Kamil Imdad
In to social work
03/09/2025
"On this 159th 2025, we extend our heartfelt appreciation and gratitude to the Sri Lanka Police Department for their unwavering dedication, courage, and service in ensuring the , , and of our nation.
We wish you continued strength and success in your noble mission."
Kamil Imdad
21/04/2025
அண்மையில் சம்ஸ் ஸ்ரீலங்கா SAMS Sri Lanka அமைப்பின் பணிப்பாளர் ஒருவர் எனக்கு சமூக சேவைக்கான விருது வழங்க இருப்பதாக கூறி அதற்கான அழைப்பை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை எனக்கு அவ் அமைப்பினால் விருது வழங்கப்பட்டிருந்தது.
அதற்காக அவ்வமைப்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு இவ்விருதிணை நான் எனக்கு வழங்கிய ஒரு ஊக்குவிப்பாகவே கருதுகின்றேன்.
காரணம் நாம் சமூகத்திற்கு இன்னும் செய்ய வேண்டிய பல பணிகள் இருக்கின்றது.
உயர்தரப்பரீட்சை / சாதாரணதர பரீட்சை நடாத்தும் போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்காது ஏனைய மாணவர்களின் கல்வியினை தொடர்வது தொடர்பான முன்மொழிவு !!!
===================+===================
By: A.J. Kamil Imdad.
📚 வருடம் தோறும் நடைபெறுகின்ற சாதாரண தர / உயர்தரப்பரிட்சையானது குறைந்தபட்சம் ஒருமாத கால அளவிலான நாட்களை கொண்டு நாடெங்கும் நடைபெறுகின்றது. இக்காலகட்டத்தில் சாதாரண தர / உயர்தரப்பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட பாடசாலைகளில் விடுமுறை வழங்கப்படுகின்றது. அதுமட்டும் அன்றி உலகளாவிய ரீதியில் வருடம் ஒன்றிற்கு பாடசாலை விடுமுறை அதிகம் வழங்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஒன்றாகும்.
📚 நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகள் இதன் மூலம் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. சாதாரணமாக 3500 மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் 300 மாணவர்களின் பரீட்ச்சைக்காக 3200 மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது.
📚 கொரோனா மற்றும் இதர காரணிகளால் ஏற்கனவே நாட்டில் சுமார் 2 அல்லது 3 மாத கால பின்னடைவு ஒவ்வொரு ஆண்டிலும் ஏற்பட்டுள்ளது.
📚 இதன் காரணமாக மாணவர்களின் தொடர்தேர்ச்சியான கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இவ்வாறான பின்னடைவுகள் பெரும் தடையாக காணப்படுகின்றது.
📚 அதன் அடிப்படையில் சில நடவெடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக சாதாரண தர / உயர்தரப்பரீட்சை காலங்களில் ஏனைய ஆண்டு மாணவர்களுக்கும் கல்வி செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
📚 இச்செயற்பாட்டை நடைமுறைப்படுத்த நாம் சில நடைமுறைகளை கையாளவேண்டும்.அவை பிரதேசத்திற்கு பிரதேசம் வேறு படலாம்.
1. அநேக பாடாசாலைகள் இரண்டு அல்லது மூண்று பகுதிகளை கொண்டது. அவ்வாறு காணப்படும் பாடசாலைகளில் ஒரு பகுதினை பரீட்ச்சை நிலையமாக மாற்றி ஏனைய பகுதியினை வழமை போன்று செயற்பட வைக்க முடியும். உ+ம் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் பெண்கள் பிரிவையும் ஆண்கள் பிரிவையும் ஒரு பெரும் மைதானம் பிரிக்கின்றது. எனவே இந்த நிலப்பரப்பு பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த இடையூறையும் வழங்காது.
2. அல்லது. சம்மாந்துறை போன்ற ஊர்களில் மிகப்பெரிய நகர மண்டபம் உள்ளது அங்கே பரீட்சை நடாத்த ஏற்பாடு செய்யலாம்.
3. அல்லது சம்மாந்துறை போன்ற ஊர்களில் 4ற்குமேற்பட்ட பெரிய பாடசாலைகள் உள்ளது இவற்றில் ஒன்றை முற்று முழுதாக பரீட்சை நிலையமாக மாற்ற முடியும் இதனை ஒவ்வரு வருடமும் மாற்றி மாற்றி பாடசாலைகளுக்கு வழங்க முடியும். இதன் மூலமாக சுமார் குறைந்த பட்சம் 5000 மாணவர்களின் கல்வியினை தொடர முடியும்.
4. அல்லது அந்த வலயத்தில் உள்ள சிறிய பாடசாலை ஒன்றை உயர்தரப்பரீட்சை / சாதாரணதர பரீட்சை நிலையமாக மாற்ற முடியும்.
5. இவை ஒவ்வரு கல்வி வலயதிற்கும் வேறு படும் இதனை அந்த அந்த வலயங்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப செய்து கொள்ள முடியும்.
