Dream Today

Dream Today

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Today, Business Center, Colombo, Western, Colombo.

Allah with us #islamicstatus அல்லாஹ்வுடன் ஒரு அதிகாலை 22/12/2022

அல்லாஹ்வுடன் ஓர் அதிகாலை

Allah with us #islamicstatus அல்லாஹ்வுடன் ஒரு அதிகாலை

03/07/2021

"அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்"

ஸ்டீபன் கவி எழுதிய அற்புதமான நூல்... அவசியம் படிக்க தவறாதீர்கள்.... புத்தகத்தில் கூறப்பட்ட 7 பழக்கங்கள் மொத்தத்தில் இவை தான்.....

(1) இதில் முதல் பழக்கமாக இவர் முன்வைப்பது, "முன்யோசனையுடன் செயலாற்றுதல்" என்பதை!
அதாவது நடக்கும் பிரச்சனைகளுக்கு யார் மீதும் பழி போடாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என யோசித்தல்......

(2) பழக்கம் இரண்டு எனக் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை!அதாவது இலக்கை வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், இலக்கை நோக்கி ஓடவும் செய்தல். இதில் "தனிமனித தலைமைத்துவம்" குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

(3) மூன்றாவது பழக்கமாக, "முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்" என்பது.
அதாவது முக்கியமான வேலைகளுக்கு மட்டும் முதலில் முக்கியத்துவம் கொடுத்தல். இதில் நிர்வாகம் குறித்த கருத்துகள் நிறைய உள்ளன.

(4) "எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி" என்ற சிந்தனை நான்காவது பழக்கமாகக் காட்டப்படுகிறது.
அதாவது அடுத்தவர் பற்றி பொறாமையை விட்டு விட்டு சொந்த வெற்றியை மாத்திரம் இலக்காக்கிக் கொள்ளல். இதில் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம் குறித்த கருத்துகள் உள்ளன.

(5) "முதலில் புரிந்துகொள்ளுதல், பின்னர் புரியவைத்தல்" என்ற பழக்கத்தை ஐந்தாவதாகக் காட்டுகிறார்.
அதாவது அடுத்தவர்களின் தேவைகளை புரிந்து செயற்படல் ஆகும்.
இதில் பிறர் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்த கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.

(6) ஆறாவது பழக்கம் எனக் காட்டுவது, "கூட்டு இயக்கம்" என்பதை! படைப்பாற்றலுடன்கூடிய கூட்டுச் செயல்பாடுகள் குறித்த கொள்கைகள் இதில் உள்ளன.
அதாவது அவ்வப்போது நமக்கு தேவையானோருடன் கை கோர்க்க வெட்கப்படாமல் அவர்களோடு கைகோர்த்துக்கொள்ளல் ஆகும்.

(7) ஏழாம் பழக்கமாக, "எப்போதும் நம்மை கூர்தீட்டிக்கொள்ளல்.
அதாவது அறிவையும் உடலையும் எப்போதும் கூர்மை படுத்திக்கொள்ளல் என எல்லாத் தளங்களிலும் சுயபுதுப்பித்தலை மேற்கொள்வது குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.
தன்னிலை முன்னேற்றம்தான். தான் மாறினால் மட்டுமே உலகம் மாறும் என்னும் கருத்து அதிகம் அறிவுறுத்தபட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டு ஒதுக்கிவிடகூடிய புத்தகமல்ல. ஆனால் தினம் தினம் படிக்க வேண்டிய புத்தகம். தினம் படித்து பழக்கபட வேண்டிய புத்தம். இந்த புத்தகத்திற்கு முன்னால் மாணவனாக இருக்கவேண்டும். அவைகளை பழகும் போது தன்னம்பிக்கை தானாக வளரும். நமக்கே ஒரு வித்தியாசம் வரும். இந்த புத்தகத்தை குறித்து புத்தக சுருக்கம் எழுதுவது சாதாரண வித்தியாசம் இல்லை. இந்த புத்தகம் குறித்து எழுத வார்த்தைகள் குறைவு. ஆனால் எண்ணங்கள் மிக அதிகம்.
ஆங்கில மூலநூலின் சாரம் கெடாமல் மொழிமாற்றம் செய்திருப்பது மிக மிக சிறப்பு.

