YESDO
.
08/12/2025
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்…
எமது YESDO அமைப்பானது நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் மூலம் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கம்பளை மற்றும் கெலிஓயா மக்களுக்காக தற்போது அவர்களுக்கு முக்கிய தேவையாகவுள்ள மருத்துவ, சமையல் மற்றும் துப்பரவு உபகரணங்கள் என்பவற்றை வாங்கி அவர்களின் இடத்திற்கே சென்று 07.12.2025 (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைத்ததுடன் YESDO உறுப்பினர்களினால் அம்மக்களின் இருப்பிடங்கள் சுத்தம் செய்தும் கொடுக்கப்பட்டது.
இதற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்த தனவந்தர்கள் மற்றும் நண்பர்களின் பொருளாதாரத்தில் அல்லாஹ் பறகத்செய்வானாக, மற்றும் இவ் உன்னத பணியில் கலந்து கொண்டு உடல் ரீதியாக பணியாற்றிய நண்பர்களின் உடல் ஆரோக்கியத்தில் அல்லாஹ் அருள்செய்வானாக!
06/12/2025
இரத்த தான முகாம் - 2025
எமது YESDO அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் 04/12/2025 வியாழக்கிழமை காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையினாலும் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நிலவிய இரத்த தட்டுப்பாடு காரணமாகவும் எமது YESDO அமைப்பானது காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து இந்த இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது பெருமளவிலான ஆண், பெண் இரத்த கொடையாளர்கள் தங்களுடைய இரத்தத்தை தானம் செய்தனர். இதன்போது 211 நபர்களின் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டன.
இதற்காக எமக்கு வழிகாட்டி உதவிய காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி Dr. அலீமா ரஹ்மான், Dr. நித்யா மற்றும் சக வைத்தியசாலை ஊழியர்களுக்கும், தங்களுடைய இரத்தத்தை வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கும், பொருளாதார ரீதியாகவும் ஏற்பாடுகளிலும் உதவிய YESDO நண்பர்களுக்கும் நன்றிகள்.
ஜஸாகல்லாஹு ஹைறன்…
மட்டுப்படுத்தப்பட்ட இரத்த சேகரிப்பு பொருட்களின் கையிருப்பு மற்றும் நேர முகாமைத்துவத்தினை கருத்திற் கொண்டு பல இரத்த கொடையாளர்களின் இரத்தங்களை சேகரிக்க முடியாமல் போனதற்காக மனம் வருந்துகின்றோம்.
04/12/2025
வெள்ள நிவாரண உதவி-
04.12.2025
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காத்தான்குடி மக்கள் சார்பாக திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் சம்மேளனத்தின் அனுசரணையுடன் 5000 குடும்பங்களுக்கு நாடு பூராகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன்போது வெருகல் பிரதேச மக்களிற்கான 250 உலர் உணவு பொதிகள் மற்றும் ஒரு தொகை ஆடை பொதிகள் இன்று YESDO அமைப்பினரால் வெருகல் பிரதேச செயலாளரின் ஒருங்கிணைப்புடன் YESDO உறுப்பினர்கள் நேரில்சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இதற்காக பொருளாதார ரீதியாக உதவிய மக்களுக்கும் இதற்கான ஏற்பாடுகளில் உதவிய சக அமைப்புக்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும YESDO நண்பர்கள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
வைத்தியர் அலீமா ரஹ்மான் தள வைத்தியசாலை காத்தான்குடி.
உத்திரம் கொடுப்போம் உயிர் காப்போம்.
03/12/2025
🩸 இரத்தத் தட்டுப்பாட்டை சமாளிக்க—நாம் ஒன்றாக செயல்படுவோம்! 🩸
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையும், காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள கடும் இரத்தத் தட்டுப்பாடையும் கருத்தில் கொண்டு, YESDO அமைப்பு சார்பில் ஒரு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
📅 நாள்: வியாழக்கிழமை, 04.12.2025
⏰ நேரம்: காலை 8:30 மணி முதல்
📍 இடம்: காத்தான்குடி கலாச்சார மண்டபம்
🛺 இரத்தம் வழங்க விரும்பும் பெண்கள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், தேவையெனில் போக்குவரத்து வசதியும் ஏற்பாடாக வழங்கப்படும்.
📞 தொடர்புகளுக்கு: 077 282 8280
✨ உங்கள் வருகை - ஓர் உயிருக்கு
02/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையும், காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் இரத்தத் தட்டுப்பாடும் காரணமாக, எமது YESDO அமைப்பினால் 04.12.2025 வியாழக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் இரத்த தான முகாம் ஒன்றை காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எனவே இந்த நன்மையான முயற்சியில் அனைவரையும் கலந்துகொண்டு இரத்த தானம் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
"ஒருவர் ஒரு உயிரை காப்பாற்றினால், அது மொத்த மனிதகுலத்தையே காப்பாற்றியது போன்றதாகும்."
(குர்ஆன் 5:32)
30/11/2025
"மக்களில் சிறந்தவர் – மனிதர்களுக்குப் பயனளிப்பவரே"
(ஹதீஸ்: தப்ரானி)
வெள்ள நிவாரண உதவி
28.11.2025
எமது Yesdo இன் 3ம் நாள் நிவாரணப்பணியானது
ஒல்லிக்குளம் மாவிலங்கத்துறை புதிய குடியேற்றத்திட்டம், சம்மேளன வீட்டுத்திட்டம், மஞ்சந்தொடுவாய் பச்சை வீட்டுத்திட்டம்,
புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட குடும்பங்கள் - பாலமுனை மற்றும்
அடையாளம் காணப்பட்ட மேலும் சில குடும்பங்கள் உள்ளிட்ட
மொத்தமாக 118 குடும்பங்களுக்கு
28.11.2025 3வது நாளாக தொடர்சியாக சமைத்த உணவு வழங்கப்பட்டது.
