BATTI SWIMMING CLUB

BATTI SWIMMING CLUB

Share

Srilanka swimming coaches Association

12/12/2021

இலங்கையில் நீரில் மூழ்கி இறக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை 20% மாக குறைந்துள்ளது.....காரணம்?

05/11/2021

#🏊‍♀️🏊🏽நீச்சல் தடாகத்தை பராமரிப்பது எப்படி🏊‍♀️🏊🏽 #
--------------------------------------------------

#🏊🏽. உங்கள் நீச்சல் தடாகம் மூடியதா அல்லது திறந்த வகை தடாகமா என்பதைப் பொறுத்து நீரின்
தன்மை மாறும்.

#🏊🏽. சூரிய ஒளி, நேரடியாக படாதவரைக்கும் தண்ணீரில் பாசிகள் வளராது. எனவே திறந்த நீச்சல் தடாகத்தை விட கூரை பொருத்தப்பட்ட நீச்சல் குளமே சிறந்தது.

#🏊🏽. சூரிய ஒளியை மறைக்க மெல்லிய பிளாஸ்டிக் தகட்டாலான கூரைகளைப் பொருத்தினாலே அல்லது சூரிய ஒளி நீச்சல் தடாகத்தில் நேரடியாக படாதவாறு தடுப்பது மிக போதுமானது.

#🏊🏽. நீச்சல் தடாகத்ததை சுற்றிலும் சுற்றுச்சுவர் மற்றும் புல்வெளி இருந்தால் மண், தூசு போன்றவை நீச்சல் தடாகத்தில் சேராமல் இருக்கும்.

#🏊🏽. நீச்சல் தடாகத்தில் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எந்த நீரை பயன்படுத்துகிறீர்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்.

#🏊🏽. உங்கள் வீட்டில் கிடைக்கும் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருந்தால், அதை சுத்திகரித்தே பயன்படுத்த வேண்டும். இதற்கு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது தனியார் ஆய்வுக் கூடங்களின் உதவியை நாடலாம்.

#🏊🏽. மாதத்துக்கு ஒரு முறை நீச்சல் தடாகத்தின் நீரை மறு சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இல்லையெனில், நீரிலுள்ள பாக்டீரியாக்கள் புழுக்களாக மாறி, நீச்சல்குளத்தில் துர்நாற்றம் வீசக் கூடும். அத்துடன் நீர் நிலைகளில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

#🏊🏽. தக்க நிபுணர்களின் ஆலோசனையுடன், குளோரின் போன்ற இரசாயன பொருட்களை நீரில் கலக்கலாம். இதனால் சரும நோய்கள் மற்றும் உடல் சுகாதார கேடுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.

#🏊🏽. நீச்சல் தடாகத்தின் மொத்த நீரும் உறிஞ்சப்பட்டு, இன்னொரு தொட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வடிகட்டி மீண்டும் நீச்சல் தடாகத்திற்கு வரும் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். வடிகட்டிகள் சரியாக நாள் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 8-10மணி நேரம் இயக்கப்பட வேண்டும்.(நீச்சல் தடாகத்தின் உபயோகத்திற்கு அமைவாக)

#🏊🏽. நீச்சல் தடாகத்தின் உட்புறச்சுவர் மற்றும் தரைகளில் ‘வாட்டர் புரூஃப்’ (Tiles) வழுக்காத கற்கள் பதிப்பது கட்டாயம். இவை நீச்சல் குளத்திலுள்ள நீரின் தன்மையில் மாற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கும்.

#🏊🏽. பல நீச்சல் தடாகத்தின் தன்மை வெறுமனே டைல்ஸ்களை(Tiles)மட்டுமே பதித்திருப்பார்கள் இது போதுமானதாக அமையாது.

#🏊🏽. நீச்சல் தடாகத்தை ஒட்டியோ, அதற்கு வெகு அருகிலோ அலங்கார விளக்குகள் மற்றும் இசை ஒலி பெருக்கிகள் பொருத்துவதைத் தவிர்க்கவும்.

