Lanka Smart Tech
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lanka Smart Tech, Information Technology Company, 590, Siraj nagar, Thambalagamam, Trincomalee.
08/01/2021
January 08, 2021
கொரோனா தடுப்பூசி; இலங்கையில் 18 வயதுக்கு மேல் மட்டும்!! பெறுவோரின் முழு விபரம் வெளியானது!
நாட்டில் கொரோனா தடுப்பூசியை வழங்கும்போது முன்னுரிமை அளிக்கப்படும் முக்கிய பிரிவினரை சுகாதார அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளதாக என அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1. சுகாதார பணியாளர்கள் - 155,000 (0.68%)
2. முப்படை மற்றும் காவல்துறை - 127,500 (0.56%)
3. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் - 3,159,800 (14%)
4. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கையாளும் பணியாட்கள் - 225,700 (1%)
5. நோய்களுடன் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் - 3,227,510 (14.3%)
6. 40 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் - 3,114,660 (13.8%)
155,000 - 0.68% கொண்ட முன்னணி சுகாதார ஊழியர்கள் தடுப்பூசி பெறும் முதல் குழுவாக இருப்பார்கள் என்று அவர் கூறினார்.
அதன்பிறகு, கிட்டத்தட்ட 127,500 முப்படையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தடுப்பூசி பெறுவார்கள்.
60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 3,159,800 நபர்கள் அடுத்ததாக தடுப்பூசி பெறுவார்கள், அதேநேரம் நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இதுபோன்ற முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 225,700 நபர்களும் தடுப்பூசி பெறுவார்கள்.
18-59 வயதுக்குட்பட்ட 3,227,510 பேர் நோயுற்றவர்களாகவும், 40-59 வயதுக்குட்பட்ட 3,114,660 நபர்களுக்கு நோய்கள் இல்லாமல் தடுப்பூசி கிடைக்கும் என்றும் அமைச்சர் வன்னியராச்சி மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி பெற பரிந்துரைக்கப்படாததால் தடுப்பூசி பெற மாட்டார்கள்.
அரசாங்கத்தின் தேசிய தடுப்பூசி திட்டம் (NDVP) தற்போது 60% நிறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.
NDVP முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு 2021 ஜனவரி 12 ஆம் திகதிக்குள் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் வசதிக்கு சமர்ப்பிக்கப்படும்.
ஃபைசர் கொரொனா தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டால் அதைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என்று அமைச்சர் வன்னியாரச்சி மேலும் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.
பெறப்படும் கொரொனா தடுப்பூசிகளைப் பாதுகாக்க குளிர் கொள்கலன்களைப் பெறுவதற்கு அமெரிக்கா 370,000 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக அவர் கூறினார்.
கொரொனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி 5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தையும் வழங்க உள்ளது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
08/01/2021
January 08, 2021
இறந்தவர்களின் உடலை புதைப்பது கட்டாயமென குர்ஆனில் கூறப்படவில்லை! குர்ஆனை இரண்டு தடவை ஆராய்ந்த பின்னர் கம்மன்பில!
நாட்டில் எவரும் கொரொனா வைரஸ் பரவலால் உயிரிழக்கக் கூடாது என நாம் முயற்சித்துக் கொண்டுள்ளோம், ஆனால் எதிர்க்கட்சியினர் ஒருவர் இறந்தால் அவரைப் புதைப்பதா அல்லது எரிப்பதா என விவாதித்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
மரணிப்பவர்களை புதைப்பது குறித்து குர்ஆனில் கூறப்பட்டுள்ள போதிலும் அது கட்டாயமானது என எந்தவொரு இடத்திலும் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) நாட்டின் தற்போதைய கொரொனா வைரஸ் பரவல் நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் பலவீனமான செயற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாம் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் எனவும் நாட்டின் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் இருந்தோம். ஆனால் இந்த விடயத்தில் தமது மத சம்பிரதாயங்களுக்கு அமைய எரிப்பது இறை விருப்பத்துக்கு முரணானது, குர்ஆனில் குறிப்பிடப்படுவது புதைப்பது மட்டுமே என முஸ்லிம் அரசியல்வாதிகள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கருத்துக்களை கூறுகின்றனர்.