6. சில ஊர்களில் முற்று முழுதாக வசதி இல்லை எனின் அதனை வழமை போன்று மூடி பரீட்சை நடாத்த முடியும்.
7. முயற்சி செய்தால் வழி பிறக்கும்.
📚 மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து செயற்படுத்தும்போது நிச்சயமாக சாதாரண / உயர்தரப்பரிட்சை நடைபெறும் அதேவேளையில் ஏனைய ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
📚 எனவே இந்த நடைமுறைகளை முதற்கட்டமாக ஓர் ஆண்டில் செயன்முறைப்படுத்தி அதன் பெறுபேற்றை நோக்க முடியும். இதன் பின்னர் இதனை தொடர்வதா இல்லையா என முடிவு செய்ய முடியும்.
📚 எனவே கல்வி அமைச்சர் அவர்களே, இச்செயற்பாட்டின் மூலம் அனைத்து மாணவர்களின் கல்வி நிலையிலும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு அமையும்.
📚 எனவே இம்முன்மொளிவை பரிசீலனைக்குற்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
✍ A.J. Kamil Imdad.
18/02/2025
Thiran TV திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பினால் நேற்று [17th] நடாத்தப்பட்ட “திறனொளி சஞ்சிகை அறிமுக நிகழ்வும் சான்றிதழ் வழங்கலும்” மிக விமர்சையாக சம்மாந்துறை கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
10/02/2025
Dear Mr. Ajith Rohana,
I would like to take this moment to sincerely thank you for your dedicated service as the SDIG of the Eastern Province. Wishing you all the very best in your future endeavors at your new assignment.
InshaAllah, we hope to see you serve as the IGP of the country in the near future.
Best regards,
Imdad
இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக் கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார்.
28/11/2024
⭕ மாவடிப்பள்ளி விடயத்தில் முன்கூட்டிய ஆயத்தங்கள் எவ்வாறு செய்திருக்க வேண்டும். ⭕⛔⭕
=====================================
⭕ பின்னணி ⭕ :
1. ஒரு வாரத்திற்கு முன் அனைவருக்கும் அனர்த்தம் நிகழ கூடும் என தெரிந்திருந்தது.
2. ஒவ்வொரு வருடமும் மாவடிப்பள்ளி காரைதீவு வீதியில் குறிப்பாக இரு இடங்களில் வருடம்தோறும் நீர் பரவுகின்றது என்பதும் தெரியும்.
3. மக்கள் முந்தினம் பார்க்க வருவார்கள் என்றும் தெரியும்.
4. அவசரமாக / அவசியமாக மக்கள் வீடுகளுக்கு / தொழிளுக்கு செல்ல செல்ல வேண்டும் எனவும் தெரியும்.
5. அதிகாரமும் கையில் உள்ளது.
6. தொழில் அனுபவம் உள்ளது. / வரலாறுகளும் தெரியும்.
⭕ என்ன செய்திருக்க வேண்டும் ⭕:
1. ஆயத்த கூட்டத்தில் தேவைகள் இனம்கானப்பட்டிருக்க வேண்டு.
2. பாதையின் கிழக்கிலும் மேற்கிலும் தேவையானவர்கள் மாத்திரம் செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
3. நீரில் அனர்த்தம் நடக்கும் பட்ச்சத்தில் காப்பாற்ற உரிய குழு இடப்பற்றிக்க வேண்டும்.
4. வீதியை கடக்கும் சகலரும் பாதுகாப்பு மேலங்கி [life savings jacket] வழங்கி அனுப்ப பட்டிருக்க வேண்டும். [படம் 1]
5. வீதியோரம் எச்சரிக்கை கயிறு [roadside safety indicator rope] கட்டப்பட்டிருக்க வேண்டும் [படம் – 2]
⭕ எதிர்காலத்தில் என்ன செய்யலாம் ⭕:
Proposed By: Kamil Imdad
1. மேலே குறிப்பிட்ட விடயங்கள் செய்யப்பட வேண்டும்.
2. சாலையோர தடுப்பு வேலி [roadside barrier fencing] அமைப்பது அவசியம்.
அல்லது மிக நீளமான பாலம் அவசியம். [படம் – 3]
குறிப்பு ⭕:
1. இவை எல்லாவற்றுக்கும், சேவை செய்யும் மனசு வேண்டும்.
2. ஊருக்கு ஒரு நல்ல சிந்தனை உள்ள தலைவன் வேண்டும். [படம் – 4]
3. மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும்.
4. இன்று அவனுக்கு .... நாளை ?
25/11/2024
In July 2024, I received a 5-day training conducted by Owen Frazer. Today, I had the opportunity to deliver a 3-day training program to media participants in Batticaloa, organized by LIFT NGO Helvetas Sri Lanka
31/10/2024
Project Progress
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Website
Address
Main Street
Sammanthurai