SLJannah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SLJannah, Social Media Agency, Colombo.
02/12/2020
“புரைவி” புயல் தாக்கம் பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதல்
“புரைவி” புயல் தாக்கம் பற்றிய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டுதல்
26/09/2020
ACJU Hilaal Calendar - Safar - 1442
ACJU Hilaal Calendar - Safar - 1442 ACJU Hilaal Calendar - Safar - 1442 SHARES Share Tweet Share Pin Share Labels: Acju, Acju Notices, Hilal at 6:31:00 PM
26/06/2020
...
16/11/2019
Turn to ALLAH (For All Needs)
அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம்(எல்லா தேவைகளுக்கும்)
Ash Sheikh Abdur Rahman Hafiz (Mallahiri)
Hilru Jumuah Masjid,Kaluthara
Fri, 15 Nov 2019
Turn to ALLAH (For All Needs) Turn to ALLAH (For All Needs) அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோம் ( எல்லா தேவைகளுக்கும் ) Ash Sheikh Abdur Rahman Hafiz (Mallahiri)...
16/11/2019
Voting - It's Our Right
வாக்களித்தல் - இது எங்கள் உரிமை
Ash Sheikh Mubarak (Noori)
Meera Jumuah Masjid , Eravur (Oottup Palli)
Fri, 15 Nov 2019
Voting - It's Our Right Voting - It's Our Right வாக்களித்தல் - இது எங்கள் உரிமை Ash Sheikh Mubarak (Noori) Meera Jumuah Masjid , Eravur (Oottup P...
16/11/2019
Cast Your Vote For Fair And Peaceful Election
உங்கள் வாக்கு ஒரு அமானிதம்
Ash Sheikh Ilham Gafoor (Rashady)
Majma Ul Khairahth Jumuah Masjid - Nimal Road, Colombo 04
Fri, 15 Nov 2019
Cast Your Vote For Fair And Peaceful Election Cast Your Vote For Fair And Peaceful Election உங்கள் வாக்கு ஒரு அமானிதம் Ash Sheikh Ilham Gafoor (Rashady) Majma Ul Khairahth J...
16/11/2019
Life of Prophet Muhammad (SAL) in Madinah and Guidance on Election
தேர்தலில் நமக்குள்ள பொறுப்புக்கள்
Ash Sheikh M.I.M.Rizwe Mufthi
Jawatte Jumuah Masjid , Colombo 07
Fri, 15 Nov 2019
Life of Prophet Muhammad (SAL) in Madinah and Guidance on Election Life of Prophet Muhammad (SAL) in Madinah and Guidance on Election தேர்தலில் நமக்குள்ள பொறுப்புக்கள் Ash Sheikh M.I.M.Rizwe Mufthi ...
16/11/2019
Love Of Prophet And His Sunnah - Islamic Guidance on Election
தேர்தலில் மார்க்கத்தின் வழிகாட்டல்
Ash Sheikh Murshid Mulaffar (Humaidy)
Kollupitty Jumuah Masjid, Colombo 03
Fri, 15 Nov 2019
Love Of Prophet And His Sunnah - Islamic Guidance on Election Love Of Prophet And His Sunnah - Islamic Guidance on Election தேர்தலில் மார்க்கத்தின் வழிகாட்டல் Ash Sheikh Murshid Mulaffar (Hu...
12/11/2019
10/11/2019
அஸ்ஸலாமு அலைக்கும்...
✨இது இம்மை மற்றும் மறுமையை மையப்படுத்தி தலைசிறந்த உலமாக்களின் வழிகாட்டலில் பல சமூக நல திட்டங்களை முன்னெடுத்து இயங்கிக் கொண்டிருக்கும் "SLJannah Social Association" இன் உத்தியோக பூர்வ குழுவாகும்.
✨இந்த குழுவானது தஹ்வா நோக்கத்தில் "SLJannah" இனுடைய உத்தியோகபூர்வ தகவல்களும்,பிரயோசனமான நல்ல தகவல்கள் பகிர்வதற்காகவும் உருவாக்கப்பட்டதாகும்.
