SuwasaM News
Suwasam is the most populer digitel media organization in Sri Lanka.
We cover Sri Lanka and world - News,Politics,Current Affairs,Events, Entertinment Programmes,Social Responsibility & Social Awareness.
02/06/2026
இலங்கை-அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ (Sea Ranger)ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்துள்ளன என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
குறித்த விமானங்கள் விரைவில் இலங்கை விமானப்படையில் சேவையில் இணைக்கப்பட்டு, விமானப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், (HADR)தேடுதல் மற்றும் மீட்புத் திறன்களை வலுப்படுத்தும் எனவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது .
🇺🇸 🇱🇰
01/06/2026
மீகொடை பகுதியில் இடம்பெற்ற வெசாக் தன்சல் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி 6 பேர் உயிரிழப்புக்குக் காரணமான கெப் வாகனத்தின் சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (01) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய சாரதி மது போதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
01/06/2026
கொழும்பு, செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு, செட்டியார் தெரு நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நேற்றுமுன்தினம் (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த டி சொய்சா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும், கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் குமாரசிங்க, புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா ஆகியோருடன் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் தவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குறித்த தன்சல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
🇱🇰
01/06/2026
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய சந்தேக நபராக இறக்காமத்தை சேர்ந்த 21 வயதுடைய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முதலில் தப்பி ஓடியதாகவும், பின்னர் மே 20 அன்று ஒரு வழக்கறிஞர் மூலம் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்ததாகவும், குறித்த நபர் ஜூன் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இக்குற்றத்திற்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு 21 வயதான நபர் முன்னதாகவே கைது செய்யப்பட்டு, விசாரணைகள் தொடரும் நிலையில் அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
🇱🇰
31/05/2026
19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ஆம் திகதி ஆரம்பமானது.
10அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஓப்' சுற்று முடிவில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் கிண்ணம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (31) நடைபெறவுள்ளது.
இதேவேளை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் - குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி கடந்த ஆண்டில் கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.
31/05/2026
அட்டாளைச்சேனை விளையாட்டு
கழகத்தினருக்கும் அக்கரைப்பற்று
சூசிட்டி விளையாட்டு கழகத்தினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைப்பந்தாட்டப் போட்டி கடந்த திங்கட்கிழமை(25) இடம்பெற்றது.
இதில் 7-1 எனும் கோல் வித்தியாசத்தில் அக்கரைப்பற்று சூசிட்டி அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டி நிகழ்ச்சியில், அக்கரைப்பற்று முன்னாள் பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர்,சமாதான நீதவான் நளீம் மாஸ்டர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
31/05/2026
2026 ஹஜ் உத்தியோகபூர்வ நிறைவு விழாவில் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர் கலந்துகொண்டார்.
இலங்கை ஹஜ் தூதுக்குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலருடன் இணைந்து, சவூதி அரேபியாவின் மக்காவில் சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “கிதாமுஹு மிஸ்க்” மாநாட்டில் கலந்துகொண்டார்.
🇸🇦 🇱🇰
28/05/2026
முஸ்லிம்கள் அனைவருக்கும் சுவாசம் டிஜிடல் ஊடக வலையமைப்பின்,
தியாக திருநாளான ஈத் அல் அழ்ஹா புனித
ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்
- ஈத் முபாரக் -
26/05/2026
தாய்லாந்திலிருந்து நாட்டிற்குள் போதைப்பொருட்களை கொண்டுவந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான பிக்குகளை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (26) உத்தரவு பிறப்பித்துள்ளது.
🇱🇰
26/05/2026
தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டதன் பின்னர், முதன்முறையாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நாளை (27) டெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டெல்லி செல்லும் அவர், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo