Yarl Rider
This Page Make enjoy full
02/01/2026
ஆரியகுளம் சந்தி திக்குமுக்காட போகுது நாளைக்கு 😁😁
🚨தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு NPP கடும் எதிர்ப்பு! 🚫
🚨 யாழ். தையிட்டி விகாரை விவகாரம்: தேசிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பு! 🚫
🚫 கொழும்பில் புத்த சாசன அமைச்சரால் தையிட்டி விகாராதிபதிக்கு கௌரவம் வழங்கப்படும் நிகழ்விற்கு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
🚨முக்கிய முடிவுகள்:
🚨'சட்டவிரோத விகாரை' அறிவிப்பு:
தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது என மூன்று மொழிகளிலும் விகாரைக்கு முன்பாக பெயர் பலகை நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🚨கௌரவத்திற்கு எதிர்ப்பு:
விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் நடத்தப்படும்.
🚨தீர்மானம் நிறைவேற்றம்:
இந்தத் தீர்மானங்கள் வலி வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
🚨பின்னணி:
வலி வடக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பத்மநாதன் சாருஜனால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. தையிட்டியில் அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" சட்டவிரோதமானது என்றும், அதற்கு பிரதேச சபையில் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📢 போராட்டம் குறித்து:
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக நடைபெறும் போராட்டம் அரசியல் கட்சிகள் சாராத ஒரு மக்கள் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் போராட்டமாக இருக்குமானால் தாங்களும் கலந்துகொள்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
🚨கௌரவ நிகழ்வு:
தியிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் கொழும்பில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#தைஇட்டி #தையிட்டிவிகாரை #யாழ்ப்பாணம் #தேசியமக்கள்சக்தி #சட்டவிரோதம் #போராட்டம் #இலங்கைஅரசியல்
சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 7,000 டன் குப்பை சேர்கிறது. இந்த குப்பைகள் அனைத்தையும் டிரக்குகள் ஏற்றிக்கொண்டு சிங்கபூரில் இருக்கும் நாலு அனல்மின் நிலையங்களை வந்தடைகின்றன
இங்கே இந்த குப்பைகளில் மறுசுழற்சி செய்யகூடிய வகை குப்பைகள் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பபடுகின்றன. நாள் ஒன்றுக்கு 3,400 டன் கழிவு மறுசுழற்சி செய்யப்படுகிறது
மீதமுள்ள 4300 டன் கழிவு 1800 டிகிரி பாரந்கீட் வெப்பத்தில் எரிக்கபடுகிறது. இது பாய்லரில் நீரை கொதிக்கவைத்து அனல் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. சிங்கபூரின் 5% மின் தேவையை அதன் குப்பைகளே பூர்த்தி செய்கின்றன
குப்பைகளை எரிக்கையில் வெளியாகும் புகையின் நச்சு அளவுகள் தொடர்கண்காணிப்பில் உள்ளன. பாதுகாப்பான அளவுகளில் தான் நச்சுக்கள் வெளியாகின்றன
அதன்பின் ஏராளமான சாம்பல் மிச்சமாகிறது. இந்த சாம்பல் எல்லாம் மிகப்பெரும் பார்ஜ்கள் எனப்படும் சரக்கு கப்பல்களில் ஏற்றப்பட்டு, செமக்காவ் தீவு (Pulau Semakau) எனும் தீவை சென்றடைகின்றன.
செமக்காவ் தீவு உண்மையில் இயற்கையான தீவு அல்ல. அதாவது, கடல் பகுதியைச் சுற்றி பாறைகளால் ஆன சுற்றுச்சுவர் கட்டி, அதற்குள் கப்பல்களில் கொண்டு வரப்படும் எரிப்பு சாம்பலை (ash) கொட்டி நிலத்தை உயர்த்துவதன் மூலம் உருவாக்கப்பட்டது.
செமக்காவ் குப்பைக் கிடங்கில் சுவருக்குள் இருக்கும் லகூன் மாதிரியான பகுதியில் ஏரி போல கடல்நீர் தேங்கியிருக்கும். அதனுள் சாம்பல் கொட்டப்படும். தொடர்ந்து தினமும் பலநூறு டன் சாம்பல் கொட்டபடுவதால் தரைமட்டம் உயரும். அப்படி கடல்மட்டம் உயர்ந்து மேடான பகுதியில் புல்லும், செடிகளும் மரங்களும் நடப்பட்டு, பெஞ்சுகள் போடபட்டு, மக்கள் உலாவ நடைபாதைகள் அமைக்கபட்டு பார்க் போல தீவு காட்சியளிக்கும்
நீரில் நச்சுதன்மை தொடர்ந்து கண்காணிக்கபடும் அவ்வபோது மழை பெய்கையில் நீர் பம்ப் செய்து கடலினுள் வெளியேற்றபடுவதால் நீர் பிரஷ் ஆக உள்ளது
அருகே உள்ள பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் கண்கானிக்கபடுகிறது
07/12/2025
அரை மில்லியன் ஆப்பிரிக்கர்களுக்கு தண்ணீர் கொடுத்த குட்டி நாயகன் – ரயன்
ரயன் ஒரு சாதாரண குடும்ப சூழ்நிலையில் கனடாவில் பிறந்த பையன். 1991 மே மாதம் பிறந்தான்.
