PadaKu TV

PadaKu TV

Share

Media

05/05/2026

மட்டு சித்தாண்டி வானவில் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு விழா -2026

30/04/2026

🥋 மட்டக்களப்பு கராத்தே வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை! 🏆

மட்டக்களப்பு மாவட்டத்தின் கராத்தே துறையை வலுப்படுத்தும் நோக்கில், SKO கழகத்தின் தலைவர் கே.டி. பிரகாஷ் தலைமையில் கடந்த 25 & 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மாநகர சபை உள்ளக அரங்கில் பிரம்மாண்டமான கராத்தே சுற்றுப்போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது.

🔥 1000+ மாணவர்கள் உற்சாக பங்கேற்பு
🔥 700+ வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் & சான்றிதழ்கள்
🔥 திறமைகள், ஒழுக்கம், தன்னம்பிக்கை ஒரே மேடையில்!

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மற்றும் உதவி கல்விப் பணிப்பாளர் அவர்களால் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டு நாட்கள் முழுவதும் வயது பிரிவுகளின் அடிப்படையில் நடைபெற்ற போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

💪 கராத்தே துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தை முன்னணியில் கொண்டு செல்லும் SKO கழகத்தின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது!

உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

🌟 இந்நிகழ்வு மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது!

27/04/2026

🔥 மேதினம் – 2026 🔥

💥 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு 💥

📍 இடம் : மகிழடித்தீவு பிரதேச சபை, கலாசார மண்டபம்
📅 காலம் : 01.05.2026
⏰ நேரம் : பி.ப. 2.00

🔥 வரலாறு எழுதும் நாளில் நீங்களும் இருங்கள்! 🔥

Thesam Tube 24/04/2026

தேசம் வலையொழி தளத்துக்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அரசியல் செயலாளர் ஸ்டாலின் ஞானம்வழங்கிய சிறப்பு நேர்காணல். #மீள்பதிவு

Thesam Tube 5 likes, 8 comments. "முன்னாள் முதலமைச்சரின் இன்னாள் சிறைவாசமும் அதன் எதிரொலிகளும், எழும் கேள்விகளும் !"

23/04/2026

தொடர்ந்தும் இயங்க முடியாத நிலையில் போரதீவுப்பற்று பிரதேச சபை - உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்….

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரிக்கை

22/04/2026

சிவ. சந்திரகாந்தனை நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர..

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களை சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டிலித் ஜெயவீர இன்றைய தினம் (22) நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன் போது சிவ. சந்திரகாந்தனின் சுக நலன் தொடர்பில் கேட்டறிந்ததோடு, இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய ஒரு கைதிக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படுமாயின் அது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டிருந்தார்.

21/04/2026

ஈஸ்டர் படுகொலை 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு!

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 07 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் அக்கட்சியின் கல்வி, கலை, கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் இன்று (21) அனுஸ்ரிக்கப்பட்டது..

20/04/2026

சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக்கழகத்தின் பந்துச்சமர் 2026.

17/04/2026

சிறை மாற்றக் கோரி சந்திரகாந்தன் உண்ணாவிரதம்: மட்டக்களப்பில் ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்.

கடந்த ஒரு வருட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்திரகாந்தன், கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, அன்றைய தினமே வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட அவர், பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த நாளே கண்டி தும்பறைச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர், மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) வெலிசர சிறைச்சாலைக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு, ஒரு சாதாரண கைதிக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுவதாக சந்திரகாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனை எதிர்த்தும், தன்னை இலங்கையிலுள்ள வேறு ஏதேனும் ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியும் அவர் கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில், அவரது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், இன்றைய தினம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அகிம்சை வழியிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், கட்சியின் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

16/04/2026

வெளிக்கடை சிறைச்சாலையின் வைத்திய சாலையில் சிவ.சந்திரகாந்தன் அனுமதி...... தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

Want your business to be the top-listed Media Company in Batticaloa?
Click here to claim your Sponsored Listing.

Address


91 Lake Road
Batticaloa
30000