Firows Abdul Raseed

Firows Abdul Raseed

Share

Don’t Compare yourself with anyone in this World, if you do so then you are Insulting Yourself. He won and became a young member of the local government.

Born in 1987 as the eldest son of Abdul Raseed couple, AR Firows was well-behaved and respected by others during his school days. Since then, he has been interested in social service and aimed to influence the economic, educational, and cultural values of marginalized people in society. Firows also wanted to improve democracy for the minority community in a multi-ethnic country. To achieve these g

17/08/2025

I had the privilege of meeting Hon. Harsha de Silva MP, and I am truly honored that he considered me for the internship opportunity in your office.

This is not just an opportunity, but also an inspiration to learn and contribute towards governance, policy, and public service. I sincerely thank Hon. Dr.Harsha de Silva and his team for opening this door of learning and experience for young leaders like us.

Most importantly, this internship gives me the chance to learn deeply about political matters and understand how real policy decisions are made to shape our country’s future.

14/08/2025

I had the Lanka’s , Hon. Sajith Premadasa. It was an incredible opportunity.

Photos from Firows Abdul Raseed's post 06/08/2025

பிரதான வீதியில் இயங்கி வந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தாருஸ்ஸலாம் காரியாலயம் ஓடாவியார் வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் தாருஸ்ஸலாம் அலுவலகத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வுக்கு ஏறாவூர் நகர சபையினுடைய கௌரவ தவிசாளர் Mohammed Saly Naleem அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்கள்.

Rauff Hakeem Dr. MLAM Hizbullah Sri Lanka Muslim Congress

04/08/2025

தேசியமட்டத்தில் இடம்பெற்ற கடினபந்து கிரிக்கட் தொடரில் எமது ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பெற்ற YHSC அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன். உங்கள் முயற்சியும், ஒற்றுமையும் பாராட்டத்தக்கது. எதிர்கால போட்டிகளில் மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

ஏ.ஆர்.பிரௌஸ்
முன்னாள் நகர சபை உறுப்பினர்
இணைப்பாளர்- கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்.

Dr. MLAM Hizbullah Rauff Hakeem Sri Lanka Muslim Congress

03/08/2025

அல்ஹம்துலில்லாஹ்! கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Dr. MLAM Hizbullah வின் ஏறாவூர் இற்கான ஒருங்கிணைப்பாளராக இன்று நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று காத்தான்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன்.

என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை எனக்கு அளித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக எதிர்காலத்தில் எமது பிரதேசத்திற்கு எதை செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எமது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

31/07/2025

இந்தியாவின் முன்னணி சமூக சேவகர் மற்றும் கல்வியாளர் Dr. Achyuta Samanta சந்தித்தது எனக்கு மிக மகிழ்ச்சியளித்த ஒரு முக்கிய தருணமாக இருந்தது.

மிகச்சிறிய வயதில் தனது தந்தையை இழந்தும், தீவிர வறுமையில் வளர்ந்தும், அவர் தான் பிறந்த நாட்டிற்காகவும், தான் சார்ந்த சமூகத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டுமென்று மிகச்சிறிய வயதில் தன்னை அர்ப்பணித்து செயல்பட்டதன் பலனாக இன்று பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு தங்களது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். அவரால் நிறுவப்பட்ட KIIT பல்கலைக்கழகம் மற்றும் KISS (Kalinga Institute of Social Sciences) ஆகியவை இந்தியாவிலுள்ள 10,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மற்றும் பொருளாதார வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வழங்கி வருகின்றது.

இச்சந்திப்பின் போது இலங்கைச் சேர்ந்த வரிய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் தனது ஆர்வத்தை தெரிவித்ததோடு மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள அவரது நிறுவனத்திற்கு நேரில் வருகை தரும்படியும் தனது அன்பான அழைப்பை விடுத்தார்.

அவருடைய தொலைநோக்கு சிந்தனையும் அர்ப்பணிப்பும் என்னை வெகுவாக கவர்ந்தது. தொட்டது. கல்விக்கான அவரது பணி உண்மையான சமூக மாற்றத்திற்கு ஓர் அடையாளமாகும்.