நான் இது குறித்து அறிந்துகொள்ள குர்ஆனை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை இரண்டு தடவைகள் வாசித்தேன். இதில் ஐந்தாவது அத்தியாயத்தில் நல்லதொரு விடயம் குறிப்பிடப்படுகின்றது,
ஆதமின் புதல்வர்கள் இருவருக்கு இடையில் இடம்பெறும் மோதலில் ஒரு மகன் இறக்கின்றார். குர்ஆனுக்கு அமைய உலகின் முதலாவது மரணம் இதுவாகும், எனவே, இந்த உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் 31ஆம் அத்தியாயத்தில் கூறப்படுகிறது என்னவென்றால், இறைவன் பறவை ஒன்றை அனுப்புகின்றான், அந்த பறவை நிலத்தை கொத்தி குழி தோண்டுகிறது, ஏனென்றால் இந்த உடலை மண்ணினால் புதைக்க வேண்டும் என்பதற்காக என கூறப்படுகிறது. இந்த இடத்தில் தான் உடல் நல்லடக்கம் குறித்து சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால் குர்ஆனை நான் படித்துப் பார்த்ததில் கவனித்த ஒன்று என்னவென்றால், கண்டிப்பாக உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றோ அல்லது உடலை எரிப்பது மார்க்கத்துக்கு முரணானது என்றோ குர்ஆனில் எங்கேயும் சுட்டிக்காட்டப்படவில்லை. முஸ்லிம்களின் ஏனைய நடவடிக்கைகளில் நன்மை தீமைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உடலை அடக்கம் செய்வது விடயத்தில் அவ்வாறு எதுவுமே செய்யப்படவில்லை.
எனவே மத வழிபாடுகள் சம்பிரதாயங்கள் என்று எடுத்துக்கொண்டால் அனைத்து மதங்களிலும் அவ்வாறான சம்பிரதாயங்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தையும் ஓரமாக வைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்றார்.
08/01/2021
January 08, 2021
முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவது அப்பட்டமாக தெரிகிறது! -ரிஷாட் பதியுதீன்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்னர், அது தொடர்பில் தன்னை சம்பந்தப்படுத்தி குற்றஞ்சுமத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கைகள் குறித்து, அதே ஆணைக்குழுவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (08) முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
தனது சட்டத்தரணி ருஷ்தி ஹபீபுடன் இணைந்து, இந்த முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் செய்துள்ளார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், விமல் வீரவன்சவின் இனவாதக் கருத்துக்களையும், அப்பட்டமான பொய்களையும், பிழையான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்ததுடன், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உரிய கவனம் செலுத்துமெனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் கூறியதாவது,
“கொரோனா ஜனாஸாக்களை தொடர்ந்தும் எரிக்க வேண்டுமென்ற அரசின் நிலைப்பாடு அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை ஆகும். இலங்கை வாழ் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இன்று வெந்து, நொந்து போயுள்ளனர். அதுமாத்திரமின்றி, உலகிலுள்ள சுமார் இரண்டு பில்லியன் முஸ்லிம்களும் கவலையில் இருப்பதோடு, பல நாடுகள் இலங்கைக்கு எதிரான எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றன. இதன் விளைவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி, நாட்டையும் சமூகங்களையும் பாதிக்கும்.
முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு பழிவாங்குவதற்காகவே எமது மத உரிமையை தடுத்து நிறுத்துகின்றது. அரசியலில் ஞானம் உள்ளவர்களாக இருந்தால் இவ்வாறான பிற்போக்குத்தனமான, படுகேவலமான செயலை செய்யமாட்டார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனிதநேயமுள்ள மாற்று மத பிரமுகர்களும் இதனை வென்றெடுப்பதில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின் முன்னாள் தலைவர்களான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் எம்.பிக்கள், சிங்கள எம்.பிக்கள் உட்பட சிவில் சமூக ஏற்பாட்டாளர்களும் இதற்காக குரல் எழுப்பி வருகின்ற போதும், அரசும் சுகாதார அமைச்சும் இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்குபோலதான் இருக்கின்றன.