அவன் ஆறு வயதில் பள்ளியில் இருந்தபோது, ஆசிரியர் அவனுக்கு ஒரு கதை சொல்கிறார்
“ஆப்பிரிக்காவில் சில கிராமங்களில் குழந்தைகள், மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமலே வாழ்கிறார்கள். சிலர் அதனால் வாழ்நாளில் தண்ணீர் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள்.”
ரயன் இதை கேட்டதும் அவன் பிஞ்சு மனசு நொந்தது.
அவனனுக்கு தண்ணீர் வேண்டும் என்றால் வீட்டில் உள்ள குழாயிலே போய் தண்ணீர் குடிப்பது மட்டுமே தெரியும் ஆனால் இந்த தண்ணீர் கூட இல்லாமல் சிலர் உயிர் இழக்கிறார்கள் என்பதை நினைத்து வருந்தினான்
அவன் ஆசிரியரிடம் சென்று கேட்டான்,
“அங்கே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும் எப்படி தண்ணீர் கொண்டு செல்லலாம்?”
ஆசிரியர் சொன்னார்,
“WaterCan என்ற ஒரு அமைப்பு அவர்கள் சுமார் $70 க்கு ஒரு கிணறு தோண்டி தண்ணீர் அமைத்து கொடுத்து வருகிறார்கள்.”
அந்த குட்டி பையன் ரயன் நேரடியாக வீட்டுக்கு வந்தான்.அம்மாவிடம்
“அம்மா … நான் ஆப்பிரிக்கா குழந்தைகளுக்கு ஒரு கிணறு வாங்க வேண்டும். எனக்கு $70 வேண்டும்,” என்றான்.
அவனது தாய் சிரித்தாள்.
“நீ நல்லா படிச்சு சம்பாதிச்சு உன்னோட காசுல தான் வாங்க முடியும்,” என்றாள்.
அவன் மிகவும் கவலையா நம்ம எப்படி சம்பாதிக்கலாம் யோசிக்க ஆரம்பித்தான்
அவன் அப்போதே முடிவு செய்து அம்மவுக்கு சின்ன சின்ன வேலை செய்து சிறிய அளவுக்கு காசு வாங்கினான் அதை சேமிக்க தொடங்கினான். வீட்டிலும் தோட்டத்திலும், அப்பகுதி மக்களிடமும் சிறிய வேலைகளை செய்து பணம் சேமித்தான். சில மாதங்கள் கழித்து, $70 காசு சேர்ந்தது.
ஆனா WaterCan அமைப்பிடம் சென்று கேட்டபோது உண்மையான செலவு $2,000 என தெரிய வந்தது.
அவன் ஒரு நொடியும் தயங்கவில்லை எப்படியாவது
“நான் சம்பாதித்து திரும்பி வருவேன்,” என்றான்.
அவன் மீண்டும் வேலை செய்து பணம் சேமித்தான். சகோதரர்கள், நண்பர்கள், அப்பகுதி மக்கள் எல்லோரும் உதவி செய்து தேவையான பணத்தை எப்போடியோ சேர்த்து விட்டான் உடனே அவன் படித்த பள்ளியின் உதவியுடன் அவனுக்காக1999-ல், வட உகாண்டாவின் ஒரு கிராமத்தில் அந்தக் கிணறு தோண்டப்பட்டது. அந்த மக்கள் கிணற்றை பார்த்து மகிழ்ச்சியுடன் ஓடி வந்தனர்
அந்த கிராமத்தில் ரயன் அகானா என்ற சிறுவனை சந்தித்தான்.
அவன் பள்ளிக்கு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வந்ததை ரயன் அறிந்தான் மனம் முழுவதும் அதிர்ந்தது.
அவன் பெற்றோரிடம் கேட்டான்,
“அம்மா அவனுக்கு உதவ நான் செல்லலாமா?”
2000-ல் ரயன் அந்த கிராமத்திற்கு சென்றான்.
நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கா மக்கள் வரிசையாக நின்று,அவனை வரவேற்று
“ரயன்! ரயன்!” என்று முழங்கினர்.
ரயன் மனதில் மிக பெரிய மகிழ்ச்சி
இன்று ரயன் பெரியவர். 33 வயது.
Ryan’s Well Foundation நடத்துகிறார்.
400-க்கும் மேற்பட்ட கிணறுகள்
அவன் மூலம் தோண்டப்பட்டுள்ளன.
நூராயிரக்கணக்கான குழந்தைகள்
தண்ணீரை குடித்து பயன் பெற்று
வருகின்றனர்.
குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல், மக்கள் கிணறுகளை பராமரிப்பது, தண்ணீர் கையாள்வது எப்படி என்று கற்றுத்தருவதை தொடர்ந்து செய்கிறார்.
இந்தக் கதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது:
ஒரு நல்ல மனம் இருந்தால்
சின்ன கையாலே பெரிய அதிசயம் செய்ய முடியும்.
சின்ன பையனா இருந்தாலும், கனவுடன் முயன்றால் உலகத்தை மாற்றலாம்.
நல்லது செய்யும் மனம் தான் உண்மையான இறைவன்
வணக்கம்
பாலாஜி ஸ்ரீனிவாசன்
ஆஸ்திரேலியா
04/12/2025
உலகப் போர் 0: மலை போன்ற ரஷ்யாவை வீழ்த்திய ஜப்பான் எனும் சிறு கல்!
