SenthilVel

SenthilVel

Share

State Executive Member,
Bharatiya Janata Party
Tamilnadu

28/11/2025

சமூக வலைத்தளங்களில்

அரசியல் விமர்சன வியாபாரிகளின்
பல கருத்து திணிப்பு யாதெனில்

பாஜக வை நம்பி போனவர்கள் கதி இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது
ஏற்கனவே பன்னீர்செல்வம் தினகரன் இன்று செங்கோட்டையன் என பாஜக விற்கு எதிராக ஒரு நேரட்டிவ் செட் செய்ய வாங்கிய காசுக்கு கூவி கூவி பேசுகிறார்கள்

இங்கு இருக்க கூடிய அத்துனை அரசியல் கட்சிகளுக்கும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வரவில்லை

பாஜக 1952 ல் இருந்து அரசியல் களத்தில் உள்ளது
அதன் தலைவர்கள் பலர்
நூற்றாண்டு கண்ட ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி பட்டறையில் பயின்றவர்கள்

நீங்கள் படித்த அரசியல் கட்சி பள்ளிக்கூடத்தில் பாஜக ஒரு ஹெட்மாஸ்டர் என்பதை அறியாமல் தெரியாமல் கம்பு சுத்தி வருகிறார்கள்

(பாஜக விற்கு தமிழகத்தில் மக்கள் ஆதரவு படிப்படியாக அதிகரித்து வருகிறது )

உலக அரசியலை மோடி ஜி அவர்களும்
உள்ளூர் அரசியலை அமித்ஷா அவர்களும் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வருகிறார்கள்

( இவர்கள் போன்ற எக்கச்சக்க தலைவர்கள் உள்ள கட்சி)

(லெஃப்ட் ஹேண்ட்ட டீலே இப்படி என்றால் ரைட் ஹேண்ட டீல் பயங்கரமா இருக்கும் பலமாக இருக்கும் )

தமிழக அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்

பாஜக
முற்றும் துறந்த முனிவர்கள் அல்ல

பாஜக அவியல் செய்ய வரவில்லை பாஜக அரசியல் செய்யும்

பாஜக ஆட்சிக்கு வர எதையும் செய்யும்

பாஜக திமுக வை வீழ்த்த எல்லாவற்றையும் செய்யும்

பாஜக ஒரு கண்ணாடி கட்சி

நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ
அப்படி இருப்பது போல் தோன்றும்

தமிழக அரசியல் கட்சிகள் எந்த ஆயுதத்தை கையில் எடுத்தாலும் அதை அசால்ட்டாக கையாளும் திறன் பாஜக விற்கு உள்ளது

ஒரு பக்கம் எடப்பாடியாருடன் கூட்டணி உறுதி அதே சமயம் அதன் அதிருப்தி தலைவர் சந்திப்பு
பிரிந்து போனவர்களுடன் தொடர்பு என பல அவதாரங்கள் எடுப்பது தமிழகத்தில் திமுக வை வீழ்த்த வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோள் தான்

பாஜக டெல்லி டீலிங் ஒரு சாம்பிள்

வட கிழக்கு மாநிலத்தில் ஒரு கட்சியுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடத்திய பாஜக தேர்தல் அறிவிப்புக்கு பிறகு அந்த மாநிலத்தின் எதிர்கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது வெற்றியும் பெற்றது வெற்றிக்கு பிறகு அந்த இரண்டு கட்சிகளும்
பாஜக வுடன் மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தது

நிற்க ‌

தலைமுறை மாறி வருகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
இன்னும் பெரியார் அண்ணா
எம் ஜி ஆர் என்ற பெயரை வைத்தும் மதச்சார்பற்ற பாசிச என பாசாங்கு காட்டியும் அரசியல் செய்ய முடியாது

இன்றைய தேதியில் பாஜக நிர்வாகத்தில் உலக அரங்கில் இந்தியா பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது மட்டுமல்ல பல்வேறு விஷயங்களில் நமது நாட்டின் கையே ஓங்கி வருகிறது

எனவே தமிழகத்தில் அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்களின் வழிகாட்டலில் 2026 ல் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் ஆட்சி கட்டிலில் அமரும் பாஜக தொண்டர்கள் ஆதரவாளர்கள் நாம் அனைவரும் மக்களிடையே திமுக ஆட்சியின் அவலநிலையை திராவிட மாடலின் அலங்கோலத்தை தின்னை பிரச்சாரம் போல் எடுத்துரைப்போம்

