Shiv_Eye_Frame

Shiv_Eye_Frame

Share

An Architect, Enthusiastic Photographer & Musician

Photos from Shiv_Eye_Frame's post 06/07/2024

The Art In Demolition - Site inspection Frames of the Day....
Ongoing Project
DESIGN & Consultancy - Ar Sivapalan Sivashankar
Builders - Smart Construction Management
Photography - Shiv_Eye_Frame

Photos from Shiv_Eye_Frame's post 01/06/2024

பச்சை பட்சியும் 🦜 மஞ்சள் மாங்கனியும் 🥭. கடந்த ஓரிரு தினங்களாக என்றைக்கும் இல்லாதவாறு முதல் முறையாக அதிகமாக தரையிலே மாங்கனிகள் சிறிது சிறிதாக நன்னப்பட்டு தரையில் விழுந்து காய்ந்து கிடந்தன. நானும் வழக்கமாக அணில்கள்தான் இதை செய்யும் என எரிச்சலோடு தரையைச் சுத்தம் செய்யப்போனேன். ஆனால் அவை நிலத்தில் நன்றாக ஒட்டி விட்டன. அது சுத்தம் செய்யும் போது அவ்வளவு எரிச்சலாக இருந்தது. ஏதோ ஒரு வெறுப்புடன் மாமரத்தின் மேலே பார்த்தேன். அப்போதுதான் பார்த்தால் பச்சைக்கிளி அம்மையார் லாவகமாக சந்தோசமாக மாங்கனிகளை கொத்தி தின்ற வண்ணம் கிளையிலே அமர்ந்திருந்தார். எந்தவித ஒளியும் எழுப்பவில்லை. அமைதியாக தன் பணியை செய்து கொண்டிருந்தார். ஆனால் எனக்கோ என்னடா இது வழக்கமாக அணில்கள்தானே வரும் இன்று அந்த புதிதாக கிளிகள் இருக்கின்றன என்ன சந்தேகம். காரணம் இம்முறை மாமரத்தின் மேல் கிளைகளை தறித்துவிட்டோம். அதனால் அடர்த்தியாக இருந்த மாமரத்தின் மாங்கனிகள் வெளியே தெரியவில்லை. வானத்தோடு பறந்து செல்கின்ற கிளி கூட்டங்கள் அதைக் கண்டு சந்தோஷமாக வந்திருந்து சாப்பிட தொடங்கியிருந்தன. அந்தக் கிளியோ அணிலைப் போல 360 டிகிரியும் உடலை சுற்றி சுற்றி சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அது சாப்பிடும் அழகை பார்த்து அடுத்த கணம் வெறுப்பு விருப்பாக மாறி‌ சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல அவற்றைக் காட்சிகளாக்கி உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம்.

நன்றிகள்.🥰

📸- Shiv_Eye_Frame

29/04/2024

கேரளா பால் பாயாசம் என்றாலே ........

Photos from Shiv_Eye_Frame's post 28/04/2024

நகர சங்கீர்த்தனம். சங்கீர்த்தனம் என்பது தனியாக ஒருவர் மட்டுமல்லாது குழுவாக இணைந்து இறைவனின் நாமங்களை பாடுதல் எனப் பொருள்படும்.‌ இங்கே இந்த புகைப்படங்களானது ஸ்ரீ சத்திய சாயி ஆராதனா தினத்தன்று திருநெல்வேலி சத்தியசாயி சேவா நிலையத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வழக்கமாகவே ஒவ்வொரு போயா தினங்களிலும் மற்றும் சிவராத்திரி போன்ற விசேடதினங்களிலும் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது. அதில் இயன்றவரை நானும் பங்கு கொள்வதுண்டு. அதிகாலை நான்கரை மணிக்கு ஓங்காரம், சுப்ரபாதம் என்பன இடம்பெற்று பின்பு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நிலையத்தை சுற்றியுள்ள இல்லங்கள் நிறைந்த வீதி வழியாக இந்த ஆன்மீக நிகழ்வு இடம்பெறும். இதன் முக்கிய குறிக்கோள் இந்த அதிகாலை நேரத்தில் நித்திரைவிட்டு எழுகின்ற போது நபர்கள் இறை நாமத்துடனும் தெய்வீக அதிர்வுகளுடனும் தங்களுடைய நாளை தொடங்க வேண்டும். மற்றும் இறைவனின் நாம மகிமையால் சுற்று சூழலும் ஆன்மீக வழியிலே தூய்மையாக்கப்படும். இதில் இணைந்து கொள்கின்ற பக்தர்கள் கஞ்சிரா, கைத்தாளம் டோலக், போன்ற இசைக்கருவிகளை இசைத்த வண்ணமும் பஜனை பாடல்களை உடுத்த ஒளியில் ஒன்றாக பாடிய வண்ணமும் கடந்து போகின்ற வீதியிலே அமைந்துள்ள ஆலயங்களை வணங்கி கற்பூர ஆராதனை செய்த வண்ணமும் இடம்பெற்று மீண்டும் காலை 6 மணி அளவில் மீண்டும் நிலையத்தை சென்றடைவர். உண்மையில் அவ்வளவு தெய்வீக ஆனந்தத்தை நான் பலமுறை அனுபவித்திருக்கின்றேன். இதன் போதான சில புகைப்படப் பதிவுகள் உங்களுக்காக.....

மேலும் பல பதிவுகளுக்கு விரும்பியவர்கள்
Sathya Sai Seva Centre
Link - https://www.facebook.com/SSCJaffna?mibextid=ZbWKwL
எனும் முகப்புத்தகத்தில் காணலாம்.

நன்றிகள்

Photos from nalluran.com's post 27/04/2024

🫰🥰

Photos from Photographic Club of Jaffna Hindu College's post 21/04/2024

இதயபூர்வமான இணைப்பு... எனது கல்லூரியில் எனது தம்பிமார்களுடன் புகைப்படக்கலை சார் பயிற்சிப்பட்டறை இருந்து.......

18/04/2024

பிரபஞ்சத்திற்கு நன்றிகள்

Want your business to be the top-listed Photography Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jaffna