Citizenpostlk

Citizenpostlk

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citizenpostlk, Media/News Company, No 7th, Negombo.

Photos from Citizenpostlk's post 22/10/2025

மாங்குளத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடு மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று நேற்று முன்தினம்(04) அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று(05) எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது

குறித்த காணியின் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது

நேற்றுமுந்தினம் (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் இதனை அவதானித்து மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிசார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்

இந்நிலையில் நேற்று (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிசார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி திருமதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிசார் மற்றும் பொலிசார் இணைந்து குறித்த எலும்புக்கூட்டு பாகங்கள் மற்றும் தடயப்பொருட்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

குறித்த காணியில் மண்டையோடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு
பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது

இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மற்றும் தடயவியல் பொலிசார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்

சண்முகம் தவசீலன்

Photos from Citizenpostlk's post 22/10/2025

මන්නාරම තිරුක්තීස්වර කෝවිලේ විශේෂ දීපවාලි පූජාව

-මන්නාරම දිස්ත්‍රික්කයේ හින්දු ජනතාව අද (20) සඳුදා ආගමික චාරිත්‍ර වාරිත්‍රවලට වැදගත්කමක් ලබා දෙමින් ඉතා උද්යෝගයෙන් දීපවාලි උත්සවය සැමරූහ.

ඒ අනුව, මෙම සඳුදා (20) උදෑසන මන්නාරමේ තිරුක්තීස්වර කෝවිලේ විශේෂ දීපවාලි පූජාවක් පැවැත්විණි.

තිරුකේතීස්වර කෝවිලේ ප්‍රධාන ගුරු කරුණානන්ද ගුරුගේ ප්‍රධානත්වයෙන් පූජාව පැවැත්විණි.

සිය ගණනක් බැතිමතුන් සහභාගී වී යාඥා කළහ. දිස්ත්‍රික්කයේ විවිධ හින්දු කෝවිල්වල විශේෂ දීපවාලි පූජා පැවැත්වීම ද විශේෂත්වයකි.

Photos from Citizenpostlk's post 27/06/2025

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்றைய தினம் (23) காலை முதல் இன்றைய தினம் (24) அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது

வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்

நேற்றைய தினம் கலை முதல் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதோடு இரவு வேளையில் நாகதம்பிரான் உள்வீதி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்

வரலாற்றுச்சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை ஒட்டி நாடுபூராவும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்

Shanmugam Thavaseelan

Photos from Citizenpostlk's post 12/06/2025

புத்த சாசன அமைச்சுடன் சர்வதேச இந்து மத பீடம் சந்திப்பு

புத்த சாசன மத மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி அவர்களுடனான சந்திப்பு இன்று கலாச்சார அமைச்சில் இடம்பெற்றது. இதன் போது கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் சார்பாக கனக ராகுநாதன் மற்றும் வீரசுப்பிரமணியம் ஆனந்த ரூபன் ஆகியோருடன் சர்வதேச இந்து மத பீடச் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் மற்றும் பீட இணைப்பாளர் சிவனேசன் சர்மா ஆகியோருடன் மத நல்லிணக்கம் மூலம் நாட்டை கட்டி எழுப்புவது பற்றியும் மேலும் கதிர்வேலாயுத சுவாமி ஆலய கும்பாபிஷேகம் தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு அமைச்சருக்கு பாபு சர்மா பொன்னாடை போர்த்தி சபையினர் சார்பாக பழத்தட்டும் பிரசாதமாக வழங்கப்பட்டது

Gajana chndrabose

Photos from Citizenpostlk's post 15/05/2025
Photos from Citizenpostlk's post 15/05/2025

මුල්ලිවයික්කාල් ජන සංහාර සතිය සහ මුල්ලිවයික්කාල් අනුස්මරණ කංජි බෙදා හැරීමේ උත්සවය සහ අනුස්මරණ යාඥාවන්,බලහත්කාරයෙන් අතුරුදහන් වූවන්ගේ ඥාතීන්ගේ අම්පාර දිස්ත්‍රික් සංගමය විසින් සංවිධානය කරන ලදී.

සංගමයේ දිස්ත්‍රික් සභාපතිනි තම්බිරාසා සෙල්වරාණි මහත්මියගේ ප්‍රධානත්වයෙන්, සංගමයේ විධායක සාමාජිකයින්ගේ සහභාගීත්වයෙන් පැවති මෙම උත්සවයට, සංගමයේ උපදේශක සහ මානව හිමිකම් ක්‍රියාකාරිකයෙකු වන දමෝදරම් ප්‍රතීවන් මහතා ද සහභාගී විය.முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நினைவேந்தல் பிரார்த்தனையும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

சங்கத்தின் மாவட்டத் தலைவி தம்பிராசா செல்வராணி தலமையில் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்வில் சங்கத்தின் ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தாமோதரம் பிரதீவனும் கலந்து கொண்டிருந்தார்

Want your business to be the top-listed Media Company in Negombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


No 7th
Negombo
11500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00