தேர்தல்
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு கூட கூட்டணிகள் மாறலாம் சேரலாம்
மக்கள் மனதை மயக்கும் வகையில் புது புது நேரட்டிவ் செட் செய்யலாம்
எனவே இப்போது வெளிவரும் வெற்று கூச்சல்களுக்கு வேல்யூ இல்லாமல் போகும்

தமிழகம் தலை நிமிர
தமிழனின் பயணம்
வெற்றி பெறும்

29/10/2025

பாண்டவர்கள் வந்து திரும்பிய
திருப்பூரில் துவங்கிய பயணம்...
பாண்டவர்கள் படைத்த
இந்திரப்பிரஸ்தமான
டெல்லி வரை சென்றது...

பிறந்த ஊருக்கு
புகழையும் பெருமையையும் சேர்த்த
நம் மண்ணின் மைந்தர்...

18/10/2025

அதர்மம் செய்த
அரக்கனை வதம் செய்து மக்களை பாதுகாத்த
திருநாள்
தீபாவளி பெருநாள்..!!

இந்த நல்ல நாளில்
நம் ஒவ்வொருவரின்
சொல் செயல்
தர்மத்திற்கே என உறுதிப்பாட்டுடன்...

அனைவருக்கும் இனிய தீபாவளி பண்டிகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.!!

16/08/2025

அனைவருக்கும்
இனிய
கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

09/08/2025

சகோதரிகள்
சகோதரர்கள்
அனைவருக்கும்
இனிய ரக்ஷாபந்தன்
நல் வாழ்த்துக்கள்

Photos from SenthilVel's post 23/06/2025

மதுரையில் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடு
சங்கிகள் மாநாடு
அரசியல் மாநாடு
என ஆயிரம் பெயர் சொன்னாலும்,

இந்து முன்னணி பேரியக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக இந்து இயக்கங்கள் வரலாற்றில் ஒரு தனி முத்திரையை பதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கூட்டு முயற்சியின் வெற்றிக்கு அளவுகோல்
இந்த முருக பக்தர்கள் மாநாடு..

தமிழகத்தில் இனி
இந்து மதத்தையோ,
இந்து கடவுள்களையோ
இனி யாரும் இழித்தும் பலித்தும் பேசுவதற்கு எண்ணிப்பர்க்கக் கூட துணியக் கூடாது என எச்சரிக்கை செய்யும் மாநாடு,
இந்த முருக பக்தர்கள் மாநாடு..

சரி மாநாட்டு விஷயத்திற்கு வருவோம் ....

மாநாட்டு பந்தலிலே ஆறுபடை வீடுகளை அமைத்து

தினசரி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து

பொதுமக்கள் தரிசனம் செய்து வந்த நிகழ்வு என்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்..

அதிலும் குறிப்பாக;

மூன்று மாநில கவர்னர்கள்
பல்வேறு சமூக தலைவர்கள் துறவியர் பெருமக்கள்
அரசியல் பிரமுகர்கள் தொழிலதிபர்கள்
முருகன் மீது நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய உள்ளூர் முருக பக்தர்கள்
என தினசரி லட்சக்கணக்கானோர் ஆறுபடை வீட்டை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டு வந்தது உள்ளபடியே தமிழ் கடவுள் முருகப்பெருமான் எந்த அளவிற்கு இந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அருள் பாலித்திருக்கிறார் என்பதற்கு ஒரு உதாரணமாகும்

நேற்றைய தினம் மாநாடு ஏற்பாடுகள் ஏதோ மாநாடு என்றால்
கூடுவது பேசுவது என்றில்லாமல்

5 லட்சம் பேர் கந்த சஷ்டி கவசம் பாடியது
நிறைவில்
மகாதீப ஆராதனை
மாநாட்டின் தீர்மானம்
மாநாட்டின் உறுதிமொழி
தலைவர்களின் சிறப்புரைக்கு தேர்ந்தெடுத்த தலைப்புகள்