எத்தனையோ பேச்சுவார்த்தைகள், ஆர்ப்பாட்டங்களை எல்லாம் புறக்கணித்து, கருத்திற்கெடுக்காது, சமூகத்தின் மதம் சார்ந்த கோரிக்கையை தட்டிக்கழிப்பதன் நோக்கம் வெறுமனே அரசியல் சார்ந்தது மட்டுமே.
அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் எம்.பிக்கள் “இன்று சரிவரும், நாளை சரிவரும்” என்ற நம்பிக்கையை அளித்து வருவதினாலேயே, சமூகம் இன்னும் பொறுமை காக்கின்றது. “வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கக் கூடாது” என்ற கோரிக்கையும் எழுந்து வந்தது. எனினும், எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. புதிய நிபுணர் குழுவின் அறிக்கையைக் கூட தட்டிக்கழிக்கும் சுபாவத்தில் தான் இன்னும் இருக்கின்றனர்” என்றார்.
08/01/2021
January 08, 2021
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 200 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்தனர்!
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 200 இலங்கையர்கள் இன்று இலங்கை வந்தடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 6 விசேட விமானங்களினூடாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாடு திரும்ப முடியாத நிலையில், பல்வேறு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கு அமைய இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 51 பேரும், ஜப்பானில் இருந்து 44 பேரும், கட்டாரில் இருந்து 31 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் 538 இலங்கையர்கள் பல்வேறு தேவைகள் நிமித்தம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏழு விமானங்கள் ஊடாக வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
08/01/2021
விரைவில் இது சம்பந்தமான வீடியோ பதிவொன்று எமது "News97" YouTube Channel இல் பதிவேற்ற இருக்கின்றோம்! இந்த வீடியோ பதிவினை நீங்கள் தவறாமல் பார்வையிட வேண்டுமாயின், எமது YouTube Channelயை மறக்காமல் கீழுள்ள Link வாயிலாகச் சென்று உடனே Subscribe செய்து கொள்ளுங்கள்!
Channel Link: https://youtube.com/c/News97
08/01/2021
January 08, 2021
பத்து வருடங்களாக சட்டவிரோதமாக குழாய் நீரை பயன்படுத்திய பொலிஸ் நிலையம்!
10 ஆண்டுகளாக சட்டவிரோதமாக குழாய் நீரைப் பயன்படுத்தி வரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் பற்றிய தகவல்கள் இன்று (07) வெளிவந்தன.
ஹோமாகமை காவல்துறையினர் சட்டவிரோதமாக குழாய் நீரைப் பெற்று வந்துள்ளதோடு, நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை இன்று (07) காவல் நிலைய நீர் இணைப்பை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.
சட்டவிரோதமாக குழாய் நீர் பெறப்பட்டதாக ஹோமாகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்படி, நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ரத்மலனை சிறப்பு பிரிவு இன்று சம்பவ இடத்திற்கு சென்று சட்டவிரோதமான குழாய் இருப்பதைக் கண்டுபிடித்தது.
ஹோமாகமை காவல்துறையினர் நான்கு நீர் வழங்கல் இணைப்புகளை பெற்றிருந்தனர், பின்னர் அவற்றில் மூன்று துண்டிக்கப்பட்டன.
துண்டிக்கப்பட்ட இடத்தின் வழியாக சட்டவிரோதமாக மீண்டும் தண்ணீர் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்பு ரூ .1.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நீர்வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது
08/01/2021
January 08, 2021
அமைச்சர் தயாசிரி ஜயசேகரவுக்கு கொரோனா உறுதி!
அமைச்சர் தயாசிரி ஜயசேகர கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்
தற்போது ஹிக்கடுவையில் ஹோட்டல் ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியுறவு அமைச்சர் தயாசிரி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளிக்கவில்லை என்பதால், மற்றைய அமைச்சர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை
08/01/2021
08/01/2021
நேற்றைய கோரோனா நிலவரம் - கண்டியில் 2000 ஐ கடந்தது!
