importmirror.com
24/7 செய்திச்சேவை
www.importmirror.com Tamil Online news Website From Srilanka | as a Register under the Srilanka Government
சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்.
பாறூக் சிஹான்-
Follow importmirror.com
அரசின் அபிவிருத்திட்டங்கள்
அடங்கிய கலந்தாலோசனை ஏன் கூட்டப்படுகிறது?
என்ற காரணமறியாது தேவையற்ற பிரச்சனைகள்
பிரதேச அபிவிருத்தியை இல்லாமலாக்கி விடும்.
05/06/2026
#கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு
பாறுக் ஷிஹான்-
#சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் முதலில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று(05)அப்பாடசாலை அதிபர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர் பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.
Follow importmirror.com
இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக இடம்பெற்றன.நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வுடன் மரம் நடுகை நிகழ்வும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாறுக் ஷிஹான்-
சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 திஞ்னை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
அந்த வகையில் முதலில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் சிரமதான நிகழ்வுகள் முதலில் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இன்று(05)அப்பாடசாலை அதிபர் தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர் பல்வேறு சூழல் சார் கருத்துக்களை வழங்கினார்.
இதன் போது இயற்கை ஒரு மடல் எனும் தொனிப்பொருளில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய விடயங்களை மாணவர்களின் சுற்றுச்சூழல் தொடர்பான ஆற்றுகைகள் ஊடாக இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் எதிர் காலத்தில் பிளாஸ்டிக் பாவனையை இழிவாக்குவதில் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்க உறுதி பூண்டுமிருந்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் பின்னர் இரண்டாம் கட்ட நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வுடன் மரம் நடுகை நிகழ்வும் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
05/06/2026
#இனவாத அரசியலுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளன் அல்ல : பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தேன் -: கலையரசனுக்கு ஹரீஸ் பதில்
நூருல் ஹுதா உமர்-
Follow importmirror.com
#அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசு அவர்கள் நான் கூறிய விடயங்களை பிழையாக விளங்கி சில கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை விரும்பும் மக்கள் அவருடைய கருத்தினால் வேதனைப்பட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.
உண்மையில் கல்முனை உப பிரதேச செயலக விடயத்திற்கு சமாதான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக எம்.ஏ சுமந்திரன் அவர்களிடம் வேண்டியிருந்தேன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இந்த உப பிரதேச செயலக பிரச்சினைக்கு சமாதானமான ஒரு தீர்வை எட்டவேண்டும். தமிழ்- முஸ்லிம் மக்கள் எல்லையுடனான ஒரு நிர்வாக அலகை பெறவேண்டும் என்பது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் இதைத்தான் பேச்சுவார்த்தை ஊடாக செய்யுங்கள் என்று வேண்டியுள்ளேன் என உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (05) கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து அங்கு பேசிய அவர்,
இதை வலியுறுத்தித்தான் நான் எனது கருத்துக்களையும் அது சார்ந்த விடயங்களையும் கூறினேன். அதே நேரம் கல்முனைத் தொகுதி இலங்கை தமிழரசுக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி நிதன்சன் அவர்களும். என் மீது சில வினாக்களைத் தொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் பேச்சுவார்த்தை. நடைபெற்றதாகவும், அந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முஸ்லிம் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வர இருந்ததாகவும், நான்தான் அந்தத் தீர்வு எட்டுவதற்குத் தடையாக இருந்தேன் என்ற ஒரு அபாண்டத்தை தெரிவித்திருக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தைகள் 2017 ஆம் ஆண்டு நவம்பரில் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் அவரது அமைச்சிலும் இன்னும் சில இடங்களிலும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது, அதில் தமிழ்த் தரப்பிலிருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர்களாக இருந்த ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோர்களுடன் தற்போதைய பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட எம்.பிக்களும், முஸ்லிம் தரப்பிலிருந்து ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களும் நான் உட்பட அரசியல் முஸ்லிம் பிரதிநிதிகளும், சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டோம்.
