Yoosuf Mufthi
Mufthi Yoosuf is a Prominent and respected Islamic scholar in Sri Lanka who is also a motivational s
18/09/2026
Jummah in Hong Kong – Beyond Gems
18 September 2026 | Hong Kong
Some gatherings are measured by the number of people who attend. Others are measured by the hearts they bring together.
Today in Hong Kong, Alhamdulillah, I witnessed one of those truly special gatherings.
More than 2,000 people from different countries and backgrounds came together for Jummah during the Gem & Jewellery Expo—not simply to do business, but to pause, pray, reflect and remind ourselves of what gives our lives and our businesses their true value.
I was deeply honoured to deliver the Jummah sermon on the theme:
“Beyond Gems: Building a Business That Lasts.”
Surrounded by some of the world’s most precious gems, we reflected on a simple but profound question:
What makes something truly valuable?
A business is measured not only by its financial capital, but also by its spiritual capital, knowledge capital and social capital. In this Knowledge Era, lasting success requires more than wealth—it requires faith, continuous learning, trust, responsibility and a clear vision for future generations.
It was deeply inspiring to see brothers from diverse countries and backgrounds united through faith, friendship and business.
My sincere appreciation goes to the Frontline brothers for their dedicated efforts in bringing the community together and facilitating these meaningful programmes.
What touched me most was realising that this commitment extends far beyond one event. Throughout the year, wherever Gem & Jewellery Expos are held, particularly during Ramadan and festival seasons, the brothers continue to organise Iftar, Suhoor and Jummah programmes, often inviting scholars from overseas.
Alhamdulillah, I am truly grateful to have been included in this noble effort.
My heartfelt thanks and duas go to my dear friend Brother Ashraf Sultan and the organising team, especially Kursheed Ahamed and Haji Solopong. Their passion, warmth, networking spirit and commitment to bringing people together are truly admirable.
Behind every successful programme are people who work quietly, consistently and often away from the spotlight. Their dedication and service deserve our sincere appreciation.
There is something especially beautiful about seeing a tradition of service continue from one generation to another. May Allah preserve this spirit and make it a lasting legacy of khidmah and brotherhood.
May Allah accept the efforts of everyone involved, bless their businesses, families and endeavours, and make these gatherings a means of strengthening faith, brotherhood, knowledge and service to humanity.
Beyond gems. Beyond business.
Let us build people, relationships and a legacy that lasts.
Alhamdulillah.
16/09/2026
அமானிதமும் தகுதியும்: நிறுவனங்களில் தலைமுறை மாற்றத்தின் தேவை
“ஒரு பொறுப்பு அதற்குத் தகுதியற்றவரிடம் ஒப்படைக்கப்பட்டால், மறுமை நேரத்தை எதிர்பாருங்கள்.” (நூல்: புகாரி)
நபி முஹம்மது ﷺ அவர்களின் இந்த எச்சரிக்கை மக்களிடையே அடிக்கடி கூறப்பட்டாலும், இதன் உண்மையான பரிமாணத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தகுதியற்ற ஒருவர் தாமாக முன்வந்து ஒரு பதவியை ஏற்றுக்கொள்வது மட்டுமே இதன் பொருள் அல்ல. தேர்தல் மூலமாகவோ நியமனம் மூலமாகவோ தகுதியற்ற ஒருவர் பதவியில் அமர்த்தப்பட்டால், அதற்கு அந்த நபர் மட்டுமன்றி, அவரைத் தேர்ந்தெடுத்தவர்களும் அல்லாஹ்விடம் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
ஒருவரின் திறமை, தகுதி, அனுபவம் மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல்; அன்பு, உறவு, நட்பு, செல்வாக்கு அல்லது தனிப்பட்ட ஆதாயம் காரணமாக ஒருவரைப் பொறுப்பில் அமர்த்துவது இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் கடுமையான எச்சரிக்கைக்குள் அடங்கும்.
தகுதியானவர்களின் மெளனமும் ஒதுங்குதலும்.