30/06/2021

சாதிப்பதற்கு உங்களுக்கென்ன தடை இருந்துவிடப் போகின்றது?

29/06/2021

முயற்சிப்பது முடியுமான வரை அல்ல
மூச்சு உள்ள வரை

23/06/2021

*Who Will Cry When You Die?"*

ராபின் ஷர்மா எழுதிய புத்தகத்தில் உள்ள சில கருத்துக்கள்.

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்.

*“நீ பிறந்த போது, அழுதாய்...*
*உலகம் சிரித்தது..*.

*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங் களுக்காக அதிக நேரம் செலவழிக் காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலைகள் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப்பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும், நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகங்களை படியுங்கள். எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும் போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வும் இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை, உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தரக் கூடிய சிறந்த பரிசு, அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த பல சிந்தனைகளும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களை கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காகத்தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும், எளிமையான (humble) மனிதராயிருங்கள்.

*வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையான வர்களே!*

*"ஆணவம் ஆயுளைக் குறைக்கும்...*"

23/06/2021
21/06/2021

எது வெற்றி..?

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஒன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.

இப்படிச் சொல்லுகிறேன். நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஒன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! ஓர் உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள்.

அப்பா ஒரு குட்டிக் குரங்கு தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு காட்டாத்து வெள்ளம் திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது பயங்கர வெள்ளம் கீழே அது எப்படித் தப்பிக்கும், சொல்லு? என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு'' என்றார் மகளிடம்.
ஆங் இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?'' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்த சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல...

நமது வெற்றியே நமது குறிக்கோள்...

என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது?

அதனால்தான் பகை வளர்கிறது.
தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

Photos from Dream Today's post 19/06/2021

பணமில்லாததால் மருத்துவம் பார்க்க வழியின்றி கணவரை நோய்க்குப் பறிகொடுத்த நான்கு பிள்ளைகளின் ஏழைத்தாய், மனிதநேய மருத்துவமனை கட்டி மகனையும் டாக்டர் ஆக்கியுள்ளார்!

ஐம்பது ஆண்டுகளாக உழைத்து 'மனித நேய மருத்துவமனை' என்ற பெயரில் பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் பொது மக்கள் நலனுக்காக அழகிய மருத்துவமனை உருவாக்கி சாதனை படைத்திருப்பவர் சுபாஷிணி மிஸ்திரி.மேற்கு வங்கத்துக்காரர்.இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வங்காள மொழியில் திரைப்படம் ஒன்றும் உருவாகி வருகிறதாம்.எந்தச் சூழல் சுபாஷிணியை மருத்துவமனை கட்ட வைத்தது? அவரே சொல்கிறார் :

"14 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழைத்தந்தைக்கு மகளாகப் பிறந்தவள் நான்.என்னை சந்திரா என்ற அன்றாட வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை கூலித்தொழிலாளிக்குக் கட்டிக் கொடுத்தார்கள்.நான்கு குழந்தைகள் பிறந்தன.சிரம வாழ்க்கைதான்.அப்போது தான் அது நடந்தது. கணவர் கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். அந்தக்காலத்தில் கிராமப்புறங்களில் அவ்வளவாக மருத்துவ வசதிகள் கிடையாது . அக்கம்பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்குப் போய் வர சரியான போக்குவரத்து வசதிகளும் கிடையாது. இருந்தும் கணவரை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்றேன்.மருத்துவர்கள் போதிய பணமில்லாததால் சிகிச்சை தர மறுத்து விட்டனர். மருத்துவக் கட்டணங்கள், பரிசோதனைக்குக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் என்னாலும் ஏதும் செய்ய முடியவில்லை.எனது கணவர் சந்திராவை குடல் நோய்க்குப் பறிகொடுத்தேன்.