மாநாட்டில் முருக பக்தர்களுக்கான ஒரு பக்தி இசை நிகழ்ச்சிகள்

இதையெல்லாம் விட இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல இந்து முன்னணி பற்றிய ஒரு ஏ.வி காணொளியை காட்சி ஒன்று மிகவும் சிறப்பாக அதிலும் குறிப்பாக இந்துக்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்த
வீர துறவி ஐயா ராமகோபாலன் ஐயா அவர்களுடைய உரை என்பது இந்த மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்தது

மேலும் தமிழகத்தில் இந்து முன்னணி இயக்கமானது இந்துக்களுக்காக செய்து வரக்கூடிய பணிகளை திருக்குறள் போல இந்த சிறிய காணொளி மூலம் தெளிவாக விளங்க வைத்தது

மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்
அன்பு சகோதரர் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திரு.ராஜேஷ் அவருடைய ஒருங்கிணைப்பு நல்ல முறையில் இருந்தது

தொண்டர்களுக்கு விடுக்கும் கோரிக்கை
ஏற்பாட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
தலைவர்கள் பேச அழைப்பது தலைவர்கள் பேசி முடித்தவுடன் அதற்கு தரும் விளக்க உரை
என ஒரு நேர்த்தியாக இருந்தது

ஒரு மாநாட்டில் தலைவர்களுடைய சிறப்பு என்பது மிகவும் ரத்தின சுருக்கமாகவும் தெளிவாகவும் ஆழமான கருத்துக்களையும் எடுத்து வைத்தது எடுத்து வைத்தது..

குறிப்பாக,
தலைமையுரை
40 ஆண்டுகால இந்து இயக்கங்களுக்காக பணியாற்றி வரும் இந்துக்களின் பாதுகாவலர் திரு.காடேஸ்வர சுப்ரமணியம் அவர்கள்
இந்த அரசாங்கம்
இந்த மாநாட்டிற்கு செய்த இடையூறு, தொந்தரவு
மற்றும்
நெகடிவ்ஸ் பேசிய திமுக அமைச்சர்கள் பேச்சு மாநாட்டிற்கு பாசிட்டிவாக இருந்தது என சுட்டிக்காட்டி பேசினார்கள்..

கனிமொழி அம்மா அவர்கள்
விடுதலை போரில் பெண்கள் குறித்து அதிலும் வீரத்திருமகள் குயிலி அவர்களை பற்றியும்
போற்றுதலுக்குரிய காரைக்கால் அம்மையார் பற்றியும் பேசியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொதிகை தென்றல் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் திருக்குறள் இரண்டடி என்பதை காட்டிலும் ஆத்திச்சூடி ஒரு வரியில் கருத்துக்களை சொல்வது போல ஞானப் பழத்தை பெற முருகர் உலகைச் சுற்றி வருவதற்குள் விநாயகர் தாய் தந்தையை சுற்றி ஞானப்பழத்தை பெற்றது போல மிக ரத்தின சுருக்கமாக ஒரு அற்புதமான ஒரு பாடல் மூலமாக முருக பக்தர்கள் மாநாட்டு உரை அமைந்தது..

இந்து முன்னணியின் தென்பாரதஅமைப்பாளர்
திரு.பக்தன் ஜி அவர்கள் அரசியல் பேசக்கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை வைத்திருந்தாலும் கூட அரசியல் பேசாமல் மாநாட்டை பற்றி சிறப்புரையாற்றியது அதிலும் மழைத்துளி என்பது
ராமகோபாலன் ஜி மற்றும் ராஜகோபாலன் ஜி ஆகியோர் கண்ணீர் துளி என துவங்கி பஞ்ச் வைத்தார்கள்.,

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தென் பாரத தலைவர் பேராசிரியர் திரு.வன்னிய ராஜன் அவர்கள் இந்த சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நம்மில் இருந்து துவங்க வேண்டும் என்று அழகாக ஆர்எஸ்எஸ் நூற்றாண்டின் செய்தியாக சிறப்பான ஒரு சிறப்புரை தந்தார்கள் ..

இளம் சிங்கம்
இளைஞர்களின் எழுச்சி நாயகன் முன்னாள் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்கள்
வழக்கம்போல அதிரடி சரவெடியாக பல்வேறு தரவுகளை வைத்து ஒரு சமுதாயம் தனது வாழ்வியலை காப்பாற்ற எந்த அளவுக்கு முயற்சி எடுக்க வேண்டும்;
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்;
ஆறுபடையை உதாரணம் காட்டி இந்த அரசாங்கத்திற்கு நேரடி எச்சரிக்கையை விடுத்து மாநாட்டின் சிறப்புரையை எழுச்சியுரையாக சிம்ம கர்ஜனை செய்தார்கள்..