இங்கே நாம் இன்னோர் உண்மையையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். பல நேரங்களில் தகுதியற்றவர்கள் பொறுப்புக்கு வருவதற்குக் காரணம், தகுதியானவர்கள் முன்வராமையே ஆகும்.
நமது பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களில் நிருவாகத் தெரிவுகள் நடைபெறும்போது; நிருவாகம், மனிதவள முகாமைத்துவம் (HR), கணக்கியல், நிதி, தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற தகுதியும் ஆற்றலும் மிக்க இளைஞர்கள், "இது நமக்கு ஏன் வீண் சிரமம்?" என்று எண்ணித் தங்களைத் தாங்களே விலக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதோ, பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள முன்வருவதோ இல்லை.
இதன் விளைவாக, அனுபவம் கொண்ட முதியவர்களே மீண்டும் மீண்டும் அந்தப் பொறுப்புகளை ஏற்கும் சூழல் உருவாகிறது. எனவே, இந்த நிலைமைக்கு முதியவர்களை மட்டுமே குறை கூறுவது நியாயமாகாது.
நிறுவனங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் நாம், அதைச் சிறப்பாக நடத்தும் திறமை இருந்தும் ஒதுங்கியிருந்தால், "என்னிடம் திறமை இருந்தும் நான் ஏன் முன்வரவில்லை?" என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். நமக்கு அல்லாஹ் வழங்கிய அறிவையும் ஆற்றலையும் சமூக நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஒரு பொறுப்பாகும் (அமானிதம்).
மாறிவரும் உலகமும் அனுபவத்தின் எல்லையும்.
இன்றைய நிருவாகம், தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி மற்றும் தொடர்பாடல் முறைகள் அதிவேகமாக மாறிவிட்டன. இச்சூழலில், "அனுபவம் மட்டும் போதுமா?" என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.
அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
“யாருக்கு நாம் நீண்ட ஆயுளைக் கொடுக்கிறோமோ, அவரைப் படைப்பில் மீண்டும் பலவீனமான நிலைக்குக் கொண்டு செல்கிறோம். அவர்கள் சிந்திக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 36:68)
60 வயதைத் தாண்டிய வாழ்க்கை மனிதனுக்கு மிக முக்கியமானது. வயது அதிகரிக்கும்போது மனிதன் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்ப வேண்டும். தவ்பா, இஸ்திக்பார், இபாதத் மற்றும் மறுமைக்கான தயாரிப்புகளில் அதிகவனம் செலுத்த வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
“அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீர் கண்டால், உமது இறைவனைப் புகழ்ந்து தஸ்பீஹ் செய்வீராக; அவனிடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் தவ்பாவை (மன்னிப்பை) ஏற்பவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன் 110:1-3)
எனவே, 60 வயதைக் கடந்தவர்கள் தங்கள் எஞ்சிய வாழ்நாளை இபாதத், ஆன்மீகத் வழிகாட்டல் மற்றும் மார்க்கச் சேவைகளில் கழிப்பதே சிறந்தது. இதன் பொருள் முதியவர்கள் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒதுங்க வேண்டும் என்பதல்ல; அவர்களின் அனுபவமும் ஞானமும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள். ஆனால், அவர்களின் பங்களிப்பு வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் மற்றும் அடுத்த தலைமுறையை உருவாக்குதல் ஆகிய எல்லைக்குள் அமைவதே பொருத்தமானது.
அதேவேளை, இன்றைய காலத்தின் தேவைகளைப் புரிந்துகொண்ட, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்கள் நிருவாகப் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும்.
தேவை: திறமைக்கேற்ற கூட்டுப் பொறுப்பு
உலகளாவிய வெற்றிகரமான நிறுவனங்களில் 40 மற்றும் 50 வயதுடைய திறமைசாலிகள் முதன்மைப் பொறுப்புகளை ஏற்று வழிநடத்துகிறார்கள். அப்படியிருக்க, நமது இஸ்லாமிய நிறுவனங்களிலும் ஏன் இத்தகைய தலைமுறை மாற்றமும் தகுதிசார்ந்த பொறுப்பளிப்பும் சாத்தியமாகக்கூடாது?
