NTV-channel
யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எமக்கு இல்லை.
பொறுப்பும் துறப்பும்
--------------------------------
இது தேசத்தின் அபிவிருத்திக்காகவும்
சமூக மறுமலர்ச்சிக்காகவும்
இன ஒற்றுமையை வளர்த்து இனங்களுக்கிடையில் குரோத உணர்வுகளையும் அழுக்குகளையும் அழிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட ஓர் ஊடகமாகும்.
மேலும் அநாதரவற்ற ஏழை மக்களுக்கும் மாணவ செல்வங்களுக்கும் உதவிக்கரமாகவும்
திறமை மிக்கவர்களுக்கான ஒரு சிறந்த ஏணியாகவும் திகழும்.
இலைமறை காய்களான பல சாதனையாளர்களை அ
13/12/2025
Visit TikTok to discover videos! Watch, follow, and discover more trending content.
13/12/2025
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று சனிக்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டமானது காலை 11 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தை பிரதேச செயலாளர் இன்னும் தமக்கு வழங்காதுள்ளார்.அத்தோடு இன்னும் சில காரணங்களை முன்வைத்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் குறித்த இடத்திற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W.G.m.ஹேமந்தகுமார வருகைதந்து பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டதன் பின்னர் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்களை தூங்குகின்றனர்.உங்களுக்காகவே சேவையாற்றுகின்றனர் .வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் சகல பிரதேச செயலகங்களுக்கும் இப்போதுதான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து தருவார்கள்.அரச அதிகாரிகள் யாராக இருந்தாலும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதுவரையில் அமைதியாக இருங்கள் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்த முற்பட்டார் .
இதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேற முற்பட்டபோது வெருகல் பிரதேச செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பொதுமக்கள் மறித்து பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யாது இவ்விடத்திலிருந்து வெளியேற முடியாது என தடுத்தனர் .
இதன் பின்னர் இது விடயத்தில் ஆராய்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதேவேளை வெள்ளம் ஏற்பட்ட நாள் தொட்டு இன்று வரை வெருகல் பிரதேச செயலாளர் மற்றும் அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் வீடு செல்லாது மக்களுக்கு பணி செய்து வருவதாகவும் இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை கவலை அழிப்பதாகவும் திங்கட்கிழமை வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது
05/12/2025
#வெளியேறுகை எச்சரிக்கை
கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, குருநாகல் மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் மட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
ஆபத்தை தவிர்க்க பாதூகாப்பான பகுதிகளுக்கு வெளியேறவும்.
04/12/2025
🇱🇰 உலக நாடுகளின் ஆதரவுடன் மீண்டு எழும் இலங்கை! 💪
அதிதீவிர டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் முன்வந்துள்ளது! நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியான மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த இந்தச் சூழ்நிலையில், பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களிடம் தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோடு, தொடர்ச்சியான ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
🤝 உதவிக் கரம் நீட்டிய நாடுகளின் பட்டியல்:
🤝 சூறாவளி அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கான அவசர உதவிகள் மற்றும் புனரமைப்பு முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகள்:
🇮🇳 இந்தியா:
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனுதாபம் தெரிவித்ததுடன், 'சாகர் பந்து' செயல்பாட்டின் கீழ் நிவாரணப் பொருட்களை INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி கப்பல்கள் மூலம் வழங்கியுள்ளது. தொடர்ந்தும் ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.
🇵🇰 பாகிஸ்தான்:
PNS SAIF கப்பல் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குகிறது.
🇺🇸 அமெரிக்கா:
ஆற்றங்கரையை வலுப்படுத்த 20,000 பொலிசெக் உரைகள், ஜெனரேட்டர்கள், அடுப்புகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்களை உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஊடாக வழங்கவுள்ளது.
🇦🇺 அவுஸ்திரேலியா:
துரித மீட்பு மற்றும் மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் நிதி உதவி.
🇲🇻 மாலைதீவு:
பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவ 50,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக 25,000 டின் மீன்கள் நன்கொடை.
🇨🇳 சீனா:
சீன செஞ்சிலுவை சங்கம் அவசரகால நிதியாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழங்கியுள்ளது. சீன வர்த்தக சபை 10 மில்லியன் இலங்கை ரூபா திரட்டியுள்ளது.
🇬🇧 பிரித்தானியா:
நிவாரணங்களுக்காக 8 இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலரினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
🇳🇵 நேபாளம்:
உடனடி மீட்பு நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் டொலர் நிதி உதவி.
🌍 பிற நாடுகள்:
துருக்கி, கியூபா, பங்களாதேஷ், ஐரோப்பிய ஒன்றியம், பலஸ்தீனம், மற்றும் நிகராகுவா ஆகிய நாடுகளும் ஆதரவு வழங்க உறுதியளித்துள்ளன.
🌐 ஐக்கிய நாடுகள் சபை (UN): மீட்பு, அவசர உதவி வழங்கல் மற்றும் துரித மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைப்புடன் உதவி வழங்கி வருகிறது.
இந்த இராஜதந்திர கூட்டாண்மை மற்றும் வலய ஒத்துழைப்பு இலங்கையின் மீளமைப்பு முயற்சிகளை விரைவுபடுத்தி, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள், வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது!
#சர்வதேசஉதவி #மீள்கட்டுமானம் #இலங்கை
03/01/2024
*பொது மக்களின் கவனத்திற்கு*
****************************************
*சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் பாயும் கதவுகள் இன்று 2024.01.02 காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*.
*(தற்போதைய உயரம் 103.9 அடி)*
*தாழ் நில மற்றும் கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன்*
*அதிலும் குறிப்பாக திருக்கோவில், அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை. போன்ற பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மிக அவதானத்துடன் இருப்பது சிறந்தது*.
*M.A.C.M. Riyas*.
*Deputy Director*.
*DMC, Ampara*
30/12/2023
Abu Ubaida mawjooth presents-isaidhendral Mucical program on slbc-Ananda Samarakon Auditoriam This stream is created with
28/12/2023
விஜயகாந்த் காலமானார்
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (28) காலமானார் என்று மருத்துவமனை சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் தீபக் தலைமையில், 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்
27/12/2023
என்ன ஆச்சரியம் இந்த சிறுமி கட்டாயம் பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி
tsunami |சுனாமி | Baby kalali Nila Ilango #சந்தம்_சிந்தை #கவர்ந்த #வலம்புரி_கவிதா #வட்டத்தின்_95 #ஆவது #கவியரங்கு #சந்தக்கவிமணி #கிண்ணியா_அமீர் #அலி_தலைமைவலம்...
25/12/2023
வீதி விபத்துக்களினால் 2023 ம் ஆண்டில் 115 சிறுவர்கள் மரணம்!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Colombo