நேற்று இலங்கையில் மொத்தமாக 532 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
மேலும் கண்டி மாவட்டத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ளதோடு, இரத்தினபுரி மாவட்டத்தில் 1000 ஐ கடந்துள்ளது
08/01/2021
06.01.2012 யிலிருந்து WhatsAppயினை பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் Terms and Condition யினை Agree பன்னவும் என்ன அமைப்பில் Screen Message ஒன்று வந்ததனை கண்டிருப்பீர்கள். சிலர், அதனை Agree யும் செய்திருப்பீர்கள்.
அவ்வாறு Agree செய்யாத பட்டசத்தில் இவ் WhatsAppயினை 08.02.2021 வரைதான் பயன்படுத்தப்பட முடியும் என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவில் நாம் எதற்காக வேண்டி அவ் Terms and Consitionsயினை agree செய்ய வேண்டும்.. அந்த condtionsயில் என்னவெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது, அது பயனுள்ளதா? ஆபத்தானதா என்பதனைப்பற்றி விளக்கமாக பார்கலாம்.
என்னுடைய பல நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு இவ்வாறு ஒரு message அவர்களுடைய whatsAppயினை திறந்ததும் வந்ததாகவும் இவ்வாறு பலருக்கும் வந்ததாகவும் என்னிடம் குறிப்பிட்டார்கள். பொதுவாக WhatsAppயில் பல மறைமுகமான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது. இதனால் நம்மில் பலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வந்திருக்கக்கூடிய இவ் WhatsAppயினைப்பயன்படுத்துவதன் மூலமும் நாம் அனைவருமே உண்மையில் பாதிக்கப்படத்தான் போகின்றோம். இவ்வாறு வந்த Terms and Condtionsயினை ஒவ்வொன்றாக வாசித்தபோது பல ஆபத்தான விடயங்கள் காணப்பட்டது,
இதில் முதலில் குறிப்பிடப்பட்ட விடயம், WhatsApp யில் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய messageகளிலிருந்து தகவல்களைப் பெற்று அதனை Facebook நிறுவனமானது அவர்களுடைய வணிகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்போகின்றோம் என்றும் இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களை Facebookயினோடு இணைந்த ஏனைய வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது பொதுவாக உலகில் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்களுடனல்லாது Facebookயினோடு தொடர்புபட்ட வணிக நிறுவனங்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களின் பயன் யாதெனின், நீங்கள் பொதுவாக ஒரு நண்பருடன் Sumsung Mobile யினை வாங்குவது பற்றி Whatsappயில் chat செய்து கொண்டிருந்தால், அந்த தகவலினை எடுத்து உங்களுக்கு WhatsApp Advertisement ஊடாகவோ அல்லது Whatsappக்காக நீங்கள் பயன்படுத்துகின்ற numberயினைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட Facebookயின் ஊடாகவோ அவர்கள், அவர்களுடைய Advertisement போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளுவார்கள. இதுமட்டுமல்லாமல், ஏனைய வணிக தேவைகளுக்கும் பயன்படுத்தில் கொள்வார்கள். நீங்கள் இவ் Terms and Condtionsக்கு Agree செய்யும் பட்சத்தில் நீங்கள் ‘Hi’ எனும் அனுப்பக்கூடிய messageயிலிருந்து images, Videosகள் என அத்தனை விடயங்களையும் அவர்கள் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் உங்களுடைய அந்தரங்க விடயங்களைக்கூட நீங்கள் ஏனையவர்களுக்கு share செய்ய நேரிடலாம். இதனைத்தான் அவர்கள் simple ஆக அங்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் அடுத்த conditionகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களில், நாம் ஏதாவது ஒரு WhatsAppயில் காணப்படுகின்ற பல featureகளில் ஏதவாது ஒன்றினைப் பயன்படுத்த வேண்டுமாக இருந்தால், உதாரணமாக, GPS Location Shareயினைப் பயன்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால், அந்த Featuresயினோடு சார்ந்த