Maatram
Maatram is a citizens journalism website based in Sri Lanka.
03/06/2026
"மேல்முறையீட்டு, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது (63, 65) 1978 முதல் மாற்றப்படவில்லை. இதில் திருத்தம் செய்வது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கும்" - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு Anura Kumara Dissanayake கடிதம்
"கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயமாக நீதிமன்றத்துக்கு வருகை தந்து, எமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் முறையான விளக்கத்தை வழங்கவேண்டும்."
- காணாமலாக்கப்பட்ட லலித்குமார் வீரராஜின் தந்தை ஆறுமுகம் வீரராஜா
📹 FLSP
03/06/2026
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் 14 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வழக்கு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி சாட்சியமளிப்பது கட்டாயமாக்கப்பட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
📷 FLSP
02/06/2026
02.06.2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகக் பீட மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் அண்மையில் இடம்பெற்ற வெசாக் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பான அறிக்கை
எமது பீடத்திற்குள் சிங்கள மாணவர்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் கொண்டாட்ட நிகழ்வு தொடர்பாக கரிசனைகளும் விவாதங்களும் எழுந்துள்ளமை எமது கவனத்திற்கு வந்துள்ளது.
வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்நிகழ்வானது, மாணவர் ஒன்றியத்தின் அனுமதி மற்றும் ஆதரவுடன் நடத்தப்பட்டது. மேலும், தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வை நடத்துவதற்கும் அதன் வெற்றிகரமான செயலாக்கத்தை உறுதி செய்வதற்கும் தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் உதவிகளையும் தீவிரமாக வழங்கியிருந்தனர். மாணவர்கள் இந்த முக்கியமான மத மற்றும் கலாச்சார நிகழ்வைக் கொண்டாடுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில சூழ்நிலைகள் காரணமாக, ஒரு சில தனிநபர்களால் ஒரு வெசாக் கூடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாசகாரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு நேரடியாகப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
அதேவேளையில், இந்தச் சம்பவத்தைப் பொதுமைப்படுத்தி, இதன் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தமிழ் மாணவர் சமூகத்தின் மீது சுமத்துவதற்குச் சில தனிநபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை, தவறானவை மற்றும் நிலவும் உண்மை நிலையைப் பிரதிபலிக்காதவை ஆகும்.
சொத்துக்களை அழிப்பதற்கு எதிராக நாம் நிற்பதுடன், குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை ஆதரிக்கும் அதேவேளையில், இந்தத் தனிப்பட்ட சம்பவத்தை ஒரு இனப் பிரச்சினையாக மாற்றுவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஒருசேர நிராகரிக்கிறோம். ஒரு சில தனிநபர்களின் செயல்கள் சமூகங்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்கவோ அல்லது எமது பீட மாணவர்களிடையே நிலவும் ஒற்றுமையையும் பரஸ்பர மரியாதையையும் சீர்குலைக்கவோ பயன்படுத்தப்படக் கூடாது.
மாணவர்கள் அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறும், தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நியாயமான விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். எமது பீட சமூகத்தை வலுப்படுத்தும் நல்லிணக்கம், மரியாதை மற்றும் சகவாழ்வு ஆகிய விழுமியங்களை நாம் தொடர்ந்து நிலைநாட்டுவோம்.
மாணவர் ஒன்றியம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
02/06/2026
பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சித்திரவதையிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரத்தை அது மறுக்க முடியுமா அல்லது ஒருகட்சி ஆட்சியை நிலைநிறுத்த முடியுமா? உறுதியான பாதுகாப்புகள் இல்லாத பட்சத்தில், இத்தகைய அபாயகரமான அரசியலமைப்பு மாற்றங்களுக்கான ஆபத்து தடையின்றித் தொடர்கிறது. https://maatram.org/articles/12790
வரிகள் : கவிஞர் எம்ஏ நுஹ்மான்
குரல்: நடிகர்/இயக்குனர் நாசர்
யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 25ஆவது நினைவுநாளின்போது இயக்குனர் Tharan ஆல் வௌியிடப்பட்ட 'எரியும் நினைவுகள்' ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த காணொளியே இது.
01/06/2026
45 ஆண்டுகளுக்கு முன்னர், 95,000 இற்கும் மேற்பட்ட அரிய நூல்கள், ஓலைச்சுவடிகளுடன் யாழ்ப்பாணப் பொது நூலகம் அன்றைய இலங்கை அரசின் ஆதரவோடு தீக்கிரையாக்கப்பட்டது.
அது வெறும் புத்தகங்களின் எரிப்பு அல்ல; ஒரு இனத்தின் அறிவையும் வரலாற்றையும் அழிக்க முயன்ற திட்டமிட்ட கலாசாரப் படுகொலை! 🕯️📚
28/05/2026
“ஒரு துறவி, துறவறப் பயிற்சியையும் வாழ்க்கை முறையையும் ஏற்றுக்கொண்ட பிறகு, தன் பயிற்சியைத் துறக்காமலும், தனது பலவீனத்தை வெளிப்படுத்தாமலும், ஒரு பெண் விலங்குடன் என்றாலும் கூட உடலுறவு கொண்டால், அவர் சங்கத்திலிருந்து (துறவிகள் சமூகத்திலிருந்து) நீக்கப்பட்டு, விலக்கி வைக்கப்படுவார்.”
– புத்தர் (இறுதித் தீர்ப்பு – விநய பிடகம் – சங்கத்திலிருந்து நீக்கத்தக்க குற்றங்கள் பற்றிய அதிகாரம்)
Cartoons: Awantha Artigala, Namal Amarasinghe, Sajith Bandara
27/05/2026
இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொடரும் நவீன கால அடிமைத்தனம்: சர்வதேச மன்னிப்புச் சபை புதிய அறிக்கை அதிர்ச்சி!
இலங்கையின் தேயிலைத் துறையில், இன்றும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள் கட்டாய உழைப்பு மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபையின் (Amnesty International) புதிய ஆய்வு அறிக்கை (2024-2026). https://www.amnesty.org/en/documents/asa37/1011/2026/en/
தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள 45 தனியார் தேயிலைத் தோட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள்:
முக்கியக் கண்டுபிடிப்புகள்:
• ஒரு நாளைக்கு 25 கிலோவிற்கும் அதிகமாகத் தேயிலை பறிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தவறினால், அவர்களின் தினசரி ஊதியம் வெறும் 1,000 ரூபாவாகக் குறைக்கப்படும் கொடுமை அரங்கேறுகிறது.
• குறைவான ஊதியம் காரணமாகத் தொழிலாளர்கள் வாங்கும் முன்பணமும் கடன்களும், அவர்களைத் தலைமுறை தலைமுறையாகத் தோட்ட முதலாளிகளிடம் கட்டிப்போடும் 'கடன் அடிமைகளாக' மாற்றுகின்றன.
• வேலைத் தாமதம் அல்லது சம்பளக் குறைப்புக் குறித்துக் கேள்வி எழுப்பினால், உரிமையாளர்களால் கைகளாலும் தடிகளாலும் கொடூரமாகத் தாக்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன.
• தொழிலாளர்களைத் திட்டமிட்டு 'தற்காலிக தொழிலாளர்கள்' (Casual Workers) என வகைப்படுத்தி, மகப்பேறு சலுகைகள், ஓய்வூதியம், மருத்துவ விடுப்பு போன்ற சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
• 22க்கும் மேற்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், லயன் குடியிருப்புகளின் மோசமான சுகாதாரச் சூழல் மற்றும் முறையான குடியிருப்புப் பாதுகாப்பு இல்லாமையும் நீடிக்கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உறுப்பு நாடான இலங்கை, இந்த உழைப்புச் சுரண்டலைத் தடுக்கத் தவறியுள்ளது.
• அரசு அதிகாரிகளுடனான மொழி இடைவெளி
• தொழிற்சங்கங்கள் செயல்படத் தடை விதிக்கப்படுதல்
• முறையான தொழிலாளர் ஆய்வுகள் (Labour Inspections) இல்லாமை போன்ற காரணங்களால் மலையக மக்களுக்கு நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபையின் கோரிக்கை:
"மலையகத் தமிழ் மக்களின் தீவிர ஓரங்கட்டப்படும் நிலையும், முறையான சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படுவதுமே இந்தச் சுரண்டலுக்குக் காரணம். இலங்கை அரசு உடனடியாகத் தோட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - ஸ்மிருதி சிங் (தெற்காசிய பிராந்திய இயக்குநர், சர்வதேச மன்னிப்புச் சபை)
27/05/2026
நான்கு தசாப்த காலங்களாக, ஒருவன் தன் சொந்த சமூகத்தை நேசித்துக் கொண்டே, அச்சமூகத்தைப் பற்றிய உண்மைகளையும் பேச முடியும் என்பதை டி.பி.எஸ். நிரூபித்துக் காட்டினார். அத்தகைய தார்மீகத் துணிச்சல் என்பது ஒற்றுமைக்குச் செய்யும் துரோகமல்ல, மாறாக அதன் மிக உன்னதமான வெளிப்பாடாகும். https://maatram.org/articles/12786
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
6/5, Layards Road 5 Colombo
Colombo