LIYA Science College

LIYA Science College

Share

Nonprofit educational institution which aim is to uplift the educational level

Photos from LIYA Science College's post 20/12/2025

2026 Repeat batch புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு 16.12.2025 செவ்வாய்க்கிழமை எமது கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது 2026 Repeat batch இல் இணைவதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், 2026 Repeat batch மாணவர்களுக்கான இறுதிப்பரீட்சை வரையான எமது கல்வித்திட்டம் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 17.12.2025 புதன்கிழமையிலிருந்து Repeat batch வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

To join visit www.liyascience.edu.lk to apply

13/12/2025
09/11/2025

Photos from LIYA Science College's post 07/11/2025

இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருக்கும் 2025 batch மாணவர்களினால் கல்லூரி அலுவலகத் தேவைகளுக்காக இரு கணனிகளையும், மேடை நிகழ்ச்சிகளுக்குத் தேவையான Podium மற்றும் கல்லூரி வளாகத்தின் பாதுகாப்பு விடயங்களை அதிகரிப்பதற்காக CCTV system என்பவற்றை அன்பளிப்பு செய்துள்ளார்கள். இவை கல்லூரியின் நடவடிக்கைகளை திறன்பட நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக அமைந்துள்ளது.

எல்லாம் வல்ல அழ்ழாஹ் மாணவர்களின் இந்நற்செயல்களைப் பொருந்திக் கொண்டு அவர்களுக்கு நல்அருள் புரிவானாக! சிறந்த எதிர்காலத்தை வழங்குவானாக..!!!

Photos from LIYA Science College's post 05/11/2025

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள 2025 batch எமது கல்லூரி மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு மற்றும் பெற்றோர் கூட்டம் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இப்பிரியாவிடை நிகழ்வு மாணவர்கள் ஆசிரியர்களுக்கான நன்றியுணர்வைத் தெரிவிக்கும் ஓர் நிகழ்வாகவும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உற்சாகமூட்டி வழியனுப்பும் நிகழ்வாகவும் காணப்பட்டது.

மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வைத் தொடர்ந்து எமது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் குழாத்தினால் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல்போஷண விருந்துபசாரம் இடம்பெற்றது.

தொடர்ந்து பெற்றார் கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எமது கல்லூரி இதுவரை காலமும் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்ட விடயங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதோடு மாணவர்களின் எதிர்கால நடவடிக்கைள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, அஷ்ஷெய்ஹ் ஆரிப் ஷஹாப்தீன் (ஹக்கானி) (விரிவுரையாளர், உம்முல் குரா அரபுக் கல்லூரி) அவர்கள் மூலம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டக்கூடிய விஷேட சொற்பொழிவு மற்றும் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளிற்கு பங்குபற்றிய மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கு விருந்துபசாரத்தை வழங்குவதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கும் விஷேட சொற்பொழிவினை நிகழ்த்திச்சென்ற அஷ்ஷெய்ஹ் ஆரிப் ஷஹாப்தீன் அவர்களுக்கும் எமது அழைப்பினையேற்று வருகைதந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்நிகழ்வுளைப் பொருந்திக்கொண்டு அனைவருக்கும் நல்லருள்பாளிப்பானாக!

Photos from LIYA Science College's post 19/10/2025

LIYA Exhibition 2025

எமது கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி நிகழ்வு கடந்த மாதம் (20,21,23) இடம்பெற்றது.
உயர்தர விஞ்ஞான பிரிவு பாடத்திட்டத்தைத் தழுவியே இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எமது ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2026 batch மாணவர்கள் இக்கண்காட்சியை நடாத்தினார்கள். 2026 batch மாணவர்கள் சிறந்த முறையில் ஆயத்தமாகி பல கண்காட்சி மற்றும் பரிசோதனைப் பொருட்களை தயார்செய்து இக்கண்காட்சியை நடத்தினார்கள்.

எமது கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக வருகைதந்திருந்தனர்.

இக்கண்காட்சியை வெற்றிகரமாக நடாத்திமுடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Want your school to be the top-listed School/college in Gelioya?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Amabarapola, Handessa
Gelioya

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00