Asian News

Asian News

Share

Welcome to the official page of Asian News.

Watch Asian News anytime and anywhere on https://asiannews.lk/

Our Instagram Page: https://www.instagram.com/asiannews.lk/

Join Through Our WhatsApp Group : https://chat.whatsapp.com/KAACFnt4C0j4O4zz8JUe6s

Photos from Asian News's post 08/06/2026

சுரேஷ் சாலேவின் கைதைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம்....!!

by editor

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பதற்றம்: சுரேஷ் சாலேவின் கைதைக் கண்டித்து விமல், உதயகம்மன்பில ஆகியோர் தலைமையில் சாத்வீக போராட்டம் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது முன்னாள் அரச புலனாய்வுத் துறை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும், தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்தும் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் காணப்பட்டனர்.

08/06/2026

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

video link-

https://fromsmash.com/vPfmyiDsDA-dt

பாறுக் ஷிஹான்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATSAPP ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார்.அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள். ஆண் 18 மற்றும் 14 வயதுடைய பெண் இருக்கின்றனர்.இதன் போது அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சந்தேக நபரான 50 வயது சந்தேக நபரான கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.

குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் குறித்த மூவரும் உறங்கியதுடன் அவ்வேளை தாயுடன் கள்ளக்காதலன் உடலுறவில் நள்ளிரவில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் இருந்த 14 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார்.இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன் கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026 அன்று கைது செய்துள்ளனர்.

பின்னர் தொடர் விசாரணையின் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா(44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

Photos from Asian News's post 08/06/2026

.

சீனாவில் அரச நிர்வாகம் குறித்த நாடாளுமன்றப் பணிப்பட்டறையில் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு பங்கேற்பு

எஸ் ஜே புஹாது

சீனாவில் நடைபெற்ற அரச நிர்வாகம் குறித்த விசேட நாடாளுமன்றப் பணிப்பட்டறையில் பங்கேற்பதற்காக இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், இத்தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ தலைமைத்துவத்தை (Head of the Delegation) ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன வகித்துள்ளார்.

இந்தத் தூதுக்குழுவில் பிரதி அமைச்சர் டி.பி. சரத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றும் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

சீன அரச நிர்வாகக் கட்டமைப்பு குறித்தக் கற்றல்
சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் ஐசிசி (ICC) நிறுவனம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பயனுள்ள பணிப்பட்டறையின் போது, சீனப் பண்புகளுடனான ஜனநாயகம் குறித்த ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் சிந்தனை, "முழுச் செயல்முறை மக்கள் ஜனநாயகம்" (Whole-Process People’s Democracy) மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு (CPPCC) மற்றும் "இரு அமர்வுகள்" (Two Sessions) ஆகியவற்றின் செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், இலங்கைத் தூதுக்குழுவினருக்கு சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாக அவதானிப்பதற்கான விசேட வாய்ப்பும் கிடைத்தது.

சர்வதேச தேயிலை தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்பு
இந்த உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணைவாக, சீனாவின் பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தேயிலை தின (International Tea Day) உத்தியோகபூர்வ கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றதுடன், இதில் முதன்மை விருந்தினராகப் (Chief Guest) பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன கலந்து கொண்டார்.

இந்த மிக வெற்றிகரமான மற்றும் பயனுள்ள நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்த ஐசிசி (ICC) நிறுவனம், சீன வர்த்தகத் திணைக்களம் மற்றும் இதற்கான தூதரக மட்டத்திலான ஒருங்கிணைப்புப் பணிகளை வழங்கிய இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றுக்கு பிரதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் தமது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

Photos from Asian News's post 08/06/2026

அனீஸின் 20 வருடகால அரச சேவைப் பாராட்டி கெளரவித்த மாகாண ஆணையாளர்!

