For Teachers
Education sector
02/06/2026
கல்வி சாரா ஊழியர்களின் விடுமுறை, கடமை நேரம்.
02/06/2026
SBPTD (School Based Professional Teacher Development)
தரம் 10 ICT பாடத்திட்டத்தில் மாற்றம்
******************************************
கடந்த 11/02/2026 அன்று teams வழியக 10ம் தர ICT படத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் ICT கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வி அமச்சினால் வழங்கப்பட்டது.
குறித்த ஒன்றுகூடலின் சாராம்சம்:
• தற்போது தரம் 10 இல் கல்வி கற்கும் (2027ம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு) பாடத்திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறித்த மாற்றங்களை உள்ளடக்கிய தரம் 10 இற்கான புதிய பாடப் புத்தகம் விடுமுறையின் பின்னர் வழங்கப்படும். அடுத்த வருடம் தரம் 11 இற்கான பாடத்திட்டம் மாற்றப்பட்ட புதிய புத்தகம் வழங்கப்படும்.
• தற்போது தரம் 11 இல் கல்வி கற்கும் (2026ம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு) பாடத்திட்டத்தில் *எவ்வித மாற்றங்களும் இல்லை.*
• கல்விச் சீர்திருத்தம் வேறாக நடைபெறுகிறது. அது முழுமையான பாடத்திட்ட மாற்றமாக அமையும்.
--
கல்வி அமைச்சு
ஆசிரியர் தரங்கள்
***********************
👉சாதராணமாக பயிற்றப்பட்ட ஆசியர் ஒருவர் முதலாம் தரத்தை அடய 20 ஆண்டுகள் தேவைப்படும்.
➡️3-l 👉🏽 2-ll - 05வருடங்கள்.
➡️2-ll 👉🏽 2-l - 09வருடங்கள்.
➡️2-l 👉🏽 1 - 06வருடங்கள்.
👉சாதராமாக பட்டதாரி ஆசியர் ஒருவர் முதலாம் தரத்தை அடய 18 ஆண்டுகள் தேவைப்படும்
➡️3-l 👉🏽 2-ll - 03வருடங்கள்.
➡️2-ll 👉🏽 2-l - 09வருடங்கள்.
➡️2-l 👉🏽 1 - 06வருடங்கள்.
👉ஆனால்
பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் -
2-ll தரத்தில் இருந்து 07 வருடங்களுக்குள் பட்டப்படிப்பை அல்லது கல்விமாணி படிப்பை நிறைவு செய்வாராயின் 07 வருடங்களில் 2-l ற்கு செல்ல முடியும்.
👉அத்தோடு 2- ll ல் இருக்கின்ற பயிற்றப்பட்ட ஆசியர் 05வருட காலத்திற்குள்.
👉ஆசியர் பயிற்சி+ பட்டம்+கல்வி முதுமாணி
OR
👉ஆசியர் பயிற்சி+கல்விமாணி+கல்வி முதுமாணி
பெற்றுகொண்டால் 5வருடங்களில் 2-l ற்க்கு செல்ல முடியும்.
👉2-ll இருக்கின்ற பட்டதாரி ஆசியர் ஒருவர்
பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமாவை 07ஆண்டுக்குள் நிறைவு செய்வாராயின் 07ஆண்டுகளில் 2-l ற்க்கு செல்ல முடியும்.
👉2-ll இருக்கின்ற பட்டதாரி ஆசியர் ஒருவர் 05 வருடத்திற்குள்
பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா + கல்வி முதுமாணி யை நிறைவு செய்வாராயின் 05 வருடங்களில் 2-l ற்க்கு செல்ல முடியும்.
🌏இவற்றோடு வினைத்திறன் தடைதாண்டல்(module) + இரண்டாம் மொழி பாடநெறி என்பன பூர்த்தி செய்யப்பட வேண்டும்🌎
04/01/2026
இலங்கையின் (திருத்தப்பட்ட)ஆசிரியர் கற்பித்தல் வேலைப்பளு - ஒப்பீடு
**********************************************
04/01/2026
*21.12.2022**
*ஆசிரியர்கள் மற்றும்* அதிபர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய *கல்வித் தகைமைகள் மற்றும் தொழிற்றகைமைகள்*
ஆசிரியர் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய #கல்வித் #தகைமைகள்
*பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்/கற்பித்தலில் தேசிய டிப்ளோமா ஆசிரியர்கள் ஏதாவதொரு இளமாணிப் பட்டத்தை பெற்றால் போதுமானது.(ஏதாவதொரு அரச பல்கலைக்கழகம் ஒன்றில் வெளிவாரியாக/இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தைப் பெற வேண்டும். தனியார் பல்கலைக்கழகத்தைத் தவிர்க்க வேண்டும்)
*மேலதிகமாக எத்தனை இளமாணிப் பட்டத்தை பெற்றாலும், பதவி உயர்வு/ வேறு உயர் பதவிக்கான நேர்முகத் தேர்வில் போது ஒரேயொரு இளமாணிப் பட்டத்திற்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும்.