♻எவ்வளவுதான் நிபந்தனைகளை இட்டு இவ்வாறு செய்யாதீர்கள் என்று குரூப்பில் கூறினாலும் அதை வாசித்து விட்டு அந்த நிபந்தனைக்கு கூட கருத்துக் கூறுபவர்கள் கூட இன்று எம் சமூகத்தில் அதிகரித்து விட்டனர்.(அல்லாஹ் அவர்களுக்கு தெளிவை கொடுக்க வேண்டும்! )
🌴உங்களை மதித்து இந்த நிபந்தனையை கண்ணியமான உங்களுக்கு செல்கின்றோம்.
அன்பான வாசகர்களே! …
✅இன்று ஒரு சிலர் 24 மணி நேரமும் வாட்ஸ்அப் குரூப்களில்(பொழுது போக்கிற்காக) பதிவுகளை இடக் கூடியவர்களும் உள்ளனர்.
✅ஆனால் பல வேலைகளுக்கு மத்தியில் நான் ஒரு நாளைக்கு ஒரு நல்ல விசயத்தையாவது கற்று அதனை அமல் செய்து அல்லாஹ்வின் அன்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பத்து நிமிடம் ஒதுக்கி பல சகோதரர்கள் வாட்ஸ்அப் குரூப்களை திறந்தால் ஏனைய சகோதரர்கள் அனுப்பியிருக்கும் பதிவுகள் வந்து சேர்வதற்கு அரை மணி நேரம் தேவைப்படுகின்றது..நேரம் வீனாக இதில் கழிகின்றது என்று பலர் வாட்ஸ்அப் குரூப்களில் இருந்து விலகி விடுகின்றனர்.
👏அன்பானவர்களே!
👏உங்களின் பொன்னான நேரம் வீனாக கூடாது,
👏ஒரு நாளைக்கு பத்து நிமிடத்தையாவது இந்த வட்ஸப்பிற்கு கொடுத்தால் அதுவும் பிரயோசனமாக அமைகின்றது என்ற ஒரு நிலை வர வேண்டும் என்ற நோக்கிலும்
👏ஏனையோரின் மானங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த நிபந்தனையை ஏற்படுத்தியிருக்கின்றோம்.
👏நாம் எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய இந்த தஃவாவிற்கு நீங்கள் முழுமையான ஆதரவை எமது நிபந்தனைக்கு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்…..
☀உங்களிடம் பணிவான வேண்டுகோள்கள்…
👉எமது WHATSAPP GROUP நிபந்தனைகள்….
Audio & Video கள் போடும் போது கட்டாயம் அதன் தலைப்பை இட வேண்டும்
உறுதி இல்லாத எந்த விபரங்களையும் இடக்கூடாது
சமூக நல் இணக்கத்திற்கு பாதிப்புகள் வரும் Video , Audio & Photos எதுவும் Group இல் இடக் கூடாது
குர்ஆன், ஹதிஸ், இஜ்மா, கியாஸ்*) க்கு உற்பட்ட முறையில் இருக்க வேண்டும்
(எந்த ஜமாத்தினர்களின் உள்ளம் புண்படுத்தும் விதத்தில் எந்த பதிவுகளும் பதிவிடல் கூடாது )
சமூகத்திற்கு தேவை அற்ற எந்த பதிவுகளும் இடக் கூடாது
ஒரு விடயத்தை பல தடவைகள் பதிவிடக்கூடாது
⤵ ⤵ ⤵ ⤵ ⤵ ⤵ ⤵ ⤵ ⤵
🔴எமது நிபந்தனையை மறந்து விடாதீர்கள்…
குழுமத்தில் விதி மீறுவர் ஓரு சில அறிவித்தல்களின் பின்னர் Remove செய்யப்படுவார்
--கற்பவனாக இரு, கற்று கொடுப்பவனாக இரு, மூன்றாம் நபராக இருக்காதே
குறிப்பு-
ஏற்கனவே..!Grup1,2,3 இல் உள்ளவர்கள் இணைய வேண்டாம்
Follow this link to join my WhatsApp group:
WhatsApp Group Invite WhatsApp Messenger: More than 1 billion people in over 180 countries use WhatsApp to stay in touch with friends and family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure, reliable messaging and calling, available on phones all over the world.
10/11/2019
பெருமானாரின் வாழ்க்கை குறிப்புகள்!!
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. பிறப்பு முதல் நபித்துவம் வரை.