அபு அலா

அரச சேவையில் 20 வருடங்கள் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் சேவைகளை வாழ்த்திப் பாராட்டி, வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்வின்போது, ஓய்வுபெற்றுச் செல்லும் எம்.ஏ.எம்.அனீஸின் 20 வருடகால முன்மாதிரியான அரச சேவைகளைப் பாராட்டிப் பேசிய மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபில்,

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிகாரிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அனீஸ் போன்ற ஊழியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவை மிக முக்கியமானது. கடந்த 9 வருடங்களாக சுதேச மருத்துவ திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தனது பணியினை முன்னெடுத்திருந்தார். இவர் போன்ற ஊழியர்களின் சேவைகளை பாராட்டி வாழ்த்தி வழியனுப்புவதை கெளரவமாக நான் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மாகாண ஆணையாளரால் அவருக்குப் பொன்னாடை போர்த்தி, வைத்தியசாலை சமூகத்தின் சார்பில் நினைவுச் சின்னம் மற்றும் பணப்பொதி என்பவற்றை வழங்கி கௌரவித்தார்.

ஓய்வு பெற்றுச் சென்ற அனீஸ், அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் 11 வருடங்களும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 9 வருடங்களும் தனது சிறந்த அரச பணியினை முன்னெடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அனீஸின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Photos from Asian News's post 08/06/2026

திகாமடுல்ல திரிய பெண்கள் தொழில்முனைவோர் பாராட்டு விழா

நூருல் ஹுதா உமர்

"வளமான நாட்டின் பெருமை அவளே, தேசத்தின் வழிகாட்டி" எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி, 2026 சர்வதேச மகளிர் தினத்திற்கு இணைவாக, அம்பாறை மாவட்டத்தின் தைரியமிக்க பெண் தொழில்முனைவோரைப் பாராட்டும் விசேட விழா அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இவ்விழா நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு வழங்கி வரும் பெண் தொழில்முனைவோர் பலர் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். பெண் தொழில்முனைவோரின் வணிக நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் தேவையான வசதிகளை வழங்குதலும் இதன்போது இடம்பெற்றது.

அரசின் தலையீட்டுடன் பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அரசியல் அதிகாரத் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அவர்களுள் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரியந்த விஜேரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் முத்து ரத்வத்தே உட்பட பிரதேசத்தின் அரச அதிகாரிகளும், பல பெண் தொழில்முனைவோர் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

பிராந்திய மட்டத்திலான பெண்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வென்றெடுப்பதற்கும், அவர்களை நாட்டின் வழிகாட்டிகளாக மாற்றுவதற்கும் இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.

08/06/2026

கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் விடுக்கும் அறிவித்தல்....!

எஸ் ஜே புஹாது

கத்தார் நாட்டின் வான்வெளி மூடப்பட்டதாகவோ அல்லது விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாகவோ சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என்று கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது அமலில் உள்ள விமான அறிவிப்பு (NOTAM) என்பது விமானப் போக்குவரத்து சேவைகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் தொடர்வதற்காக மாற்று விமானப் பாதைகளை நிர்ணயிப்பதற்காக வெளியிடப்பட்டதாக ஆணையம் விளக்கியுள்ளது.

இது சர்வதேச தரநிலைகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே தகவல்களைப் பெற வேண்டும் என்றும், வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

08/06/2026

சம்மந்துறையில் சுகாதாரப் பராமரிப்பில் ஒரு புதிய மைல்கல்...!

எஸ் ஜே புஹாது

சம்மந்துறை ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நலப் பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பராமரிப்புப் பிரிவு கட்டிட திறப்பு விழா 2026.06.08 ந் திகதி நடைபெற உள்ளது

"சிறு இதயங்களைக் குணப்படுத்தும் ஒரு புதிய இல்லம்" என்ற கருப்பொருளின் கீழ், இந்த புதிய வசதியானது மிக இளைய உறுப்பினர்களுக்கு சிறப்புப் பராமரிப்பை வழங்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக (பாராளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட கடற்கரைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இலங்கை அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

சிறப்பு விருந்தினராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி. சஹீலா இஸ்ஸதீன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்க உள்ளனர்.

08/06/2026

அமைச்சர் விஜித ஹேரத்தின் அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகபூர்வப் பயணம்

எஸ் ஜே புஹாது

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், 2026 ஜூன் 1 முதல் 3 வரை அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டார்.