அந்தப் பேச்சுவார்த்தையில் எல்லோரும் சாட்சியாக இருக்கின்றார்கள் எந்தத் தீர்வும் முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் எட்டவில்லை. கடைசியில் "வெண்ணை திரண்டு வரும்போது தாலி உடைந்த சம்பவம்" எதுவும் என்னால் அங்கு நடைபெறவில்லை என்பது எல்லோரும் அறிந்த விடயம். எந்த இணக்கப்பாட்டுக்கும் வராத நிலையிலேயே பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
அதன் பின்பு. ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்பு கல்முனை நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடர்ந்து கொழும்பில் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இதே தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையிலான இதே சுமந்திரன், மாவை போன்ற தலைவர்களும் கோடீஸ்வரன் எம்.பி உட்பட பல தமிழ் பிரதிநிதிகளும் அதே நேரம் முஸ்லிம் தரப்பில் ஸ்ரீ.ல.மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாட் பதியுதீன் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள நிஸாம் காரியப்பர் உட்பட நாங்களும் இருந்து கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.
அந்த இடத்தில் என்னால் தான் தீர்வு தடைப்பட்டது என்று யாரும் கூறவுமில்லை, கூறவும் முடியாது. அங்கு ஒரு சாத்தியமான தீர்வை எட்டுவதற்கு முடியாமல் போய்விட்டது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பை சார்ந்த ஒருவரோ அல்லது சுமந்திரன் போன்ற யாரோ ஒருவர் வந்து கூற வேண்டும் நாங்கள் கலந்து கொண்ட எல்லா முஸ்லிம் தலைவர்களும் தீர்வுக்கு ஒத்துக்கொண்டாலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீசால் தான் தீர்வு எட்டப்பட முடியாமல் போகி விட்டது என்று. என்ன தீர்வு எட்டப்பட்டது என்பதையும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் தான் இரண்டு விடயங்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே வெறுமனே தமிழ் முஸ்லிம் உறவு மேம்பட்டு வருகின்ற நேரத்தில் எங்களை நோக்கி வீணான தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரம் உங்களுடைய வார்த்தைகள் சில இடங்களில் வரம்பு மீறியதாக இருப்பது கவலை அளிக்கின்றது.
தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசுகின்ற முன்னாள் எம்.பி கலையரசன் அவர்களையோ அல்லது கவீந்திரன் கோடிஸ்வரன் எம்.பி அவர்களையோ அல்லது எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் எம்.பி போன்றவர்களையோ இதுவரையும் நாங்கள் பொதுவெளியில் இவர்கள் இனவாதிகள் என்று நாங்கள் கூறுவதில்லை. அது அவர்கள் சமூகம் சார்ந்த விடயத்தைப் பேசுகிறார்கள் என்ற ஒரு புரிந்துணர்வு எங்களுக்கு இருக்கின்றது. ஆனால் எடுத்தவுடன் எங்களை. நோக்கி கடும் சொற்றொடர்களைப் பாவித்து கருத்துக்களை வெளியிடுவது வேதனையான விடயம்.
முக்கியமாக நான் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசியதாக முன்னாள் எம்.பி தவராசா கலையரசன் அவர்கள் கூறியுள்ளார். அது அப்பட்டமான பொய்யாகும். நான் எங்கும் தமிழ் மக்களை நோக்கி புலிச்சாயம் பூசி கருத்துக்களை வெளியிடவில்லை.
தமிழ்- முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து கொள்ள முஸ்லிம், தமிழ் சிவில் சமூகங்களை பேச்சுவார்த்தைக்கே நான் அழைத்திருந்தேன். இதில் என்ன தவறிருக்கிறது என்று கேள்வியெழுப்ப விரும்புகிறேன்.
முன்னாள் எம்.பி கலையரசன் மற்றும் சட்டத்தரணி நிஷான்சன் போன்றோர்களிடம் நான் வேண்டுகோள் விடுப்பது என்னவென்றால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக நான் இருந்தேன் என்று. இது முஸ்லிம் சமூகத்திலும் பிழையான அர்த்தங்களை கொடுக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக இது சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.
