Im fm
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Im fm, Media/News Company, Colombo.
05/12/2017
அரசாங்க இயந்திரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து செயற்படுவதில் தவறில்லை
*தேர்தல் திகதியை தீர்மானிக்கும் போது அரசாங்க இயந்திரமும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து செயற்படுவதில் தவறில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் இன்ன திகதியில் இடம்பெறும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பதற்கு முன்னதாகவே கருத்து வெளியிடுகின்றனர்.
இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அரசாங்கம் என்ற வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் எந்த தவறும் இல்லை.
யாருக்கு வேண்டுமானாலும் நல்ல நாள் ஒன்றில் தேர்தல் நடத்த யோசனை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அம்பகமுவ பிரதேச சபை பிரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலும் அமைச்சர் இந்த ஊடக சந்திப்பில் கருந்து வெளியிட்டார்.
இந்த மனு எந்த வகையிலும் தேர்தலை தாமதப்படுத்தாது என்று அவர் கூறினார்.
மேலும் சிவனொளிப்பாதமலை வனப்பகுதி தொடர்பில் எதும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால், யாருக்கும் அநீதி ஏற்படாத வகையில் அந்த விடயம் தீர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
www.solaitv.lk
05/12/2017
பிரத்தியேக வகுப்புக்களுக்கு தடை...
*இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர மாணவர்களுக்கான செயலமர்வு, கருத்தரங்கு, மேலதிக வகுப்புக்கள் அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை , எந்தவொரு நபரோ அல்லது நிறுவனமோ இந்த உத்தரவை மீறினால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும்.
அதனுடன் தொடர்புடைய பரீட்சைகள் திணைக்களத்தின் தொலைப்பேசி இலக்கங்கள் கீழே...
1911, 0112784208, 0112784537,0113188350, 0113140314
காவற்துறை தலைமையகம் - 011242111, 119
05/12/2017
மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு....
*கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இதுவரை கிடைக்காத மாணவர்கள் மற்றும் அனுமதி பத்திரத்தில் ஏதாவது பிரச்சினைகள் இருப்பவர்கள் தாமதமின்றி அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு பிரச்சினைகள் இருப்பவர்கள் அது தொடர்பில் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபர்களுக்கும்இ தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சார்த்திகளின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் 4 இலட்சத்து 29ஆயிரத்து 493 பாடசாலை பரீட்சார்த்திகளும் 2 இலட்சத்து 59ஆயிரத்து 80 தனியார் பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பேர் தோற்றவுள்ளனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. www.solaitv.lk
04/12/2017
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியது ஏன்?
*இலங்கை கிரிக்கெட் வீரர்கள்
டெல்லியில் நடக்கும் இந்தியா- இலங்கை இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுவை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.
கடந்த பல வாரங்களாக காற்று மாசு பிரச்சனையில் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது.
பல இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடியபோதிலும், ஒரு கட்டத்தில் 10 இலங்கை வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.
பந்துவீச்சாளர்கள் லஹிரு கமேஜ் மற்றும் சங்குங்கா லக்மாலும் மதிய வேளையில் களத்தை விட்டு சென்றனர்.
டெல்லியில் நீங்கள் சுவாசித்தால், சராசரியாக 25 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சம
முதல் இன்னிங்ஸில் இந்திய ஏழு விக்கெட்டிற்கு 536 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணியின் கேப்டன் கோலி 243 ரன்கள் எடுத்தார்.
ஆறு இரட்டைச் சதங்கள் அடித்த முதல் சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார் கோலி.
04/12/2017
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தால் கடும் விளைவுகளை அமெரிக்கா சந்திக்கும்': ஜோர்டன் எச்சரிக்கை
*ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் பகிர்க
படத்தின் காப்புரிமைAFP
ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தால், "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என ஜோர்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அங்கீகரிப்பது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என, அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம், ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடி தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், அதிபர் டிரம்ப் இந்த முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அவ்வாறு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என டிரம்பின் மருமகனான ஜாரட் கூஷ்னர் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜோர்டனின் அமைச்சர் ஐமன் சஃபாடி, "ஜெருசலேத்தை, இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் குறித்து அமெரிக்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனிடம் பேசியுள்ளேன். இந்த முடிவு அரபு மற்றும் இஸ்லாம் நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்துவதோடு, எரிப்பொருள் பதட்டத்தை உருவாக்கி, அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளை பாதிக்கும் வகையில் அமையும்" எனக் கூறியுள்ளார்.
04/12/2017
இலங்கை வந்த பிரான்ஸ் கடற்படை கப்பல்
*பிரான்ஸின் கடற்படை கப்பலான 'ஒவெர்ஜென்' இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த கப்பலை இலங்கையின் கடற்படையினர் வரவேற்றனர்.
இதன்போது பிரான்ஸின் தூதுவர் உட்பட்ட அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தக்கப்பலில் பயணித்துள்ள 142 கடற்படை வீரர்கள்இ இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்
04/12/2017
தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் கருத்து
*2018ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முந்திய நாள் ஒன்றில் உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்
நாடு முழுவதிலும் 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஒரே தடவையில் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, வேட்பு மனு தாக்கல் செய்யும் காலப்பகுதியில், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூட்டங்களை மேற்கொள்பவர்கள், பேரணிகளை நடத்துபவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலின்போது முறைகேடுகள் இடம்பெறுமாக இருந்தால், அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
30/11/2017
'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை...
*அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
www.solaitv.lk
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Colombo