இது "முதியவர்கள் vs இளைஞர்கள்" என்ற மோதல் அல்ல. மாறாக:
• “இந்தப் பொறுப்புக்கு உண்மையிலேயே தகுதியானவர் யார்?”
• “யாரிடம் திறமை, நேர்மை, அறிவு, நிருவாகத் திறன் மற்றும் இறை அச்சம் உள்ளது?”
என்பதே முதன்மையான கேள்வி. வெறும் வயதோ அல்லது இளமையோ மட்டுமே ஒரு தகுதியாகிவிட முடியாது.
முடிவுரை
இந்த ஹதீஸ் இரு தரப்பினரையுமே எச்சரிக்கிறது:
1. தகுதியற்றவர் பொறுப்பை ஏற்கக் கூடாது; அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவும் கூடாது.
2. தகுதியானவர் தன் திறமையை மறைத்துக்கொண்டு சமூகப் பொறுப்பிலிருந்து விலகி ஓடக் கூடாது.
பதவி என்பது யாரினதும் சொந்தச் சொத்தல்ல; அது ஒரு கனதியான அமானிதம்.
எனவே, நிருவாகிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அன்பு, உறவு, செல்வாக்கு ஆகியவற்றைப் புறந்தள்ளி—நேர்மை, தகுதி, திறமை, அறிவாற்றல் மற்றும் இறைஅச்சம் ஆகியவற்றை மட்டுமே அளவுகோலாகக் கொள்வோம். தகுதியான இளைஞர்கள் துணிவோடு முன்வந்து சமூகப் பொறுப்புகளைச் சுமக்க வேண்டிய தருணம் இதுவே.
வெற்றி என்பது, எம்மைச் சார்ந்தே எப்போதும் இயங்க வேண்டிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவதல்ல.
உண்மையான வெற்றி என்பது, எமக்குப் பின்னர் வரும் தலைமுறைகள் அதன் நோக்கத்தையும், கொள்கைகளையும், பெறுமதிகளையும் தமது பொறுப்பாக ஏற்றுக்கொண்டு, அதன் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து, காலத்தின் தேவைகளுக்கேற்ப அதனை மேலும் வளர்த்து, அதன் உயரிய இலட்சியத்தையும் சேவையையும் எதிர்கால தலைமுறைகளிடம் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்கக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்குவதிலேயே தங்கியுள்ளது.
கல்லைப் போல கடினமாகும் இதயங்கள் | ஜும்ஆ உரை: முப்தி.யூஸுப் ஹனிபா| 11.09.2026
கொடுப்பதில் மலரும் மனிதநேயம்: நிபந்தனையற்ற கொடையும் அதன் அழகுகளும்.
மனித வாழ்வின் ஆகச்சிறந்த பண்பாடு ‘கொடுத்தல்’. கொடை என்பது வெறும் பொருளை வழங்குவது மட்டுமன்று; அது அன்பையும், மன்னிப்பையும், மனிதநேயத்தையும் பிரதிபலிக்கும் உயரிய அறம். அதை யாரை நோக்கிச் செய்ய வேண்டும், எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அருளுரையும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை கவிக்கோ அப்துல் ரகுமானின் கவித்துவச் சிந்தனையும் நமக்குத் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.
நபி ﷺ அவர்கள் அருளிய அமுதமொழி:
“உன்னுடன் உறவைத் துண்டித்தவருடன் உறவைப் பேணுவாயாக; உனக்குக் கொடுக்க மறுத்தவருக்கும் கொடுப்பாயாக; உனக்கு அநியாயம் செய்தவரை மன்னிப்பாயாக.”
