Pratheep Inba
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pratheep Inba, Writer, Jaffna.
06/04/2026
யாழ்ப்பாணத்தில்!!
02/04/2026
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் கற்றது தமிழும் ஒன்று ; கதாநாயகன் ராமின் உணர்வுகளை எனக்கு கொஞ்சம் புரிவதாலும் இருக்கலாம் ; ராம் தமிழ் படித்தவன் இந்த அவசர உலகத்தின் இரைச்சலோடு வாழத்தெரியாதவன் ;
இந்த உலகமும் அவனை கண்டுகொண்டதில்லை !
பொதுவாக தமிழ் படித்தவனுக்குள் காதல் , காமம் கோபம் ,ரணம் அதிகம் ;
ஒரு தமிழ் கலைஞனின் உண்மை விம்பம்தான் இந்த "கற்றது தமிழ்" ராம்
இவர்களுக்கான அங்கீகாரத்தை இந்த உலகம் அவ்வளவு சீக்கிரம் தந்துவிடாது !
28/03/2026
சமீபத்தில் Tere ishk mein என்ற படத்தை பார்த்தேன். ஆன்மீகத்தின் உச்ச நிலையான முக்தி அடைதலை அடிப்படையான ஒரு கதையை இயக்குனர் தேர்வுசெய்துள்ளார். சிவன் பார்வதிமேல் உள்ள காதலால் தன்னை அழித்துக்கொள்ள அத்தருணத்தில் முக்தி கிடைக்கப்பெறுகிறது. என்பதே இப்படத்தின் கரு. இப்படத்தில் வரும் கண்ணே கண்மணியே பாடலின் வரிகள் ஆன்மீகத்தின் உச்ச அழகை உணர்த்திநிற்கின்றன. “கண்ணே கண்மணியே உன்னோடு சரணாகிறேன்” ஒளி மீது ஒளியாய், ஒளியே நான் காணுகிறேன் “என் உயிர் யேகும் என் திசை நீயே திசைகள் இல்லா பெரு வெளி நீயே புதிர்கள் போடும் இம்மையும் நீயே உண்மை இல்லா உண்மையும் “நீயே !
சமீபத்தில் வந்த பாடல்களில் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் இது ❤️
20/03/2026
கவிஞர் வைரமுத்துவின் பாடல்களில் காதல் வேட்கை அதிகமாக இருக்கும் ! அந்த வரிசையில் தாஜ்மஹால் திரைப்படத்தின் "குளிருது குளிருது" பாடலின் வரி காதலின் உச்சம் ;அந்த வரி
பெ: சுற்றி எல்லாம் எரிகிற.. போது
நாம் இன்பம் கொள்வது.. தீது
ஆ: அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்
இந்த வரிகளை அடிக்கடி நினைத்துப்பார்க்கிறேன் ; இன்றைய உலகமும் அப்படி பட்ட ஒரு வாழ்வியலைத்தான் நமக்கு சில நேரங்களில் தந்துவிடுகிறது ; உலகமே அழியும் நேரம் வந்தாலும் காதலிப்பதை மட்டும் நிறுத்தவே கூடாது; உயிர் போகும் தருவாயிலும் காதலித்துக்கொண்டே இறக்கவேண்டும் !❤️❤️
14/03/2026