மேற்படி ஆசிரியர்கள் குறிப்பாக பாடத்துறை சார்ந்த பின்வரும் இளமாணிப்பட்டங்களில்ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும். BA,B.Com, BBM,BIT,B.Sc(இவை கல்வித் தகைமைகள்)
ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய #அதியுயர் #தொழில் #தகைமைகள் ,
*பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்/கற்பித்தலில் தேசிய டிப்ளோமாதாரி ஆசிரியர்கள் #கல்விமாணி + #கல்வி #முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
*பட்டதாரி ஆசிரியர்கள் #பட்டப்பின் #கல்வி #டிப்ளோமா + #கல்வி #முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ், கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பட்டப் பின் கல்வி டிப்ளோமா(PGDE), கல்வி முதுமாணி (MEd), கல்வியில் தத்துவமாணி (M.Phil in Edu), கல்வியில் கலாநிதி (Ph.D in Edu )போன்றவை தொழில் தகைமைகள்),
*மேலும் இலங்கை திறந்த பல்கலை கழகத்தின் விசேட தேவை பட்டப் பின் கல்வி டிப்ளோமாவை,(PGDS NE)க்கு மேலதிகமாக முடிக்கலாம்.
*பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் கல்விமாணிப்பட்டத்துடன் கல்வி முதுமாணிப் பட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
*பட்டதாரி ஆசிரியர் ஒருவர் பட்டப் பின் கல்வி டிப்ளோமாவுடன் கல்வி முதுமாணிப் பட்டத்தை பெற்றுக் கொள்ளலாம்.
#ஆசிரியர் #சேவை #பிரமாணக் #குறிப்பின் #அடிப்படையில்........
*பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்/கற்பித்தலில் தேசிய டிப்ளோமா ஆசிரியர்கள் 3-1 (ஆ) -கல்வி மாணிப் பட்டத்தை பெறும் போது உடனடியாக SLTS 2-11 க்கு பதவி உயர்வைப் பெறலாம். அத்தோடு 2-11 இல் 7 வருடம் பூர்த்தி செய்தால் 2-1 க்கு பதவி உயர்வு பெறலாம்.
*அதே வேளை பட்டதாரி ஆசிரியர்கள் 3-1 (அ) -பட்டப் பின் கல்வி டிப்ளோமா பட்டத்தைப் பூர்த்தி செய்தால் உடனடியாக 2-11 க்கு பதவி உயர்வு பெறலாம். அத்தோடு 2-11 இல் 7 வருடம் பூர்த்தி செய்தால் 2-1 க்கு பதவி உயர்வு பெறலாம்.
*அதேசமயம் ஆசிரியர் ஒருவர் 2-11 #ஐந்து #வருட #சேவைக் #காலத்தினுள் #கல்வி #முதுமாணிப் பட்டத்தை பெற்றால், ஐந்து வருடத்தில் 2-1 க்கு பதவி உயர்வு பெறலாம்.
*2-1 இல் இருக்கும் ஆசிரியர்கள் கல்வி முதுமாணிப் பட்டம் போன்ற உயர் தொழில் தகைமை பெற்றாலும் பதவி உயர்வு பெற முடியாது.
ஆகவே ஆசிரியர்கள் உயர் கல்வித் தகைமையைப் பெற உயர் பட்சமாக ஏதாவதொரு இளமாணிப் பட்டத்தை பெற்றால் போதுமானது.
அதேபோல் ஆசிரியர்கள் உயர் தொழில் தகைமையைப் பெற உயர் பட்சமாக ஒரு கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றால் போதுமானது.
அதேவேளை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய அதிபர்களும், ஒரே ஒரு இளமாணிப் பட்டத்தையும், பட்டப் பின் கல்வி டிப்ளோமா/பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா/கல்வி முகாமைத்துவ பட்டப் பின் டிப்ளோமா/கல்வி முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தைப் பூர்த்தி செய்தால் மட்டும், அதிபர் சேவையில் பதவி உயர்வு மற்றும் அதிபர் நியமன நேர்முகத் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெறப் போதுமானது.