19-ம் நூற்றாண்டின் தொடக்கம் அது. ஐரோப்பிய நாடுகள் தான் உலகின் "தாதாக்கள்" என்று மார்தட்டிக்கொண்டிருந்த காலம். அதிலும் ரஷ்யா, உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட ஒரு ராட்சத தேசம். மறுபுறம் ஜப்பான், ஆசியாவின் ஓரத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவு. "யானைக்கும் எறும்புக்கும் சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள்?" என்று கேட்டால் உலகம் கண்ணை மூடிக்கொண்டு ரஷ்யா என்றுதான் சொல்லும். ஆனால், 1904-ல் நடந்த அந்த அதிசயம் வரலாற்றையே மாற்றிப்போட்டது.
ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அவர்களிடம் பெரிய கடற்படை இருந்தாலும், அவர்களின் துறைமுகங்கள் குளிர்காலத்தில் பனிக்கட்டியாக உறைந்துவிடும். இதனால் கப்பல்கள் செல்ல முடியாது. வருடம் முழுவதும் உறையாத ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இதற்காகச் சீனாவின் 'போர்ட் ஆர்த்தர்' (Port Arthur) பகுதியை ரஷ்யா குத்தகைக்கு எடுத்தது. ஆனால், இது ஜப்பானின் கண்களை உறுத்தியது. ஏற்கனவே அந்தப் பகுதியை ஜப்பான் ஒரு போரில் வென்றிருந்தாலும், உலக நாடுகள் மிரட்டி அதைத் திருப்பிக் கொடுக்க வைத்திருந்தன. இப்போது அதே இடத்தை ரஷ்யா ஆக்கிரமித்ததும், ஜப்பானியர்களின் ரத்தம் கொதித்தது. பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இனி பேசி பயனில்லை, அடித்துத்தான் கேட்க வேண்டும் என்று ஜப்பான் முடிவெடுத்தது.
1904 பிப்ரவரி 8... ரஷ்யா எதிர்பார்க்காத ஒரு நள்ளிரவு. அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் முன்பே, ஜப்பானிய தளபதி அட்மிரல் டோகோ ஒரு தந்திரமான வேலையைச் செய்தார். போர்ட் ஆர்த்தரில் நின்றுகொண்டிருந்த ரஷ்யக் கப்பல்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். கண் இமைக்கும் நேரத்தில் ரஷ்யாவின் பலமான கப்பல்கள் சிதறின. நிலைகுலைந்து போன ரஷ்யா, சுதாரிப்பதற்குள் ஜப்பான் அடுத்தடுத்த அடிகளைக் கொடுத்தது. கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை வைத்து ரஷ்யத் தளபதியின் கப்பலையே வெடிக்கச் செய்தார்கள்.
இந்தச் செய்தி ரஷ்ய மன்னர் இரண்டாம் நிக்கோலஸை எட்டியது. கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், ஐரோப்பாவில் இருந்த தனது பிரம்மாண்டமான 'பால்டிக் கடற்படையை' (Baltic Fleet) ஜப்பானை நோக்கி அனுப்பினார். ஆனால், விதி வேறு கணக்குப் போட்டது. வரும் வழியில் சாதாரண மீன்பிடிப் படகுகளை ஜப்பானிய கப்பல்கள் என்று நினைத்து ரஷ்யா சுட, அது பிரிட்டனின் கோபத்தைத் தூண்டியது. இதனால் சூயஸ் கால்வாய் வழியாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட, ஆப்பிரிக்காக் கண்டத்தையே சுற்றிக்கொண்டு சுமார் 10,000 மைல்கள் பயணம் செய்து, களைத்துப் போய் ஜப்பானை வந்தடைந்தது ரஷ்யப் படை.
1905 மே மாதம்... 'சுஷிமா' (Tsushima) கடல் பகுதி. அங்கே காத்துக்கொண்டிருந்தது எமன் ரூபத்தில் ஜப்பானியப் படை. களைத்துப்போய் வந்த ரஷ்யக் கப்பல்களை, ஜப்பானின் குட்டிப் படகுகள் சுற்றி வளைத்தன. ஜப்பானிய தளபதி டோகோ 'T' வடிவ வியூகத்தை அமைத்தார். ரஷ்யக் கப்பல்கள் நேராக வர, ஜப்பானியக் கப்பல்கள் குறுக்கே நின்று சரமாரியாகச் சுட்டன. அன்று நடந்த அந்தப் போரில் ரஷ்யாவின் கனவு கடலோடு மூழ்கியது. 4000 ரஷ்ய வீரர்கள் இறந்தனர், 5000 பேர் கைதிகளாயினர். ஆனால் ஜப்பானுக்கோ மிகச் சொற்ப இழப்புதான்.
இறுதியில் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒரு ஆசிய நாடு, ஐரோப்பிய வல்லரசைத் தோற்கடிக்க முடியும் என்று ஜப்பான் நிரூபித்த அந்தத் தருணம், உலக வரலாற்றில் 'வேர்ல்ட் வார் ஜீரோ' (World War Zero) என்று அழைக்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்கு விதை போட்டதே இந்தச் சின்னத் தீவின் பெரிய வெற்றிதான்!
04/12/2025
1987-ம் ஆண்டு…அமெரிக்கன் ஏர்லைன்ஸ் கவனிக்காத ஒரு பெரு பிழையிலிருந்து ஒரு அதிசயக்கதை பிறந்தது.
