Mathisutha

Mathisutha

Share

நான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை - மதிசுதா

www.mathisutha.com வலைதளத்தில் எழுதி வந்த நான் நீண்ட நாள் கனவோடும் வெறியோடும் கால் பதித்திருக்கும் துறை இது. ஈழத்துக்கான ஒரு திரைத்துறை அடையாளம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை.

என்படைப்புகள் பற்றி அறிந்திராதவருக்காக...
என் படைப்புகள் மற்றும் விருதுகளின் பட்டியலும்
1) Final Drop - Mobile Shot film (கைப்பேசி Samsung S4)
(ministry award – 2015)

https://fb.watch/4YZXax_V6a/

2) தழும்பு

Best

Aakiramippu ஆக்கிரமிப்பு | ஒரு நிலத்தின் கதை | SriLankan Tamil Short Film | Pakidiya Kathaippam. 16/05/2026

சில படைப்புகளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதே என பெருமையாக சொல்லுவோம் அல்லவா.

"ஆக்கிரமிப்பு" குறும்படம் இணையத்துக்கு வெளியாகியுள்ளது. மனதில் ஒரு நெருடலுடன் அந்தக் காதல் தங்கியே நிற்கிறது.

பகிடியா கதைப்பம் தயாரிப்பில் ஜெகார்த்தனின் இயக்கத்தில் இப்படைப்பு வெளி வந்துள்ளது.

இப்படைப்புக்காக ஒரு சில நிமிடம் ஒதுக்கி பார்ப்பதுடன் படக்குழுவுக்கு உங்கள் கருத்தக்களை தெரிவிப்பதுடன் மற்றவருக்கும் பகிர்ந்து படைப்பை சென்றடைய வையுங்கள்.

Aakiramippu ஆக்கிரமிப்பு | ஒரு நிலத்தின் கதை | SriLankan Tamil Short Film | Pakidiya Kathaippam. Pakidiya Kathaippam Productions presents1956 Ceylon | 1956 சிலோன்Written and Directed by Joy JegarthanA Prashanth Krishnapillai MusicalEdit, DOP , Associate ...

06/05/2026

"நேர்மையானவருடனும் பழகலாம்,
தவறிழைப்பவருடனும் பழகலாம் - ஆனால்
நேர்மையானவர் என்று சொல்லிக் கொண்டு தவறிழைப்பவருடன் பழக முடியாது - காரணம்
தம் தவறை நியாயப்படுத்தவும் /சமப்படுத்தவும் பழகுபவரில் பிழைகளை தேடவும்/உருவாக்கவுமே முனைவார்கள்."
-மதிசுதா

28/04/2026

கிளிநொச்சியின் சேரன் திரையரங்கில், அரங்கம் நிறைந்த காட்சியாக எமது வெந்து தணிந்தது காடு திரையிடப்பட்டது,

வெளியிடப்பட்டு 3 வருடம் கடந்த நிலையிலும் உள்ளூர் படமொன்றை திரையரங்கில் காண மக்கள் தயாராகவே உள்ளார்கள் என்ற செய்தியை இதன் மூலம் பதிந்து வைக்க விரும்புகின்றேன்.

ஏனென்றால் அண்மையில் நீளிரா திரையிடல்களின் போது கார்த்திக் சுப்ராஜ் அவர்களும் சோமிதரன் அவர்களும் பகிரங்கப்படுத்திய செய்தி ஒன்று எனக்கு பெரும் மனவருத்தமளித்தது.
"ஈழத்து படங்களை எமது மக்கள் ஆதரிப்பதில்லை"

வருத்தத்திற்குரிய காரணம், இப்படியான கதைகளை யாரும் தொட விரும்பாத நிலையை உருவாக்குவதுடன் முதலிட வருபவரையும் தயங்க வைக்கும் வார்த்தை இதுவாகும்.

இப்படி ஒரு படம் பற்றி தன்னிடம் சோமிதரன் எதுவும் சொன்னதே இல்லை என்றே கார்த்திக் கூறினார் ஆனால் இதைப் போல மக்கள் மீளப் பார்க்கவும் தயாராக உள்ள பல படங்கள் இங்குண்டு என்ற செய்தியையும் இங்கு மக்களால் வர்த்தக வெற்றி பெற்றுக் கொடுத்த படங்கள் உண்டென்ற செய்தியையும் பகிர விரும்புகின்றேன்.

