Jaffna Social Development Club

Jaffna Social Development Club

Share

இன்றைய எமது முயற்சி நாளைய சமுதாய வளர?

Photos from Jaffna Social Development Club's post 09/06/2021

இன்றைய தினம் (09-06-2021)எமது யாழ் சழூக அபிவிருத்திக் கழகத்தினால் கொட்டடி சனசழூக நிலைய ,கற்குளம் ஸ்ரார் சனசழூக நிலைய மற்றும் சோலைபுரம் கவிபாரதி சனசழூக நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பேரிடரினால் பாதிக்கப்பட்ட (அன்றாட தினக்கூலி பெறும்)மக்களில் 57 பேருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இவை ஒவ்வொன்றும் 1150/- ரூபா பெறுமதியானவை.இந்நிகழ்வில் எமது கழக மூத்த உறுப்பினரும் கடந்த காலங்களில் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து அதிக நிதியை பெற்று தந்தவருமான இ.துஸ்யந்தன்(டயஸ்)அவர்களும் பிரபல வர்த்தகரும் சழூக சேவையாளரும் எமது கழகத்திற்கான நிதி,ஆலோசனை போன்றவற்றை தந்து ஊக்க சக்தியாக திகழும் இ.மகிதரன்(மகிந்தன்)அவர்களும் எமது கழகத்திற்காக பல்வேறு பட்ட பல உதவிகளை இவ்வளவு காலமும் இலைமறைகாய் போன்று இருந்து செய்து தந்த இ.சதீபன்(சசிக்குட்டி)அவர்களும் நாம் எமது கழகத்தை ஆரம்பிப்பதற்கு ஆரம்பிப்பதற்கு காரண கர்த்தாவாக விளங்கியவர்களில் ஒருவரும் கேட்கும் போதெல்லாம் நிதியுதவிகளை அள்ளி வழங்கிய வர்த்தகர் பா.சஞ்சீவன்(மயில்)அவர்களும் கடந்த காலங்களில் பல இன்னல்களை சந்தித்த போது எம் கூடவே இருந்த சங்கீத்காந் அவர்களும் எமது கழகத்தின் சிறுவயது தம்பியாக கருதப்படும் கு.பனிஸ்ரன்(சரக்கரை)மற்றும் கிராம சேவகர்களில் ஒருவரான திருமதி சோபனா பகீரதன் அவர்களும் கொட்டடி சனசழூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கினர்.இன்றைய நிகழ்வுக்காக மக்களை ஒழுங்கு படுத்திய த.துவாரகன்(தினேஸ்) மற்றும் எமது கழக ஆலோசகர் ச.வசந்த் ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Photos from Jaffna Social Development Club's post 08/06/2021

மீண்டும் களப்பணியில்.

Photos from Jaffna Social Development Club's post 08/06/2021

நீண்ட இடைவெளிக்குப் பின் எமது யாழ் சழூக அபிவிருத்திக் கழகத்தினால் கொரோனா பேரிடர் காரணமாக ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட அன்றாட தினக்கூலி வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இச் செயற்திட்டத்தின் முதல் திட்டமாக மீனாட்சி மற்றும் முத்தமிழ் சனசழூக நிலையத்திற்குட்பட்ட 40குடும்பத்திற்கான ஒவ்வொன்றும் 1150/- பெறுமதியான உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வின் எமது கழகத்தின் ஆலோசகரான எந்நேரத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயற்படும் ச.வஷந்த்,எமது கழகத்தின் சிரேஸ்ர உறுப்பினரும் எமது கழகத்தின் ஆரம்ப காலம் தொட்டு பல செயற்திட்டங்களில் பக்க பலமாக இருந்து வருபவரும் கழக அனுசரணையாளருமான வி.ரஜீவ்குமார் மற்றும் கழக உடன் பிறப்பும் இன்றைய ஒழுங்கமைப்பாளரில் ஒருவருமான ம.கஷன் ஆகியோர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.இன்று இம்மக்களை ஒருங்கிணைத்து சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு எமக்கு உதவி புரிந்த யோ.ரதீஸ் அண்ணா அவர்களுக்கும் வாகன ஒத்தாசை புரிந்த சி.அனுஷன் அவர்களுக்கும் எமது கழகத்தின் சார்பில் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.இன்றைய நிகழ்வின் ஒரு சில துளிகள்.

Photos from Jaffna Social Development Club's post 02/05/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் இன்றைய தினம்(02-05-2020)கொரோனா நோய்த் தொற்றினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் சங்கரத்தை துணவி பகுதியிலுள்ள வளர்மதி சனசழூக நிலையத்தின் வேண்டுகோளிற்கிணங்க 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.இவ் நிவாரணப் பொருட்களை எமது கழக உறுப்பினர் துஸ்யந்தன் (டயஸ்)இலண்டனில் வசிக்கும் அரியரத்தினம் சஞ்சீவ் மூலமாக பெற்றுத் தந்தார்.இவ் இருவருக்கும் எனது சார்பிலும் கழகத்தின் சார்பிலும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Photos from Jaffna Social Development Club's post 25/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் இன்றைய தினம் யாழ் மாநகரசபை பிரதிமேயர் துரைராசா ஈசன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வறிய 30 குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொருட்கள் கொழும்புத்துறை சனசழூக நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது.அத்துடன் J/77 யாழ் மருதடி வயோதிபர் சங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க 25 வயோதிப குடும்பங்களுக்கான உலர்உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

21/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நிவாரணப்பணிக்கு எனது பாடசாலைக்கால நண்பனும் தற்போது இலண்டனில் வசித்து வருபவருமான பாலேந்திரம் திவாதரன் அவர்கள் 30018/-ரூபா பணத்தை தந்து உதவியுள்ளார்.அவருக்கு எனது சார்பிலும் கழகத்தின் சார்பிலும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Photos from Jaffna Social Development Club's post 20/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் இன்று யாசகர்களுக்கான இரவு நேர உணவு வழங்கப்பட்டது.எமது கழக உறுப்பினர் செல்டன் டிலீப் இன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சகோதரர் செல்டன் சுலக்‌ஷன் ஒழுங்கு செய்து வழங்கினார்.இந் நாளில் பிறந்த நாளை கொண்டாடும் தம்பியை வாழ்த்துவோம்.

Photos from Jaffna Social Development Club's post 19/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்காக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் கமலேந்திரன் கார்த்திக் அவர்கள் 20000/-ரூபாவினை எமது கழகத்திற்கு தந்து உதவியுள்ளார்அவருக்கு எமது கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..அத்துடன் இன்றைய தினம் யாசகர்களுக்கான இரவு நேர உணவு வழங்கப்பட்டது.

Photos from Jaffna Social Development Club's post 18/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் இன்றைய தினம் கொரோனா நோய்த் தொற்றினால் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள வறிய குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு 50 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.இது வேலணை அம்பிகை நகர் J/19 கிராம சேவகர் பகுதிக்குட்பட்ட இடங்களில் வழங்கப்பட்டது.இது எமது கழகத்தின் சிரேஸ்ர உறுப்பினர் இ.துஸ்யந்தன்(டயஸ்) அவர்களின் தாயாரின் (சரஸ்வதி இரத்தினம்)பிறந்த தினத்தை முன்னிட்டு டயஸ் அவர்களின் சகோதரி இலண்டனில் வசிக்கும் திருமதி பொபினா கஜதீஸ்வரன் அவர்களின் நிதியுதவியால் வழங்கப்பட்டது.இந் நிகழ்வில் J/19 கிராம சேவகர் தியாகராஜா கோகுலன்,யாழ் மாநகரசபை உறுப்பினர் நிலாம் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பொதியின் பெறுமதி 1200/-ஆகும்.இதேவேளை இன்றைய தினம் இரவு யாசகர்களுக்கான உணவை டயஸ் அவர்களின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்து தரப்பட்டது.அத்துடன் இன்றைய தினம் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை வழங்கிய திருமதி பொபினா கஜதீஸ்வரனுக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”

Photos from Jaffna Social Development Club's post 17/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் நாளை மேற்கொள்ளப்படும் நிவாரண வழங்கலுக்கான இன்றைய முன் ஆயத்த செயற்பாடுகள்.எமது கழக உறுப்பினர் இ.துஸ்யந்தனின்(டயஸ்) அதி முயற்சியின் பயனாக மக்களுக்கான நிவாரணம் துரித கதியில் இடம் பெற்று வருகின்றது.

17/04/2020

எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிக்கு இன்று அமரர் பாலசுப்பிரமணியம் கவிராஜ்(கவி) அவர்களின் முதலாவது ஆண்டு திவசத்தை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினரால் 100,000/- பணம் கிடைக்கப் பெற்றது.

Photos from Jaffna Social Development Club's post 17/04/2020

இன்று மாலை எமது யாழ் சழூக அபிவிருத்தி கழகத்தினால் யாசகர்களுக்கான இரவு நேர உணவு வழங்கப்பட்டது.இதனை கடற்கரை வீதி நாவாந்துறையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் செல்வேந்திரராசா(உஷாந்தன்)ஏற்பாடு செய்து தந்தார்.இவர் எமது கழக உறுப்பினர் அனுஷாந்தனின் தந்தை ஆவார்.அவருக்கு எமது கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Want your organization to be the top-listed Government Service in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Jaffna
40000