#🏊🏽. (நீர் வடிகட்டி )ஃபில்டர்களை இயக்கும் தானியங்கி மோட்டார்களை கூட நீச்சல் குளத்திலிருந்து தள்ளி பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.

-நன்றி-

29/10/2021

நீச்சல் குளத்தில் குளித்த பின் கண்கள் சிவப்பது குளோரினால் அல்ல, வேறு எதனால் தெரியுமா?
--------------------------------------------

# 🏊‍♂️ நீச்சல் குளத்தில் குளித்த பிறகு கண்கள் ஏன் சிவக்கின்றன என்று கேட்டால், நீரில் கலக்கப்படும் குளோரின் என்று தான் அனைவரும் கூறுவார்கள். இதை தான் நாமும் நம்பி வந்தோம். ஆனால், அது குளோரினால் அல்ல, மனிதர்களின் சிறுநீரால் என்று கூறி அதிர்ச்சியளிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

# 🏊‍♂️ நீரில் குளோரின் கலப்பதால், அதில் இருக்கும் கிருமிகள் அளிக்கப்பட்டு சரும எரிச்சல், காதுகளில் தொற்று, வயிற்றுப்போக்கு எல்லாம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. பிறகு எப்படி கண்களில் மட்டும் எரிச்சல் ஏற்படுகிறது என்று பார்த்தல், நீச்சல் குளத்தில் குளிக்கும் சிலர் சிறுநீர் கழிப்பதால் தான் இது ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

# 🏊‍♂️ சிறுநீர் மட்டுமின்றி அதிகமானோர் உடலில் இருந்து வெளிப்படும் வியர்வையும் கூட கண்கள் சிவப்பதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. நீங்கள் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது எனில், அந்த நீரில் சிறுநீர் அல்லது அளவுக்கு அதிகமாக வியர்வை கலந்துள்ளது என்று பொருள். எனவே, உடனடியாக அந்த நீரை மாற்ற வேண்டியது அவசியம்.

# 🏊‍♂️ வீட்டில் தனியாக நாம் பயன்படுத்தும் நீச்சல் குளத்தில் குளிக்கும் போது ஏற்படுவதை விட, பொது நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்களில் நாம் விளையாடும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போது தான் கண்ணெரிச்சல் அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம், அங்கு வருவோர் அவர்களுக்கே தெரிந்தும், தெரியாமலும் சிறுநீர் கழிப்பது, மற்றும் கட்டுபடுத்த முடியாத வியர்வை கலப்பதால் தான்.

# 🏊‍♂️ அடுத்த முறை நீங்கள் தனியார் ஹோட்டல் அல்லது கேளிக்கை பூங்காக்களில் இது போன்ற சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தால், உடனே மேலாளரிடம் கூறி, நீச்சல் குளத்தின் நீரை மாற்ற அறிவுரைக்க மறக்க வேண்டாம்.

#🏊‍♂️குறிப்பு- நீச்சல் குளத்தில் உள்ள நீரின் தன்மைக்கேற்ப இக் கருத்து வேறுபடலாம்.

22/10/2021

🏊‍♂️ #கடலில் நீச்சல் அடிப்பது பாதுகாப்பானதா?

#.🏊‍♂️சிலருக்கு கடலில் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். ஆனால், கடல் நீச்சல் என்பது முற்றிலும் வேறுபட்டது. ஆறு, குளம் போன்ற தன்மைகளில் இல்லாமல், அதிக சுழல் மற்றும் நீரோட்டம் கொண்டது.

#.🏊‍♂️கடலின் ஆழம் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும், சில கடற்கரைகளில், ஆழம் குறைவாக இருக்கும், சில கடற்கரைகளில், ஆழம் சிறிது தொலைவிலேயே அதிகமாகும் அத்துடன் அலைகளும் இணைந்து, நீச்சல் அடிப்போரை, வெகு தூரம் கொண்டுபோய்விடும் என்பதால்,கடலில் நீந்தும் முயற்சிகளில், தக்க துணையுடன் செல்வதுடன், தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்வதே, விவேகமானது.

