Alai TV

Alai TV

Share

The official page for AlaiTV - Reporting News & Current Affairs from Sri Lanka to the World in Tamil.

09/06/2026

🔵 கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

✍️ பாறுக் ஷிஹான்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO/WHATSAPP) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார். அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார். அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள். ஆண் 18 மற்றும் 14 வயதுடைய பெண் இருக்கின்றனர். இதன் போது அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு 50 வயது சந்தேக நபரான கள்ளக்காதலனை சந்தித்துள்ளார். இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.

குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் குறித்த மூவரும் உறங்கியதுடன் அவ்வேளை தாயுடன் கள்ளக்காதலன் உடலுறவில் நள்ளிரவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் இருந்த 14 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன் கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026 அன்று கைது செய்துள்ளனர்.

பின்னர் தொடர் விசாரணையின் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா(44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

07/06/2026

நீரில் மூழ்கி இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர்.

நுரைசோலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலுவ மோயா அருகே நீரில் மூழ்கிய இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண்
உயிரிழந்துள்ளனர். 25 வயது மற்றும் இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடையவர்கள்.

சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நுரைசோலை பொலிசாரினால் நடத்தப்பட்டு வருகின்றன.

Photos from Alai TV's post 07/06/2026

ශ්‍රී ලංකා වරලත් මාධ්‍ය වෘත්තිකයින්ගේ ආයතනය පිහිටුවීමේ පනත් කෙටුම්පත නිල වශයෙන් ගැසට් කෙරේ

ශ්‍රී ලංකාවේ මාධ්‍ය වෘත්තිකයන් සඳහා උසස් වෘත්තීය ප්‍රමිතීන් හඳුන්වාදීම, ප්‍රවර්ධනය කිරීම සහ ඒවා අඛණ්ඩව පවත්වාගෙන යාමේ අරමුණින් "ශ්‍රී ලංකා වරලත් මාධ්‍ය වෘත්තිකයින්ගේ ආයතනය" පිහිටුවීම සඳහා වන නව පනත් කෙටුම්පත රජයේ නිල ගැසට් පත්‍රය මඟින් ප්‍රකාශයට පත් කර ඇත.

ගරු සෞඛ්‍ය හා ජනමාධ්‍ය අමාත්‍යවරයාගේ සෘජු නියමය පරිදි, 2026 ජූනි මස 05 දිනැතිව මෙම සුවිශේෂී ගැසට් නිවේදනය නිකුත් කර තිබේ.

මෙමඟින් මෙරට මාධ්‍ය ක්ෂේත්‍රයේ ගුණාත්මකභාවය ඉහළ නැංවීම, මාධ්‍යවේදීන්ගේ වෘත්තීය අයිතිවාසිකම් මෙන් ම වගකීම් නීත්‍යානුකූල රාමුවක් තුළ විධිමත් කිරීම සහ ඊට ආනුශාංගික කාරණා සම්බන්ධයෙන් අවශ්‍ය නෛතික විධිවිධාන සැලැස්වීම අපේක්ෂා කෙරේ.

ශ්‍රී ලාංකේය මාධ්‍ය කලාවේ නව පරිච්ඡේදයක් සනිටුහන් කරමින් ක්‍රියාවට නැංවෙන මෙම වරලත් ආයතනය පිහිටුවීමේ පනත් කෙටුම්පත, ඉදිරියේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කිරීමට නියමිත ය.

இலங்கை சான்றளிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிப்பு

இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கான உயர்தர தொழில்முறைத் தரங்களை அறிமுகப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் அதனைத் தொடர்ந்து பேணுதல் ஆகிய நோக்கங்களுடன், "இலங்கை சான்றளிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நிறுவனம்" (Chartered Institute of Sri Lanka Media Professionals) ஒன்றை நிறுவுவதற்கான புதிய சட்டமூலம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கௌரவ சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் நேரடி உத்தரவின் பேரில், 2026 ஜூன் 05 ஆம் திகதியிடப்பட்டு இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் ஊடகத்துறையின் தரத்தை உயர்த்துதல், ஊடகவியலாளர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சட்ட வரம்பிற்குள் முறைப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான விடயங்களுக்குத் தேவையான சட்ட விதிகளுக்கு வழிவகை செய்தல் என்பன எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஊடகத்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சான்றளிக்கப்பட்ட நிறுவனத்தை நிறுவுவதற்கான சட்டமூலம், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Bill to Establish Chartered Institute of Sri Lanka Media Professionals Officially Gazetted

The new bill to establish the "Chartered Institute of Sri Lanka Media Professionals" has been officially published in the Government Gazette, with the primary objective of introducing, promoting, and maintaining high professional standards for media professionals in Sri Lanka.

