Topone
TV Channel
28/08/2026
‘தனிநபர் முயற்சியை விட கூட்டு பங்களிப்பே முக்கியம்’ – சம்மாந்துறையில் அஸ்மி யாசின்.
(மின்மினி மின்ஹா - சம்மாந்துறை செய்தியாளர்)
சம்மாந்துறையில் ‘யாவருக்கும் உறையுள்’ எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட 16ஆவது வீடு பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை வீரமுனை வட்டார பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருமான அல் ஹாஜ் ஜ.எல்.எம். மாஹிர் மற்றும் OCD அமைப்பின் தலைவரும் விஞ்ஞான முதுமானியும் சமூக சேவையாளருமான அஸ்மி யாசின் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றிய அஸ்மி யாசின், பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சமூக ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் அவசியம் எனத் தெரிவித்தார்.
தனிநபர் முயற்சிகளைக் காட்டிலும் சமூகத்தின் கூட்டு பங்களிப்பும், பரஸ்பர ஒத்துழைப்பும் தொடர்ச்சியான மக்கள் நலப் பணிகளுக்கு வலுசேர்க்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வீடமைப்பு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேலும் பல மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். ஜிப்ரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எம்.ஏ. காதர், தவிசாளர் மாஹிரின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப்(ஆசிரியர்), வை.பீ.எம். ஜலீல், எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் உள்ளிட்டோரும், OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்க ளும், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
04/08/2026
மாணவத் தூதுவர் திட்டம் எதிர்கால நல்ல குடிமக்களை உருவாக்கும் முதலீடு –
மாநாட்டில் மின்மினி மின்ஹா.
(ஜலீல் ஜீ)
"மாணவத் தூதுவர் திட்டம் வெறும் நிர்வாக நடவடிக்கையாகக் கருதப்படக் கூடாது. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டம், எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக அமைய வேண்டும்" என சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் தரம் 10 மாணவ தூதுவரும், இளம் சுற்று - சூழலியல் செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா தெரிவித்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அம்பாறையில் 04 செவ்வாய்க்கிழமை அம்பாறை கச்சேரி ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவத் தூதுவர் மாநாட்டில் உரையாற்றிய ஒரேஒரு மாணவியாகப் பங்கேற்ற அவர், மாணவர் தலைவர்கள் தமது பொறுப்புகளை தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்படுவதுடன், மாணவர்களிடையே விழிப்புணர்வையும் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்க்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
புதிய மாணவர் தலைவர்கள் நியமிக்கப்படும் போது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தயக்கம், திட்டங்கள் குறித்த தெளிவின்மை மற்றும் மாணவர்களிடையே போதிய புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் பல்வேறு சவால்கள் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சில பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களும் உயரிய பண்புகளும் பலவீனமடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றை மேம்படுத்த ஆசிரியர்களின் வழிகாட்டலும் தொடர்ச்சியான ஆலோசனைகளும் இன்றியமையாதவை என்றார்.
அம்பாறை மாவட்ட ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கங்களை நடைமுறைப்படுத்தினால், பாதுகாப்பானதும் ஒழுக்கமிக்கதுமான சிறந்த பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என்றும் மின்மினி மின்ஹா வலியுறுத்தினார்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ். ஜெயராஜன், ஜனாபா பானு ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திருமதி தாயாணி கமக்கே கௌரவ அதிதியாகவும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 102 தமிழ், சிங்கள,முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைமைத் தூதுவர்கள் மாநாட்டில் பங்கேற்று, மாணவர் தலைமைத்துவம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டனர்.
04/08/2026
ஒரே முகாமில் 482 பேருக்கு கட்புரை சத்திரசிகிச்சை.
( மின்மினி மின்ஹா - வைத்தியசாலை வளாகத்திலிருந்து )
கிழக்கு மாகாணத்தின் மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லாகக் கருதப்படும் மாபெரும் இலவச கட்புரை சத்திரசிகிச்சை முகாம், இலங்கை கண் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் "Gift of Vision" (பார்வைப் பரிசு) தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டீ. பிரபாஷங்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாம், கண் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் குஷான் வட்டுவங்கல மற்றும் திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர். நியாஸ் அஹமட் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 500 நோயாளிகள் இம்முகாமிற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 482 பேருக்கு இலவச கட்புரை சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, பார்வையை மீட்டெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இச்சத்திரசிகிச்சைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த அனுபவமிக்க கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
முகாமை முன்னிட்டு தேசிய கண் வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை, அக்கரைப்பற்று, கல்முனை மற்றும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலைகளிலிருந்து மேலதிக மருத்துவ ஆளணி, சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள், மாணவத் தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து சேவையாற்றினர்.
