HELLO Fm
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HELLO Fm, Radio Station, Colombo.
04/05/2017
தகுதி
ஆசைப்படுவதற்கு!
தகுதி தேவையில்லை -அதை
அடைவதற்கான தகுதியை!
உருவாக்கிக்கொள்...
04/05/2017
Apple delivers higher profits, but iPhone sales slip
Apple reported a rise in quarterly profits on Tuesday, but its shares took a hit from weaker iPhone sales ahead of a 10-year-anniversary model on the horizon.
Apple said its profit climbed 4.9 percent to slightly more than $11 billion on revenue rising 4.6 percent to $52.9 billion in the quarterly period that ended April 1.
04/05/2017
Neruppuda Official Full Songs | Vikram Prabhu, Nikki Galrani | Sean Roldan | Ashok Kumar Now Trending - https://goo.gl/2dGI9E Neruppuda Teaser - https://goo.gl/dd6mgZ Neruppuda is an upcoming Indian Tamil-language action thriller film directed by...
04/05/2017
சீரியல் நடிகை பவானியின் கணவர் தற்கொலை! காரணம் இது தானா....
தமிழ் சானல்களில் பிரபல சீரியல் ரெட்டை வால் குருவி, இதில் நடித்த பவானியின் கணவர் பிரதீப் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரதீப் தமிழில் சுமங்கலி என்னும் சீரியலில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சீரியல் பிரபலமான இவரின் தற்கொலை பற்றி பவானி பேட்டி அளித்துள்ளார்.
எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.
மீண்டும் வந்தார். ஆனால் இன்று மிக அதிகமாக காலையிலேயே குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன்.
மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தார். சிறு விசயத்திற்காக இப்படி செய்துகொண்டுள்ளார் என பவானி கூறியுள்ளார்.
04/05/2017
சீரியல் நடிகை பவானியின் கணவர் தற்கொலை! காரணம் இது தானா....
தமிழ் சானல்களில் பிரபல சீரியல் ரெட்டை வால் குருவி, இதில் நடித்த பவானியின் கணவர் பிரதீப் இன்று அதிகாலை 4 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பிரதீப் தமிழில் சுமங்கலி என்னும் சீரியலில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் சீரியல் பிரபலமான இவரின் தற்கொலை பற்றி பவானி பேட்டி அளித்துள்ளார்.
எங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று காலை 2 மணியளவில் வெளியே சென்றுவருகிறேன் என்று சொல்லிவிட்டு போனார்.
மீண்டும் வந்தார். ஆனால் இன்று மிக அதிகமாக காலையிலேயே குடித்துக்கொண்டிருந்தார். நான் அதிகாலையிலேயே ஷூட்டிங் சென்றுவிட்டேன்.
மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் இறந்து கிடந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தார். சிறு விசயத்திற்காக இப்படி செய்துகொண்டுள்ளார் என பவானி கூறியுள்ளார்.
04/05/2017
அஜித்தின் விவேகம் பட காட்சிகளை பார்த்த பிரபல நடிகர்- என்ன கூறியிருக்கிறார் பாருங்களேன்...
மே 1 ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் விவேகம் பட டீஸர் வரும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் டீஸருக்கு பதிலாக விவேகம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று தெறி மாஸாக வெளியாகி இருந்தது.
அதேபோல் அஜித் பிறந்தநாளுக்கும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர்.
நடிகர் விக்ரம் பிரபுவும் தன்னுடைய வாழ்த்துக்களை அஜித்திற்கு கூறியிருந்தார். அதோடு விவேகம் படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். விவேகம் படத்திற்காக அஜித் தன்னையே அர்ப்பணித்துள்ளார்.
உங்களை போல நானும் அஜித்தை திரையில் பார்க்க விரும்புகிறேன் என்று டுவிட் செய்திருக்கிறார்.
சாலையில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்! கமெராவில் சிக்கிய காட்சி.....
அமெரிக்காவில் விமானம் ஒன்று சாலையில் விழுந்து வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் மாகாணத்தில் முகில்டியோ நகரின் அருகில் விமான தளத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.
புறப்பட சிறிது நேரத்தில் விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக விமானத்தை தரையிறுக்கும் முயற்சியில் விமானி ஈடுபட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்து சாலையை நோக்கி தரையிறங்கிய விமானம் சாலை ஓரம் இருந்த மின்கம்பிகளில் உரசியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த கார்களின் மீது தாறுமாறாக மோதிய வெடித்து சிதறியுள்ளது.
இதில் சாலையில் சென்றுகொண்டிருந்த 5 கார்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம், அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயனம் செய்த அனைவரும் சிறு காயங்கள் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.
04/05/2017
வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை....
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தை ஒன்று பிறந்தது. வயிற்றில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை பார்த்த தாய் வேதனையின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
குழந்தைக்கு வயிற்றிலும் ஒரு தலை இருந்ததுதான் தாயின் சோகத்திற்குக் காரணம். சோகத்தில் இருந்த அவரை சமாதானப்படுத்திய மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம் என நம்பிக்கையூட்டியுள்ளனர்.
அந்தப் பெண் கர்ப்பமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எல்லாம், இரட்டை குழந்தை என தெரிவித்திருக்கின்றன. இதனால் அப்பெண் மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.
