KuralMax.lk

KuralMax.lk

Share

Upcountry No-1 Digital News Channel

12/10/2022

இலங்கை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பொருளாதார நிபுணர்கள்

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் குறிப்பிட்டுள்ளது போன்று அடுத்த வருடம் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டால் அது இலங்கைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு நாடாக இலங்கை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் இந்திரஜித் அபோன்சு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நெருக்கடிஉலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் பல பல நெருக்கடிகளை இலங்கையும் சந்திக்க நேரிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படலாம்.

உணவு பிரச்சினை ஏற்படலாம். ஏற்கனவே மிக பெரிய அளவில் வீழ்ந்து போயுள்ள இலங்கை போன்ற நாட்டிற்கு இன்னும் விழுவதற்கு சிறிய அளவே உள்ளது. இதனால் இதன் தாக்கத்தை இதற்கு மேலும் உணரும் அளவிற்கான தைரியம் மக்களிடம் இல்லை.

சரியான திட்டமிடல்இந்த நிலையில் மீண்டு வருவதற்கு உரிய முறையில் கொள்கைகளை தயாரிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்று மீண்டு வருவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12/10/2022

இராகலை - ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் விவசாய காணி ஒன்றின் அருகில் காணப்படும் தேயிலை மலையையொட்டிய பற்றை காட்டுக்குள் இந்த சிறுத்தை புலி கம்பி ஒன்றினால் தனது கழுத்து இறுகி உயிரிழந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்டுள்ளதாக ஹய்பொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், விவசாய காணிக்கு சென்ற விவசாயி ஒருவர் சிறுத்தை புலி உயிரிழந்து கிடந்ததை கண்டுள்ளார்.

மரண பரிசோதணைஇதையடுத்து இவ்விடயத்தை ஹய்பொரஸ்ட் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ஹய்பொரஸ்ட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தோட்ட பொது மக்களின் உதவியுடன் சிறுத்தை புலியின் உடலை மீட்டு மரண பரிசோதணைக்காக திணைக்களத்திற்கு எடுத்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுத்தை புலி ஆறு அடி நீளத்தை கொண்டதாகவும் சுமார் 150 கிலோ எடை கொண்ட ஆண் சிறுத்தை புலி எனவும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

12/10/2022

இவரை தெரியுமா..! பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

மூன்று பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
கம்பஹா - மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பிரதான சந்தேநபரான குறித்த நபர் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே சந்தேகநபரை கைது செய்வதற்காக பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேகநபர் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே, மஹிந்தராம வீதியை சேர்ந்த ஜயகொடகே சஞ்சீவ டோன சஞ்சீவ லக்மால் (39 வயது) என்ற நபரே சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்துள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் புகைப்படமும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591608, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கம்பஹா - 0718591610, நிலைய பொறுப்பதிகாரி மினுவாங்கொடை - 0718591612 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

12/10/2022

இளைஞனின் சடலத்துடன் கொழும்புக்கு வருவோம் - செந்தில் தொண்டமான் எச்சரிக்கை
கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.இந்த நிபந்தனைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியாலயம் முன் தொழிலாளியின் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயாராக உள்ளோமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய் நட்டஈடு வழங்க வேண்டும்
உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் எடுக்கும் சட்ட நடவடிக்கைக்கு முழு உறுதுணையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்நிற்கும் எனவும் தெரிவித்தார்.

கனவரெல்ல தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் சொந்த வேலைக்காக அமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளி மரணமடைந்தமைக்கு நியாயமான தீர்வை வழங்குவது தொடர்பில் செந்தில் தொண்டமானுக்கும் கனவரெல்ல தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதன்போது உயிரிழந்த தொழிலாளியின் மரண சடங்குகளுக்கான முழுமையான செலவை மாத்திரமே தாம் பெறுப்பேற்பதாக தோட்டம் நிர்வாகம் தெரிவித்தற்கு கடுமையான எதிர்ப்பை செந்தில் தொண்டமான் வெளிப்படுத்தினார்.

இளைஞனின் மரணத்திற்கு நட்டஈடு வழங்கப்படாத பட்சத்தில் பூதவுடல் தொழிற்சாலையிலே வைக்கப்படும் என எச்சரித்தார். அதனை தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்துக்கு 15 இலட்சம் நஷ்டஈடாக வழங்க நிர்வாகம் முன்வந்தது.சடலத்துடன் கொழும்பிற்கு வந்து போராடுவோம்
எனினும், அந்த தொகை போதுமானதல்ல என்றும், 21 வயதுடைய தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.

அவர் தோட்டத்தில் மேலும் 34 வருடங்களுக்குமேல் பணிபுரிவதற்கான சூழ்நிலை இருந்த போது, தற்போது வழங்கப்படும் 1000 சம்பளத்தின் பிரகாரம் கணக்கிட்டால் ஒரு கோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈட்டை வழங்கவேண்டும் என செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.ஆகவே நியாயமான நட்டஈட்டை வழங்க வேண்டும் என்பதுடன் மரணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணங்காவிடின் கொழும்பில் உள்ள நமுனுகல பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியலயத்துக்கு முன் பூதவுடலை வைத்து போராட்டம் செய்யவும் தயங்கமாட்டோமென கடுமையாக எச்சரித்தார்.

12/10/2022

ரணிலுக்கு ஏமாற்றம் கொடுத்த சந்திரிக்கா
உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சந்திரிக்கா நிராகரிப்பு
எப்படியிருப்பினும், இந்தக் கடிதம் கிடைத்த சில மணித்தியாலங்களில் அந்த பதவியை நிராகரித்து ஜனாதிபதிக்கு பதில் கடிதம் அனுப்ப முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், அவர் அலுவலக வசதிகளையோ அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

12/10/2022

மகிந்தவின் அதிரடி அறிவிப்பு - சூடு பிடிக்கும் தென்னிங்கை அரசியல்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தனது செயற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

மகிந்தவின் நம்பிக்கைஇதனால், கிராம மட்டத்திலிருந்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் மாவட்ட, தொகுதி மட்டக் கூட்டங்களிலும் தானும் பங்கேற்கவுள்ளதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்து எழுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத் தொடருடன் பிராந்திய மற்றும் கிராம மட்டத்தில் சிறிய கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு மகிந்த தனது செயற்பாட்டாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின் இறுதியில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும், பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாபெரும் வெற்றியாருடைய நம்பிக்கையையும் உடைய இடமளிக்க மாட்டேன். எந்த தேர்தல் நடந்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

சற்று அமைதியாக காத்திருந்த தமது கட்சியினரை எழுப்பி தேர்தலுக்கு அனுப்பும் நடவடிக்கையையே செய்ய வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்சர்களை மக்கள் தமது போராட்டம் மூலம் வெளியேற்றியிருந்தனர். இந்நிலையில் தமது வெற்றி என்ற கோசத்துடன் மகிந்த விடுத்துள்ள அறிப்பானது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12/10/2022

சமூக வலைதளங்கள் ஊடாக பல மில்லியன் ரூபாய் மோசடி
குறித்த சந்தேக நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பரிசில்களை வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் ஊடாக 11,627,175 ரூபாவை தனது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளார்.

இதன்படி, பணமோசடி சட்டம், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.அங்கொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஹிம்புட்டானா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கு எச்சரிக்கைகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு எச்சரிக்கைசமூக வலைதளங்கள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

12/10/2022

இலங்கைக்கு உடனடி ஆபத்து! ஐ.நா எச்சரிக்கை

உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் உடனடியாக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும் சாம்பியா ஆகியவை உள்ளதாக ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டசின் கணக்கான வறிய, கடனாளி நாடுகள் கடும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

பல நாடுகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தவோ அல்லது புதிய நிதியுதவியை அணுகவோ இயலாத நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

11/10/2022

இலங்கையின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக டீசல் மற்றும் பெற்றோல் ஆகியன இவ்வாறு கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 40000 மெற்றிக் தொன் எடையுடைய டீசல் நேற்றைய தினம் இறக்கப்பட்டதாகவும் இதற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
மேலும் இரண்டு டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக பெற்றோலிய வளக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கியூஆர் குறியீடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதனால் கையிருப்பில் உள்ள எரிபொருளை முகாமைத்துவம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், இந்தியன் ஒயில் நிறுவனமும் எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11/10/2022

மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்

அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,"பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போதைய தேவையாக உள்ளது.

நாட்டில் நிலவும் பிரச்சினைகள்
மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்

பசி, உணவின்மை, விவசாயப் பிரச்சினை, மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றன.

வைத்தியர்கள் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுகாதாரத்துறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

ஒற்றுமையாக செயற்படுவதன் அவசியம்
மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்

இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மிடையே பேதங்கள் காணப்படுவது பொருத்தமற்றது. இதேவேளை மக்களின் பக்கம் நின்று அவர்களின் குரல்களுக்குச் செவிமடுத்துச் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

நாட்டைக் கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் எம்மால் ஒத்துழைப்பு வழங்கப்படும்" என கூறியுள்ளார்.

Want your business to be the top-listed Media Company in Hatton?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Hatton