இவ்வுலகில் நமக்கு நன்மை செய்பவருக்குத் திரும்ப நன்மை செய்வதில் எந்தப் பெருமையோ சிறப்போ இல்லை. மாறாக, நம்மிடம் அன்பாக இல்லாதவர்களுக்கும், நமக்குக் கொடுக்க மறுப்பவர்களுக்கும், அநீதி இழைத்தவர்களுக்கும் பிரதிபலன் பாராமல் வழங்குவதே உண்மையான அறம். நம் நற்செயல்கள் பிறரின் நடத்தையைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதே இதன் சாரம்.
இறைவன் மனிதர்களுக்கு அருள்புரியும்போது அவர்களின் தகுதியைப் பார்த்து வழங்குவதில்லை; தகுதியற்றவர்களுக்கும் அவனது அருட்கொடை வற்றாமல் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அவனது அருள் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது. இறைவனின் இந்த நிபந்தனையற்ற கருணையைப் பிரதிபலிப்பதாகவே மனிதர்களின் கொடையும் அமைய வேண்டும்.
*கொடுக்கும் முறை: கொடையின் மூன்று அழகுகள்*
கொடுக்கும் எண்ணம் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதை வெளிப்படுத்தும் முறையும் அவ்வளவு முக்கியம். அதை கவிக்கோ அப்துல் ரகுமான் மூன்று அருமையான இயற்கை உவமைகள் மூலம் காட்சிப்படுத்துகிறார்:
• சத்தமில்லாமல் கொடு (பூவைப் போல): பூக்கள் எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக மலர்ந்து தன் நறுமணத்தைப் பரப்புகின்றன. அதுபோல, தான் செய்த உதவியை உலகம் போற்ற வேண்டும் என்ற விளம்பர ஆசையின்றி அமைதியாகச் செய்யப்படும் உதவியே உண்மையான அழகைப் பெறுகிறது.
• பேதமில்லாமல் கொடு (விளக்கைப் போல): அகல் விளக்கு தன் முன் நிற்பவர் யார் என்று பாகுபாடு பார்ப்பதில்லை; அனைவருக்கும் சமமாக ஒளியைப் பாய்ச்சுகிறது. நாமும் மனித மரியாதையையும் தேவையையும் மட்டுமே அளவுகோலாகக் கொண்டு, சாதி, மத, பேதமின்றி இயன்றதை வழங்க வேண்டும்.
• எதிர்பார்ப்பில்லாமல் கொடு (நதியைப்போல): நதி தன் நீரைக் குடித்துத் தாகம் தணித்துக் கொள்பவர்களிடம் எந்தப் பதிலுதவியையோ, பாராட்டை அல்லது நன்றிச் சான்றிதழையோ எதிர்பார்ப்பதில்லை. நாமும் புகழ், பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போதுதான் நம் மனம் முழுமையான தூய்மையையும் அமைதியையும் அடைகிறது.
பிறரின் தகுதியையோ அல்லது அவர்களின் நடத்தையையோ பார்க்காமல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தாமல் இருப்பது எந்த அளவிற்கு உயரிய பண்போ, அதே அளவிற்கு விளம்பரமின்றி, பாகுபாடின்றி, எதிர்பார்ப்பின்றி அமைதியாகக் கொடுப்பது அக்கொடைக்கு உயிரும் அழகும் சேர்க்கிறது.
அகிலத்தைப் படைத்த இறைவன் நமக்கு நிபந்தனையன்றி அருள்வதைப் போல, நாமும் பிரதிபலன் பாராது பிறருக்குக் கொடுக்கும் கரங்களாக வாழ்வதே மனித வாழ்க்கையின் பூரணத்துவமாகும்.
Humanity Blossoms Through Giving: The Beauty of Unconditional Giving
One of the noblest expressions of human character is giving. Giving is not merely offering material possessions; it is a virtue that reflects love, forgiveness, and humanity. The Prophet Muhammad ﷺ teaches us whom we should give to and on what basis, while Kavikko Abdul Rahman’s poetic reflections beautifully illustrate how we should give.
The Prophet ﷺ said:
“Maintain relations with the one who cuts you off; give to the one who withholds from you; and forgive the one who wrongs you.”
Returning kindness to those who are kind to us is easy. True virtue lies in giving without expecting anything in return—even to those who are not loving towards us, who refuse to give to us, or who have wronged us. Our good deeds should not depend on how others treat us.
When Allah bestows His blessings upon us, He does not give according to our worthiness. Even those who are undeserving continue to receive His countless blessings. His mercy is beyond conditions and limitations. Our giving should likewise reflect this unconditional compassion of Allah.
The Way We Give: Three Beauties of Giving
The Prophetic teaching establishes the principle of unconditional giving. Kavikko Abdul Rahman adds poetic beauty to this principle through three images from nature:
• Give quietly — like a flower
Flowers bloom silently and spread their fragrance without seeking attention. Likewise, true generosity should be offered without publicity or the desire for praise.
• Give without discrimination — like a lamp
An oil lamp shines its light equally upon everyone without distinction. In the same way, we should give without discrimination based on caste, religion, status, or other differences.
• Give without expectation — like a river
A river gives its water to all who drink from it without asking for repayment or recognition. Likewise, we should give without expecting gratitude, praise, or anything in return.
These three images—the flower, the lamp, and the river—beautifully express the spirit of generous giving: quietly, impartially, and selflessly.
Just as it is noble to never stop giving, regardless of another person’s worthiness or behaviour, giving with humility, without discrimination, and without expectation gives our generosity its true beauty.
Just as the Creator of the universe continues to bless us unconditionally, the fulfilment of human life lies in becoming hands that give to others without expecting anything in return.
أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ.
கடந்த காலம் ஒரு நினைவு; எதிர்காலம் ஒரு வாய்ப்பு.
ஆனால் உங்கள் வாழ்க்கை நிகழ்வது இந்த நிகழ்காலத்தில் மட்டுமே.
நேற்றிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; நாளைக்குத் திட்டமிடுங்கள்.
ஆனால் வருத்தம் உங்கள் உள்ளத்தை ஆட்கொள்ளவும், கவலை உங்கள் இன்றைய நாளைத் திருடவும் அனுமதிக்காதீர்கள்.
நிகழ்காலத்தில் வாழுங்கள். நன்றியுடன் வாழுங்கள். இப்பொழுதை முழுமையாக வாழுங்கள்.
ஒரு நல்ல கருத்தை வெறுமனே சொல்வதால் மட்டும் அது உயிர் பெறாது.
அந்தக் கருத்துக்காக நாம் வாழ்ந்து, தியாகம் செய்து, செயல்பட்டு, இறுதிவரை நிலைத்து நின்றால் மட்டுமே அது பிறருடைய இதயங்களில் உயிர் பெறும்.
30/08/2026
அல்ஹம்துலில்லாஹ்!
அரபுக் கல்லூரிகளை வலுவூட்டுவதற்காக Zam Zam Foundation முன்னெடுக்கும் DOT (Driving Organisational Transformation) திட்டத்தின் ஒரு கட்டமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல அரபுக் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்து, மிகப்பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபடும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.
எமது மாணவர்களின் தகுதியை உயர்த்துவதையும் எமது கல்வி நிறுவனங்களை மேலும் வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு, தனிமனித மாற்றம் மற்றும் நிறுவன மாற்றத்தை நோக்கிய பயணத்தை இணைந்து முன்னெடுக்க நாம் அனைவரும் உடன்பட்டோம்.
எமது கலந்துரையாடலின் சாராம்சம்:
> “தனிமனித மாற்றமே நிறுவன மாற்றத்தின் அடித்தளம்.”
