Jaffnacnn.com
jaffna news newspaper reported
20/12/2025
யாழ். மாநகர சபையின் பவுசரில் சிக்குண்டு மூளாய் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பலி - பொம்மைவெளி பகுதியில் சம்பவம்!
யாழில் பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண்
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (20. 12. 2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15/12/2025
🚨 யாழில் புதுவகை மோசடி: உடைந்த போனை வைத்து பணம் பறிக்கும் நபர்! -
🚨 காவல்துறை எச்சரிக்கை!
யாழ்ப்பாணத்தில் VOGO மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஒரு புதிய மோசடிக்காரன் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
🛑 மோசடி நடக்கும் விதம்:
இலக்கு: ஆள் நடமாட்டம் அற்ற வீதிகளில் தனியாக வரும் நபர்களைக் குறி வைக்கிறான்.
🚨தொடர்தல்:
அவர்களைப் பின் தொடர்ந்து முந்திச் சென்று, மீண்டும் வீதியோரமாக நிற்கிறான்.
🚨நாடகம்:
குறி வைக்கப்பட்ட நபர் தன்னைக் கடந்து சென்றவுடன், மீண்டும் அவர்களைத் துரத்திச் சென்று, "வீதியில் தனது கைபேசி தவறி விழுந்துவிட்டது; நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளை அதன் மேல் ஏற்றியதால் தொலைபேசி உடைந்துவிட்டது" என்று கூறி சண்டையிடுகிறான்.
🚨நோக்கம்:
இவ்வாறு தர்க்கம் செய்து அவர்களிடம் மிரட்டிப் பணம் பறித்து வருகிறான்.
🔎 காவல்துறையின் நடவடிக்கை:
இந்த மோசடி தொடர்பில் காவல்துறைக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கண்காணிப்பு காமராக்களில் (CCTV) பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
⚠️ பொதுமக்களுக்கான அறிவிப்பு:
பொதுமக்கள் இது போன்ற நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த நபரால் பாதிக்கப்பட்டாலோ அல்லது நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப் பணிக்கு ரூபா 42 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
14/12/2025
யாழ்ப்பாண யூடிப்பரால் முத்தையன்கட்டு குளத்தில் விகாரை கட்டுமளவுக்கு சென்ற சம்பவம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!
12/12/2025
அவசர அறிவிப்பு…
நுவரெலியா - கண்டி வீதியில் மண் சரிவு அபாயம் - பயணிப்பது ஆபத்தானது.
நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் (11) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பின்படி தெரிவித்துள்ளார்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்ந்து வருகிறது இதனால் பல இடங்களில் மண் மேடு, கற்பாறைகள் சரிந்து விழுவதற்கு அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் நுவரெலியா - கண்டி வீதியில் இரவில் குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
07/12/2025
டித்வா புயலால் உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு.. மேலும் அதிகரிக்கலாம்.!
07/12/2025
🚨சீரற்ற காலநிலை காரணமாக முற்றாக அழிந்த வீட்டுக்கு 50 இலட்சமும் , வீடும் காணியும் இல்லாவிட்டால் 1 கோடி வழங்கப்படும் - ஜனாதிபதி
🚨இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
🚨பேரிடரால் அழிந்த பதிவு செய்யப்பட்ட மாடுப் பண்ணைகளை மீண்டும் தொடங்க ரூபா 200,000 மானியம்.
🚨வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும்.
🚨அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு.
07/12/2025
வடக்கில் அனர்த்த புனரமைப்பு பணிகளில் இந்திய... பரந்தன் முல்லைத்தீவு வீதியின் கண்டாவளைபகுதியில் உடைந்த பாலங்கள் திருத்தும் பணியில் இந்திய இராணுவ பொறியியலாளர்கள்.. எதிர்வரும் நாட்களில் திருத்த பணிகள் தொடங்கும்..
07/12/2025
காற்று வெள்ளத்தால் பாதிக்கபட்ட முல்லைத்தீவை ஒளி ஊட்ட இரவு பகல் பராது வேலை செய்த முல்லைத்தீவு மின்சார சபை ஊழியர்கள்......
05/12/2025
இலங்கை மின்சார வாரியத்தின் பிரதி பொது மேலாளர் நோயல் பிரியந்த அவர்கள் சொன்ன நற்செய்தி! 🔥⚡️
அவசர பேரிடர் நிலைமையால் பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 39 இலட்சம் (3.9 million) மின்இணைப்புகளில் 85% இப்போது மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டனவாம்! ✅💡
மீதமுள்ள 15% விரைவில் சரிசெய்யப்படும் என நம்பிக்கை! மின்சார ஊழியர்களுக்கு பெரிய சல்யூட்! 🙏🫡
மின்சாரம் வந்தாச்சு… இனி இருட்டில் உட்கார வேண்டியதில்லை! 🥳✨
#மின்சாரம்_திரும்ப_வந்தது #நன்றி_CEB ⚡🇱🇰
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
North
Jaffna
42000