Keyu Tamil

Keyu Tamil

Share

முயற்சி திருவினையாக்கும்

03/06/2026

எழுதிய 1330குறளில் ஒரு இடத்தில் கூட தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை..

தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை
கடவுள் வாழ்த்துதான் பாடினார் ஏனெனில் தமிழ் என்பது மொழியே...

தமிழ்நாடு பற்றி குறிப்பிடவில்லை
உலகு பற்றிய குறிப்பிட்டுள்ளார் ஏனெனில் அந்த காலகட்டத்தில் மொழி ரீதியாக மாநிலம் பிடிக்கவில்லை

தமிழர் பெருமை பேசவில்லை உலக சான்றோர் பெருமை பற்றியே கூறியுள்ளார்.. காரணம் அந்த காலகட்டத்தில் மொழி ரீதியாக மக்கள் பிரிவினை பேசி வாழவில்லை

என் அப்பா அம்மா எனக்கு உயர்வுதான் அதற்காக எல்லோரும் அவர்களை உயர்வாக ஏற்றுகொள்ள வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த முடியுமா?, அல்லது மற்றவர்களின் அப்பா அம்மாவை இழிவாக பேச முடியுமா?

அதுபோல் தான் நமது தாய் மொழி நமக்கு உயர்வு ஆனால் இந்து மதத்தில் பல ஆயிரம் தாய்மொழி கொண்ட இனம் உண்டு இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றே ஒன்றினைந்திட வேண்டும்

திருக்குறளில் இந்து என்ற வார்த்தை இல்லை என்றும் அதனால் அவர் இந்து இல்லை என்று பினாத்தினாள் எவ்வளவு பெரிய குறுக்கு புத்தி...

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில்
ஏசு பிறக்கவில்லை அதனால் கிருஸ்துவ மதம் உருவாகவில்லை
நபிகள் பிறக்கவில்லை அதனால் இஸ்லாமிய மதம் உருவாகவில்லை அதனால் உலகின் ஒரே வகையான வழிபாடுதான் இருந்த காரணத்தினால் அதற்கு மதம் பெயர் சூட்ட வேண்டிய அவசியம் இல்லை...

ஒரு ஊரில் ஒரேயொரு தெரு இருக்கும் போது அந்த தெரவுக்கு பெயர் இருந்திருக்காது...

முதலில் இருந்த தெருக்கு வடக்கே அதே ஊரில் இன்னோரு தெரு உருவாகும் போது முதலில் இருந்த தெருவுக்கு தெற்கு தெரு என்று பெயர் சூட்டவேண்டிய கட்டாயம் ஏற்றப்படுகிறது

ஒரு ஊரில் ஒரேயொரு பஸ் ஓடினால் அதற்கு நம்பர் சூட்ட மாட்டார்கள்

அதே ஊரில் இன்னொரு பஸ் புதிதாக விட்டால் முதலில் ஓடிய பஸ்க்கு 1ம் நம்பர் பஸ் என்றும் புதிதாக விட்ட பஸ்க்கு 2ம் நம்பர் பஸ் என்றும் பெயர் சூட்டுவார்கள்

அப்படிதான் ஆதிகாலத்தில் இருந்த நம் மதத்திற்கு பெயர் கிடையாது

புதிதாக கிருஸ்துவ மதம் இஸ்லாமிய மதங்கள் நுழைந்த போது வெள்ளையன் நம் மதத்துக்கு இந்துமதம் என்று பெயர் சூட்டினான்

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள்...

ஏனெனில் திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிட்டு குறல் எழுதியுள்ளார் ஆனால் ஒரு இடத்தில் கூட புத்தரை மகாவீரரை ஏசுவை பற்றி குறல் எழுதவில்லை

காரணம் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை..

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் முதல் குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

இதன் பொருள் எழுத்துக்கள் அனைத்தும் 'அ' என்ற எழுத்தைத் தொடக்கமாகக் கொண்டுள்ளன. அதுபோலவே, உலகம் கடவுளை (ஆதிபகவனை)த் தொடக்கமாகக் கொண்டுள்ளது என்று பொருள் பட எழுதியுள்ளார்

ஆதிபகவன் என்ற சொல் தமிழ் வார்த்தை கிடையாது அது சமஸ்கிருத வார்த்தை

ஆதிபகவன் என்று இறைவனை புத்த சமண சமயங்களில் குறிப்பிட்டது இல்லை அதனால் இந்து மதத்தின் பெயராலேயே வள்ளுவர் குறல் எழுத துவங்கியுள்ளார்

வள்ளுவரோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறார்.
சனாதன தர்மத்தில்தான் 'தெய்வம்' என்ற சொல் இருக்கிறது. இந்த சொல் 6 குறள்களில் இருக்கிறது.

திருவள்ளுவர் இந்து மதத்தவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
குறள் 43:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள்: 50
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன்,
வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் 55.
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619:
ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் 702.
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023.
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன.
சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

பகிர்வு.

゚viralシ #

02/06/2026

என்னவொரு பித்தலாட்டம்டாப்பா இது

Photos from Keyu Tamil's post 02/06/2026

இந்த ஆளுக ஓட்டு கேட்டு,
இவனுங்க ஓட்டு போட்டு.....

வேற என்ன இதான் நடக்கும்!

தூய சக்தி🤔

01/06/2026

திருவள்ளுவர் ஒரு சைவரே ... பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார்.

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவரோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறார்.

சனாதன தர்மத்தில்தான் 'தெய்வம்' என்ற சொல் இருக்கிறது. இந்த சொல் 6 குறள்களில் இருக்கிறது. திருவள்ளுவர் ஹிந்து சமயத்தவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

குறள் 43:

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.
குறள்: 50

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
குறள் 55.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
குறள் 619:

ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
குறள் 702.

ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
குறள் 1023.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

[[ ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி

( குறள் எண் : 25 )

சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான் ]]

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரையினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்)-1258

வள்ளுவர், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான், அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலியன இந்துமத விஷயங்கள்.

இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

பிரம்மா — (உலகு இயற்றியான் 1062) —.

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் (580)

நஞ்சுண்டவர் - சிவபெருமான்.

இன்னொரு குறளில் (377) ‘வகுத்தான்’ என்று பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். வகுத்தான் என்பதை தலைவிதியை எழுதிய தெய்வம் என்று உரைகாரர்கள் காட்டுவர்.

24/05/2026

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

23344 வெற்றிடங்களை பூர்த்தி செய்ய அரச சேவையில் உள்ள 66991 பட்டதாரிகளும் திறந்த அடிப்படையில் 99991 பட்டதாரிகளுமாக 163433 பட்டதாரிகள் தோற்றியிருந்தனர். இவற்றில் மாற்று வலுவுள்ள 323 பட்டதாரிகளும் தோற்றி இருந்தனர்.

பரீட்சை வெற்றிகரமாக 1048 பரீட்சை நிலையங்களில்நடத்தப்பட்டது என பரீட்சைகள் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

24/05/2026

இன்று 2026.05.24 மட்டுப்படுத்தப்பட்ட ஆசிரியர் போட்டி பரீட்சை நுண்ணறிவு/ பொது அறிவு வினாத்தாள்.

1 ஆசிரியர் வழிகாட்டி நூல் தயாரிப்பது யார்? தேசிய கல்வி நிறுவகம் (NIE)

2 விளையாட்டுப் பாடசாலைகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் குறைந்தபட்ச தரம்? 6 ஆம் தரம்

3 STEAM இல் உள்ளடக்கப்படாத பாடம்? STEAM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.

4 13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி என்றால் என்ன? அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட கால கல்வியை வழங்கல்.

5 சுஹුරු (ஸ்மார்ட்) வகுப்பறை கற்றல் என்றால் என்ன? டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கற்றல்.

6 பல்வேறு கற்றல் வேகம் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி? உள்ளடக்கக் கல்வி (Inclusive Education).

7 இருமொழி (Bilingual) அனுமதி இல்லாத பாடம்? தாய்மொழி (சிங்களம்/தமிழ்).

8 அதிபரின் பதிவேட்டில் (Log Book) குறிப்பு எழுத முடியாதவர்? பாடசாலையின் உத்தியோகத்தர் அல்லாத நபர்கள்.

9 தொழில்நுட்பப் பிரிவின் கட்டாய பாடம்? தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT).

10 'சூரக்ஷா' காப்புறுதி இழப்பீட்டுக்குத் தேவையான வருடாந்த வருமானம்? இதற்கென வருமான வரம்பு கிடையாது.

11 SEQI என்பதன் பொருள்? பாடசாலை கல்வி தரச் சுட்டெண் (School Education Quality Index).

12 தேசிய பாடசாலை கல்விச் சுற்றுலா அனுமதி யாரிடம் பெற வேண்டும்? கல்வி அமைச்சு அல்லது வலயக் கல்வி அலுவலகம்.

13 2026 புதிய கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு? தேசிய கல்வி கொள்கை கட்டமைப்பின் இலக்குகள்.

14 2015க்கு பின் கிராமிய மற்றும் நகர்ப்புற பாடசாலைகளை மேம்படுத்தும் திட்டம்? ළඟම පාසල හොඳම පාසල (அருகிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை).

