Eastern News7
தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது https://www.threads.net/@easternnews7
ஈஸ்டர்ன் நியூஸ்7 தமிழ் இணையதளம் தமிழின் முன்னணி இணையதளம்
2019ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7,
தமிழ்,இணையதளம்.செய்திகளை
முந்தித் தருவதோடு பாரபட்சமின்றி
அரசியல் உள்ளிட்ட பல தரப்பட்ட செய்திகள் அரசியல் கலாசாரம் விளையாட்டு சினிமா செய்திகள்,சிறப்பு நிகழ்வுகள் வழங்கி வருகிறது.ஈஸ்டர்ன் நியூஸ்7 இணையதளம் தமிழ் பிரிவான
இந்த இணையத்தளம் உள்ளது.
செய்திகளில் துல்லியம் நடுநிலைமையுடன் செய்த
03/06/2026
ஆரையம்பதி பாலமுனையில் மரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.!!
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பாலமுனைப் பகுதியில் மரத்திலிருந்து கீழே விழுந்து 34 வயதுடைய பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(02) மாலை பாலமுனைப் பகுதியில் காணி ஒன்றினுள் மரத்தின் மேல் ஏறி மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரத்தில் இருந்து விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரேயே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
இவ் விபத்து மற்றும் மரணம் குறித்து காத்தான்குடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது வாழ்வாதாரத் தேவைக்காக மரம் ஒன்றில் ஏறியிருந்த போதே எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் பாலமுனை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
03/06/2026
அங்குருவடோட்டாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் காணாமல் போனதாகவும், 55 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் - காவல்துறை ஊடகம்
03/06/2026
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தந்தங்களுடன் புதைக்கப்பட்ட யானையின் தலை தோண்டியெடுப்பு.!!
2024 டிசம்பரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்த 'தீக தந்து 1' யானையின் தந்தங்களுடன் கூடிய தலைப்பகுதி கல்கிரியாகம வனவிலங்கு பிரிவின் பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று(03) தோண்டியெடுக்கப்பட்டது.
கல்கிரியாகம, ஆடியாகல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி'தீக தந்து 1' யானை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண பரிசோதனையின் பின்னர் யானையின் தலைப்பகுதி உடலிலிருந்து வேறாக்கப்பட்டு, கல்கிரியாகம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருந்ததுடன் இன்று தோண்டியெடுக்கப்பட்டது.
தந்தையை இழந்த குடும்பம் ஒன்றிற்கு உதவி தேவை
WhatsApp
±94765675518
03/06/2026
14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் அம்பாறை மாவட்டத்தில் சம்பவம்.!!
பாறுக் ஷிஹான்
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்த கம பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது விகாரையில் தங்கி இருந்த 5 இளம் பிக்குகில் 3 இளம் பிக்குகள் அண்மையில் தப்பி சென்ற சம்பவம் தொடர்பில் அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை குறித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும் 2 இளம் பிக்குகள் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்து சென்ற நிலையில் குறித்த சந்தேக நபரான 41 வயது பௌத்த தேரர் தீகவாவி பிரதேசத்திற்கு தப்பி சென்றிருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
பின்னர் மற்றுமொரு பௌத்த பிக்கு சகிதம் 41 வயதுடைய பௌத்த தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இரு இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய இளம் பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டதுடன் மருத்துவ பரிசோதனைக்காக அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டு சந்தேகத்தில் கைதான 41 வயது சந்தேக நபரான பௌத்த தேரரை இன்று(3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்.!!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 192 ஆவது வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை (3) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக இன்றையதினம் தமிழ், சிங்கள மொழிகளில் காலை 6 மணிக்கு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
கொடியேற்றத்தை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தினந்தோறும் நவநாள் வழிபாடுகள் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகின்றன.
இதையடுத்து எதிர்வரும் 12 ஆம் திகதி இரவு 7 மணிக்கு கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நற்கருணை ஆராதனை இடம்பெறவுள்ளது.
திருவிழா தினமான 13 ஆம் திகதியன்று அதிகாலை 4 மணிக்கு தமிழ் மொழியிலும் 5 மணிக்கு சிங்கள மொழியிலும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.
திருவிழா பாடல் திருப்பலிகள் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் தமிழ் மொழியிலும் காலை 10 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வெல் சில்வா ஆண்டகையின் தலைமையில் சிங்கள மொழியிலும் நண்பகல் 12 மணிக்கு கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் ஜே.டி.அன்தனி ஆண்டகையின் தலைமையில் ஆங்கில மொழியிலும் ஒப்புக்கொடுக்கப்படும்.
புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் அன்றையதினம் 13 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8 மணியளவில் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்து நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் புனித அந்தோனியாரின் திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் நிறைவுபெறும்.
இன்று அதிகாலை ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான #குவைட் விமான நிலையத்தின் T1 Terminal கேட் பகுதியே இதுவாகும்.
03/06/2026
குவைட் விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆசிய நாட்டை சேர்ந்த 54 வயது மன்சூர்அஹமட் என்பவரும் உயிரிழந்து சுமார் 17 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான இதே கேற் (T1 Terminal) புனரமைக்கப்பட்டு நேற்று (02) திறந்து வைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஈரானிய தாக்குதலுக்கு இலக்காகி மறுபடியும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பலவற்றுக்கான ஆயத்தமும் குவைட்டிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் இங்கே நினைவூட்ட தகுந்தது.
03/06/2026
🚨
ஈரானிய தாக்குதல் குவைட்டில் பலர் உயிரிழப்பு,மற்றும் பலத்த சேதம், விமான போக்குவரத்து நிறுத்தம்!
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் "கணிசமான பொருள் சேதம்" ஏற்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.
03/06/2026
🚨
ஈஸ்ட்டர் தின தாக்குதல்
கோட்டாபயவிற்கு வெளிநாடு செல்ல தடை.!!
ஈஸ்டர் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Colombo