மேலும், டாக்டர் ஏ. இஸ்ஸடீன் தலைமையிலான சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் முகாமின் ஒருங்கிணைப்பு மற்றும் நோயாளிகளுக்கான வசதிகளை மேற்கொண்டனர்.
அத்துடன் HelpAge Sri Lanka, லயன்ஸ் கழகம் – கோல்டன் சிட்டி ஒப் சம்மாந்துறை, மர்யம்ஸ், நஜா ரெசிடென்ஸ், பாரூக் எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட அனுசரணையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
முகாமின் நிறைவில் கண் மருத்துவ நிபுணர்கள், மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது
08/07/2026
சம்மாந்துறையில் சிவில் நீதிமன்றம் அமைக்க பிரதேச சபையில் ஏகோபித்த ஆதரவு கோரிக்கை; மக்களின் நீண்டகால தேவையை வலியுறுத்திய உறுப்பினர் காலித்.
(மின்மினி மின்ஹா + ஜீ )
சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது சபையின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர்- கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட, சம்மாந்துறையில் சிவில் நீதிமன்றம் ஒன்றை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் பிரேரணையை தவிசாளர் சபையில் முன்வைத்தார்.
அந்தப் பிரேரணை தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் (ACMC), சம்மாந்துறையில் சிவில் நீதிமன்றம் நிறுவப்படுவது காலத்தின் தேவையாக மட்டுமல்லாது, சுமார் இரண்டரை இலட்சம் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகவும் இருப்பதாக வலியுறுத்தினார்.
தற்போது சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிவில் வழக்குகளுக்காக கல்முனை நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் போக்குவரத்துச் செலவு, நேர விரயம், அன்றாட வருமான இழப்பு மற்றும் குடும்பச் சிரமங்கள் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு மற்றும் நாவிதன்வெளி (சொறிக்கல்முனை 1, 2, 3 நிர்வாகப் பிரிவுகள் உட்பட) ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும், சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு மற்றும் சவளக்கடை ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன என்றும், இப்பிராந்தியத்தில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் வாழ்ந்தாலும் இதுவரை ஒரு சிவில் நீதிமன்றம் இல்லாதிருப்பது கவலைக்குரிய நிலை எனவும் அவர் தெரிவித்தார்.
வளத்தாப்பிட்டி மற்றும் அட்டப்பள்ளம் போன்ற தொலைதூர பகுதிகளிலிருந்து கல்முனை நீதிமன்றத்திற்குச் செல்ல நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருப்பது முதியவர்கள், பெண்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"நீதி தாமதிக்கப்பட்டால் அது மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்" என்ற நீதிக் கொள்கையை நினைவூட்டிய அவர், மக்களுக்கு நீதியை அருகில் கொண்டு சேர்ப்பது அரசின் பொறுப்பாகும் என்றார்.
மேலும், மக்கள் தொகை, கல்வி, வர்த்தகம் மற்றும் நிர்வாக முக்கியத்துவம் ஆகிய துறைகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சம்மாந்துறையில் சிவில் நீதிமன்றம் நிறுவப்படுவதன் மூலம் நீதிச் சேவை எளிதாகக் கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சி, வணிக நடவடிக்கைகள், முதலீடுகள், அரச சேவைகள் மற்றும் பிரதேச சபையின் வருமான உயர்வுக்கும் அது பங்களிப்புச் செய்யும் என அவர் தெரிவித்தார்.
இப்பிரேரணைக்கு அரசியல், இன மற்றும் மத வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இந்தத் தீர்மானம் சம்மாந்துறை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானமாக அமைய வேண்டும் என்றும் உறுப்பினர் ஏ.எச்.எம். காலித் வலியுறுத்தினார்.
15/06/2026
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராகக் கடமையாற்றும் ATM ராபி அவர்கள் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இவருக்கான நியமனத்தை இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடகாலமாக உள்ளுராட்சி ஆணையாளர் பதவிக்கு நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் பதில் உள்ளுராட்சி ஆணையாளராக விவசாய அமைச்பின் செயலாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
24/05/2026
இரண்டு நாட்களுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் "ஒலுவில் துறைமுகம் எந்தவித விஞ்ஞான ஆய்வுகளும் இன்றி தலைவர் அஷ்ரப் அமைச்சராக இருந்தார் என்பதற்காக மட்டுமே கொண்டு வந்தார்" என்று காலம் காலமாக JVP செய்து வரும் (Conspiracy Politics) பழி போடும் அரசியலினை மீண்டும் அரங்கேற்றியுள்ளார் ஜனாதிபதி.
தலைவர் அஷ்ரப் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல அவர் ஒரு சமூகத்தினை அரசியல்மயப்படுத்தி, தனித்த அடையாளம் கொடுத்த உன்னத தலைவர், அந்த அரசியலை முன்னெடுத்ததற்காகவே சதி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர்,
தன் சமூகத்தின் விடுதலைக்காக தன் உயிரையே தியாகம் செய்த மாமனிதர், அப்படியான மகத்தான தலைவனின் வெற்றிடமே NPP போன்ற கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை சூரையாடுவதற்கான அரசியல் அறிவில்லாத சமூகம் உருவாக காரணமாக உள்ளது.
தலைவர் அஷ்ரப் 1994 - 2000 வரை துறைமுகம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக இருந்தார், அந்த நேரம் அவர் சார்ந்த பிராந்தியத்தில் ஒரு துறைமுகத்தினை அமைப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம், தொழில்வாய்ப்புகள் உருவாக்கம் என பல்வேறு நன்மைகளினை கருதி இந்த திட்டத்தினை கொண்டு வந்தார்.
இங்கு விஞ்ஞான ஆய்வு செய்வது அமைச்சரா? அல்லது குறித்த கட்டுமானம் செய்யும் நிறுவனமா? அல்லது அமைச்சின் அதிகாரிகளா? அல்லது கடல்சார் விஞ்ஞான ஆய்வு செய்வதற்கான தொழில்நுட்பம் அந்த நேரம் (2000 இற்கு முன்னர்) இலங்கையில் இருந்ததா?
இத்தனைக்கும் இந்த துறைமுகம் தலைவர் மரணித்து 8 வருடங்களுக்கு பின்னர் கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு 2013 இல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்த பல ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இயங்கியது. (படத்தில் உள்ளது)
இந்த நிலையில் தலைவர் அஷ்ரப் விஞ்ஞான ஆய்வு செய்யவில்லை என்பது எப்படியான அரசியல் பழிவாங்கும் கதை?
சரி அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் நாட்டிற்கு 5000 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதே, இத்தனை தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ள காலப்பகுதியில் நீங்கள் ஏன் விஞ்ஞான ஆய்வு செய்யவில்லை, அக்கரைப்பற்று மாநகர சபையே முன் ஆயத்தங்களை செய்து வெற்றிகரமாக அனர்த்த முகமை செய்தது.
ஆனால் முழு நாடும் உங்களுடைய விஞ்ஞான ஆய்வு இன்மையால் 5000 கோடி நஷ்டமடைந்ததே அதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? அல்லது அந்த அனர்த்தத்திற்கு பல மாதங்கள் கழித்து இப்போது பெய்யும் மழையில் புத்தளம் நகரம் வெள்ளத்தில் மிதக்கிறதே அது உங்களுடைய விஞ்ஞானக் குறைபாடு இல்லையா?
இந்தனைக்கும் JVP எனும் யாரும் தீண்டாத கட்சியில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும் என்றால் அது தலைவர் அஷ்ரப் கொண்டுவந்த தேர்தல் வெட்டுப்புள்ளிதான் (12.5% இலிருந்து 5% ஆக) ஏக காரணம். அதனாலேயே JVP பாராளுமன்ற கதவை காண முடிந்தது என்பதை நீங்கள் மறந்திருக்கலாம்,
இதாவது பரவாயில்லை அந்த மனிதன் 1976 இல் புத்தளம் பள்ளிவாயல் தாக்குதலில் எந்த தேசிய கட்சிகளும் முஸ்லிம்களுக்காக பேசவில்லை, முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க தனியான அரசியல் இயக்கம் தேவை என 1981 இல் முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி அதன் விளைவாகவே உயிரை மாய்த்தார் ஆனால் நன்றி அற்ற இந்த சமூகம் நீங்கள் இப்படி பேசிய பிறகும் உங்கள் கைகளை தொட்டுப்பார்க்க அலைந்தார்களே இப்படியான கேவலங்கெட்ட சமூகத்திற்காகவா தலைவர் தன் உயிரை தியாகம் செய்தார் என எண்ணத் தோன்றுகின்றது.
இது ஒரு புறம் தேர்தல் காலங்களில் மட்டும் அந்த மனிதனின் படத்தை பாவித்து வாக்கு பிச்சை எடுக்கும் நாதாரிகளாவது வாய் திறக்கவில்லையே?
எல்லாம் காலக் கொடுமை...@
06/05/2026
#நன்றி_மறந்தார்களா_மக்கள்
04/04/2026
#வரிப்பத்தான்சேனை_பெரியபாலம் #ஒளியூட்டல்_நீண்டகால_கோரிக்கைக்கு #தீர்வு_தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_அதிரடி
#றௌசான்_சிறாஜூன்
வரிப்பத்தான்சேனை பகுதியில் அமைந்துள்ள இறக்காமம் பிரதேச சபையின் நுழைவாயிலாக விளங்கும் பெரியபாலம் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒளியூட்டல் குறைபாடு தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சின் “நகரங்களை அழகுபடுத்தல்” திட்டத்திற்காக இறக்காமம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்ட மின்குமிழ்களில் கீழ் இந்த ஒளியூட்டல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இறக்காமம் பிரதேச சபை தலைவர் கௌரவ எம்.எல்.எம். முஸ்மி அவர்களின் வழிகாட்டலில், முன்னாள் உதவி தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான என்.எம். ஆஷீக் மற்றும் உறுப்பினர் ஏ.ஜி.எம். சாக்கீர் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவி செய்த உதவி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் வரிப்பத்தான்சேனை பிரதேச மக்கள் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம், இரவு நேரங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பும், பகுதியின் அழகும் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
23/03/2026
Assalamualaikum warahmathuullah wabarakathu
dear Bro and Sisters
#கலாநிதி_றவூப்_செய்னின் புத்தக வெளியீடும், சொற்பொழிவும் - #அழைப்பிதழ்.
இன்ஷாஅல்லாஹ்
எதிர்வரும் 25.03.2026 புதன் கிழமை மாலை 3.45 க்கு கலாநிதி. ரவூப் ஸெய்ன் (நளீமி) அவர்களின் 71 வது நூலான
"இலங்கை முஸ்லிம்களின் பல்கலைக்கழக கல்வி"
எனும் புத்தக வெளியீடும் விஷேட சொற்பொழிவும் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இதில் அனைவரும் கலந்து சிறப்பிக்கவும். இதுவொரு திறந்த அழைப்பாகும். விஷேடமாக எமதூர் பிரமுகர்கள் பெருமனம் கொண்டு ஏற்று வருகை தரவும்.
புத்தகமொன்றின் விலை 1500/-
(அன்பளிப்பாக மேலதிகமாக செலுத்தியும் புத்தகத்தைப்பெற்றுக் கொள்ள முடியும்)
அல்லாஹ் எம் அனைவரினதும் நல்லமல்களை ஏற்று அங்கீகரிப்பானாக
03/02/2026
#இறக்காமம்_பிரதேச_சபையினால் #இலங்கையின்78_ஆவது_சுதந்திர_தின #நிகழ்வு_குளக்கரை_காட்சி_மைதானத்தில்
2026.02.03
இறக்காமம் பிரதேச சபையினால் இலங்கையின் 78 ஆவது சுதந்திரதின நிகழ்வு குளக்கரை காட்சி மைதானத்தில் இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எல்.முஸ்மி தலைமையில் கௌரவ உப தவிசாளர் கௌரவ உறுப்பினர்கள், ஊழியர்களின் பங்கு பற்றுதலுடன்
தோணி ஓட்டமம்
கிரிக்கட் சுற்றுப்போட்டி
மற்றும் பல நிகழ்வுடன் சிறப்பாக. இடம்பெற உள்ளது உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்
Category
Contact the business
Telephone
Website
Address
Irakkamam
Ampara
32450
Alerts
Be the first to know and let us send you an email when Topone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.