சிறு வயதில் நான் வாசித்த ஆதாம் ஏவாள் கதை என்னை இன்றும் பயப்படுத்துகிறது; அதாவது அந்த கதையில் வரும் சாத்தானை விட கடவுள் மீதே ஒரு அச்சம் எனக்கு !அந்த கதையின் சாராம்சம் எல்லாவற்றையும் படைத்த இறைவன் ஆதாம், ஏவாளிடம் கூறியது அந்த ஒரு பழத்தைமட்டும் சாப்பிடாதே !என்பதே ஆனால் சாத்தான் ஏவாளை வஞ்சித்தான் ;அந்த கனியை சாப்பிட்டால் நீ கடவுளாகலாம் ,என்றான் ;இதை நம்பிய ஏவாள் ஆதாமை கட்டாயப்படுத்த ,ஆதாம் காதலின் மிகுதியால் தவறை செய்கிறான் ; அந்த தவறுதான் இன்றைய துன்பங்களுக்கும் காரணம் என்கிறது அந்த கதை ; ஒரு காதல் ;அந்த காதலியின் பேச்சை கேட்ட அந்த ஆதாமின் காதல்தான் இந்த ஒட்டுமொத்த துன்பத்துக்கும் காரணம் என்கிறது அந்த கதை ;இந்த கதை உண்மையென்றால் இந்த ஒட்டுமொத்த துன்பத்திற்கும் நாடகங்களுக்கும் காரணம் ஆதாம் ஏவாள் மேல் கொண்ட காதல்தான்!!❤️❤️❤️
20/02/2026
ஆன்மீக பாதையில் செல்லும்போது இறை அருள் கிடைத்தால் நாம் ஆசைப்பட்ட எல்லாம் நிறைவேறுமா எனக்கேட்டால் ; நிச்சயம் நிறைவேறும் ; ஆனால் அது நாம் வந்த நோக்கத்தின் ஒரு பாகமாக இருந்தால் மட்டும் தான்; உண்மையில் பார்த்தால் நம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதை அனுபவிக்க இறை அருள் இல்லை என்றால் அந்த செல்வத்தால் பயனில்லை ; இதையறியாமல் பல மனிதர்கள் குறுக்கு வழியில் தப்பு கணக்கு போடுகிறன்றனர் ❤️
20/02/2026
நரகத்தில் சில நாட்களாவது வாழாதவனால் ; சொர்க்கத்தை முழுமையாக அனுபவிக்கமுடியாது !
14/02/2026
நான் தொலைத்த காதலை நானும் எங்கெங்கோ தேடினேண்டி !
நான் காணும் பெண்களில் எல்லாம் உன் முகத்தை பார்கிறேண்டி!
மறுபடி நீ என்கூட வந்தா உலகத்தை பரிசா தருவன்; உன் வயித்தில் மகனா பிறந்து உன்னை மட்டும் காதலிப்பேன் ❤️
13/02/2026
மனைவியையோ , காதலியையோ நண்பர்களிடமும் , உறவுகளிடமும் குறைக்கூறும் எவனும் அவர்களை பிரிந்துபோகமாட்டான் ; காரணம் அவனுக்குள் இருக்கும் ஒரு மிருகம் அமைதியானதுக்கு காரணமே அந்த காதல்தான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை !அந்த காதல் மட்டும் இல்லையென்றால் அவனுக்குள் இருக்கும் இருள் அவனையே ஆட்கொண்டு விடும் ❤️
09/02/2026
பிரான்ஸ் இல் உள்ள loure museum க்கு சென்ருறிந்தேன்; அங்கு உள்ள ஓவியங்களை பற்றி மிகப்பெரிய அறிவு எனக்கில்லாவிடினும் உலகப்புகழ் பெற்ற “மோனலிசா “ஓவியத்தை விட மிக அழகிய பிரமாண்ட ஓவியங்களை பார்க்கமுடிந்தது, ஆனால் மக்கள் பலரும் மோனலிசா ஓவியத்தை பார்க்கவே ஆர்வமாக இருந்தனர் ;இங்கு தான் Mind programming வேலை செய்கிறது; இந்த உலகம் எதை பெரிதாக காட்சிப்படுத்துகிறதோ அதையே மக்களும் கொண்டாடுகின்றனர்; இன்று மக்கள் என்னத்தை பார்க்கவேண்டும் என்பதை algorithm முடிவு செய்கிறது ; இதனால் பல சோரம் போகாத கலைஞர்கள் காவு வாங்கப்படுகின்றனர்
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the public figure
Telephone
Website
Address
Jaffna