இதற்கப்பால் உடனடியாக நீங்கள் உண்மையில் ஒரு தீர்வினையோ இரு சமூகங்களின் சமாதானத்தையோ விரும்புகின்ற தரப்பு என்றால், இதுவரை நான் குறுக்கே நின்றேன் என்று சொல்வதால் நான் இப்போது ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி இல்லாத இந்த சூழ்நிலையில், இப்பொழுது இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, குறிப்பாக தமிழரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் தமிழ் தரப்பின் குழுவும் அதே போன்று முஸ்லிம் தரப்பில் உள்ள கல்முனை தொகுதி பிரதிநிதி நிஸாம் காரியப்பர் மற்றும் ஏனைய அவர்களுடைய முக்கியஸ்தர்களை வைத்தும் பேச்சுவார்த்தை நடத்தலாம். இது உங்களுக்கு ஒரு தெரிவாக இருக்கிறது.
இரண்டாவது தெரிவாக நேரடியாக கல்முனை தமிழ் சிவில் சமூகமும் கல்முனை முஸ்லிம் சிவில் சமூகமும் அதாவது தமிழ் சிவில் சமூகத்தில் கோயில் தர்மகர்த்தாக்கள், புத்திஜீவிக் கொண்ட ஒரு குழுவும், முஸ்லிம் சிவில் சமூகத்தில் பள்ளிவாசல் பிரதிநிதிகள், புத்திஜீவிகளைக் கொண்ட குழுவும் நிரந்தர தீர்வு நோக்கிய பேச்சுவார்த்தை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதில் நீங்கள் என்னை நோக்கி குற்றம் சாட்டி இருப்பதால் நான் இந்த பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.
தமிழ்- முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள் இருந்து ஆர்க்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்துமாறும் வேண்டுகிறேன்.
கல்முனை நகரில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பது வெளிப்படை உண்மை இதனை கவனத்தில் கொண்டே எனது ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சி பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைக்காகவே அழைப்பு விடுத்திருந்தேன். எந்த அழைப்பை எங்களின் நல்லண்ணமாக கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதனை கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
05/06/2026
#இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் !
நூருல் ஹுதா உமர்-
#உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 05) முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பது தொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் விசேட நிகழ்வு சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.
#ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
#பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றும் தூய்மையான சூழலை உருவாக்குவதற்கான நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
Follow importmirror.com
#இந்த நிகழ்வில் பிரதி அதிபர், ஆசிரியர்கள், ஒழுக்காற்று பொறுப்பாசிரியர் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் மூலம் மாணவர்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் சிறப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
05/06/2026
இன்று நாவிதன்வெளியில் இயற்கை உர தயாரிப்பு(Compost Yard) இடத்திற்கான சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு.
வி.ரி.சகாதேவராஜா-
மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று 2026.06.05 ம் திகதி வெள்ளிக்கிழமை தவிசாளர் இ. ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உபதவிசாளர் கே.புவனரூபன், உறுப்பினர் கே.உதயகுமார் ஆகியோருடன் எஸ்.ரஞ்சித்குமார் (தொழிநுட்ப உத்தியோகத்தர்) மற்றும் எம். நிப்றாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்று மதில் பகுதி அளவில் நிறைவுற்றிருந்தது அதனை முழுமை படுத்தி நிறைவுற வைபவத்திற்கு மூன்று மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#
05/06/2026
#முதியோர் இல்லத்தில் 12 பேர் உயிரிழந்ததன் காரணம் கண்டறியப்பட்டது!
ஜே.எப்.காமிலா பேகம்-
#பாணதுறை அங்குருவாட்டதொட்ட, படகொட பகுதியில் நடத்தப்பட்டு வந்த *"செனெஹசே கெதர - Senahase Kedalla"* என்ற முதியோர் மற்றும் சிறப்பு தேவையுடையவர்களுக்கான தங்கும் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
எந்தவித சட்டபூர்வ அனுமதியோ, தர நிர்ணயமோ இல்லாமல் நடத்தப்பட்டு வந்த இந்த நிலையத்தில், 15 பேருக்கு மட்டுமே வசதியுள்ள சிறிய வீட்டில் 71 பேர் அதி ஆபத்தான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது இப்போது உறுதியாகியுள்ளது.
Follow importmirror.com
இது வெறும் விபத்தை விட, அதிகாரிகளின் கண்களை மூடிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட பாரதூரமான அலட்சியத்தின் சோகமாக மாறியுள்ளது.
தீ ஏற்பட்டபோது அந்த கட்டிடத்தில் ஆண்கள் 35 பேர், பெண்கள் 36 பேர் உட்பட 71 பேர் சிக்கியிருந்தனர். அதில் 62 பேர் பல்வேறு மனநல பாதிப்புகள் உள்ள சிறப்பு தேவையுடையவர்கள்.
தீ ஏற்பட்டபோது அப்பாவி முதியவர்களின் உயிரைக் காப்பாற்ற பகுதி மக்கள் மேற்கொண்ட முயற்சியில் மிகவும் அதிர்சியூட்டும் பல விடயங்கள் வெளிவந்தன. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், சில முதியவர்கள் சுமார் 6 அடி நீள இரும்பு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்ததாக கூறினர்.
அத்துடன், இவ்வளவு பெரிய தீ பரவும்போது கூட முதியவர்களின் உயிரைக் காப்பாற்ற நிலையத்தின் உரிமையாளரோ வேறு எந்த ஊழியரோ அங்கு இருக்கவில்லை.
முழு முதியோர் இல்லத்திற்கும் வெறும் 2 ஊழியர்கள் மட்டுமே வேலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ள தகவல்களின்படி, இந்த தீ விபத்திற்கு அந்த இடத்தில் இருந்த நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளக்கில் ஏற்பட்ட மின் கசிவே காரணம்.
அந்த இடத்தின் அருகில் சுமார் 80 மெத்தைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மின் கசிவால் அந்த மெத்தைகளில் தீ பிடித்து அது வேகமாக பரவியது.
எந்தவித தீயணைப்பு கருவியோ பாதுகாப்பு முறையோ அங்கு அமைக்கப்படவில்லை. மன மற்றும் உடல் பலவீனமுள்ள சில முதியவர்கள் பதற்றத்தில் தீயை நோக்கியே ஓடியதாகவும் கூறப்படுகிறது. தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றபோது அவர்களின் சதை உருகி விழும் அளவிற்கு தீக்காயம் ஏற்பட்டதாக சம்பவத்தை பார்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த கொடூர தீ விபத்து கடந்த 3ம் தேதி மாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது பற்றி அங்குருவாட்டோட்ட பொலிசாருக்கு மாலை 5.40 மணியளவில்தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ ஆரம்பித்தவுடன் பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு வீட்டில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற கடுமையாக முயன்றனர்.
ஆனால் வீட்டின் முன்பக்க கதவு ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்ததால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கட்டிடத்திற்கு உதவியாக வந்த 100க்கும் மேற்பட்ட மெத்தைகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததால் தீ மிக வேகமாகவும் கொடூரமாகவும் பரவியது.
ஹொரண நகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் இந்த இடத்திற்கு வர தாமதமானதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வந்த தண்ணீர் லாரிகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுற்றியுள்ள கிணறுகள் மற்றும் நீர் ஆதாரங்களை தேட வேண்டியிருந்தது. பகுதி மக்கள், பொலிசார், விசேட அதிரடிப்படை மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கடுமையாக முயன்று இரவு 7.30 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர்.
குறிப்பாக குழாய் தண்ணீருக்கு பதில் கிணற்று நீரை மட்டுமே எடுக்கும் இந்த கிராமப்புற பகுதியில் திடீர் தீயை அணைப்பது கடினமாக இருந்தது.