2. நபித்துவம் முதல் நாடு துறத்தல் வரை.
3. மதீனா முதல் மரணம் வரை.
பகுதி ஒன்று
கி.பி 571ல் பனூஹாஷிம் பள்ளத்தாக்கில்-மக்கா நகரில்-ரபீவுல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை பிறந்தார்கள்.
குழந்தைப் பருவம்
தன் தாயார் ஆமினாவிடமும், செவிலித்தாய் ஹலிமாவிடமும் பால் குடித்து வளர்ந்துள்ளார்கள்.
4 வயதில்
விளையாடும்போது ஜிப்ரயீல் வந்து நெஞ்சை பிளந்து இதயத்தைத் தூய்மைப் படுத்தினார்கள்.(இந்த செய்தி பல குர்ஆன் வசனங்களுக்கும் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாறுபடுவதால் இதில் கருத்து வேறு பாடு உள்ளது.)
6 வயதில்
மதினாவிலுள்ள தன் கணவரின் மண்ணறையை ஜியாரத் செய்து விட்டு மக்கா திரும்பும் வழியில் அப்வா என்ற இடத்தில் தாயார் ஆமினாவின் மரணம். பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வாழ்க்கை.
8 வயதில்
பாட்டனார் மரணித்தப் பிறகு சிறிய தந்தை அபுதாலிப் அவர்களின் மேற்பார்வையில் வாழ்க்கை.
12 வயதில்
சிறிய தந்தையுடன் வியாபாரத்தில் ஈடுபடல் (ஒருமுறை சிறிய தந்தையோடு ஷாம் நாட்டிற்கு வியாபாரத்திற்கு போகும்போது பஹீரா என்ற துறவி ஒருவர் இறுதித் தூதர் என்று முன்னறிவிப்பு செய்கிறார் இப்படிஒரு செய்தி திர்மிதி-ஹாக்கிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகிறது.)
20 வயதில்
குறைஷ், கைஸ் கோத்திரங்களுக்கு மத்தியில் நடந்த ஹிஸ்புல் புளூல் என்ற பாதுகாப்பு ஒப்பந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
25 வயதில்
கதீஜா என்ற பெண்மணியிடம் வியாபாரியாக வேலை. அதே ஆண்டு 40 வயதான அந்தப் பெண்மணியின் விருப்பத்திற்கிணங்கி அவரை முதல் மனைவியாக ஏற்றுக் கொண்ட திருமணம்.
35 வயதில்
இறை இல்லமான கஃபா புதுப்பிக்கும் பணி. ஹஜருல் அஸ்வத் என்ற கருப்புக்கல் பிரச்சனையில் பெரும் சர்ச்சை எழ அதை சுமூகமாக தீர்த்து வைத்தல்.
37 வயதில்
தனிமை விருப்பம் ஏற்பட்டு ஹிரா குகையை தேர்ந்தெடுத்து அங்கு சென்று தங்குதல்.
பகுதி இரண்டு
40 வயதில்
ஜிப்ரயீலுடன் முதல் சந்திப்பு. இறைத்தூதராக நியமிக்கப்படுகிறார்கள். குர்ஆன் வசனம் இறங்குகிறது. ஏகத்துவத்தை நோக்கி இரகசியஅழைப்பு.
44 வயதில்
தன் மீதும் முதல் விசுவாசிகள் மீதும் மக்காவின் எதிர்ப்பாளர்களின் துன்புறுத்தல் அதிகமாதல்.
45 வயதில்
இறைத்தூதரின் கட்டளைப்படி இரு குழுக்களின் முதல் ஹிஜ்ரத் எத்தியோப்பியாவை நோக்கிப் பயணம்.
46 வயதில்
உமர் மற்றும் ஹம்ஸா ஆகியோர் இஸ்லாத்தை ஏற்றல்.
47 வயதில்
அபூ தாலிப் பள்ளத்தாக்கிற்கு விரட்டப்படுகிறார்கள். புகலிடம் அளித்ததற்காக பனூ ஹாஷிம் பனூ முத்தலிப் கூட்டத்தினரும் ஊர் விலக்கம் செய்யப்பட்டனர்.
50 வயதில்
50 வயதில் தனக்கு பெரும் துணையாக இருந்த சிறிய தந்தை அபுதாலிபும் அருமை மனைவி கதீஜாவும் மரணமடைகிறார்கள். நபி(ஸல்)அவர்களுக்கு அது துக்க ஆண்டாகவே இருந்தது.
51 வயதில்
வயதில் மக்காவிற்கு வெளியே தன் பிரச்சாரத்தை துவங்கி தாயிப் செல்கிறார்கள். அங்கு கடினமான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். மக்காவிற்கு வெளியில் சந்தை கூடும் இடங்களுக்கு வரும் மக்களையும் ஹஜ்ஜுக்கு வரும் மக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். மதீனாவில் இஸ்லாமிய சிந்தனை எட்டுகிறது. ஆயிஷாவுடன் திருமணம் நடைபெறுகிறது
52 வயதில்
மக்காவிலிருந்து விண்வெளிப் பயணம் தொழுகை கடமையாகிறது.
53 வயதில்
இரண்டாவது பைஅத்துல் அகபா நடைப் பெறுகிறது.
பகுதி மூன்று
53 வயதில்
முதல் குழுவாக முஸ்லிம்களும் தொடர்ந்து இறைத்தூதரும் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் பயணம். இஸ்லாமிய புதிய வரலாற்றுக்கான துவக்கம். அமோக வரவேற்புடன் மதினாவின் புதிய சாசனம் வரையறுக்கப்படுகிறது.
54 வயதில்
பத்ரு யுத்தம், இறை நிராகரிப்பவர்கள் 1000 பேரை முஸ்லிம்கள் 313 பேர்கள் யுத்தகளத்தில் சந்தித்து வெற்றிப் பெறுகிறார்கள்.(ஹி: 2)
55 வயதில்
உஹது யுத்தம், 3000 இறை நிராகரிப்பவர்களை 700 முஸ்லிம்கள் களத்தில் சந்திக்கிறார்கள். சில காரணங்களால் முஸ்லிம்களுக்கு நிறையஇழப்பு. (ஹி: 3)
58 வயதில்
பனு முர்ரா, கத்பான், கிஸ்ரா கோத்திரங்கள் அடங்கிய 10,000 பேர்களுடன் 3000 முஸ்லிம்கள் போர் செய்கின்றனர். இதுதான் (கந்தக்) அகழ் யுத்தம். இதில் முஸ்லிம்களுக்கு வெற்றி.(ஹி: 5)
59 வயதில்
தனது 1400 தோழர்களோடு உம்ரா செய்ய மக்கா செல்ல ஹூதைபியா என்ற இடத்தில் மக்காவின் இறை நிராகரிப்பவர்களால் தடுக்கப்பட்டு ஹூதைபியா உடன்படிக்கை நடக்கிறது.(ஹி: 6)
60 வயதில்
கைபர் போர் யூதர்களுடன். முஸ்லிம்கள் வெற்றிப் பெறுகிறார்கள். (ஹி: 7)
61 வயதில்
கத்தியின்றி.இரத்தமின்றி யுத்தம் எதுவுமின்றி முஸ்லிம்கள் தம் சொந்த மண்ணான மக்காவை வெற்றிக் கொள்கிறார்கள்.(ஹி: 8.)
62 வயதில்
முஸ்லிம்களை ஒழிக்க 40,000 ரோமர்கள் தபூக் வருகிறார்கள், இவர்களை 30,000 முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடி பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
(ஹி: 9)
63 வயதில்
ரபிவுல் அவ்வல் பிறை 12ல் தனது இறைத்தூதர் பணியை நிறைவு செய்து மரணமடைகிறார்கள்; (இன்னாலில்லாஹி…………………………) (இறப்பு ரபீவுல் அவ்வல் பிறை 12என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது)
இன்ஷா அல்லாஹ் இன்னும் பல பயனுள்ள விடயங்களை பெற...
தொடர்ந்தும் இணைந்திருங்கள்
• Like us on FB: https://www.facebook.com/sljannah/
எமது whatsapp குழுவில் இணைய விரும்பினால் "SLJannah" என type செய்து உங்களது தொலைபேசி இலக்கத்தை (Phone Number) 0094777252139 , 0094717191866 , 0094771719856 இற்கு அனுப்புங்கள் ... (ஆண்கள் மட்டும்)
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo
12090