் குழுவினருக்கும் பொறுப்பாசிரியர் என்ற வகையில் அன்பின் நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் பதிவுசெய்துகொள்கின்றேன்.
09/02/2026
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பாடசாலை பிரதி அதிபர் A. அல் பாஸிஸ் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தம்பலகாமம் அறபா நகர் வாசிகசாலையின் உதவி நூலகர் சகோதரர் காலித் அவர்களும் கலந்துசிறப்பித்தார்கள்.
05/02/2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் அறபா நகர், அறபா பாலர் பாடசாலையின் மாணவச் செல்வங்கள் தேசிய மற்றும் கலாசார ஆடைகளுடன் தி/கிண்/ அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சிநேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.
சிநேகபூர்வ இவ்விஜயத்தின் போது பிரதி அதிபர் A. அல் பாஸிஸ் அவர்கள் மாணவர்களுக்கு இனிப்பு சொக்லேட்கள் வழங்கி மகிழ்வித்தார்.
04/02/2026
தம்பலகாமம் பிரதேச கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கணிதப் பாட கல்விக் கருத்தரங்கு.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் இருந்து கா.பொ.த. சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கல்விக் கருத்தரங்கு சகோதரர்களான L.M. Musharrif (B.Sc), A.C.M. Rijwan (B.Sc) ஆகியோரின் தலைமையிலும் நெறிப்படுத்தலிலும் அல் - ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் 2026.02.04 ஆம் திகதி இடம்பெற்றன.
இலவச கணிதப் பாட கல்விக் கருத்தரங்கின் வளவாளராக Mr. H. D. Fasmin, B.Sc (Hons), North Western Province - Resource Person, A/L Combined Mathematics Teacher அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இக்கல்விக் கருத்தரங்கிற்கு "முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா" (Muslim Aid) மற்றும் சிராஜ் நகர் ஹிபா கொமியுனிகேஷனின் அனுசரனையுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Trincomalee