எமது அரபுக் கல்லூரிகள் சமூகத்திற்கு அளித்துள்ள பங்களிப்பு மிக மகத்தானது; அவர்களின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் ஏற்கனவே சிறப்பாகப் பணியாற்றி வருகின்ற போதிலும், காலத்தின் தேவைக்கேற்ப அவர்களை மேலும் வலுப்படுத்தி, இன்னும் சிறப்பாகச் செயற்படுவதற்கான சூழலை உருவாக்குவது எமது பொறுப்பாகும்.
கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அவசியமானவை தான்; அதேவேளை, மனிதவள அபிவிருத்தியிலும் நாம் அதிக கவனமும் முதலீடும் செய்ய வேண்டும் என நம்புகிறோம்.
> “ஒரு கட்டிடத்தை எழுப்புவதற்கு முன், அதைச் சிறப்பாக வழிநடத்தக்கூடிய மனிதர்களை உருவாக்க வேண்டும்.”
> இல்லையெனில், எவ்வளவு அழகான கட்டிடங்களும் காலப்போக்கில் பயன்படுத்தப்படாமல் போகும் நிலை ஏற்படலாம்.
இன்ஷா அல்லாஹ், எமது இந்த வேலைத்திட்டம் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது:
கட்டம் 01 - Revisit the Purpose: கல்லூரிகளின் நோக்கங்களை மீளாய்வு செய்து, அவற்றைச் சமகாலத்திற்கு ஏற்றவாறு சீரமைப்பதோடு, ஒவ்வொரு கல்லூரிக்குமான 'Graduate Profile'களைத் தயாரித்தல்.
கட்டம் 02 - Redesign: கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகளை மீள்வடிவமைப்பு செய்தல் மற்றும் அதற்கான பயிற்சிகளை வழங்குதல்.
கட்டம் 03 - Reprocess:கல்லூரிகளின் நிர்வாகம் மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்தி, அவற்றை டிஜிட்டல் மயமாக்குதல்.
கட்டம் 04 - Reconnect: கல்லூரிகளைச் சமூகத்தோடும் ஏனைய நிறுவனங்களோடும் இணைத்துச் செயற்படுவதற்கான மூலோபாயத் திட்டங்களை வகுத்தல்.
அதேவேளை, ஒவ்வொரு கல்லூரியின் தனித்துவமான அடையாளத்தையும் பாடத்திட்டத்தையும் பாதுகாத்துக் கொண்டே இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படும்.
நிறுவனங்களின் உரிமையும் (Ownership) தலைமைத்துவமும் (Leadership) அவர்களிடமே இருக்கும் வகையில், Zam Zam Foundation-ன் வழிகாட்டலோடு, இந்த நிறுவனங்களை மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும் (Benchmark) உருவாக்குவதே எமது நோக்கம்.
> சிறந்த நிறுவனம் ➔ சிறந்த கற்றல் ➔ திறமையான பட்டதாரிகள் ➔ சமூகத்திற்கான வலுவான சேவை
என்ற உயரிய எண்ணக்கருவுடன் எமது மாற்றத்திற்கான பயணம் தொடங்கியுள்ளது.
இந்த முக்கியமான பயணம் வெற்றியடைய எங்களையும் இந்த நிறுவனங்களையும் உங்கள் துஆக்களில் நினைவில் வையுங்கள்.
அல்லாஹ் எமது முயற்சிகளை ஏற்றுக்கொண்டு, நேர்வழி காட்டி, எமது மாணவர்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகத்திற்குப் பயனளிக்கும் நிலையான முன்மாதிரியாக இதனை ஆக்கியருள்வானாக.
ஜஸாகுமுல்லாஹு கைரன்!
24/08/2026
வகுப்பறையிலிருந்து சமூகத்திற்கு: ஓர் ஆசிரியரின் மகிழ்ச்சியான பயணம்
அல்ஹம்துலில்லாஹ்! 2026 ஆகஸ்ட் 20, வியாழக்கிழமை, கண்டி ஃபுர்கானிய்யா அரபிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் பலர், 1990களின் இறுதியிலும் 2000களின் ஆரம்பத்திலும் எனது மாணவர்களாக இருந்தவர்கள் என்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளித்தது.