India in Sri Lanka (High Commission of India, Colombo) Rauff Hakeem Dr. MLAM Hizbullah Achyuta Samanta

30/07/2025

இந்தியாவின் மேலதிக வெளிவிவகார செயலாளர் அவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதன் போது இலங்கையில் சிறுபான்மையினராக நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குறிப்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) போன்றவற்றினால் நாங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் தொடர்பான விடயங்களை பதிவு செய்யக் கிடைத்தையிட்டு மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
India in Sri Lanka (High Commission of India, Colombo)
Rauff Hakeem Sri Lanka Muslim Congress Dr. MLAM Hizbullah

Photos from Firows Abdul Raseed's post 27/07/2025

பீஹார் மாநில ஆளுநர் மதிப்புக்குரிய Arif Mohammad Khan அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

ICCR in Sri Lanka Ministry of External Affairs, Government of India India in Sri Lanka (High Commission of India, Colombo) Rauff Hakeem Dr. MLAM Hizbullah

Photos from Firows Abdul Raseed's post 26/07/2025

இந்தியாவுக்கான பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, Confederation of Indian Industry (CII) ஏற்பாடு செய்த Business Interaction Meeting-இல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த சந்திப்பில், இந்தியாவின் முன்னணி வர்த்தக தலைவர்கள் மற்றும் policy makers, இலங்கையிலிருந்து வந்த இளம் அரசியல் தலைவர்களுடனான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது..

இந்தியா–இலங்கை இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்துதல், முதலீடு, மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய துறைகள் தொடர்பாக முக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.

இந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்காக CII மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு நல்ல அடித்தளமாக இருக்கும்.

"As one of the key highlights of our visit to India, I had the opportunity to participate in a Business Interaction Meeting organised by the Confederation of Indian Industry (CII).

During this session, leading business leaders and policy makers from India engaged in a meaningful discussion with the Young Political Leaders Delegation from Sri Lanka.

The dialogue focused on deepening the India–Sri Lanka trade relationship, with productive exchanges on investment, trade facilitation, and technological cooperation between the two countries.

I extend my sincere appreciation to CII and the Government of India for facilitating this valuable engagement. I believe this interaction will serve as a strong foundation to further strengthen the economic partnership between our two nations in the future."

Narendra Modi PMO India New Delhi Dr S. Jaishankar Ministry of External Affairs, Government of India India in Sri Lanka (High Commission of India, Colombo) ICCR in Sri Lanka

Photos from Firows Abdul Raseed's post 22/07/2025

இந்தியாவின் ஆளுங்கட்சியான BJP இளைஞர் அணியினால் (BJYM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்வுக்கு இந்தியாவின் பல மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்வு BJP ன் இளைஞர் அணியின் தேசியத் தலைவர் கௌரவ இளம் பாராளுமன்ற உறுப்பினர் Tejasvi Surya Surya அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.பிரௌஸ் அவர்களும் பங்கேற்று இருந்தார். இலங்கையின் 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள்.

#இலங்கைஇந்தியநட்பு

Photos from Firows Abdul Raseed's post 21/07/2025

இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சியைச் சேர்ந்த 25 இளம் அரசியல் தலைவர்கள் இந்தியாவில் கலந்துகொண்ட நிகழ்வின் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள இந்திய பாராளுமன்ற வளாகத்தை (Parliament House Complex) பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஆர். பிரௌஸ் அவர்களுக்கு கிடைத்தது.

இந்த பயணத்தில், Lok Sabha (House of the People) மற்றும் Rajya Sabha (Council of States) ஆகிய இரு சபைகளின் Gallery பகுதிகளையும், Members Seating Area-யையும் நேரில் பார்த்து அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், அவ் இரு சபைகளின் அமர்வுகள் நடைபெறும் இடங்களில் உட்கார்ந்து மிகவும் உணர்வுபூர்வமான அனுபவத்தினை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

இறுதியாக பாராளுமன்றத்தின் செயல்முறை மற்றும் அதன் வரலாற்று பங்களிப்பு பற்றியும் மேலும், இந்திய அரசியலமைப்புச் சபை(Constitution Hall) மற்றும் கலைக் காட்சிப்பகுதியையும் பார்வையிட்டு, இந்திய ஜனநாயகத்தின் பண்பாட்டு, அரசியல் மரபுகளையும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர், டாக்டர் சஸ்மித் பாட்ரா அவர்களுடன் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் கலந்தாலசிக்கப்பட்டதாகவும் கூறினார்.

# Rauff Hakeem

Photos from Firows Abdul Raseed's post 20/07/2025

புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணைவேந்தர் Santishree Dhulipudi Pandit அவர்களை இலங்கையிலிருந்து சென்ற இளம் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஏ.ஆர். பிரௌஸ் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த பயணத்தில், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களில், இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சி, இளைஞர் போன்ற நாடுகளுக்கு வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் திட்டங்கள், சமூக விடயங்கள், மற்றும் இளைய தலைமையின் பங்களிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

#இலங்கைஇந்தியநட்பு

Want your public figure to be the top-listed Public Figure in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Eravur
Batticaloa