Pursuant to the direct directive of the Hon. Minister of Health and Mass Media, this special gazette notification was issued on June 05, 2026.

This initiative aims to elevate the quality of the country's media sector, formalize the professional rights and responsibilities of journalists within a legal framework, and provide the necessary legal provisions for related matters.

Marking a new chapter in Sri Lankan journalism, this bill to establish the Chartered Institute is scheduled to be presented to Parliament in the near future.

#වරලත්මාධ්‍යවෘත්තිකයින්ගේආයතනය #ශ්‍රීලංකාමාධ්‍ය #ජනමාධ්‍යඅමාත්‍යාංශය #ලංකාපුවත් #මාධ්‍යවේදීන් #ගැසට්නිවේදනය #ශ්‍රීලංකාපාර්ලිමේන්තුව #මාධ්‍යනිදහස #ශ්‍රීලංකා

07/06/2026
06/06/2026

போலி நில ஆவண மோசடி - மூவர் கைது

போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மூவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலி ஆவணங்கள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், சுமார் 600 போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் ரூ.15 இலட்சம் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்த 54, 55 மற்றும் 59 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

05/06/2026

மட்டக்களப்பில் போலி தங்க நகைகளால் வங்கி மோசடி - ஒருவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து தங்க ஆபரணங்கள் என வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை நேற்று (4) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே 9 மாதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் போலி தங்க ஆபரணங்களை பெண் ஒருவர் அடகு வைத்து பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த தங்க ஆபரணம் போலியானது என சோதனையில் வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்க ஆபரணங்களை அடகு வைத்த வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கைதுசெய்து விசாரணையில் போலி தங்க ஆபரணங்களை அவரது கணவர் வடிவமைத்து வருவதாக தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் வந்ததுடன் வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது இந்த நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகி வந்த போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்து வருபவரை பொலிஸார் தேடி வந்துள்ளனர்

இந்நிலையில் தலைமறைவாக இருந்த குறித்த நபர் சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து நேற்று மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க தலைமையில் விக்னேஷ் உட்பட்ட குழுவினர் நேற்று குறித்த மதுபானம் கடையை முற்றுகையிட்டு கைதுசெய்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(கனகராஜா சரவணன்)

05/06/2026

நான் பிறப்பதற்கு முன் அமைச்சராக இருந்தவர் ஹிஸ்புல்லாஹ் - இரா.சாணக்கியன் எம்.பி

Photos from Alai TV's post 05/06/2026

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று( 05) DCC தலைவர் கந்தசாமி பிரபு பா.உ.தலைமையில் பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெறுகிறது.

கல்வி சுகாதாரம் போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடப்படுகின்றன.

காரசாரமான விவாதங்களுடன் இக்கூட்டம் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது

-எம் .எச் .எம் .அன்வர்-
05.06.2026

04/06/2026

காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.ஜே.ஏ. மர்சூக் (SLEAS) நியமனம்.

காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஏ.ஜே.ஏ. மர்சூக் (SLEAS) இன்று (03.06.2026) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக மட்/மம/ மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றிய இவர், பின்னர் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும், தமிழ்ப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கல்வித்துறையில் நீண்டகால அனுபவமும் திறமையான நிர்வாகச் சேவையும் கொண்ட ஏ.ஜே.ஏ. மர்சூக் SLEAS, தற்போது காத்தான்குடி கல்விக் கோட்டத்தின் கோட்டக் கல்விப் பணிப்பாளராக தனது புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.

03/06/2026

காத்தான்குடி வாவி படகு சேவையில் பாதுகாப்பு கேள்விக்குறி: சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் தலையிட வேண்டும் - அனுபவமற்ற நபர்களால் படகுகள் இயக்கப்படுவதாக நகர சபை உறுப்பினர் முஜீப் குற்றச்சாட்டு!

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo