SL LATEST NEWS

SL LATEST NEWS

Share

💯நம்பகமான செய்திகளின் அடையாளம்🔥 News

22/02/2026

📽️VIRAL VIDEO: தாயின் அரவணைப்பை பொம்மையிடம் தேடும் குட்டி குரங்கின் பாசப் போராட்டம்!

பொம்மையை அரவணைத்துக்கொள்ளும் குரங்கு குட்டியின் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

PUNCH என அழைக்கப்படும் இந்த குரங்கு குட்டி பிறந்து சில தினங்களில் தாயை பிரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

21/02/2026

முட்டை மற்றும் இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி சந்தையில் 1300 ரூபாய் என்ற அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.இதன்படி, பல்பொருள் அங்காடிகளில் ஒரு முட்டை 55 – 60 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில் விநியோகத்தர்கள் விலைகளை அதிகரித்துள்ளதால், தாமும் விலையை கூட்டவேண்டியதாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சந்தைக்கு கிடைக்கும் கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகத்தில் ஓரளவு தட்டுப்பாடு நிலவுவதாகவும் வியாபாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

21/02/2026

பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு விசேட போக்குவரத்து

ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று (21) நடைபெற உள்ள பாகிஸ்தான்-நியூசிலாந்து போட்டியை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

குறித்த போட்டி இன்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகும்.

அதன்படி,

1) சங்கராஜ மாவத்தை மற்றும் சுமனதிசி மாவத்தை

2) வின்சன் பெரேரா மாவத்தை

3) பிரிட்டோ பாபா புல்லே பிரேதேசம், பன்சல வீதி, கெத்தாராம வீதி

4) செபஸ்டியன் எல வீதி

5) அடி சிய் வீதி

6) ஸ்ரீ போதிராஜா மாவத்தை

7) மாளிகாவத்தை சந்தி மற்றும் ஜும்மா மஸ்ஜித் வீதி

8) பிரதீபா மாவத்தை மற்றும் சத்தர்மா மாவத்தை ஆகிய பகுதிகளிலும் ஆர். பிரேமதாச மைதானத்திற்கு செல்லும் வீதிகளிலும் போக்குவரத்து தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21/02/2026

மகாவலி ஆறு நீர்மட்டம் உயர்வு: சுங்காவில–சோமாவதி பாதை தற்காலிகமாக மூடல்

மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் சுங்காவிலிலிருந்து சோமாவதிய வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

21/02/2026

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (21) முற்பகல் 08.00 மணி முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவதானத்துடன் (Level 1) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகெட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விழிப்புடன் இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

21/02/2026

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 6 ஆம் தர ஆங்கிலப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையதள முகவரி சேர்க்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரித்த கங்கொடவில நீதவான் நீதிமன்றம், இது குறித்த விசாரணைகளை விரைவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கங்கொடவில நீதவான் ருவன்திகா மாரசிங்க நேற்று (20) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு பணிப்புரை வழங்கினார்.

தரம் 6 மாணவர்களுக்கான புதிய ஆங்கிலப் பாடத் தொகுப்பில், ஒரு பாடத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருந்த கியூஆர் குறியீடு அல்லது இணையதள இணைப்பு, ஆபாசமான அல்லது தகுதியற்ற உள்ளடக்கங்களைக் கொண்ட இணையதளத்திற்கு இட்டுச் செல்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், அச்சு மற்றும் பாடத்திட்டத் தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

21/02/2026

சுப்பர்-8 சுற்று இன்று ஆரம்பம் - பாகிஸ்தான், நியூசிலாந்து மோதல்

2026 டி-20 உலகக் கிண்ண தொடரின் சுப்பர்-8 சுற்று இன்று முதல் ஆரம்பமாகிறது.

இதற்கமைய சுப்பர்-8 சுற்றின் முதலாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

21/02/2026

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களைப் போலவே நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதைக் காணக்கூடியதாக இருந்தது.

லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பல பகுதிகளில் நுகர்வோர் விசனம் தெரிவித்ததுடன், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.

