BSK Vlogs
BSk Vlogs
manampitiya bus accident
பொன்னியின் செல்வன் காலத்திற்கு முற்பட்ட சிவாலயம்| PS2 Tamil|Mani Ratnam | Karthi, Trisha
https://youtu.be/OT1o0A8gf7k
https://youtu.be/OT1o0A8gf7k
https://youtu.be/8WVUxR1wm68
பாதுகாக்கப்பட வேண்டிய 1000 ஆண்டுகள் பழமையான திருகோணமலை - திருமங்கலாய் சிவன் ஆலயம்!
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆதியம்மன்கேணி கிராம சேவகர் பிரிவில் (217D) லிங்கபுரம் கிராமத்தில் இருந்து சுமார் 8 கிலோமீற்றர் தூரத்தில் திருமங்கலாய் சிவன்கோவில் அமைந்துள்ளது.
லிங்கபுரம், ஆதியம்மன்கேணி ஆகிய கிராமங்கள் ஒரே கிராமசேவகர் பிரிவின்கீழ் இருந்துவந்த நிலையில் 1990ம் ஆண்டளவில் இரண்டும் தனித்தனியான கிராமசேவகர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
ஆதியம்மன்கேணி கிராமசேவகர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 602 குடும்ப உறுப்பினர்களும் (ஆண்கள் - 276, பெண்கள் - 326) தற்போது வாழ்ந்து வருகின்றார்கள்.
இவர்களில் 55 பெண் தலைமைதாங்கு குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாகவும் ஒருசிலர் காட்டுக்குச் சென்று தேன் எடுத்தல் விறகு வெட்டுதலை தமது வாழ்வாதார தொழிலாகவும் மேற்கொண்டு வருகின்றார்கள். தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.
திருமங்கலாய் எனும் பழம்பெரும் கிராமம் தற்போது வன பாதுகாப்பு திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டு அப்பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத வண்ணம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பரம்பரயினர் தமது உடமை, வாழ்வாதாரம் உட்பட பழமையான வரலாற்றையும் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள் அத்துடன் அப்பகுதியில் காணப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கான வரலாற்று பொக்கிசங்களை கொண்டுள்ள திருமங்கலாய் சிவன் கோவிலையும் பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
இருப்பினும் சிவராத்திரி தினத்தன்று மாத்திரம் பூஜைகள் செய்வதற்கு பிரதேச மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாசகத்திற்கு அமைய கோயிலின் இருப்பை வைத்துக் கொண்டு அப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததை மறுதலையாக நிரூபிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதன்மூலம் அவர்களுடைய நிலத்தை அவர்கள் மீள பெற்றுக் கொண்டு அதன்மூலம் அவர்களது மரபுரிமையையும், வாழ்வியலையும் பாதுகாக்க முடியும்.
திருக்கரைசைப்புராணம்
*************
திருக்கரைசைப்புராணத்தின் மூலமாகவே திருமங்கலாய் சிவன்கோவில் வரலாற்றையும் அறியக்கூடியதாகவுள்ளது.
(3). தேசத்து மக்களனைவரும் மகாவலிக் கங்கைக் கரையோரத்திலே ஆடியமாவாசை தினத்தன்று கூடி புராண படனம் செய்யும் திருக்கரைசைப்புராணத்தை எழுதியவர் யாரென்று உறுதியாகத் தெரியாத போதிலும் சிலர் இதை உமாபதி சிவாச்சாரியார் பரம்பரையைச் சேர்ந்த ஒருவரே இயற்றினார் என்பர்.
அறிந்த வரையில் கொட்டியாபுரப்பற்று வன்னிமையாகிய ஸ்ரீ மத் பூபாலபிள்ளை வன்னிமை அவர்களினுடைய முயற்சியினால் இப் புராணம் இத் தீர்த்தக் கரையில் படித்தும், பொருள் சொல்லப்பட்டும் வருகின்றது. அதே போல குருலிங்க சங்கம பக்திகளில் சிறந்தவரும் பரோபகாரசீலருமாகிய கொட்டியாபுரப்பற்று வன்னிமை ஸ்ரீ மத் த. முத்துக்குமாரபிள்ளை அவர்களின் வேண்டுகோளின் படி திருகோணமலைத் தமிழறிஞர் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்களால் ஓலைச்சுவடியில் இருந்து கி.பி. 1893 இல் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டது.