மீட்பு பணியில் ஈடுபட்ட பகுதி மக்கள் கூறியதன்படி, நடக்க கூட முடியாத அப்பாவி முதியவர்கள் சிலர் தீயில் சிக்கி பெரும் வேதனையுடன் கதறியபடி உயிரிழந்தனர். ஒரு பெண்மணி தீயிலிருந்து காப்பாற்றி வெளியே கொண்டு வந்த பிறகும், தன் தங்க சங்கிலி வீட்டிற்குள் விழுந்து விட்டதாக கூறி மீண்டும் தீ எரியும் வீட்டிற்கு ஓடியதால் அவரும் தீக்கு பலியானார்.
இன்னும் அதிர்சியான விடயம் என்னவென்றால், மனநல பாதிப்புள்ள சிலர் தப்பி ஓடிவிடுவார்கள் என்ற பயத்தில் அவர்களின் கால்களுக்கு சங்கிலி போட்டு கட்டிலில் கட்டி வைத்திருந்தனர்.
சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததால் தீ பரவும் நேரத்தில் அவர்களால் தப்பிக்க எந்த வாய்பும் இல்லாமல், தீயில் சிக்கி கருகிய நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விபத்து நடக்கும் போது இந்த நிலையத்தின் உரிமையாளர் அந்த இடத்தில் இருக்கவில்லை.
வேலை செய்ததாக சொல்லப்படும் 3 ஊழியர்களும் தீயுடன் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். தீ ஏற்படும் நேரத்தில் நிலையத்தின் உரிமையாளர் அதற்கு முந்தைய நாள் அங்கு இறந்த வேறொரு முதியவரின் பிரேத பரிசோதனைக்கு சென்றிருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
#இது இலவசமாக நடத்தப்பட்ட தொண்டு நிறுவனம் அல்ல.
ஒரு முதியவரை சேர்கும்போது ரூ. 75,000 முதல் கட்டணமாகவும், ரூ. 35,000 மாத கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. இவ்வளவு பெரிய தொகையும் வெளிநாட்டு நிதியுதவியும் பெற்று நடத்தியும், மனிதர்களை சங்கிலியால் கட்டி வைக்கும் அளவிற்கு அங்கு உரிய உள்கட்டமைப்போ பாதுகாப்பு திட்டமோ செயல்படவில்லை.
இன்னும் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த நிலையம் எந்த அரச நிறுவனத்திலும் பதிவு செய்யப்படவில்லை.
தேசிய முதியோர் செயலகம், மேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களம் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் எந்த நிறுவனத்திடமிருந்தும் இவர்கள் அதிகாரப்பூர்வ அனுமதி பெறவில்லை.
சமூக வலைத்தளங்கள் மூலம் பெரும் விளம்பரம் செய்து இந்த நிலையம் நடத்தப்பட்டாலும், அரச அதிகாரிகளின் எந்தவித கண்காணிப்புக்கும் இது உட்படவில்லை என்பது அதிகாரிகளின் பாரதூரமான கடமை தவறலை காட்டுகிறது.
தன் நிலையம் எரிந்து கருகி அப்பாவி முதியவர்கள் உயிரிழக்கும் துயரமான தருணத்தில், நிலைய உரிமையாளர் பின்னர் வந்து செய்தது நம்ப முடியாதது. அவர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து தன் முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்துள்ளனர்.
இது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் அனுதாபத்தை பெற்று தீயை காட்டி மேலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது சம்பந்தப்பட்ட நிலைய உரிமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த "செனெஹசே கெதர" தங்கும் நிலையம் பற்றி விசாரணை செய்யும்போது அதன் சட்டவிரோத தன்மை தெளிவாகிறது. தேசிய முதியோர் செயலக இயக்குனர் சதுர மிஹிதும் மற்றும் உதவி இயக்குனர் கூற்றுப்படி, இந்த நிலையம் தேசிய முதியோர் செயலகம், மாற்றுத்திறனாளிகளுக்கான செயலகம் அல்லது மாகாண சமூக சேவைகள் திணைக்களம் எதிலும் பதிவு செய்யப்படவில்லை. 5 பேருக்கு மேல் தங்க வைத்தால் 2000ம் ஆண்டு 09ம் இலக்க சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு 05ம் இலக்க திருத்த சட்டப்படி அதை பதிவு செய்வது கட்டாயம்.