15 பாடசாலை அபிவிருத்திச் சபையின் பதவிக்காலம்? 2 ஆண்டுகள்.

16 சாரணருக்கு வழங்கப்படும் உயர்ந்தபட்ச பதக்கம்? ஜனாதிபதி சாரணர் விருது.

17 ஆலோசனை ஆசிரியருக்கான குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை? 500 மாணவர்கள்.

18 ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்தும் நிறுவனம்? தேசிய கல்வி நிறுவகம் (NIE).

19 'கிளீன் ஸ்ரீலங்கா' மூலம் பாடசாலையில் செயல்படுத்தப்படும் திட்டம்? பாடசாலை டிஜிட்டல் மயமாக்கல்.

20 உடல் மற்றும் மன ரீதியான தண்டனைகளைத் தடை செய்த நீதிமன்றம்? இலங்கை உயர் நீதிமன்றம்.

21 பாடசாலை நிறைவேற்றுக் குழுவினால் ஒதுக்கப்படக்கூடிய உச்சபட்ச தொகை? நிதிச் சுற்றறிக்கைகளின்படி தீர்மானிக்கப்படுகிறது.

22 மேலதிக கடமைகள் தவிர ஆசிரியருக்கு ஒதுக்கப்படும் கால இடைவெளிகள்? வாரத்திற்கு 35-40.

23 ஆசிரியர் ஆலோசனை சேவை யாப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு? 1994.

24 மாணவர் சேர்க்கையில் வதிவிடம் அவசியமற்ற வகை? விசேட தேவை உடைய மாணவர்கள்.

25 அதிபர் மற்றும் ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் திட்டம்? வருடாந்த செயல்திறன் மதிப்பீடு.

26 பல்கலைக்கழக அனுமதி மாணவர் தொகை? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது.

27 உயர் தொழில்நுட்ப நிறுவனம் வழங்கும் கல்வித் தகுதி? தேசிய டிப்ளோமா (HND).

28 4Cs என்பதன் பொருள்? Critical thinking, Communication, Collaboration, Creativity.

29 குளியாப்பிட்டிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி எந்தப் பாடத்திற்காக நிறுவப்பட்டது? தொழில்நுட்பவியல்.

30 மிகவும் பின்தங்கிய பாடசாலை ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு? அரச சுற்றறிக்கையின்படி தீர்மானிக்கப்படும்.

31 அන්තர்க்கரணம் (Inclusion) என்றால் என்ன? அனைத்து மாணவர்களையும் ஒரே வகுப்பறையில் கற்பித்தல்.

32 தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டங்கள் அங்கீகரிக்கப்படும் நிறுவனம்? பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC).

33 NVQ வின் உச்சபட்ச மட்டங்கள்? 07.

34 GPA என்பதன் பொருள்? Grade Point Average.

35 புதிய சீர்திருத்தத்தில் அடிப்படை வாழ்க்கைத்திறன் எந்த மட்டத்தில் அறிமுகம்? ஆரம்ப கல்வி மட்டம்.

36 தொலைந்துபோன பாடசாலை விலகல் சான்றிதழை பெறுமிடம்? பாடசாலை அல்லது வலயக் கல்வி அலுவலகம்.

37 13 வருட தொடர் கல்வியின் முக்கிய கூறுகள்? கல்வி மற்றும் தொழிற்கல்வி.

38 இலங்கையின் கணினி அறிவு மட்டம்? சுமார் 40-50%.

39 வசதிகள் கட்டண ரசீது இலக்கம்? பாடசாலைக்கு பாடசாலை வேறுபடும்.

40 உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை? 04.

41 முதலாம் ஆண்டு மேன்முறையீட்டின் கீழ் பாடசாலை வழங்கக் கடமைப்பட்ட நிறுவனம்? கல்வி அமைச்சு.

42 தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளடங்கும் அமைச்சு? கல்வி அமைச்சு.

*Limited IQ Paper Structure*

மொழித்திறன் - 10
ஒழுங்குபடுத்தல் கட்டுரை வினா - 05
தாயக்கட்டை - 05
எண்கோலம் - 05
எண்கணித புதிர் - 05
எண்கள் (பரீட்சை புள்ளிகள்) - 05
தகவல் ஒழுங்கமைப்பு (நேரசூசி) - 05
உருவங்கள் - 05

Copy : FB

24/05/2026
Photos from Karaitivu WebTeam's post 24/05/2026
Want your public figure to be the top-listed Public Figure in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Ampilanthurai, Kokkaddicholai
Batticaloa
30162