ஸ்டீவ் ரோத்ஸ்டீன் என்பவர் ஒரு அமெரிக்கர். விமானப் பயணத்தின் மேல் தீராத அவரின் ஆசை… சாதரணமான மனிதன் நினைப்பது போல் இல்லை. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் “வாழ்நாள் முழுவதும் எந்நேரமும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்!” என்ற ஒரு சிறப்பு கோல்டன் டிக்கெட்டை அறிமுகப்படுத்தியது. விலை? 2,50,000 டாலர். ஸ்டீவ் அதை ஆர்வமுடன் வாங்கினார். அதில் மட்டும் அவர் திருப்தியடையவில்லை மேலும் 1,50,000 டாலர் கொடுத்து, எப்போதும் அவர் உடன் செல்ல அடுத்த ஒருவருக்கான டிக்கெட்டையும் வாங்கினார்.
அதன் பிறகு தொடங்கியது ஸ்டீவின் பறக்கிற கதை.
பாரிசுக்கு சென்று காலை உணவு…சாப்பிடுவார்
இரவு நியூயார்க்
ஒரு விளையாட்டு போட்டி பார்க்க வேண்டும் என்றால் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்லுவார்
சில சமயங்களில் தெருவில் சந்திக்கும் ஹோம்லெஸ் நபர்களை
“ஏய்! உன் ஊருக்கு போக வேண்டுமா?” என்று கேட்டுப் பிடித்து,
டிக்கெட் வாங்கித் தாய்நாட்டிற்கு அனுப்பிவைப்பார்
ஒரு முறை ஒருவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,
அவருக்காகவே ஒரு சீட்டைக் பதிவு செய்து அனுப்பி வைத்தார்
சில பயணங்களைப் பதிவு செய்தும்,
விமான நிலையமே போகாமல் நல்லா போர்த்திக்கிட்டு வீட்டிலேயே இருந்தார்.
ஆண்டுகள் ஓடின…
ஸ்டீவ் மட்டும் நிற்கவில்லை.
10,000-க்கும் அதிகமான விமானப் பயணங்கள்.அமெரிக்கன் ஏர்லைன்ஸ்
கம்பனிக்குக் கிடைத்த லாபத்தைக் காட்டிலும்
ஸ்டீவ் பயன்படுத்தியது மிக அதிகம்.
கணக்கிட்டு பார்த்த போது
21 மில்லியன் டாலர் செலவாகிவிட்டது!
அப்படின்னா?
விமானக்கம்பனி பயந்தது
“இவன் நம்மை தின்னிவிடப்போறான்!” நினைத்து
2008-ல் அவருடைய Golden Ticket-ஐ ரத்து செய்து விட்டனர்.
ஆனா… அமெரிக்கா சட்டம் வேற மாதிரி
ஸ்டீவ் நேரடியாக ஒரு வக்கீலை வைத்து நீதிமன்றம் சென்றார்.
“நீங்கதான் இது வாழ்நாள் முழுவதும் இலவசம் பயணம்னு சொன்னீங்க…இப்ப இல்லை என்று சொல்வது ஏற்று கொள்ள முடியாதுன்னு
என்று வலிமையாக வாதடினார்
இறுதியில் தீர்ப்பு...
விமானக்கம்பனி ஒப்புக்கொண்டது.
ஸ்டீவுக்கு 3 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கப்பட்டது.
மற்றும் அதைவிட பெரிய வெற்றி என்ன தெரியுமா?
அவருடைய வாழ்நாள் டிக்கெட்
மீண்டும் செல்லுபடியாகிவிட்டது!
அதுக்குப் பிறகும் அவர் பறந்தார்…
முடிவில்லாத வானத்தை நோக்கி.
அவரது பயணங்கள் எத்தனை என்று
இன்றும் யாருக்கும் தெரியாது.
அவர் பயணித்தது எவ்வளவு தெரியுமா?
10,000-க்கும் மேற்பட்ட flights!
அதுவும் First Class-ல…
அரசன் மாதிரி மகிழ்ச்சியோட!
First Class ஒரே ஒரு flight-க்கு
$7,000 முதல் $15,000 வரை செலவு வரும்.
ஆனா ஸ்டீவ்?
ஒரே வருடம் $1–2 million வரை
அதுவே 20 ஆண்டுகள் தொடர்ந்ததால்
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-க்கு
ரொம்ப ரொம்ப பெரிய நஷ்டம்
மொத்தம் $21 million!
ஒரு மனிதரால்
முழு விமானக்கம்பனியே
மனஅழுத்தத்தில் விழுந்த கதை இது
ஸ்டீவ் ரோத்ஸ்டீன் தனது lifetime unlimited AAirpass விளக்கமா சொல்லும் விவரங்கள் சில:
• அவர் 14,000,000 மைல்கள் பயணித்து, 10,000+ flights எடுத்துள்ளார் lifetime pass-ஆல்.
• 2004-ல் ஒரு மாதத்தில் 18 flights மட்டும் பறந்ததை ரிப்போர்ட் செய்துள்ளனர்.
அதாவது, pass ரத்து செய்யப்பட்டது போதிலும், அவர் வாழ்நாள் முழுவதும் unlimited travel செய்து வந்தார், ஆனால் 2008-.அப்புறம் எண்ணிக்கை public ஆக இல்லை.
எனக்கு இந்த கதை படிக்கும்போது நம்ம சூரி பரோட்டா சாப்பிடுவாரே அந்த கதை ஞாபகம் வருது.......