இதற்காக அகிலேசபிள்ளை புலவர் அவர்கள் பல இடங்களிலிருந்தும் தேடி சேகரித்த பத்து பிரதிகளில் ஒன்று சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்தது என்றும், இதற்கு உரை செய்தவர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஸ்ரீ மத். அ.குமாரசுவாமிப்புலவர் என்றும் திரு. வே.அகிலேசபிள்ளை அவர்கள் கி.பி. 1885 ஆம் ஆண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரையின் மூலம் அறிய முடிகின்றது
(4). இதைத் தொடர்ந்து திருக்கரைசைப்புராணம் 1950 களின் பின் பலமுறை பதிப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கபூதரன் - திருமங்கை
**********
திருக்கரைசைப்புராணத்தின் படி அகத்திய மாமுனிவரால் திருக்கரைசையம்பதியில் லிங்கதாபனம் செய்து ஆலயமமைத்து வழிபாடியற்றப்பட்ட மிக நீண்ட காலங்களின் பின்னர், அயோத்தியைச் சேர்ந்த சூரிய வம்சத்தவனான சிங்கபூதரன் என்னும் அரசன் இலங்கைத் தீவை வந்தடைந்தான்.
இக்காலப்பகுதியில் திருமங்கலாயில் இருந்தவாறு இப்பிரதேசத்தை ஆட்சி செய்த எழில்வேந்தன் என்னும் மன்னனின் மகளான திருமங்கை என்பவளை சிங்கபூதரன் மணம்புரிந்து கொண்டு இத்தலத்தை ஆட்சி புரிந்தான்.
இக்காலத்தில் திருமங்கலாயில் சிவன்கோயில் ஒன்றை அமைத்து வழிபாடியற்றியதாகவும், அத்தோடு அகத்தியமாமுனிவரால் அமைக்கப்பட்ட ஆலயத்தையும் புனரமைத்து பூசைகள் சிறப்பாக இடம் பெற ஏற்பாடுகள் செய்ததாகவும் அறியமுடிகின்றது. திருமங்கலாய் சிவன் கோயிலிலுள்ள இறைவனின் பெயர் சுந்தரலிங்கேஸ்வரர் ஆகும் .
(5).இவ்வாறு காலத்திற்குக் காலம் பல்வேறு புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று பெரும் சிறப்புடன் விளங்கிவந்த திருமங்கலாய் சிவன் கோயில் இன்று கவனிப்பாரற்ற நிலையில் காடுமண்டிக் கிடப்பது வேதனையான விடயமாகும். முன்னர் இவ்வாலயம் சிறப்புடனிருந்த போது இங்கிருந்து ஆடி அமாவாசை தினத்திலும், மகரமாதத்திலும் தீர்த்தமாட அம்பாள் சமேதரராய் சிவபெருமான் மகாவலி கங்கைக் கரைக்கு எழுந்தருளுவது வழக்கம் இதே போல அகத்தியதாபன சிவன்கோயிலிலிருந்தும் ஆடியமாவாசை தினத்தில் தீர்த்தமாட செல்வது வழமையான நிகழ்வுகளாகும்.
(6). ஆனால் இவ்விரு ஆலயங்களும் அழிவடைந்த பின்னர் கங்குவேலி சிவன்கோயிலிலிருந்து ஆடியமாவாசை தினத்தில் அம்பாள் சமேதரராய் சிவபெருமான் திருக்கரைசையம்பதியில் தீர்த்தமாடுதல் சமகாலத்து வரலாறு.
ஆதிபுருஷ் படத்தை மிஞ்சிய உண்மை கதை|அனுமான் 🔥 வைத்தும் பற்றவில்லை|ADHIPURUSH - Movie Review
களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் கன்னிக்கால் வெட்டு விழா2023|
12/05/2023
BSk Vlogs support pannuka viewers 🔥
Cricket Match 2023|EUSL|கலை பூக்களின் சங்கமம் 2023|2018|19 BATCH Cricket Match 2023|EUSL|கலை பூக்களின் சங்கமம் 2023|2018|19 BATCH cricket match 2023 live,cricket match 2023 india,cricket match 2023 ka,cricket match 2023 ip...
26/04/2023
Thanks for support Bsk squad 💯🔥
26/04/2023
எது தமிழர் பண்பாடு? | What is Tamil Culture? | கொஞ்சம் வாசிப்பு நிறைய வரலாறு | Bsk vlog ென்னை, கரும்பு, இட்லி, எண்ணெய், உப்பு, மஞ்சள், உடை, தாலி, Cocount, Idli, Oil, Dress, Mangalyam, பண்பாடு, கலாச்சாரம்,...
26/04/2023
உங்கள் ஆதரவுக்கு நன்றி உறவுகளே❤️❤️
BSK squad ❤️
https://youtu.be/UgrGKUnG7NU
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Trincomalee