மக்களின் கருத்துக்களை நாளை இணைக்கின்றேன்.

23/04/2026

கிளிநொச்சியில் எதிர் வரும் 25 ம் திகதி சனிக்கிழமை பி.ப 2 மணிக்கு வெந்து தணிந்தது காடு திரைப்படம் சேரன் திரையரங்கில் திரைக்கு வருகின்றது.

இன்று விளம்பரப் பணிக்காக என்னுடன் நியூட்டன் இணைந்திருந்தார். எதிர்வரும் நாட்களில் ஏணையவரும் இணைகின்றார்கள்.

எம்மக்களின் கதை ஒன்றை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு சென்று வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைப் பற்றி உங்கள் நண்பருக்கும் தெரிவித்து இத்தகவலை பகிர்ந்து உதவுங்கள்.

20/04/2026

கிளிநொச்சியில் காத்திருந்தவர்களுக்கு ஒரு சந்தோச செய்தி...
கடந்த 3 வருடங்களாக அங்கிருந்த பலர் கேட்டது "எப்ப உங்கட படத்தை இஞ்ச ஓடுவியள்" குடும்பம் சார்ந்த சில வேலைகளால் அவை காலதாமதமாகி போய் விட்டது.
இடம் - சேரன் திரையரங்கு
காலம் - 25.04.2026
நேரம் - பி.ப 2 மணி

பார்வதி சிவபாதம் அம்மாவுடன் இணைந்து திரைப்படத்தைக் காண அன்புடன் அழைக்கிறோம்.
முற்பதிவுக்கு படத்தில் உள்ள இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுங்கள்.

மாதகல் முரல் மீன் சொதியும், புட்டும் - வன்னி மண்ணின் பாம்புக்கறி கதை | PUDDU KATHAI 26/03/2026

ஐபிசியின் புட்டுக்கதைகள் நிகழ்ச்சியில் இந்த வாரம் என்னை அழைத்திருந்தார்கள்.
சினிமா தாண்டிய ஒரு சுவாரசியமான நிகழ்வாக இருந்தது. சகோதரர்களான உசாந்தன், கயல் ஆகியோர் சிறப்பாக தொகுத்துக் கொண்டிருக்கும் நிகழ்சியில் எமது பெரும் பெரும் கலை ஆளுமைகள் கலந்து சிறப்பித்த ஒன்றுக்குள் எனக்கும் இடம் கிடைத்ததில் சந்தோசப்படுகின்றேன்.
தயாரித்த சர்மிக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஐபிசிக்கும் நன்றிகள்.

மாதகல் முரல் மீன் சொதியும், புட்டும் - வன்னி மண்ணின் பாம்புக்கறி கதை | PUDDU KATHAI இந்த வீடியோவில், ஒரு ஈழத்து இயக்குநர் பகிரும் அனுபவங்கள் மூலம்,👉 மாதகலில் பிரபலமான முரல் மீன் சொதி & புட்டின் உ.....

11/03/2026

அங்கு அடித்த அடி ஆசியாவின் வல்லரசிலும் தாக்கும்

ஈழத்தில் மகனுக்கு கோயில் கட்டிய தாய்; தமிழன் என்பதால் இப்படித்தான் நடக்குமா? | UshanthanView 04/03/2026

அன்றைய நாளில் தனக்கிருந்த அடுத்தடுத்த நிகழ்வுகளுக்குள்ளும் நேரம் ஓதுக்கிய உசாந்தன் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன் வந்து காத்திருந்தார். அவருக்காக சற்று முன்னரே அம்மா ஆரம்பித்திருந்தார்.

பள்ளிப்படைக்கு வர முடியாதவரை தனது Ushanthan view என்ற youtube channel ஊடக அழைத்துச் சென்ற சகோதரருக்கு நன்றி

ஈழத்தில் மகனுக்கு கோயில் கட்டிய தாய்; தமிழன் என்பதால் இப்படித்தான் நடக்குமா? | UshanthanView #தமிழ் U Report channel link:- https://youtube.com/-Report?si=yvnNWDJ_CCxyI2Xtயாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொ...

Want your public figure to be the top-listed Public Figure in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Jaffna