(அவருடைய போட்டோ கிடைக்கவில்லை
சும்மா ஒரு போட்டோ இருக்கட்டுணும் போட்டு இருக்கேன் )
படித்தேன் பகிர்கிறேன் நீங்களும் உங்க நண்பருக்கும் பகிருங்கள்
நன்றி
பாலாஜி ஸ்ரீனிவாசன்
Follow the நான் படித்த பதிவுகள் channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb7KdctISTkNXImDw92u
04/12/2025
சீனா தைவானை கைப்பற்றினால் உங்கள் மீது போர்தொடுப்போம் என ஜப்பான் வெளிப்படையாக அறிவித்துள்ளது..
இதனை பார்ப்பவர்களுக்கு என்னடா இது சீனா எவ்வளவு பெரிய நாடு அதனை தம்மாத்துண்டு ஜப்பான் மிரட்டுதே சீனா திருப்பி அடிச்சா ஜப்பான் என்ற நாடே இருந்த இடம் தெரியாம போய்டுமேனு நீங்க நினைக்கலாம்
அங்கதான் ஒரு ட்விஸ்டு நீங்களெல்லாம் தம்மாத்துண்டு நாடு ஜப்பான்னு நினைச்சிட்டு இருக்குற உங்களுக்கெல்லாம் அந்த நாட்டை மாணிக்கமாதானே தெரியும் அந்த நாட்டிற்கு இன்னொரு முகம் இருக்கு அதான் #பாட்சா
⬇
🐲 முதல் சைனோ-ஜப்பானியப் போர்: ஆசியாவின் சிம்மாசனம் ஆடிய கதை 🗡️
வரலாற்றில் ஒரு அசைக்க முடியாத சாம்ராஜ்ஜியம், தன்னைவிட பல மடங்கு சிறிய ஒரு தேசத்திடம் படுதோல்வி அடைவது என்பது அபூர்வமான நிகழ்வு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் பார்வையை ஆசியாவின் பக்கம் திருப்பிய அந்த அதிர்ச்சி சம்பவம் தான் முதல் சைனோ-ஜப்பானியப் போர் (1894-1895).
1. கொரியா: பதற்றத்தின் பூமி
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், கொரியா (அப்போது "ஹெர்மிட் கிங்டம்" - துறவி இராச்சியம்) என்ற சிறிய நாடு ஆசியாவின் இரண்டு வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டது.
சீனாவின் பார்வை: பல நூற்றாண்டுகளாக, கொரியா சீனாவின் "துணை நாடாகவே" (Suzeainty) இருந்தது. கொரியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தங்கள் பாரம்பரிய உரிமை என்று சீனா கருதியது.
ஜப்பானின் இலக்கு: 1868 ஆம் ஆண்டுக்குப் பிறகு நவீனமயமான ஜப்பான் (மீஜி மறுசீரமைப்பு), தனது வளர்ச்சியை நிலைநாட்டவும், ரஷ்யாவின் அச்சுறுத்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும், கொரியாவைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடித்தது.
இந்த இரண்டு யானைகளின் சண்டைக்கு நடுவில், ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளும் 'தி கிரேட் கேம்' என்ற பெயரில் கொரியாவில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயன்றன. இப்படி மூன்று பெரிய சக்திகள் ஒரு சிறிய தேசத்துக்காகப் போட்டியிட்டபோது, அங்கே ஒரு போர் மூள்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
2. மக்கள் புரட்சியும் சங்கிலித்தொடர் விபத்தும்
போருக்கு உண்மையான நெருப்பை மூட்டியது கொரியாவின் உள் விவகாரங்கள் தான். மன்னர் குடும்பத்தில் நிலவிய அதிகாரப் போட்டிகள், அரசாங்க அதிகாரிகளின் ஊழல், மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றால் மக்கள் கொதிப்படைந்தனர்.
1894 ஆம் ஆண்டு, டோங்கேக் (Donghak) விவசாயிகள் கிளர்ச்சி வெடித்தது. ஊழல் அதிகாரிகளையும், அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்துப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆயுதம் ஏந்திப் போராடினர்.
இந்தக் கிளர்ச்சியை அடக்க முடியாமல், கொரியா மன்னர் சீனாவின் உதவியை நாடினார். சீனா உடனே படைகளை அனுப்பியது. ஆனால், இது ஒரு கொடிய ஒப்பந்தத்தை மீறிய செயல்!
1885 இல் செய்யப்பட்ட கன்வென்ஷன் ஆஃப் டீஎன்சிங் (Convention of Tientsin) ஒப்பந்தத்தின்படி, கொரியாவுக்குள் படைகளை அனுப்பினால், இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்க வேண்டும். சீனா அறிவித்திருந்தாலும், ஜப்பான் இதை ஒரு "சமாதான மீறலாக" கருதியது. சீனாவைப் பின்தொடர்ந்து, ஜப்பானும் 'கொரியாவில் உள்ள தன் பிரஜைகளைக் காப்பாற்ற' படைகளை அனுப்பியது.
3. கடல் நடுவே மின்னல் தாக்குதல்
ஜப்பானியப் படைகள் கொரியாவுக்குள் நுழையும் முன், டோங்கேக் கிளர்ச்சி அடங்கிவிட்டது. படைகளைத் திரும்பப் பெறலாம் என்று சீனா அறிவித்தது. ஆனால், ஜப்பான் மறுத்தது. கொரிய நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் வரை தாங்கள் வெளியேற மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தது.