இதற்கு மேலதிகமாக எத்தனை பட்டங்களை பெற்றாலும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காது. எனினும் தொழில் சார் வாண்மைத்துவ அறிவையும் ஆற்றலையும் அதிகரிக்கலாம்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அனைவரும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சார்ந்த டிப்ளோமா/இளமாணி/முதுமாணிப் பட்டத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தோடு ஆங்கில மொழி சார்ந்த டிப்ளோமா/இளமாணி பட்டத்தை பூர்த்தி செய்தால் மேலதிக தகைமையாகக் கொள்ளப்படும்.
என்னைப் பொறுத்தவரை எனது பதவி சார்ந்த இளமாணிப்பட்டம் ஒன்று, பட்டப் பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா மற்றும் கல்வி முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணிப் பட்டம் (தேசிய கல்வி நிறுவகம்) மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம்+ஆய்வு (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) ஆகியவை மட்டும் போதுமானது.எனினும் கல்வி துறை சார்ந்த நூல்களை எழுதுவதற்கு மேலதிக நிபுணத்துவ அறிவு தேவை என்பதாலேயே மேலதிக பட்டங்களை பெற்றுள்ளேன்.
உங்களுக்கும் மேலதிக நிபுணத்துவ அறிவு தேவை எனில் பொருத்தமான பட்டங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
#குறிப்பு எந்தவொரு நேர்முகப் பரீட்சையின் போது..
*ஒரேயொரு அதியுயர் கல்வித் தகைமை சான்றிதழுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும்.
உதாரணமாக ஏதாவது ஒரு முதுமாணிப் பட்டம்/முதுதத்துவமாணி
*ஒரேயொரு அதியுயர் தொழிற்றகைமைச் சான்றிதழுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும். உதாணமாக பட்டப் பின் டிப்ளோமா/கல்வி முதுமாணிப் பட்டம்.
குறிப்பு;
*கல்வி இளமாணிப் பட்டம் -கல்வித் தகைமை மற்றும் தொழிற்றகைமை இரண்டையும் கொண்டது.
*பாடம் சார்ந்த முதுமாணிப் பட்டங்கள் (MA,MSc,MFA,MCom,..), பாடம் சார்ந்த முது தத்துவமாணி ( M.Phil in Politics, M.Phil in Physics...), பாடம் சார்ந்த கலாநிதி (Ph.D in Chemistry..) போன்றவை அதியுயர் கல்வித் தகைமைகள் ஆகும். (இது பிரதி செய்யப்பட்ட பதவு) _*Copy by-திரு.ந.சந்திரகுமார் SLPS*_
12/12/2025
MEd Application - OUSL
https://www.guruwaraya.lk/2025/10/med-open-university.html
Closing Date 15.12.2025
MEd - Open University a website for Teachers, students and Government Officers of Srilanka. It Shares Exams, Courses, Gazette Notifications, State Vacancies, Education
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்
புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.
✅ கட்டாய Subjects – 5:
இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:
1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)
2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)
3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)
4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)
5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)
🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14
✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:
மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.
Second National Language
Information and Communication Technology
History
Civic Education
Health and Physical Education
Technology :
Tourism and Hospitality Management Technology
Design and Engineering Technology
Livestock Product Technology
Artistic Product Technology
Entrepreneurship and E-commerce Technology
Geography
Aesthetics Education:
Oriental Music
Western Music
Carnatic Music
Oriental Dance
Bharatha Dance
Western Dance
Drama and Theatre
Art
Entrepreneurship and Financial Literacy
➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.
🔹 GPA (Grade Point Average) முறைமை:
பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.
இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.
✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):
% Marks Range Grade Point
90% - 100% 4.0
80% - 89% 3.7
70% - 79% 3.3
60% - 69% 3.0
50% - 59% 2.7
40% - 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)
👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.
✅ GPA கணக்கீட்டு முறை:
மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:
Mathematics: 3.7
English: 3.3
Mother Tongue: 4.0
Religion: 3.7
Science: 3.0
Optional Subject 1: 3.5
Optional Subject 2: 3.2
📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4
📌 Final GPA = 24.4 / 7 = 3.48
இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.
🔹 GPA முறைமையின் நன்மைகள்:
✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது
✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்
✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது
✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்
✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்
🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:
📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்
📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்
📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.
📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை.
copy
29/04/2025
Master of Education (MEd.)
Click here to claim your Sponsored Listing.
Category
Address
36/46 A, 2nd Lane, , Sumedagama
Trincomalee