Solai TV

Solai TV

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Solai TV, Media/News Company, Colombo.

07/09/2018

*சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கை நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் உடன்படிக்கை - G.M.O.A

சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக உடன்படிக்கையானது நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு உடன்படிக்கையாக மாறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை மூலம் நாட்டிற்கு கிடைக்க பெற்றுள்ள நன்மை என்னவென கூற அதில் கைச்சாத்திட்டவர்களுக்கும் முடியாதுள்ளது.

இதன்மூலம் இதுவொரு சட்டவிரோத உடன்படிக்கை என நிரூபனமாகியுள்ளது.

இதனை எதிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கப்பூர் - இலங்கை சட்டவிரோத திருட்டு வர்த்தக உடன்படிக்கைக்கு ஏன் எதிர்ப்பு வெளியிட வேண்டும் என்ற தொனிப்பொருளில் ஜே.வி.பி இன்றைய தினம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று புறக்கோட்டை அரசமர சந்திக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
www.solaitv.lk

13/06/2018

பெருநாள் தொழுகை ' ஹதீஸ் '

19/05/2018

மூன்று அடிப்படைகள் இன்றி நோன்பு நிறைவேறாது.

18/05/2018

தராவீஹ் தொழுகை எத்தனை ரக்ஆதுக்கள் ?? சரியான விளக்கம்.

19/04/2018

ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு பிரித்தானியா உதவி

*ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படவிருப்பதாக, பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் அம்பர் ரட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய நிதி உதவி திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.

இலங்கையில் ஆட்கடத்தல்கள் மற்றும் சிறுவர் சுரண்டல்களை தடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானியா உதவியளிக்கவுள்ளது.

18/04/2018

சற்றுமுன்னர் வங்கியொன்றில் பாரிய கொள்ளை

*சற்றுமுன்னர் சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உந்துருளியில் வந்த இரண்டு பேர் இந்த கொள்ளையினை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வங்கியில் உள்ள பணத்தை கொள்ளையிட்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்கள் கொள்ளையிட்ட பணம் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர்களை தேடி சீதுவ காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
www.solaitv.lk

09/03/2018

கண்டி ஊடரங்கு சட்டம் நீக்கம் (காணொளி)

*கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் அமைதியை தொடர்ந்தும் பேணும் முகமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக காவற்துறையினர் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வீடுகள், வணக்கஸ்தலங்கள் ஆகியவற்றிட்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் தரவுகளை சேரிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பீ ஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.
www.solaitv.lk

08/03/2018

கண்டி மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் - பிரதான சந்தேகநபர் சிக்கினார்

*கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அமைதியை தொடர்ந்தும் பராமரித்துச்செல்லும் நோக்குடன் இவ்வாறு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை , கண்டி சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை , கண்டி மாவட்டத்தில் பதற்றத்தை தோற்றுவித்தவர்களுக்கு எதிராக இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையானது எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடத்தினை கற்றுக்கொடுத்திருக்கும் என நம்புவதாக இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நினைத்து பார்க்க முடியாத ஒரு சிறிய சம்பவம் ஒன்றினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே இந்த பிரச்சினைக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனினும் துரதிஸ்ட்ட வசமாக அந்த சிறிய சம்பவமானது பாரிய தூரத்திற்கு பயணித்துள்ளது இந்த வேளையில், இலங்கை கடற்படை, விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து, மக்களின் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கட்சி பேதமின்றி இனபேதமின்றி முஸ்லிம் ,சிங்கள, மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை பாதுகாப்பு தரப்பினரே உறுதிபடுத்த வேண்டும்.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாங்கள் கண்டியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பினை பலபடுத்தி நிலைமைய கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம்.

தற்போது உங்களுக்கு பார்க்க முடியும், ஏற்கனவே காணப்பட்ட நிலையிலிருந்து பாரிய மாறுபாடான அதாவது சுமூகமான நிலை காணப்படுகின்றது.

சில சில சம்பவங்கள் காணப்பட்டாலும், நாடு வீழ்ச்சியில் சென்றாலும் நாங்கள் இந்த கண்டியில் நிலைக்கொண்டுள்ளோம் ஏனெனில் மக்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்காகவே ஆகும்.

மேலும் நான் இராணுவத்தளபதியானாலும் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன்...

கண்டியில் மிகவும் நல்லெண்ணம் கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.

அவர்களிடத்தில் குரோதத்தை கட்டியெழுப்ப வெளிமாவட்டங்களிலிருந்து சிலர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தரப்பில் அல்லது பாதுகாப்பினரின் தரப்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வோம் என இராணுவத்தளபதி தெரிவித்தார்.
www.solaitv.lk

07/03/2018

கண்டியின் தற்போதைய நிலை - பாடசாலைகளுக்கு பூட்டு

*ஊரடங்கு சட்டம் நிறைவு

*கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு நேற்று இரவு 8.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும், தெல்தெனியா, திகன மற்றும் பல்லேக்கலை ஆகிய பிரதேசங்களில் காவற்துறை விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மேலதிகமாக, இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது அங்கு சாதாரண நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்றைய தினமும் மூடப்படுவதாக மாகாண முதலமைச்சர் சர்த் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டின் சில இடங்களில் நிலவுகின்ற அதிருப்திக்குரிய பாதுகாப்பு நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாம் பிரிவை செயற்படுத்தி, இந்த அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ், அவசர நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு, காவற்துறையினருக்கும், முப்படையினருக்கும் உரிய அதிகாரங்களை வழங்கும் வகையில் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

கடந்த நாட்களில் கண்டி, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களால் சொத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது முழு நாட்டு மக்களது இயல்பு வாழ்வை பாதித்துள்ளது.

இந்த சம்பங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள், அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் கடுமையாக எடுப்பதற்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கட்டுப்படுத்தவும், பிரதேசத்தின் அமைதியை நிலைநாட்டவும் காவற்துறையினர், காவற்துறை விசேட அதிரடிப்படையினர், பாதுகாப்பு படையினர், அரச அதிகாரிகள், பிரதேச அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவ மத குருமார்களும் அமைதியைப் பெணுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
www.solaitv.lk

06/03/2018

Shooting Order
*எந்தக் கலவரம் ஏற்பட்டாலும் யாரும் வெளியில் செல்ல வேண்டாம்.. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பொலீஸ் தலைமையகம் அதிரடி நடவடிக்கை...
Please Share...

06/03/2018

அரசாங்கத்தால் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியா அமுல்படுத்தப்பட்டுள்ளது.

*அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன? என்பதை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ. துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும்.

இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை!

*இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 நேரமும் கடமையில் இருக்க வேண்டும்.

*விடுமுறைகளை எடுக்க முடியாது!

*இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் காரணமின்றி கைது செய்யப்படலாம்.

*அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும்.

*இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல்.. அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம் செய்யும் அலகு, ஊசி என்பனவற்யைும்) வைத்திருத்தல் பாரிய குற்றமாறும்.

*அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைத்தல், நிதிசேகரித்தல் உட்பட பல விடயங்கள் இதற்குள் அடங்கும்.

*சாதாரண சிவில் கடமைகளுக்கு கூட பொலிஸாரின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

*அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர் ஒருவர் விசாரணைகள் எதுவும் இன்றி எவ்வளவு காலத்திற்கேனும் தடுத்துவைக்க முடியும்.

*கைதுக்கு முன்னோ கைதுக்கோ பின்னரோ விசாரணை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

*கைது செய்யப்படும் போது யாராவது தப்பியோட முயன்றால் சுட்டுப்பிடிப்பதற்கும் அதிகாரம் உள்ளது.

*அதேவேளை கைது செய்யப்படும் நபர் தேவையெற்படின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதற்கும் உரிமை உண்டு.

*விசாரணைக்காக புலனாய்வுப் பிரிவினரின் கைகளுக்கும் ஒப்படைப்பதற்கான சரத்துக்களும் உண்டு.

மேலும், அவசரகாலச்சட்டமானது, மக்களின் அல்லது வாகனங்களின் போக்குவரத்துக்களை தடை செய்யவும், பாதுகாப்புப் பிரதேசங்களை உருவாக்கி, அங்கு வெளியிலிருந்து செல்பவர்களைத் தடுக்கவும் அனுமதி அளிக்கின்றது.

*பாதுகாப்பு பிரிவினரின் கடமைக்குக் குந்தகம் விளைவிக்கும், குறிப்பிட்ட நபர்களை, குறிப்பிட்ட பகுதிக்கு வருவதற்கும், அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிப்பதற்கும், தடைசெய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது.

*மக்கள் வாழும் பகுதிகளில், உடனாடியான பாதுகாப்புப் பிரதேசத்தை உருவாக்கி, அவர்களைப் பாதுகாக்கவும் காவற்துறையினர்க்கு அதிகாரம் அளிக்கின்றது.

*யாரையும் அவர்களின் வீடுகளில் வைத்துக் கைது செய்வதற்கு அனுமதி வழங்க உள்துறை அமைச்சரிற்கு அதிகாரம் வழங்குகின்றது.

*நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பவர்கள் எனச் சந்தேகப்படும் யாரையும் கைது செய்து விசாரைண செய்ய முடியும்.

*விழா மண்டபங்களையோ அல்லது திரையங்குகளையோ அல்லது கூட்டம் நடக்கும் இடங்களையோ, உடனடியாக மூடுவற்கும் அங்குள்ளவர்களை வெளியேற்றுவதற்கும் அனுமதி அளிக்கின்றது.

*ஒரு கூட்டமோ, அல்லது சந்திப்புகளோ, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டால், அதனைத் தடை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

*தனியாரிடம் இருக்கும் ஆயுதங்களை, அனுமதி பெற்றிருந்தாலும் கூட, பறிமுதல் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
www.solaitv.lk

Want your business to be the top-listed Media Company in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Colombo