இந்தக் குழப்பமான சூழலில், 1894 ஜூலை 25 அன்று போர் வெடித்தது. அதிகாரப்பூர்வமாகப் போரை அறிவிக்கும் முன்பே, கொரியக் கடற்கரையில் ஜப்பானியக் கப்பல்கள் சீனப் போர்க் கப்பல்கள் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தின. பேட்டில் ஆஃப் பூம்டோ (Battle of Pungdo) என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலில், சீன வீரர்கள் படுகாயமடைந்தனர். இதுவே போரின் முதல் இரத்தம்!
இதையடுத்து, 1894 ஆகஸ்ட் 1 அன்று இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாகப் போர் தொடங்கியது.
4. மாபெரும் ராணுவத்தின் பரிதாப நிலை
அளவில் சீனா ஜப்பானை விட 25 மடங்கு பெரியது. சீன ராணுவத்தில் 6,50,000 வீரர்கள் இருந்தனர், ஜப்பானில் 2,40,000 வீரர்கள் தான். மேலும், உலகின் சக்தி வாய்ந்த ஜெர்மன் போர்க் கப்பல்கள் சீன கடற்படையிடம் இருந்தன. ஆனாலும், போர் அசுரத்தனமான வேகத்தில் ஜப்பானின் பக்கம் திரும்பியது. அதற்குக் காரணம்:
சீனாவின் பலவீனம்: குயிங் அரசவையில் நிலவிய ஊழல், ராணுவ அதிகாரிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமையின்மை மற்றும் முறையான பயிற்சி இல்லாதது.
ஜப்பானின் சக்தி: ஜப்பானியப் படைகள் நல்ல பயிற்சி, நவீன ஐரோப்பிய ஆயுதங்கள் மற்றும் துல்லியமான போர் வியூகங்களுடன் களமிறங்கின. போரின் இரகசியத் திட்டங்களை ஜப்பான் ஒட்டுக் கேட்டிருந்தது!
முக்கிய வெற்றிகள்:
பியாங்காங்கின் வீழ்ச்சி: நிலத்தில் நடந்த முதல் பெரிய போரிலேயே (செப்டம்பர் 15, 1894), சீனப் படைகள் சிதறி ஓடின. இரண்டே நாட்களில் கொரியாவின் முக்கியத் தளமான பியாங்காங் ஜப்பானிடம் வீழ்ந்தது.
யாலு ரிவர் படுகொலை: கடலில் நடந்த மிகப் பெரிய மோதலில் (செப்டம்பர் 17, 1894), சக்திவாய்ந்த கப்பல்கள் இருந்தும், சீனக் கடற்படை தளபதிகளின் தவறான முடிவுகள் மற்றும் பயிற்சி இன்மையால் கடற்படையும் நொறுங்கியது.
5. அவமானமும் படுகொலையும்
வெற்றிக் களிப்பில் இருந்த ஜப்பான், நேரடியாகச் சீனாவிற்குள் நுழைந்தது. சீனாவின் முக்கிய கடற்படைத் தளமான போர்ட் ஆர்த்தரைத் தாக்கியபோது, சீன வீரர்கள் பொதுமக்களின் உடையில் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஜப்பானிய வீரர்கள் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் ராணுவ வீரர்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். போர்ட் ஆர்த்தர் படுகொலை என்று அழைக்கப்படும் இந்தச் சம்பவம், சர்வதேச அளவில் ஜப்பானுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தேடித் தந்தது.
இறுதியாக, சீனாவின் கடைசி கடற்படைத் தளமான வெய் ஹைவேயும் வீழ்ச்சியடைந்தது. கடல் மற்றும் நிலத்தில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், குயிங் பேரரசால் போரைத் தொடர முடியவில்லை. சீனாவின் கடற்படைத் தளபதி அட்மிரல் டிங் ருசாங் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார்.
6. உலகை மாற்றிய ஒப்பந்தம்
பலவீனமடைந்த சீனா சமாதானத்திற்கு வந்தது. 1895 ஏப்ரல் 17 அன்று கையெழுத்தான ஷிமோனோசெக்கி ஒப்பந்தம் (Treaty of Shimonoseki) சீனாவின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக அமைந்தது.
சீனா அதிகாரப்பூர்வமாகத் தனது தோல்வியை ஒப்புக் கொண்டது.
கொரியா ஒரு சுதந்திர நாடு (ஆனால், ஜப்பானுக்கு அடிபணிந்தது).
சீனா பெரும் தொகையை (இன்றைய மதிப்பில் இலட்சக்கணக்கான கோடி) போர் இழப்பீடாக வழங்கியது.
தைவான் தீவு, பெஸ்காடோரஸ் தீவு மற்றும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லியோடாங் தீபகற்பம் ஆகியவற்றை ஜப்பானிடம் நிரந்தரமாக ஒப்படைத்தது.
7. ஒரு புதிய போரின் விதை
ஜப்பான் உலக அளவில் ஒரு புதிய வல்லரசாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதன் மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை.
ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகள் இணைந்து "முப்பெரும் நாடுகளின் தலையீடு" (Triple Intervention) என்ற பெயரில் ஜப்பானை மிரட்டின. கைப்பற்றிய லியோடாங் தீபகற்பத்தை மீண்டும் சீனாவுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என்று கட்டளையிட்டன. மூன்று வல்லரசுகளுடன் ஒரே நேரத்தில் போரிட விரும்பாத ஜப்பான், அவமானத்துடன் அதற்கு ஒப்புக்கொண்டது.