ஆனால் குழந்தை பிறந்தபோது ஒரு குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்ததாகவும், மற்றொரு குழந்தைக்கு தலை மற்றும் சில உறுப்புகளுடன் முழுமையான வளர்ச்சி பெறாமல் இரண்டும் ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதனால் குழந்தையின் உருவமானது, 3 கைகளுடன் வயிற்றிலும் ஒரு தலையுடன் காணப்பட்டிருக்கிறது.
கடந்த 26-ஆம் திகதி மருத்தவர்கள் அக்குழந்தைக்கு 4 மணி நேரம் அறுவை சிசிக்சை செய்து வளர்ச்சியடையாத தலையை அகற்றிவிட்டனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், விரைவில் குழந்தை வீடு திரும்பும் என்று நம்பிக்கை கூறியுள்ளனர்
ஜெயலலிதா மறைவு விவகாரம்: தேசியப் பாதுகாப்புப் படை மீது எழுப்படும் சந்தேகங்கள்.
என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையை பொறுத்தமட்டில் ஒரு முக்கிய அரசியல் தலைவர் அவரது குடியிருப்பில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட அரசியல் தலைவரின் பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.
தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மொத்தம் 16 முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள்.
பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும் ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இப்போது ஓ.பன்னிர் செல்வத்துக்கு ஒய் பிரிவில் மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது.
முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப் பூனைப் படையினர் அனைவரும் மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒரு குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள் ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை பொறுப்பில் இருப்பர்.
ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள், பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும் இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.
ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின் தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப்படை வசம் உள்ள வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும்.
சசிகலாவை விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதா? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மூவரும் தங்களை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்ககோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, சுதாகரன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சிறை தண்டனை அனுப்பவித்து வரும் வரும் சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுக்க கோரி அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இளவரசி, சுதாகரன் தரப்பிலும் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்தது போன்று தங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனு உச்சநீதிமன்ற பதிவாளர் விசாரணைக்கு வரலாம் எனவும் அப்போது மனுவை ஏற்பதா , நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
02/05/2017
வெளியானது தரவரிசை பட்டியல்: இலங்கை எத்தனையாவது இடம்?
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்க அணி (123 புள்ளிகள்) முதலிடத்திலும், அவுஸ்திரேலிய அணி (118 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றன.
இந்திய அணி (117 புள்ளிகள்) 5 புள்ளிகள் அதிகரித்து ஒருஇடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து அணி (115 புள்ளிகள்) 2 புள்ளிகள் அதிகரித்தாலும், ஒரு இடம் சறுக்கி 4-வது இடத்தை பெற்றது.
இங்கிலாந்து அணி (109 புள்ளிகள்) 5-வது இடமும், இலங்கை அணி (93 புள்ளிகள்) 6-வது இடமும், வங்காளதேச அணி (91 புள்ளிகள்) 7-வது இடமும்,
பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 8-வது இடமும், மேற்கிந்திய அணி (79 புள்ளிகள்) 9-வது இடமும், ஆப்கானிஸ்தான் (52 புள்ளிகள்) 10-வது இடமும்,
ஜிம்பாப்வே அணி (46 புள்ளிகள்) 11-வது இடமும், அயர்லாந்து (43 புள்ளிகள்) 12-வது இடமும் வகிக்கின்றன.
02/05/2017
மூன்றாம் உலகப்போரால் அச்சம்: பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தும் பொதுமக்கள்
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளுக்கு இடையே அசாதாரண சூழல் நிலவி வருவதால் மூன்றாம் உலகப்போரின் விளைவுகளில் இருந்து காத்துக்கொள்ள பொதுமக்கள் பதுங்கு குழிகளை தயார்ப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இருநாடுகளின் அன்றாட நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, இரு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் உலகப்போர் குறித்து மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், பூமிக்கு அடியில் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்து தரும் அமெரிக்காவை சேர்ந்த Atlas Survival Shelters என்ற நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரான Ron Hubbard என்பவர் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ‘இந்த ஒரு மாதத்தில் மட்டும் பதுங்கு குழிகளை ஏற்பாடு செய்துக்கொடுக்க வந்துள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
அணுகுண்டு தாக்குதலின்போது உயிரை பாதுகாத்துக்கொள்ள இப்பதுங்கு குழிகள் பயன்படுகின்றன.
நிலப்பரப்பிற்கு கீழ் ஒரு சிறிய குடில் போன்ற ஒரு புகலிடத்தை அமைத்துக்கொடுக்கும் பணியை தான் இந்நிறுவனம் செய்து வருகிறது.
இதுபோன்று ஒரு பதுங்கு குழியில் 2 பேர் வரை தங்குவதற்கு இந்நிறுவனம் 25,000 டொலர் கட்டணமாக வசூலிக்கிறது.
10 பேர் வரை ஒரு குடும்பமாக தங்குவதற்கு 1,50,000 டொலர் கட்டணமும், 117 பேர் வரை தங்குவதற்கு 1.4 மில்லியன் டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக Ron Hubbard தெரிவித்துள்ளார்.
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo