MMS 1st

MMS 1st

Share

This will enable people to learn some science and sports information with local and foreign news.

26/11/2024

Type setting
English/Tamil
மொழிகளிலும் Type செய்து தரப்படும்.

உங்களுக்குத் தேவையான,

#கடிதங்கள்
#புத்தகங்கள்
#குறிப்புக்கள்
#சிறுகதைகள்
#தொடர்கதைகள்
#ஒப்படைகள்
போன்ற அனைத்து விடயங்களும் சாதாரண விலையில் செய்து தரப்படும். தொடர்புகளுக்கு
+94 76 2088171
( WhatsApp and Normal call)

Contact us for typing services........
Thaqwa Nagar, Pulmoddai-01.

∆ documents typing (English, Tamil )
∆ Book typing (English & Tamil)
∆ Exam papers typing (English & Tamil)
∆ Data entry
∆ Presentations
∆ College and University Researches & Reports

போன்ற அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் TYPING செய்து கொள்ள முடியும்.

08/02/2022

நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
===============================

நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளாா்.

பொது மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photos from MMS 1st's post 19/10/2021

அஜினாமோட்டோ பற்றிய உண்மை தகவல்.
====================================

*அஜினோமோட்டோ எப்படி ஒரு உணவின் சுவையை கூட்டுகிறது?*

அது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக ஏன் கூறப்படுகிறது?

அஜினோமோட்டோ என்னும் ஒரு சுவை கூட்டும் உப்பு... அதை சர்க்கரை என்றும் சொல்லலாம்...!

பொதுவாக எல்லா சீன வகை உணவுகளில், சுவை கூட்ட சேர்க்கப்படும் இந்த அஜினோமோட்டோ பற்றி, நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் என்றால்...

அது லைட்டா தூவி விட்டால், டேஸ்ட் இல்லாத உணவு கூட ருசிக்கும். ஆனால் அதிகமாக யூஸ் பண்ணினால் முடி கொட்டும் அவ்வளவு தான் என்று...

ஆனால் உண்மையில் இதன் வரலாற்றை அறிந்தால்?

அஜினமோட்டோ என்பது நாம் நினைப்பது போல, அது ஒரு கடல் உப்பின் பெயரல்ல...

அது ஒரு கம்பெனியின் பெயர் , ஜப்பானில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பெயரே அதன் பொருளுக்கும் ஒட்டிக்கொண்டது..

உண்மையில் இந்த உப்பின் பெயர் Monosodium glutamate ( MSG ) என்பதாகும்,

இதனை மருத்துவ உலகில் slow killer என்கிறார்கள்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோ, சிவோவை தலைமையிடமாக கொண்டு, கிகுனே இகெடா என்பவரால், 1917ல் இந்த அஜினோமோட்டோ தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது,

அப்போது கடல் படுகைகளில் வளரும் ஒரு பூஞ்சை மற்றும் பாசி செடி ( Seaweed ) வகைகளில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வகை உப்பு தான் monosodium ஆகும்.

முதலில் அது தயாரிக்கப்பட்ட விதம் என்னவோ உயர் தரமானதாக இருந்தது.

ஆனால் 1917இல் அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்த்து, வியாபார நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தொழில்சாலையில் , Glutamate என்னும் செயற்கை அமிலத்தையும், அந்த monosodium உப்போடு கலந்துவிட்டு வியாபாரத்தை அதிகப்படுத்தினர்..

Glutamate என்பது ஒரு அடிமைப்படுத்தும் காரியமாகும்..

ஒரு முறை உண்டால், மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் போதை பொருள் போன்றதொரு சுவையூக்கி ஆகும்..

முதலில் இந்த glutamate ஐ உபயோகித்து, Artificial Sweetener என்னும் Aspartame ஐ தயாரித்து வந்தனர்.

பிறகு இதன் அபாயமறிந்து, அமெரிக்காவில் தடை செய்துவிட்டனர் ஆனால் அதன் மறுரூபமே இந்த அஜினோமோட்டோ உப்பாகும்.

இன்றைய அவசர உலக சமையல் குறிப்புகளில், தவறாமல் இடம்பெறும் இந்த அஜினோமோட்டோ உப்பை, பயன்படுத்தாத நாடுகளே இல்லை எனலாம்..

சாலையோர கடைகள் தொடங்கி, மல்டி குஷன் ரெஸ்டாரண்ட் வரை.. சென்னை முதல் நியூயார்க் வரை என எல்லா உணவகங்களிலும், இதனை ருசிகூட்ட பயன்படுத்தாதவர்கள் இல்லை..