ஆயினும், தேவையான கையிருப்பைப் பேணுவதற்காக புதிய கொள்வனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய பெப்ரவரி மாதம் முடிவதற்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், சில பகுதிகளுக்கு புதிய எரிவாயு கையிருப்புகள் கிடைக்கப்பெற்றிருந்தாலும், இன்னும் பல பகுதிகளுக்கு லிட்ரோ எரிவாயு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பல இடங்களில் லாஃப்ஸ் எரிவாயு தட்டுப்பாடும் தொடர்கின்றது.

இதேவேளை, பெப்ரவரி 26ஆம் திகதி முதல் லாஃப்ஸ் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

21/02/2026

ஒரு பில்லியனை கடந்த தாவரவியல் பூங்காக்களின் வருமானம்!

கடந்த 2025ஆம் ஆண்டிலும் தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டில் இலங்கையின் தாவரவியல் பூங்காக்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும், நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணம் என அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025ஆம் ஆண்டில் ஏற்பட்ட 'டித்வா' புயலின் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வருடத்தில் தேசிய தாவரவியல் பூங்காக்களின் தாவரவியல் ரீதியான ஈர்ப்புகள் மூலம் கிடைத்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவைக் கடந்து, 1.394 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருமானமானது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7% உயர்வு எனவும், 2025ஆம் ஆண்டில் சுற்றுலா ஈட்டல்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பூங்காக்களின் பங்களிப்பு சிறப்பாக வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழ் பேராதனை அரச தாவரவியல் பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, கம்பஹா தாவரவியல் பூங்கா, சீதாவக்க ஈர வலய தாவரவியல் பூங்கா, மிரிஜ்ஜவில வறண்ட வலய தாவரவியல் பூங்கா மற்றும் கணேவத்த வன மூலிகைத் தோட்டம் ஆகியவை நிர்வகிக்கப்படுகின்றன.

இதில், பேராதனை அரச தாவரவியல் பூங்காவிற்கு மாத்திரம் கடந்த ஆண்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதோடு, ஒட்டுமொத்தமாக அனைத்துத் தாவரவியல் பூங்காக்களையும் பார்வையிட 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகத் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம், தாவர விற்பனை மற்றும் ஏனைய வசதிகள் ஊடாகக் கிடைக்கும் வருமானம் மற்றும் இதர வருமானங்களின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் இந்த ஒட்டுமொத்த வருமான உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

11/02/2026

விசேட தேவையுடையோருக்காக 10 புதிய நவீன பேருந்துகள்

விசேட தேவையுடையவர்கள், இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வசதிகளுடன் கூடிய 10 புதிய நவீன பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி இதற்கான முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன.

இந்த புதிய பேருந்துகளில் விசேட தேவையுடையோர் மற்றும் முதியவர்கள் இலகுவாக ஏறி இறங்கும் வசதிக்காக தாழ்வான மிதிபலகை மற்றும் முழுமையான குளிரூட்டப்பட்ட வசதி, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்; தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் என்ற தனியார் நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

11/02/2026

கொக்கோ, மிளகு, ஏலக்காய் செய்கையாளர்களுக்கு 1,920 ரூபா நாளாந்த கொடுப்பனவு

கொக்கோ, மிளகு மற்றும் ஏலக்காய் செய்கையாளர்களுக்கு 1,920 ரூபா 58 சதம் நாளாந்த கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வடயலித்தவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்கான வாழ்க்கை செலவு தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ஒரு ​ஹெக்டேயருக்கு 425,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

11/02/2026

அகமதாபாத் - கொழும்பு நேரடி விமான சேவை: ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பம்

இந்தியாவின் அகமதாபாத் நகரிலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகச் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.



இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



"இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலிருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊடாக நேரடி விமான சேவையொன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் இலங்கையிலுள்ள பக்தர்கள் குஜராத் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான அரிய வாய்ப்புக் கிடைக்கும்" என்றார்.

Want your business to be the top-listed Media Company in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Kandy
20000