Vearhal Skill Development Centre

Vearhal Skill Development Centre

Share

Welcome to the வேர்கள் திறன் மேம்பாட்டு மையம் official page.

இடமறந்த இளைய தலைமுறையின் உள்ளுணர்வுகளை விழித்தெழுப்ப,
மண்ணோடு இணைந்த கனவுகளை மேடையாக மாற்ற,
பாடசாலை மாணவர்களின் மறைந்துள்ள திறன்களை கண்டறிந்து
அவை மலரும் வகையில் வழிகாட்டும் திறன் வளர்ச்சி மையம் இதுவே!

Photos from Vearhal Skill Development Centre's post 28/12/2025

வேர்கள் பட்டறை - 04

“உள்ளத்தில் இருந்து பிறக்காத எந்தச் சொல்லும், அடுத்தவர் உள்ளத்தைச் சென்றடைவதில்லை. ஒரு சிறந்த பேச்சாளன் என்பவன் மொழியை ஆள்பவன் அல்ல, தனது வார்த்தைகளால் மற்றவர்களின் உணர்வுகளை உயிர்ப்பிப்பவன்.”

வேர்கள் திறன் மேம்பாட்டு மையத்தினால் மாணவர்களிடையே பேச்சாற்றலை மேம்படுத்தும் பொருட்டு, மொனராகலை அல் - இர்ஷாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு “Mastering the art of expressive communication” எனும் தொனிப்பொருளில் Public Speaking தொடர்பான அறிமுகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற நிகழ்வானது சுமார் 90-ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றுமுடிந்தது.

#வேர்கள்

Photos from Vearhal Skill Development Centre's post 22/09/2025

வேர்கள் பட்டறை - 03

“மென்மையான வார்த்தைகள் கடினமான உள்ளங்களையும் சென்றடையும் வலிமை பெற்றவை. ஆனால், கடினமான வார்த்தைகள் ஒருபோதும் மென்மையான உள்ளங்களை சென்றடையாது.”

வேர்கள் திறன் மேம்பாட்டு மையத்தினால் மாணவர்களிடையே பேச்சாற்றலை மேம்படுத்தும் பொருட்டு காத்தான்குடி பிஸ்மி இடைநிலைப் பாடசாலை மாணவர்களுக்கு “Mastering the art of expressive communication” எனும் தொனிப்பொருளில் Public Speaking தொடர்பான அறிமுகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற நிகழ்வானது சுமார் 100 ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

📍Bismi Institute

#வேர்கள்

Photos from Vearhal Skill Development Centre's post 05/07/2025

வேர்கள் பட்டறை - 02

“எதிர்காலம் ஒரு கனவல்ல - அது நனவாக வேண்டுமென்றால்,
இன்று ஒரு தெளிவான இலக்கு தேவை.”

வேர்கள் திறன் மேம்பாட்டு மையத்தினால் மாணவர்களிடையே ஆளுமைப்பண்பாட்டை விருத்தி செய்யும் பொருட்டு கொழும்பு TB .ஜாயா சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு “Discover Your Future - Career Awareness & Goal Setting “ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நிகழ்வானது வகுப்பு வாரியாக தெரிவு செய்யப்பட்ட பல மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

📍T.B Jayah Zahira College Colombo

#வேர்கள் #மாணவர்_முன்னேற்றம் #இலக்குகள்

27/06/2025

இருள் மீதான ஒளியின் நிரம்பா நினைவாய்,
அநீதியின் மீதான வீரத்தின் அழியாத சின்னமாய்,
வாய்மையை எப்போதுமே ஆதரிக்கின்ற தியாகத்தின் பெருவிருட்சமாய்,முஹர்ரம்!

அனைவருக்கும் ஹிஜ்ரி 1447 இஸ்லாமியப் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வுறுகிறது வேர்கள் திறன் மேம்பாட்டு மையம்.

Photos from Vearhal Skill Development Centre's post 26/06/2025

வேர்கள் பட்டறை - 01

வேர்கள் திறன் மேம்பாட்டு மையத்தினால் மாணவர்களிடையே விவாதக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொழும்பு சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு “Mastering the art of Tamil debate: A practical guide to excellence” எனும் தலைப்பில் விவாதம் தொடர்பான அறிமுகத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்ற நிகழ்வு சுமார் 30 ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

“விவாதங்கள் எப்போதும் சத்தமாக இருக்கவேண்டுமென்பதில்லை, நீதி வழுவாமல் சரியாக இருந்தாலே போதுமானது”

30/05/2025

Introducing our Exco Team - 2025/2026

“வேர்கள் - மாணவர் திறன் மேம்பாட்டு மையம்”

Empowering Young Minds for a Brighter Future.

• Together, we grow
• ⁠Together, we lead

🔗https://vearhal.blogspot.com/2025/05/introducing-our-exco-team-20252026.html

#வேர்கள்

29/05/2025

மண்ணின் மணம் தழைத்துப் பரப்ப
மனதில் கனாக்கள் முளைத்துப் பெருக
மூட்டம் களைந்த முத்திரைபோல்
முடிவொன்றின் வழியே தொடங்குகிறது
மறுநடையும் மறுமலர்ச்சியும்!

இன்னலையும் எண்ணலையும் தாண்டி
இன்னோவக்கள் விரைந்தாட,
பிரதேச வாரியாக பாடசாலைகளில்
இனங்காணப்பட்ட ஆற்றல் மிகு மாணவர்களுக்காக,
அவர்களின் திறன்கள் திகழும் தளமாக
“வேர்கள்” மாணவர் திறன் மேம்பாட்டு மையம்
பயிற்சிப்பட்டறைகள் வழியே
புதிய விழிக்கனவுகள் மலரச் செய்யும் இலக்குடன்
ஸ்தாப்பிக்கப்படுகின்றது!

🔗https://vearhal.blogspot.com/2025/05/blog-post_30.html

#வேர்கள் #திறன்மேம்பாடு #மாணவர்_வளர்ச்சி #இளையோர்_இலக்குகள் #பாடசாலை_பயிற்சி #தமிழ்பண்பாடு

Want your organization to be the top-listed Non Profit Organization in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Address


Colombo