மில்லனிய பிரதேச செயலகம் பல முறை இந்த நிலையத்தை பதிவு செய்யுமாறு நிலைய பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தியும், அவர்கள் அதை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டனர். பகுதி மக்களும் இங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள் பற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையத்தின் உரிமையாளர் 38 வயதான இசுரு அனுஷ்க பெரேரா என்ற 'லொகு அய்யா', இதை வெறும் பணம் சம்பாதிக்கும் மோசடியாக மாற்றியிருந்தாக சிலர் கூறியுள்ளனர். வசிப்பவரை சேர்கும்போது ரூ. 75,000 முதல் பதிவு கட்டணமும், மாதம் ரூ. 35,000ம் பொறுப்பாளர்களிடமிருந்து வாங்கினார்.
இதுதவிர மருத்துவ சிகிச்சைக்கு என்று கூறி அவ்வப்போது ரூ. 20,000-30,000 வரை பெரும் தொகையும் வாங்கியுள்ளார். சமூக வலைத்தளம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு, பிரபல கலைஞர்களை கூட அழைத்து வந்து இந்த இடத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக உலகிற்கு காட்ட அவர் முயன்றார். அதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு தானவான்களிடமிருந்தும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் லட்சக்கணக்கில் நிதியுதவி பெற்றுள்ளார்.
அவருக்கு சொந்தமான இதேபோன்ற அனுமதியற்ற நிலையங்கள் இன்னும் 3-4 களுத்துறை தெற்கு, கொலம்பவத்த, சேருபிட்ட, கல்பாத பகுதிகளில் உள்ளதாகவும் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவத்தில் 10 உடல்கள் சம்பவ இடத்திலேயே கண்டெடுக்கப்பட்டன. அதில் 9 பெண்கள் உடலும், 1 ஆண் உடலும், தீயில் சிக்கிய பூனையின் உடலும் இருந்தன. கடுமையான தீக்காயங்களுடன் ஹொரண மற்றும் கல்பாத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 8 பேரில் 2 பேர் பின்னர் இறந்தனர். இதன்படி மொத்த இறப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
மேலும் 6 பேர் தொடர்ந்து ஹொரண ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பாற்றப்பட்ட 51 பேரை முதலில் படகொட ஆரம்ப பாடசாலையில் தங்க வைத்து, பின்னர் இலங்கை இராணுவம் மற்றும் அங்குருவாடதொட்ட பொலிஸ் தலையீட்டில் அவர்கள் கல்பாத பகுதியில் உள்ள வேறொரு நிறுவனத்திற்கும் கதிர்காமம் அரச முதியோர் தங்கும் நிலையத்திற்கும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தன் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று தேடி நாடு முழுவதிலிருந்தும் மக்கள் நிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். மொரகஹேன மற்றும் அம்பலன்கொட பகுதிகளிலிருந்து வந்த உறவினர்கள், தாம் பெரும் தொகை கொடுத்து தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இங்கு தங்க வைத்ததாக கூறினர்.
சம்பவம் தொடர்பாக அங்குருவாடத்தொட்ட பொலிசார் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நிலைய உரிமையாளர் இசுருஅனுஷ்க பெரேரா இலங்கை தண்டனை சட்ட கோவை 298வது பிரிவின்படி அலட்சியமாக செயல்பட்டு மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரண நீதவான் லக்மினிவிதானகமகே சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை நடத்தி, சந்தேக நபரை ஜூன் 11ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
களுத்துறை பிரிவு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் பத்மினி ரணவக்க மற்றும் பாணதுறை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சில்வா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் விசாரணைகள் நடக்கின்றன. ஹொரண மாவட்ட பொது மருத்துவமனையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி சந்தகன்வடுகே மரண பரிசோதனை செய்கிறார்.