முன்பெல்லாம் சைனீஸ் வகை உணவுகளில் தான், அஜினோமோட்டோ தூவப்படும் என்ற மாயை போய், தமிழகத்து ரசம் வரை இதை தூவ ஆரம்பித்துவிட்டார்கள்..

அது நாம் விரும்பியும், விரும்பாமலும் நம் நாவை அந்த சுவைக்கு அடிமைப்படுத்துகிறது, குறிப்பாக குழந்தைகள்...

அவர்கள் உண்ணும் பாக்கெட் சிப்ஸ், கிரீம் பிஸ்கட், சாதாரண பிஸ்கட், நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா ஐட்டங்கள், டின்னில் வரும் மீன், சிக்கன்,ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, சமோசா,பப்ஸ், சாஸ் வகைகள், சோயா பொருட்கள், சாக்லேட்கள், KFC, Pizza , Maggi மற்றும் சில குளிர்பானங்கள் என எல்லாத்திலும் அஜினோமோட்டோ என்னும் MSG slow killer உண்டு,

உண்பதால் வரும் பக்க விளைவுகள்:-

1. ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் முடி கொட்டுவது உறுதி

2. Glutamate இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்துவதால், அதிகமான பசி எடுக்கிறது.

நாம் உணவை அடிக்கடி உண்ண உண்ண ஊளைச்சதை போடுகிறது, பிறகு அதை குறைப்பது மிக கடினம்.. உடல் எடை கூடினால், தானாக சுகரும் இதய நோயும் இலவசமாக வரும்.

3. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இந்த அஜினோமோட்டோ கொடிய விஷமாகும்.. ஐந்து வயது குழந்தைக்கும் தீராத தலைவலியை உருவாக்கும் தன்மை கொண்டது.

4. நரம்பு மண்டலத்தில் அதீத உற்சாகத்தை உருவாக்கி, பிறகு பயங்கரமான பலஹீனத்தை உண்டாக்கி விடும்.

5. இருதய நோய்களாக அதிபயங்கர துடிப்பும் சில நேரம் வலியும் உருவாக்கும்.

6. முகத்தில் எந்நேரமும் ஒரு எரிச்சல் இருப்பது போலவே சிலர் உணருவார்கள், அரிப்பும் தோன்றும், சிலரது முகம் கருத்திருக்கும்.

7. வழக்கமாக இரத்த கொதிப்பு, தைராய்டு, நீரிழிவு, ஆஸ்துமா, உணவு ஒவ்வாமை , அதீத வியர்வை சுரப்பியால் உண்டாகும் Dehydration என்னும் நீர்ச்சத்து குறைதல், கண்களில் ரெட்டினா குறைபாடு எல்லாம் உருவாக அஜினோமோட்டோ காரணியாகிறது.

8. இவை எல்லாம் ஒரு நாள், நம்மை புற்றுநோயிடம் இழுத்துச்செல்லும்..
அஜினோமோட்டோவை தவிர்ப்போம்.

MMS1st

15/10/2021

*பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு.*
===================================

*ஒக்டோபர் - 15, வெள்ளி - 2021*

▪️மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது.

▪️இருப்பினும் இதுதொடர்பில், இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்தார்.

▪️அதேநேரம், பெல்வத்த நிறுவனம் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

▪️இதற்கமைய 380 ரூபாவாக இருந்த குறித்த நிறுவனத்தின் 400 கிராம் பால்மா பொதியின் விலை, தற்போது 460 ரூபாயென விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

▪️டொலர் தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 250 ரூபாவால் அதிகரிக்க கடந்த 9ஆம் திகதி பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

▪️அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் புதிய விலை 1,195 ரூபாவாக உள்ளது.

▪️மேலும் ,400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 480 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MMS1st

15/10/2021

*பயணக் கட்டுப்பாடு குறித்து ஜனாதிபதி அதிரடி உத்தரவு*
===================================

*ஒக்டோபர் - 15, வெள்ளி - 2021*

▪️தற்போது அமுல்ப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடுமையாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

▪️எதிர்வரும் வார இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

▪️இன்று (15) முற்பகல் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் காணொளி தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

MMS1ST

07/10/2021

Motivational* *Thoughts*
======================

🌞 மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது

🌴 மரத்தடியில் ஒருவன்
🙇‍♂நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

🎢 அந்த வழியாக வந்த விறகுவெட்டி

👀 அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

👀 அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
🌙 இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் என நினைத்துக்கொண்டே சென்றான்.