இப்பயணத்தின் போது, அமைச்சர் ஹேரத், அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான பெனி வோங்குடன் வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா, கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கலந்துரையாடினார்.

மேலும், அமைச்சர் ஹேரத், அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் மில்டன் டிக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்ததுடன், சிறு வணிகம், சர்வதேச அபிவிருத்தி மற்றும் பன்முகப் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் ஏன் எளி, இந்தியப் பெருங்கடல் விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவர் டிம் வெட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா-இலங்கை பாராளுமன்ற நட்புறவுக் குழு ஆகிய தரப்பினருடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

கலந்துரையாடல்களின் முக்கிய பெறுபேறுகளில் ஒன்றாக, விரிவான பிராந்திய பொருளாதார கூட்டமைப்பில் (RCEP) இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது.

அமைச்சர் ஹேரத், விக்டோரியா ஆளுநர் மார்கரட் கார்ட்னர் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் முதலமைச்சர் ஜசிந்தா எலன் ஆகியோருடனும் சந்திப்புகளை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் வணிகம் மற்றும் முதலீடு தொடர்பான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, விக்டோரியா மாநில அரசின் வர்த்தக வசதி முகமையான குளோபல் விக்டோரியா நடத்திய இலங்கை - விக்டோரியா தொழில் வட்டமேசை மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். மேலும், வணிக சமூகத்தின் பிரதிநிதிகளுடன் வணிக வலையமைப்பு அமர்வொன்றிலும் பங்கேற்றார்.

கான்பராவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை சமூகத்தினருடன் கலந்துரையாடியமை, இப்பயணத்தின் ஒரு அம்சமாகும். இது, வெளிநாட்டிலுள்ள இலங்கையருடன் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதில் அரசாங்கத்தின் ஈடுபாட்டை அமைச்சர் மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.

அமைச்சரின் இப்பயணமானது, தசாப்தமொன்றில், அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரொருவரால் மேற்கொள்ளபட்டுள்ள முதல் உத்தியோகப்பூர்வப் பயணமாகும்.

அண்மையில்அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உயர் மட்டப் பயணங்களுடன், பரந்த அளவிலான துறைகளில் இருதரப்பு உறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் கொண்டுள்ள புதுப்பிக்கப்பட்ட ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்ற மற்றுமொரு நிகழ்வாக இப்பயணம் அமைகிறது.

Photos from Asian News's post 07/06/2026

விபத்துகளைக் குறைப்போம்! உயிர்களைக் காப்போம்!!

#காயங்களைத் தடுப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உயர்மட்ட #கலந்துரையாடல்

எஸ் ஜே புஹாது

கல்முனை பிராந்தியத்தில் காயங்கள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில், காயங்களைத் தடுப்பதற்கான வழிநடத்தல் குழுவின் உயர்மட்ட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில் கலந்துகொண்ட உதவி திட்டப் பணிப்பாளர் எச்.பீ.அனீஸ் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை, கல்முனை பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

சுகாதாரத் துறை, கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கல்முனை பிராந்தியத்தில் இடம்பெறும் காயங்கள் மற்றும் விபத்துகளைத் தடுப்பதற்கான செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விபத்துகள் அதிகம் பதிவாகும் இடங்களை அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, காயங்கள் தொடர்பான தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வது, அவசரகால முதலுதவி மற்றும் மருத்துவக் கவனிப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மேலும், வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், வீடுகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுத்தல் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

காயங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் உடல் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் பல்துறை ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியம் பற்றி இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

07/06/2026

விஷேட அதிரடிப் படையின் அத்தியட்சகர் துவான் பைசல் ஹஜ்

(அஷ்ரப் ஏ சமத்)

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்( STF) துவான் பைசல் ஹஜ்...

சிறப்பு அதிரடிப் படையில் பிறந்த ஒரு மாபெரும் அதிகாரி

சிறு குழுக்கள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல நடவடிக்கைகளை வழிநடத்திய ஒரு துணிச்சலான விசேட அதிரடிப்படை வீரர்.

இவர் ஜனாதிபதி காவல்துறை வீர தீரச்செயல், காவல்துறை வீரதீரச் செயல் மற்றும் தேசபக்தர் வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo
32340