Arcane

Arcane

Share

Reach us to design your dreams into reality.

13/08/2022
Photos from Arcane's post 07/06/2022

Residential Villa - Kattankudy
Total floor area 4800 sqft

காத்தான்குடி இலங்கையின் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சிறிய இஸ்லாமிய நகரமாகும் .வருடத்தில் பலமாதங்கள் வெப்பமான சூழலேஇங்கு நிலவுகிறது.
மேலும் சனநெரிசல் மிக்க நகரமாக இருப்பதால் வீடொன்றை அமைக்கும்போது பலவிடயங்களை கருத்திற்கொள்ளவேண்டி இருக்கிறது.

பொதுவாக வீடு ஒன்றை வடிவமைக்கும்போது முக்கியமாக வீட்டை சுற்றியுள்ள சூழல், இடத்தின் தன்மை, காலநிலை மாற்றம் , சூரியன், காற்றின் திசை , பயன்படுத்தப்படும் கட்டட பொருட்களின் தன்மை மற்றும் தரம் என்பன கருத்திற்கொள்ளப்பட வேண்டும் .

மேலும் முறையான திட்டமிடல் மூலம் ஆர்கிடெக்ட், பொறியிலாளர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டால் கட்டியபிற்பாடு ஏற்படும் தேவையற்ற திருத்தங்கள் , வீண் செலவுகள் தவிர்க்கப்படும்.

காத்தான்குடியில் அமைந்திருக்கும் இவ் வீடானது இஸ்லாமிய மற்றும் உள்ளூர் கட்டக்கலை அம்சங்கள் மற்றும் கிழக்கிலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களான முற்றம், பூங்கா, நீர்தடாகம், இஸ்லாமிய கேத்திரதணித வடிவங்கள் ஆகியவற்றை கொண்டு அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஆண்மீக உணர்வுகளை ஏற்படுத்தும், மேம்படுத்தும் வகையில் இவ்வீடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு பக்கமாக அமைந்திருக்கும் வீட்டோடு இணைந்த முற்றம் போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் காற்றை வீட்டுக்குள் கொண்டுவரும் வேளையில் முற்றத்தில் காணப்படும் நீர்தடாகம் ,தாவரங்கள் மற்றும் இயற்கையான காற்றை குளிர்த்தும் தொழில்நுட்பங்கள் மூலம் காற்று குளிர்த்தப்பட்டு மென்மையான நறுமணமோடு கூடிய காற்று வீட்டினுள் புக வழிசெய்கிறது.
மேலும் நாம் தற்போது கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டிருப்பதால் வீண்விரயமாக அமைக்கப்படும் அலங்காரவடிவங்களை தவிர்த்து தொற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் வீட்டினுள்ளே பயனுள்ள வகையில் ஓய்வுநேரத்தை செலவிடுவதற்கு ஏற்ற வகையில் வீட்டின் உட்பகுதி மற்றும் மேல்தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் கட்டிடம் அல்லது வீடு ஒன்றை கட்டுவது தொடர்பாக ஆலோசித்துள்ளீர்களா ?
உங்கள் வீடுகள் மற்றும் வீட்டோடு இணைந்ந சூழலை தகுதியான ஆர்கிடெக்ட் மற்றும் பொறியிலார்களை கொண்டு நாங்கள் வடிவமைக்கிறோம் .
தொடர்புகளுக்கு
Call or Whatsapp
0771652944

Want your business to be the top-listed Contractor in Kattankudi?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


18/1, Methaipally Road
Kattankudi

Opening Hours

Monday 09:00 - 16:30
Tuesday 09:00 - 16:30
Wednesday 09:00 - 16:30
Thursday 09:00 - 16:30
Saturday 09:00 - 16:30
Sunday 09:00 - 16:30