அனைத்து தகவல்கள் அனைத்தையும் நாமும் shareசெய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் அவ் WhatsApp Featureயினை பயன்படுத்த முடியும். அதாவது, நாம் share பன்னக்கூடிய இவ்வாறான தகவல்களை அவர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள். அதாவது, நாம் எங்கு செல்கின்றோம், யாருக்கு நாம் locationயினை பகிர்கின்றோம், தற்போது நீங்கள் எங்கு அதிகமான நேரத்தினை செலவு செய்கின்றீர்கள் போன்ற விபரத்தினை உங்களிடம் இருந்து பெற்று Facebook மற்றும் அதனுடைய ஏனைய துணை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். இவ்வாறு உங்களிடமிருந்து தகவல்களை பெற்ற பின்புதான் WhatsAppஆனது அதனுடைய featureயினை உங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும். அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது Audioயினை record செய்து அனுப்பும் பட்சத்தில் அதனையும் அவர்கள் கேட்டு அதனை அவர்களுடைய business தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். சற்று சிந்தியுங்கள், எங்களுடைய dataவினை எவ்வாறெல்லாம் அவர்கள் பயன்படுத்த முடியும்.
மேலும், நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு, loverக்கு அல்லது வேறு யாருக்காவது அவர்கள் Offlineயில் இருக்கும் பொழுது ஏதாவது Message, image, audio, videoயினை அனுப்பினால், அதனை 30 நாட்களுக்கு WhatsAppயினுடைய Server யில் வைந்திருந்து அவர்கள் இடையில் onlineவந்தால் அதனை அனுப்பிவிடுவர்கள். அவ்வாறு இல்லாவிட்டால் அதனை Delete செய்து விடுவார்கள் என்ற விடயத்தினையும் இவ் Terms and Conditionsயில் குறிப்பிட்டுள்ளார்கள். அதேபோன்று நீங்கள் forwardசெய்யக்கூடிய messageயினை அவர்கள் அவர்களுடைய serverயில் Lifelong பதிந்து வைத்திருப்பார்கள். இதனையும் சற்று சிந்தியுங்கள். எதற்காக இவ்வாறு storeபன்னுகின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேலை யார் அந்த Message யினை உருவாக்கி யாரெல்லாம் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்ற விபரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இருக்கலாம்.
எங்களுடைய mobile phoneயில் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், என்ன வகையான mobile நாம் பயன்படுத்துகிறோம் என்றும் அதில் இருக்கக்கூடிய OS, Battery Level, signal Strength in location, எந்த வகையான versionஐக் கொண்ட Appயினைப் பயன்படுத்துகின்றோம், நாம் பயன்படுத்தக்கூடிய Internet Browsersயினுடைய தகவல், பயன்படுத்தும் mobile network பற்றிய விபரங்கள், எந்த நபருடன் அதிகமாக callயினைப் பயன்படுத்துகின்றோம், அவர்களுடைய contact information போன்ற அதிகமான தகவல்.. இதுமட்டுமல்ல இதே போன்று ஏராளமான தகவல்கள்களைப் அவர்கள் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதே போன்று Transaction dataக்களையும் பெற்றுக் கொள்ளப்போவதான குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது எவ்வாறானவர்களுடன் தொடர்பினைப் பேனுகின்றோம், அவர்களோடு எவ்வாறு நாம் பேசுகின்றோம் எவ்வாறு நம்மளுடைய அனுகுமுறை காணப்படுகின்றது போன்ற தகவல்களையும் பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள். மொத்தத்தில் நம்மளுடைய Whatsapp யினை பக்கத்திலிருந்து வேரொரு நபர் உற்று நோக்குவதைப் போன்று இருக்கப்போகின்றது. இவ்வாகையான விடயங்களை indirect ஆக அதில் குறிப்பிட்டுள்ளார்கள். மெலும் Business Account பயன்படுத்தக்கூடியவர்களது(UPA Details) Transaction data, பணப்பரிமாற்றம்போன்ற விடயங்களையும் அவர்கள் எடுக்கப்புாவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆக, அந்த Terms and Constions யில் agree செய்யும் பட்சத்தில் மேல் குறிப்பிட்ட அனைத்துக்கும் நீங்கள் இணங்குவதான அவர்கள் கருத்திற்கொள்வார்கள். நீங்களும் எங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்துங்கள், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றவாறு அமையும். மேலும் இக் condtionsயில் உள்ள நல்ல விடயம் யாதெனின், WhatsAppயில் இல்லாத ஒருவருடைய தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள மட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