1982ஆம் ஆண்டு, எனது அன்புத் தந்தை ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் என்னை அகுரணை ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியில் மாணவராகச் சேர்த்தார்கள். பின்னர், 1996ஆம் ஆண்டு, எனது மதிப்பிற்குரிய ஷெய்க் உமர்தீன் ஹஸ்ரத் அவர்களின் தலைமையின் கீழ் ஃபுர்கானிய்யா அரபிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
மாணவனாகக் கற்றுக்கொள்ளவும் ஆசிரியராகச் சேவை செய்யவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர், அன்றைய மாணவர்கள் இன்று பொறுப்பான நிலைகளில் இருந்து, பரந்த பார்வையுடன் சமூகப் பணிகளில் ஈடுபடுவதைக் காண்பது, ஓர் ஆசிரியராக எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்தச் சந்திப்பு உடுநுவரை, இனாயா கார்டனில் உள்ள அல்ஹாஜ் ரவூஃப் அறிவு மையத்தில் நடைபெற்றது.(இங்குள்ள நவீன வசதிகள் கொண்ட விரிவுரை மண்டபங்களை கட்டணம் செலுத்தி ஏனைய அரபுக் கல்லூரிகளும் பயன்படுத்த முடியும்)
அவர்களின் 2030 தொலைநோக்குப் பார்வை, குறிப்பாக நிறுவனத்தின் நிலைத்ததன்மை மற்றும் சுயாதீன வளர்ச்சியை நோக்கிய சிந்தனை என்னை மிகவும் கவர்ந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் அவர்களாளே வாங்கப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில், பழமரங்கள் மற்றும் விவசாயம், மீன் வளர்ப்பு, மாடுகள் மற்றும் பால் உற்பத்தி, சுற்றுலா விடுதி மற்றும் நீண்டகால வருமானத் திட்டங்கள் போன்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாஷா அல்லாஹ்! இது ஒரு முக்கியமான செய்தியை மற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கும் பழைய மாணவர் சங்கங்களுக்கும் வழங்குகிறது.
இன்று, ஒவ்வொரு நிறுவனமும் தனது நிலைத்தன்மை குறித்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. வாழ்நாள் முழுவதும் நன்கொடைகள் மற்றும் பிறரின் உதவிகளை மட்டுமே சார்ந்து இயங்குவது ஒரு நீண்டகாலத் தீர்வாக இருக்க முடியாது.
பழைய மாணவர் சங்கங்கள் முதலில் தங்களுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களின் எதிர்காலப் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதி செய்ய வேண்டும். முதலில் தமது கால்களில் தாமே நிற்கும் வலிமையை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் மற்றவர்களுக்கு உதவும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தன்நிறைவு என்பது பிறரின் உதவியை நிராகரிப்பது அல்ல. மாறாக, உதவி கிடைக்காவிட்டாலும் தனது பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய வலிமையை உருவாக்குவதாகும்.
வகுப்பறையில் விதைக்கப்பட்ட ஒரு விதை, பல ஆண்டுகளுக்குப் பின்னர் சமூகத்தில் பலன் தருவதைப் பார்ப்பதே ஓர் ஆசிரியரின் உண்மையான மகிழ்ச்சி.
கண்டி ஃபுர்கானிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் துஆக்களும். அவர்களின் இந்தத் தொலைநோக்குப் பார்வை, மற்ற கல்வி நிறுவனங்களுக்கும் பழைய மாணவர் சங்கங்களுக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையட்டும்.
அல்லாஹ் அவர்களின் ஒற்றுமையையும் முயற்சிகளையும் ஏற்று, இந்தப் பயணத்தை எதிர்காலத் தலைமுறைகளுக்கு நிலையான நன்மையாக ஆக்குவானாக.
Category
Contact the public figure
Website
Address
Colombo
Alerts
Be the first to know and let us send you an email when Yoosuf Mufthi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.