ஆனால், இந்த அவமானமே அடுத்த போருக்கான விதையை விதைத்தது! சில வருடங்களிலேயே அதே லியோடாங் தீபகற்பத்தை ரஷ்யா சீனாவிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தபோது, ஜப்பானின் கோபம் ரஷ்யா மீது திரும்பியது. இந்தச் சம்பவம்தான் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யா-ஜப்பானியப் போருக்கு (Russo-Japanese War) நேரடிக் காரணமாக அமைந்தது. copied
02/12/2025
1996ல் வெளியான இந்தியன் படத்தில் ஒரு காட்சி. இந்தியன் தாத்தா ஒரு கொலை செய்துவிட்டு ஒரு கடிதம் எழுதுவார். அதில் உள்ள எழுத்து நடையை வைத்து கடிதத்தை எழுதியவர் சுதந்திர போரட்டகாலத்தை சேர்ந்த வயதானவர் ஒருவர் என சிபிஐ ஆபிசர் கண்டுபிடிப்பார்
1995
அமெரிக்காவை 18 ஆண்டுகளாக தபால் வழி குண்டுகள் அலைக்கழித்து வந்தன. யாரோ பல்கலைகழகங்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் தபால் வழியே குண்டுகளை அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பார்சல்களை திறந்ததும் குண்டுகள் வெடித்தன. 18 வருடமாக நிகழ்ந்த சம்பவங்கள். பல மரணங்கள், நாடு முழுக்க கல்விநிறுவனங்களில் பார்சல்களை திறக்கவே பயந்தார்கள்
எந்த துப்பும் இல்லாத நிலையில், அந்த மர்ம நபருக்கு யுனபாம்பர் (Unabomber) என பெயர் வைத்தார்கள். யுனபாம்பர் கொடுத்த ஒரே க்ளூ அவன் விரிவாக எழுதிய கடிதங்களும், பிரகடனமும் தான். 35,000 பக்கத்துக்கு தொழில்நுட்பம், கல்வி வளர்ச்சிக்கு எதிராக அவன் ஒரு பிரகடனத்தை எழுதியிருந்தான். எழுதி நியூயார்க் டைம்சுக்கு அனுப்பியிருந்தான்
எந்த ஆதாரமும், துப்பும் இல்லாத நிலையில், அந்த பிரகடனத்தை ஆராய ஜார்ஜ்ட் டவுன் பல்கலைகழக மொழியியல் பேராசிரியர் ரோஜர் சூஹி என்பவரை அழைத்து வந்தார்
"பிரக்டனம் துளிகூட பிழையின்றி மிக உயர்தரமான ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. சாதாரண குற்றவாளி இப்படி எல்லாம் 35,000 பக்கத்துக்கு பிரகடனம் எழுதிக்கொண்டிருக்கமாட்டான். நீங்கள் தேடும் நபர் மிக பெரிய படிப்பு படித்தவர்"
போலிசுக்கு அதிர்ச்சி. குண்டுகளை இப்படி மிக துல்லியமாக வைப்பதாலும், விமான கம்பனி ஒன்றுக்கு குண்டுகளை அனுப்பியிருந்ததாலும் யுனபாம்பர் ஒரு மெகானிக் என அவர்கள் கருதி இருந்தார்கள். விமான கம்பனிகளின் மெகானிக்குகள் எல்லாம் தீவிர கண்கானிப்புக்கு உட்பட்டிருந்தார்கள். இப்ப அதெல்லாம் அவசியமில்லை
"பிரகடனம் முழுக்க அமெரிக்க ஆங்கிலத்தில் இல்லாமல் ப்ரிட்டிஷ் ஆங்கிலத்தில் உள்ளது. உதாரணமாக லைசென்ஸ் எனும் வார்த்தையில் எஸ் (License) என்பதை பயன்படுத்தாமல் சி (Licence) என்பதை பயன்படுத்துகிறார்கள். கருப்பர் என சொல்லாமல் நீக்ரோ என்ற 1960க்களின் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இவர் நிச்சயமாக 1950க்களில் பள்ளிபடிப்பை முடித்தவராக இருக்கவேண்டும். 1960க்களில் கல்லூரிக்கு போயிருக்கவேண்டும். அப்படியானல் இவர் பிறந்தது 1950க்களில்..இப்போது ஆண்டு 1995. தோராயமாக ஒரு 40+ வயதுடையவரை தேடவேண்டும்.."
போலிஸ் இதை செய்தது 20 வயது இளைஞன் என கருதியிருந்தார்கள். அந்த கணிப்பும் வீண்
பேராசிரியர் இன்னும் ஒரு க்ளூவை கண்டுபிடித்தார்
"இந்த வட்டார நடையையும், இதில் பயன்படுத்தபடும் வார்த்தைகளையும் பார்த்தால், 1950க்களில் சிகாகோவில் வெளிவந்த சிகாகோ ட்ரிப்யூன் நாளிதழில் பயன்படுத்திய வார்த்தைகளையே பயன்படுத்துவது தெரிகிறது. க்ளூ (Clue) எனும் வார்த்தையை (clew) என எழுதுகிறார். பெண்களை குறிக்க "சிக்" (Chick) எனும் வார்த்தையை பயன்படுத்துகிறார். நீங்கள் தேடவேண்டிய நபர் சிகாகோவில் உள்ள 40+ வயதான ஒரு பெரிய படிப்பு படித்த கல்வியாளர்.."