இருபத்து மூன்று வயதிலேயே இதனால் விதவையானேன். அந்தச் சம்பவம் என்னை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்று தீர்மானித்தேன். அதற்கு ஒரே வழி கிராமத்தில் வசதியுள்ள மருத்துவ மனையை நிறுவுவதுதான் என்று எனக்குப் பட்டது

ஏழை எளிய வசதியில்லாத மக்கள் மருத்துவமனையைப் பயன்படுத்தும் விதத்தில் மிகக் குறைந்த கட்டணம் அமைய வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கிச் செயல்பட ஆரம்பித்தேன். ஆனால்எனக்குப் படிப்பில்லை. என்னை நம்பி நான்கு வாரிசுகள். அவர்களுக்கு ஒரு வாய் சோறு கொடுக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் எனது லட்சியம் நிறைவேறுமா என்று என்னையே நான் கேட்டுக் கொண்டேன்.

வருமானத்திற்காக எந்த வேலையையும் செய்யத் தயாரானேன். மூத்த இரண்டு குழந்தைகளை அநாதை விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தேன். சாலை ஓரத்தில் காய்கறி விற்க ஆரம்பித்தேன்.மூத்த மகன் காய்கறிகள் கடையில் எனக்கு உதவியாக இருந்தான்.அவனை கடையில் வைத்து விட்டு செங்கல் சுமப்பது போன்ற கூலி வேலைகளுக்கு நான் சென்றேன். இளைய மகன் அஜயை டாக்டருக்கு அவன் விரும்பியபடி படிக்க வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்து சுமார் முப்பத்து மூன்று சென்ட் மனை ஒன்றை முதன் முதலாக வாங்கினேன்.

1993 - இல் அங்கே சின்ன தற்காலிகக் கீற்றுக் கொட்டகை அமைத்து மருத்துவமனை ஒன்றை முதன் முதலில் தொடங்கினேன். கிராமத்தைச் சேர்ந்தவர்களும் பணம் தந்து உதவினார்கள். கொல்கத்தா நகருக்கு அருகில் இருக்கும் எனது கிராமமான ஹன்ஸ்புக்காரில் ஒரு மருத்துவமனை அமைந்ததே பெரிய சாதனைதான்.

1996 - இல் மருத்துவமனைக்கான கட்டடம் உருவானது. அதற்கு 'மனிதநேய மருத்துவமனை' என்று பெயரிட்டேன். எனது கடைசி மகன் அஜய் நன்றாகப் படித்து டாக்டரானான். அவனது சேவையும் இப்போது எனது மருத்துவ மனைக்குக் கிடைத்து வருகிறது.

இப்போது பன்னிரண்டு டாக்டர்கள் மருத்துவமனையில் பணி புரிகிறார்கள். இங்கு பதிவுக் கட்டணம் வெறும் பத்து ரூபாய் மட்டுமே . முழுவதும் இலவசச் சிகிச்சை. சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் கட்டணம் அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய்.
இதேபோன்று சுந்தர்பன் பகுதியிலும் ஒரு மருத்துவமனையை இப்போதுத் தொடங்கியிருக்கிறேன்"

சுபாஷிணிக்கு இப்போது எழுபத்திரண்டு வயதாகிறது . இவரது சமூக சேவையைப் பாராட்டி 2018-ஆம் ஆண்டு 'பத்மஸ்ரீ விருது' குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
ஆனாலும், எப்போதும் போல ஒரு சாதாரண மனுஷியாக மருத்துவமனை வந்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளி
களுக்கு ஆறுதல், தேறுதல் சொல்லி,
குறைகள் ஏதும் உள்ளதா என்றும் கேட்டு
நிவர்த்தி செய்து வருவதே தமக்கு நிம்மதி தருவதாகச் சொல்கிறார் பழசை மறவாத இந்த ஏழைத்தாய்!

18/06/2021

எப்போதும் உனக்காக ஓடிக்கொண்டிரு
ஒரு நாள் உலகம் உனக்காக காத்திருக்கும்

18/06/2021

சொல்லிச் செல்லாதே...
செய்து முடி

Want your business to be the top-listed Business in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo, Western
Colombo
01