#.🏊‍♂️நீச்சல் பயிற்சி உடலுக்கு உரமூட்டுவது மட்டுமன்றி, மனதுக்கும், உற்சாகம் அளிக்கக்கூடியது. நீச்சல் பழகிவிட்டால், சீக்கிரம் கரையேற மனம் வராது, சிறுவர்கள் போல, வெகுநேரம், நீரில் கிடக்கத்தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

13/07/2021

உங்கள் பிள்ளைகளும் இப்படி நீரில் நீந்த ஆசையா?...
# 4 வயது தொடங்கிவிட்டதா?...

15/06/2021

ஒரு நிமிடம் இத படிங்க?

06/06/2021

🩺 💉 #உங்களுக்கு தெரியுமா?

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு, கைத்தொழில் போலவே, நீச்சல் அறிந்த ஒருவர், வாழ்வில் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும். தினமும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அடிக்கடி நீச்சல் மேற்கொண்டாலே, உடற்பயிற்சி மூலம் அடையும் எல்லா உடல் நலனையும் பெற்று நலமுடன் வாழலாம். நீச்சல் அறிந்தவர்கள் மற்றவர்களைவிட, நெடுநாட்கள் நலமுடன் வாழ்கின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உடற்பயிற்சிகளைவிட, சிறந்ததாகத் திகழ்கிறது, நீச்சல். உடலின் அனைத்து பாகங்களும் நீச்சலின் போது இயங்கி, உடலின் அனைத்து உறுப்புகளையும், வலுவாக்குகிறது. பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளைக்குறைக்கிறது.🏊🏽🏊🏽

உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழ்ந்திருந்தாலும், அநேகம் பேருக்கு நீச்சல் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் நீச்சல் பயிற்சி இன்றியே, இருக்கிறார்கள். நீச்சல் என்பது நீர்நிலைகளில் நீந்த மட்டும்தான், என்ற ஒரு அறியாதமனநிலையும் காரணமாக இருக்கலாம், நீச்சல் அத்தியாவசியமான ஒன்று, உடல் நலம் காப்பதில் அது தனிப்பங்கு வகிக்கிறது, மேலும் நீச்சல் என்பது மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்புக்கலைக்கு நிகரானது, அந்தக்கலைகளைக் கற்றவர்கள் எப்படி, தன்னம்பிக்கையுடன் திகழ்வார்களோ அதுபோன்றே, நீச்சல் அறிந்தவர்களும் தன்னம்பிக்கை பெற்று திகழமுடியும் என்கிறார்கள், வல்லுனர்கள்.🏊🏽🏊🏽

பொதுவாக கிராமங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லோரும் நீச்சல் அறிந்திருப்பார்கள். அதற்கு காரணம், அநேக கிராமங்களில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் மற்றும் கிணறு போன்ற நீர்நிலைகள் மிகுந்து இருப்பதுதான். நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை, செயற்கை நீச்சல் குளங்களில் நகரத்து இளைஞர்கள் பயிற்சி பெற்றாலும், அவர்கள் வெளிப்புற நீர்நிலைகளில் இறங்கி, நீச்சலடிக்க அச்சம் கொள்கின்றனர் என்பதே உண்மை.
நகரங்களில் உள்ள நீச்சல் குளங்களில், பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுப்பார்கள், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள், நன்கு நீச்சல் அறிந்தவர்கள் துணையுடன் கற்றுக்கொள்ள, விரைவில் நீச்சல் நம் வசப்படும்.🏊🏽🏊🏽

Photos from BATTI SWIMMING CLUB's post 10/05/2021

Missing you Guys🥰🏊‍♀️

12/04/2021

6&7
Year
👦 Boys 👦
Shamil and Avinesh
15m Freestyle
. #🏊 Swimming 🏊 #

Photos from BATTI SWIMMING CLUB's post 03/04/2021

🏊‍♀️🏊‍♀️Learn to Swim Program for New Batch🏊‍♀️🏊‍♀️ # #

28/03/2021

Learning process of kids on flip turns

Want your business to be the top-listed Gym/sports Facility in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Batticaloa
30000