மொத்தத்தில், நீங்கள் Agree பன்னும் பட்சத்தில் மாத்திரமே 08.02.2021க்கு பின்பு இவ் WhatsAppயினைப் பயன்படுத்த முடியும். அல்லாவிடின் உங்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்படும். இங்கு இவ்வாறான நன்மையும் தீமையும் காணப்படுகின்றது. இதனை நீங்கள்தான் சிந்தித்து பயன்படுத்த வேண்டும். மேலும், இதனை விடுத்து வேறு ஏதாவது பதிலீட்டு App பயன்படுத்த முடியுமா எனக்கேட்டால், அதற்காக வேண்டி Telegram, Hike போன்ற Appயினைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். WhatsAppயினோடு Compare செய்யும் பட்சத்தில், இதனைப் பாவிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகக்குறைவாகவே காணப்படும்.
பலர் Whatsapp யினைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியாமல் கூட போகலாம். இவ்வாறாவர்களுக்கள் கட்டாயம் February 08 வரை காத்திருந்து அன்று அதற்கான மாற்றீடு கிடைக்காத பட்சத்தில் சிந்தித்து செயல்பட முடியும். மேலும் அதிகமானவர்கள் இவ் conditionsக்கு Agree ஆகாத போது நிறுவனத்தினுடைய வீழ்ச்சி அதிகமாக காணப்படும். இதன் போது அவர்கள் இவ் terms and condtionsயினை நீக்கவும் வாய்ப்புண்டு. இதனால் கடைசி வரை காத்திருந்து இயலாதபட்சத்தில் மாத்திரம் இதனை பொதுத் தேவைக்காக பயன்படுத்தி கொண்டு ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.
08/01/2021
08/01/2021
முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பான அறிவித்தல்!
முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் ஆரம்பமாக உள்ளது.
சுகாதார வழிமுறைகளைப் பேணி குர்ஆன் மத்ரசா, மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் 17.01.2021 முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
08/01/2021
08/01/2021
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்! அசாத் சாலி சவால்!
முடியுமென்றால் தம்மை கைது செய்யுமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி போன்றவர்கள் ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்களை கைது செய்யாமை பொலிஸாரின் குறைபாடாகும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அசாத் சாலி நேற்றைய தினம் இந்த சவாலை விடுத்துள்ளார்.
“என்னை கைது செய்யுமாறு விமல் கோருகின்றார். மரணத்தை வைத்து அரசியல் செய்கின்றார்கள், முடிந்தால் என்னை கைது செய்யுமாறு விமல் வீரவன்சவிற்கு நான் சவால் விடுகின்றேன்” என அசாத் சாலி கூறியுள்ளார்.
07/01/2021
07/01/2021
கண்டி - ஸ்ரீ தலதா மாளிகையின் சுவர் இடிந்து விழுந்தது!
கண்டியில் பெய்த கடும் மழையுடனான வானிலையை அடுத்து ஸ்ரீ தலதா மாளிகையில் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
தலதா மாளிகையின் ஸ்ரீ விஷ்ணு தேவஸ்தானத்திற்கு அருகிலுள்ள சுமார் 100 மீற்றர் நீளமான சுவரொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த இடத்திலுள்ள மற்றுமொரு பாதுகாப்பு சுவர் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் திலங்க தேலவிடம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பொறுப்பு கூற வேண்டிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சுவரை விரைவில் புனர் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Website
Address
590, Siraj Nagar, Thambalagamam
Trincomalee
31314