நாடு முழுவதும் விரிக்கபட்ட வலை, அதன்பின் சிகாகோவில் விரிக்கபட்டது. அந்த பிரகடனத்தில் உள்ள பத்திகள் எப்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி வித்தியாசமான எழுத்துநடை, பேச்சு நடை உள்ளவரை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் போலிஸுக்கு சொல்லுங்கள் என
சிகாகோவில் லின்டா பேட்ரிக் எனும் பெண் அதை படித்தார். அதில் உள்ள ஒரு வார்த்தை அவரது கவனத்தை ஈர்த்தது. "கூல் ஹெட்ட லாஜிசியன்" (Cool headed Logician) எனும் வார்த்தை. அதை அவரது கணவரின் தம்பி டெட் தான் அடிக்கடி பயன்படுத்துவார்
உடனே எப்பிஐ தொடர்புகொன்டார். இப்படி தினம் ஆயிரக்கணக்கில் எப்பிஐக்கு போன்வரும் என்றாலும் சிகாகோ, மத்திம வயது நன்றாக படித்தவர் என்றதும் எப்பிஅக்கு சுவாரசியம் கூடியது. டெட் ஒரு கல்லூரி பேராசிரியர்
டெட்டின் கடிதங்களை ரகசியமாக தேடி எடுத்தார்கள். அதில் "கேக்கை சாப்பிட்டுக்கொண்டே, அதை வைத்திருக்கவும் ஆசைப்பட கூடாது, டெட்" என எழுதியிருந்தது
யுனபாம்பரின் பிரகடனத்தில் இருக்கும் அதே வார்த்தைகள்
ஆனால் கைது செய்ய இது போதாது, நீதிபதியை அனுகி சர்ச் வாரண்ட் கேட்டார்கள். மொழியியல் ஆய்வுகளை சமர்ப்ப்பித்து "இதை முதன்மை ஆதாரமாக கொண்டு சர்ச் வாரண்ட் கொடுங்கள்" என கேட்க நீதிபதி "என்னப்பா உலக வரலாற்றில் இல்லாத புதுமையாக எழுத்து நடையை வைத்து எல்லாம் சர்ச் வாரண்ட் கேட்கிறீர்கள்" என கடிந்துகொண்டாலும் கொடுத்துவிட்டார்
சோதனையில் அனைத்து ஆதாரங்களும் சிக்கின. டெட் ஜெயிலுக்கு போனார்
"இது பர்பெக்ட் கிரைம். எந்த ஆதாரமும் இருக்ககூடாது என என் மூளையை பிரயோகித்தேன். கடையில் கூட வாங்காமல் மானைகொன்று, அதில் இருந்து நானே Glue தயாரித்து ஒட்டி எடுத்து குண்டுகளை தயாரித்தேன்....எப்படி பிடித்தீர்கள்?"
இத்தனை அறிவை விவரமாக பயன்படுத்த தெரியாமல் இப்படி முட்டாள்தனத்துக்கு பயன்படுத்தியதை என்னவென சொல்ல?
~ நியாண்டர் செல்வன்
27/09/2025
தலிபான்களின் காட்டாட்சி !
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய அனைத்து நுல்களுக்குளுக்கும் தடை விதிக்கப்பட்டு அத்தனை படைப்புகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் மாணவிகள் பாடசாலைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் . பெண்கள் முகத்தை காட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் அதற்கு அப்பால் அதாவது இசைக்கருவிகள் பாவிப்பதற்கு தடை, செஸ் விளையாடுவதற்கு தடை, பாடல்கள் கேட்பதற்கு தடை, தொலைகாட்சி பார்ப்பதற்கு தடை , திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் பார்ப்பதற்கு முற்றிலும் தடை . இதற்கு அப்பால் நடந்த கொடூர தலிபான்களின் காட்டாட்சியைத்தான் உலகம் பார்த்தது அண்மையில் அங்கு இடம்பெற்ற நில அதிர்வில் பூமியில் புதையுண்டவர்களின் சடலங்களை தோண்டி எடுக்கும்போது அந்த சடலங்கள் அருகில் பெண்களின் சடலங்கள் இருந்தால் அவற்றை தோண்டி எடுக்கக்கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது.
இதற்கு தலிபான்கள் சொல்லும் காரணம் இஸ்லாமில் சொல்லப்பட்டுள்ள சரிஹா " சட்டத்தை நாம் கடைப்பிடிக்கின்றோம் என்பதாகும். உலக நாடுகளின் வறுமை கோட்டுக்குக்கீழ் மிகவும் மோசமான பொருளாதாரத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஒரு சூழ்நிலையில் கற்காலம் நோக்கி பயணிக்கின்றது ஆப்கானிஸ்தான்.
தாய்ப்பாசம்🥰🥰🥰
24/09/2025
புதிய சவூதி - பாக். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் 25,000 துருப்புக்களை சவுதி ஏமன் எல்லைக்கு அனுப்பியதை அடுத்து பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
ஹவுத்தி போராளிகள் "ஏமன் சவுதி எல்லையை பாகிஸ்தான் வீரர்களுக்கான கல்லறையாக மாற்றுவோம்" என்று கூறி கடுமையான அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்,
இது பரந்த மோதலுக்கான அச்சங்களை எழுப்பியுள்ளது. 😂
18/09/2025
எல்லாரையும் சிரிக்க வச்ச சிறந்த நகைச்சுவை கலைஞர் ஆழ்ந்த இரங்கல்கள் 🥲🥲🥲🥲🥲🥲
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Jaffna
40000