இந்த தீ விபத்திற்க்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நீர் மோட்டாரின் மல்டி பிளக்கில் ஏற்பட்ட மின் கசிவு அல்லது கொசு வலையில் தீ பிடித்து பின் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இது நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அரச பகுப்பாய்வாளர்கள் மற்றும் பாணதுறை பிரிவு குற்றச் சம்பவ இட பரிசோதனை அதிகாரிகள் மேலதிக விசாரணை செய்து வருகின்றனர்.
05/06/2026
ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் வீட்டில் பகற்கொள்ளை!
விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு!
மர்சூக் எம். சல்பி-
சிரேஷ்ட ஊடகவியலாளர் அஸ்லம் எஸ். மௌலானாவின் வீட்டில் இடம்பெற்ற பகற்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Follow importmirror.com
சம்பவம் ஒன்றில் காயமடைந்த தமது மகனை வைத்தியசாலையில் அனுமதித்து, அவருடன் பெற்றோர் தங்கியிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் விளையாட்டு மைதான ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கால்பந்து கோல் போஸ்ட் ஒன்று இடைவேளை நேரத்தில் சாய்ந்து விழுந்ததால் தரம் 09 இல் கல்வி கற்கின்ற ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவின் மூத்த புதல்வர் ஆஷிப் மௌலானா என்பவரது வலது காலில் முறிவு ஏற்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார்.
மறுநாள் 26 ஆம் திகதியன்று ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானாவும் அவரது மனைவியும் வைத்தியசாலையில் தங்கியிருந்து தமது மகனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான முன்னாயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் வீட்டில் எவருமில்லாத நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இரவு 7.00 மணியளவில் சாய்ந்தமருது அல்ஹிலால் வீதி, ஜின்னா லேனில் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்ததை ஊடகவியலாளர் அஸ்லம் மௌலானா அவதானித்துள்ளார்.
இதன்போது வீட்டின் பின்பக்கமாக அமைந்துள்ள குடியிருப்பாளர்கள் அற்ற வீடு - வளவு வழியாக இவரது வீட்டின் பின்பக்கமாகவுள்ள சமையலறைக் கதவுகளை உடைத்து உள்நுழைந்துள்ள திருடன் படுக்கையறை மேசையில் இருந்த லெப் டொப் ஒன்றையும் படுக்கையறையில் உள்ள அலுமாரியை உடைத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் பெண்ட்ரைவ் இரண்டையும் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமைக்கு அமைவாக, பொலிஸார் பல தடவைகள் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதியிலுள்ள CCTV காட்சிகளைப் பரீட்சித்து வருகின்ற அதேவேளை, தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவின் விஷேட குழுவொன்றும் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
05/06/2026
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக நன்கொடையாளர்களுடனான சந்திப்பு
சியாத்.எம்.இஸ்மாயில்,
பட உதவி : கே.மாதவன்-
Follow importmirror.com
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நன்கொடையாளர்களை வரவேற்கும் "டொனஸ் நைட்" நிகழ்வு நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில், வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கு நிதிப்பங்களிப்புச் செய்யவிருக்கும் நன்கொடையாளர்களை வரவேற்கும் நிகழ்வு 'நன்கொடையாளர்கள் இரவு' எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தவிசாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி றாசி முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர்.ஏ.பி.மசூத் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயலாளரும் திட்டமிடல் வைத்திய அதிகாரியுமான டொக்டர்.ரீ.எம்.றியாஸ், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம்.ஏ. காதர், வைத்தியர்கள்,வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், புத்திஜிவிகள், நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கலைக்கு மொழி ஒரு பொருட்டே இல்லை என்பதை காண்பித்த மாணவி.
Follow me importmirror.com
சீன கலாசார நடனத்தில் மேடையை அதிரவைத்த கிழக்கு மாகாண மாணவி கல்முனையைச் சேர்ந்த பாத்திமா ஹயாமா தமீம்!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Addalaichenai
Ampara
32350.