நிறைவாக மாநாட்டு பேருரையாக திரு.பவன் கல்யாண் அவர்கள் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் தமிழில் பேசி
தமிழர்களை நெஞ்சத்தை வசீகரித்து
முருக பக்தர்களுக்கு
இந்துக்களுக்கு
குரல் கொடுப்பதற்கு எப்போதும் தயாராக இருப்பதாக பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்..
மிக அற்புதமான ஒரு சிறப்புரை தந்தார் திரு பவன்கல்யாண்ஜி அவர்கள்..

உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள் என்றாலும் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருந்தும் முருக பக்தர்கள் வந்திருந்தனர்..
அரசியல் கட்சியினர் பணம் கொடுத்தும் கூட கூட்டம் கூட்டுவதற்கு தினறிவரும் இந்த காலத்தில்,

சொந்த ஏற்பாட்டில் காலை மதியம் இரவு உணவு ஏற்பாடு ஊரிலேயே செய்து கொண்டு ஒரு மாநாட்டிற்கு வராமல் ஒரு பக்தி யாத்திரைக்கு ஒரு தீர்த்த யாத்திரைக்கு செல்வது போல லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தது.
கை குழந்தை
பச்சைக் குழந்தை
சிறுவர் சிறுமியர் என அனைத்து வயதினரும் குடும்பத்துடன் வந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மாநாட்டு பந்தலிலே அமர்வதற்கு இடமில்லை என்றாலும் கூட தரையில் அமர்ந்தார்கள் அறுபடை வீடு தரிசனம் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சி
இந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக அமைந்திட

களப்பணியாற்றிய சங்கிகளுக்கும்;

காவி சொந்தங்களுக்கும்;

தாமரை சொந்தங்களுக்கும்;

குறிப்பாக இந்து முன்னணி பேரியக்கத்தினுடைய முன்னணி நிர்வாகிகள்
மாதக்கணக்கில் இந்த மாநாட்டிற்காக நேரம் கொடுத்து பணியாற்றியமைக்கும்;

இந்த மாநாட்டிற்கு வழிகாட்டிய அனைத்து அதிகாரிகளுக்கும்;

எனது நெஞ்சார்ந்த மனமார்ந்த இதயபூர்வமான
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்
வணக்கங்கள்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இதுபோன்று மாநிலம் தழுவிய ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும்
என்கிற வேண்டுகோளையும் இந்த நேரத்தில் வைக்கிறேன்.

ஏனென்றால் தமிழக முழுவதும் உள்ள நமது அனைத்து சங்கி குடும்பங்கள் சந்திப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் உதவியாகவும் இருக்கும்.

வெற்றி வேல்!
வீர வேல்!
பாரத்மாதா கீ ஜெய்

என்றும் தேசப் பணியில்
பா.செந்தில்வேல்
பாரதிய ஜனதா கட்சி
திருப்பூர் வடக்கு மாவட்டம்

11/05/2025

வாய்ப்பு இருந்தும்
வலிமை இருந்தும்
காரணம் இருந்தும்

சமாதான உடன்படிக்கைக்கு செவிசாய்ப்பது

வீரத்தின் அடையாளமாக
வெற்றியின் அடையாளமாக
கருதப்படும்

ஆபரேஷன் சிந்தூர்

04/03/2025

முகநூல் வைரஸ் அழிக்கப்பட்டது

04/03/2025

எனது முகநூல் பக்கத்தில்

சைபர் தீவிரவாதிகள் ஊடுருவல்

சரியாக்க நமது அட்மின் சகோதரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்

08/11/2024

ரத யாத்திரை நாயகர்
இரும்பு மனிதர்
பாரதிய ஜனதா கட்சியின்
பீஷ்ம பிதாமகர்
அன்புக்குரிய அத்வானி ஜி அவர்களின் இந்த பிறந்தநாளில் இறைவன் அவருக்கு துணை நிற்க வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

11/10/2024

இன்றைய ஆக சிறந்த பதிவு....

Want your public figure to be the top-listed Public Figure in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Tirupur
641604