இவ் நற்செயலுக்காக
பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்கிய நற்கொடையாளர்கள் , களப்பணி செய்த YESDO உறுப்பினர்கள்
மற்றும் அனைத்து நலன்விரும்பிகளுக்கும்
எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
ஜஸாக்கல்லாஹு கைரா.
30/11/2025
இரத்ததான முகாமினை காலநிலை சீர்கேட்டின் காரணமாக வருகின்ற வாரத்திற்கு பிற்போடல்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
எமது அமைப்பினால் வருடாந்தம் நடாத்தி வரும் இரத்த தான முகாமினை 30.11.2025 அன்று நடாத்த ஏற்பாடுகள் செய்திருந்த போதிலும் காலநிலை சீர்கேட்டின் காரணமாக திட்டமிட்டபடி இந் நிகழ்வை குறிப்பிட்ட திகதியில் நடாத்த முடியாதுள்ளது.
எனவே காலநிலை இடர்பாடு இல்லையாயின் வருகின்ற 07.12.2025 ஞாயிற்றுக்கிழமை நடாத்த தீர்மானித்துள்ளோம் என்பதை குருதிக் கொடையாளர்களுக்கு அறியத்தருகின்றோம்.
YESDO நிருவாகம்
27/11/2025
வெள்ள நிவாரண உதவி இரண்டாம் நாள் செயற்பாடு
27.11.2025
தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்றும் எமது அமைப்பினால் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
இதன்போது காத்தான்குடி பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட 167B, அக்பர் மஹல்லா மற்றும் சம்மேளன வீட்டுத்திட்ட குடியிருப்புக்களை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு கிராம சேவகரின் உதவியோடு பகலில் சமைத்த உணவும் அதே போன்று இன்று இரவுநேர உணவு அப்ரார் மஹல்லாவை சேர்ந்த 100 குடும்பங்களுக்கும் வேறு சில பிரிவுகளைச் சேர்ந்த இணம்காணப்பட்ட 50 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.
இதற்காக பொருளாதார மற்றும் களப்பணிகளில் உதவி செய்த YESDO உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றி.
ஜஸாக்கல்லாஹு ஹைறா....
27/11/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
எங்களது YESDO அமைப்பானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எமது சமூகத்திற்கு தேவையுள்ள பல விடயங்களை செய்து வருகின்றது.
நாம் கடந்த காலங்களில் பல அமைப்புக்கள்,நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நண்பர்களென பலருடனும் களத்தில் சகோதர வாஞ்சனையுடனும், உதவி ஒத்தாசைகளுடனும் எங்களது சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். என்றைக்கும் YESDO அமைப்பானது தனிப்பட்ட எவரையேனும் அல்லது எந்த அமைப்புக்களையும் விமர்சித்தது கிடையாது. அவ்வாறான எண்ணம் எங்கள் மனங்களில் துளியளவுமில்லை என்பதை இதய சுத்தியுடன் உறுதி செய்கின்றோம்.
ஆனால் சில முகநூல் பக்கங்களில் தற்போது பதியப்பட்டிருக்கும் பதிவிற்கும், விமர்சனங்களுக்கும்,
YESDO அமைப்பினராகிய எமக்கும் எந்த விதமான சம்மந்துமில்லை என்பதோடு மேற்படி பதிவுகளை எமது அமைப்பு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம். இப்பதிவுகளை உரியவர்கள் முகநூலில் இருந்து அகற்றுமாறும் வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.
மக்கள் பாரிய நெருக்கடியில் உள்ள இந்த அனர்த்த காலங்களில் மக்களுக்கு உதவ வேண்டி பல சிரமங்களுக்கு மத்தியில் பாடுபடும் எமக்கும்,எம்மைப்போன்ற சகல தரப்பினருக்கும் இவ்வாறான சிரமங்களை தயவு செய்து யாரும் கொடுக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
தலைவர்/செயலாளர்
YESDO
26/11/2025
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது பிரதேசத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக, அன்றாடம் தொழில் செய்து வருபவர்கள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
எமது YESDO அமைப்பினால் வருடந்தோறும் வெள்ள அனர்த்தங்களின்போது தேவையுள்ள மக்களுக்காக நண்பர்களின் உதவியுடன் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இன்றுமுதல் சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தொடர்ச்சியாக மழை பெய்தால் வேறு சில நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திட்டம் உள்ளது.
எனவே, இந்த நன்மையான முயற்சிக்காக நண்பர்களின் பொருளாதார உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை வழங்கி, எமது களப்பணிகளில் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொருளாதார உதவிகளுக்கு:
Youth Empowering & Social Development Organization
Acc number: 111561005188
Sampath Bank
Kattankudy branch
அக்ரம் – 0774746139
ரிபான் – 0778328037
Nafeel - 0776521555
Hasrin - 0775621514
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
No-395, Beach Road, New Kattankudy/03
Kattankudi
Opening Hours
| Monday | 19:00 - 21:00 |
| Tuesday | 19:00 - 21:00 |
| Wednesday | 19:00 - 21:00 |
| Thursday | 19:00 - 21:00 |
| Saturday | 19:00 - 21:00 |
| Sunday | 17:00 - 20:00 |