👀 மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான் என நினைத்துக்கொண்டே சென்றான்.

👀 சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார்.

👁 _காட்சி_ _ஒன்றுதான்_ .. _சிந்தனைகளோ_ _வெவ்வேறு_ ...
_நாம்_ _எப்படியோ_ _நம்_ _எண்ணங்களும்_ _அப்படியே_ ... ❤️

MMS1st💙💙

Photos from MMS 1st's post 14/09/2021

Now taking orders!!!!
------------------------------------
jersey with Your Name & Number 😍










✔ Cash on Delivery Available.
✔️🚚All Over The Sri Lanka Delivery Available.
✔️Delivery Charge - 300/ (ලංකාවෙ ඕනෑම තැනකට)


💯 Digital sublimation
🔥 High quality Vetlook material
💥 Perfect look and well finishing
🚚 Island wide delivery available
🏏 Lowest price


👉 Half Sleeve - Rs.1050/ (with Your Name & Number)
👉 Full Sleeve - Rs.1150/ (with Your Name & Number)

්‍ය_ජර්සියේ,
✅ Your Name & jersey Number (For print)
✅ Size
✅ Long sleeve Or Short Sleeve
✅ Your Address And phone Number (For Send Your Order),
පහත දුරකථන අංකයට අප වෙත Whatsapp කරන්න👍

- 0752477173/0711402930

👕

#கட்டணம்_செலுத்தப்பட்ட_விளம்பரம்.

Photos from MMS 1st's post 23/08/2021

𝗔𝗬𝗔𝗔𝗡 𝗦𝗣𝗢𝗥𝗧𝗦 & 𝗙𝗔𝗦𝗛𝗜𝗢𝗡

மிகவும் குறைந்த விலையில் தரமான விளையாட்டு உபகரணங்கள், Office T-Shirt, Casual T-Shirts, Cricket Jersey, Football Jersey மற்றும் அனைத்து வகையான Jersey களையும் தயாரித்து வழங்குகின்றோம்.

(Island-wide Delivery Available)

AYAAN SPORTS & FASHION
Muhaitheen Nagar,
Division No:- 3
Pulmoddai.
Trincomalle

Call Us : 0752477173/0711402930

(கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)

05/02/2021

செய்திகள்பிற தளங்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வவுனியா முஸ்லிம்களுக்கு விடுத்த முக்கிய வேண்டுகோள்!
++++++++++++++++++++++++++++++++++++

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு வவுனியா முஸ்லிம்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும், தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு தமது பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறு வவுனியா மாவட்டத்தில் வசித்துவரும் அனைத்து முஸ்லிம் மக்களிடமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கின்றது.

சிறுபான்மையினர் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகமும் இந்த அரசின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இனம் என்றவகையிலும்.தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இப்போராடத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம், நாளை மதியம் 12 மணியளவில் வவுனியாவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே குறித்த நேரத்தில் வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தினசந்தைக்கு முன்பாக அனைத்து முஸ்லீம் உறவுகளும் ஒன்று கூடுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி மற்றும் முகமதுலறீப் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

MM.SHAMIL

03/02/2021

இலங்கை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்ட்டம் கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம்!
++++++++++++++++++++++++++++

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்காக விண்ணப்பிப்பதற்கென வழங்கப்பட்டிருந்த காலம் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

சுமார் 11,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையத்தளத்தின் ஊடாக நேர்முகத் தேர்வு இடம்பெறும். நேர்முகத் தேர்வு இடம்பெறும் தினம் பற்றியும் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்படும்.

அரச சார்பற்ற 15 உயர்கல்வி நிறுவனங்களில் 96 பாடநெறிகளைப் பயில்வதற்காக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 2017ம் 2018ம், 2019ம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறாத மாணவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

பாடநெறிகளைப் பூர்த்தி செய்ததன் பின்னர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒருவருட கால சலுகைக்காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

MM.SHAMIL

03/02/2021

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
++++++++++++++++++++++++++++++++++

அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 193.17 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 200 ரூபாய் வரை அமெரிக்க டொலர் விலை அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் குறைவடைந்துள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு வழலை 188.63 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

MM.SHAMIL

Want your business to be the top-listed Gym/sports Facility in Trincomalee?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Trincomalee
50567

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00