Thalam Environmental Forum - Trincomalee
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thalam Environmental Forum - Trincomalee, Environmental conservation organisation, Thalam Nova, No 76, Seaview Road,, Trincomalee.
தளத்தின் தோட்டம்
எதிர்கால உலகிற்கு இளையோரை தயார்ப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வரும் "தளம்" அமைப்பு, இளையோரின் தொழில்திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நோக்கத்தின் அடிப்படையில், "தளம்" அமைப்பின் தளம் நோவா வளாகத்தில் இளையோரின் பங்கேற்புடன் இயற்கை முறையில் தோட்டம் அமைக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இம்முறையும் கீற்றுக்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் இணைந்து மிளகாய், பாகற்காய், வல்லாரை, கத்தரிக்காய் போன்ற பல்வேறு மரக்கறிப் பயிர்களை விதைத்து, சீரான பராமரிப்பின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள தோட்டத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த முயற்சி இளையோருக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதோடு, தன்னிறைவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் ஊக்குவிக்கிறது.
மேலும், தளம் அமைப்பின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி திருக்கோணமலை வாழ் சிறியோர் முதல் பெரியார் வரை தமது உடல் ஆரோக்கியத்தை பேணும், தன்னிறைவு இயற்கை முறை விவசாயம் பற்றி தெரிந்து தம்மை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ வைத்தலை நோக்காக்கொண்டு "தளம்" அமைப்பின் அனுசரனையுடன் இயற்கை விவசாயம் கற்கை நெறியானது முன்னெடுக்கப்படவுள்ளது.
4 மாத இயற்கை வேளாண்மை பகுதி நேர பயிற்சி நெறியில் இணைந்து எம்மோடு பயணிக்க ஆர்வம் உள்ள அனைவரும் கீழுள்ள வாட்ஸாப்ப் குழுவில் இணைந்திடுங்கள். குழுவில் இணைய,
Link in Comment
🌱 எதிர்காலம் நாங்களே! 📍 Trincomalee
#தளம் #இளையோர் #விவசாயம் #இயற்கை #வீட்டுத்தோட்டம்
06/08/2025
மன்னாரில் இல்மனைட் மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறுகின்ற இளையோரின் போராட்டமான "கருநிலம்" போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றைய தினம் (06.08.2025) திருக்கோணமலை பிரதான கடற்கரையில் 'தளம் சூழலியல் குழுமம்' ஒருங்கிணைப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது திருக்கோணமலையை சேர்ந்த பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும், சூழலியல் ஆர்வலர்களும், தளம் சூழலியல் குழுமத்தின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் இளையோரின் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் இந்த கவனயீர்ப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. .
🌱 எதிர்காலம் நாங்களே!
#கருநிலம் #மன்னார் #தளம் #இளையோர்
06/08/2025
மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் எழுச்சி "கருநிலம்" போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக கவனயீர்ப்பு நிகழ்வு
திருகோணமலையில் “கருநிலம்”
காலம் : 06.08.2025 (இன்று)
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : திருக்கோணமலை பிரதான கடற்கரை
#கருநிலம்
02/04/2023
Elephant Whisperers என்கின்ற அஸ்கார் #விருது பெற்ற ஆவணத் திரைப்படம் இன்றைய தினம் #தளம் அலுவலகத்தில் திரையிடப்பட்டது.
#அனாதை ஆக்கப்பட்ட யானை மற்றும் மனிதர் இடையிலான உறவு தொடர்பிலான இந்தியாவின் முதுமலை காட்டுப்பகுதியை மையப்படுத்திய ஒரு ஆவண திரைப்படம் இதுவாகும்.
#தளம்
31/03/2023
The Elephant Whisperers
Oscar விருது பெற்ற ஆவணப்படம்!!!
ஆவணப்படம் திரையிடலும், கலந்துரையாடலும்!!!
🕐 4.00 pm - 6.00 pm
📅 02.04.2023 (Sunday)
📍 தளம் அலுவலகம், திருக்கோணமலை
முன் பதிவு கட்டாயம்
0776243212
https://wa.link/ekgxcb
15/01/2023
#ஹபரணையில் புகையிரதத்துடன் மோதிய #காட்டு யானைகள்: தடம் புரண்ட புகையிரதம்!
கடந்த 13.01.2023 இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
" #தளம்" அமைப்பின் "தளம் #சூழலியல் குழுமம்" ஊடாக இதற்கு எங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
இலங்கையின் #சொத்தான யானைகள் இவ்வாறு இறப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.
இது தொடர்பில் அரசாங்கம் சரியான #கொள்கை வகுப்புகளை செய்யவேண்டியது அவசியம்.
12/01/2023
"தளம்" அமைப்பு "இளைஞர்களுக்கான ஆரோக்கியமான எதிர்காலம்" ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் பல்வேறுபட்ட பிரிவுகளின் ஊடாக 2018 தொடக்கம் இயங்கி வருகின்றோம்.
எங்களுடைய செயற்பாடுகள் கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, #கருத்துருவாக்கம், தெளிவுபடுத்தல், மக்கள் மயப்படுத்தல், #இயற்கை, தொண்டர் சேவைகள் என பல்வேறு பகுதிகளின்னூடு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
#சூழலியல் சார் செயற்பாடுகளுக்கு என விஷேடமாக செயற்படும் "தளம் சூழலியல் குழுமத்தின்" பகுதியின் மூன்றாவது பொது கூட்டம் எதிர்வரும் 22.01.2023 இடம்பெறவுள்ளது,
#தளம் சூழலியல் குழுமத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf6fXuwVjcnP06Ujik2UHj2HJ4kUoOuHotiGa9mAZuoukR32Q/viewform?usp=pp_url
23/09/2022
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Thalam Nova, No 76, Seaview Road,
Trincomalee
31000
02/12/2023