ReaderSPark
"Todays readers are tommorow's leaders"
அகம்
தூய்மையகம்
நூலகம்
அறிவு வளர்க்கும்
அற்புத இடம்
நூலகம்
பண்பாடுப் போதிக்கும்
பயனுள்ள இடம்
நூலகம்
அறவழிப்படுத்தும்
அழகிய இடம்
நூலகம்
அறிவாளிகள் இருக்கும்
அறிவார்ந்த இடம்
நூலகம்
அமைதிப் படுத்தி
மதி வளர்க்கும் இடம்
நூலகம்
விலைமதிப்பற்ற நூல்களின்
வசிப்பிடம்
நூலகம்
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்
நூலகம்
புரட்டப் புரட்ட
புத்திப் புகட்டுமிடம்
நூலகம்
எடுத்துப் படிக்க
இனிமை கூட்டுமிடம்
நூலகம்
வயது பேதமின்றி
வாசகரை உயர்த்துமிடம்
நூலகம்
சாதி மத பேதமின்றி
சமத்துவம் கற்பிக்குமிடம்
நூலகம்
அரசுப்பணி ஆட்சிப்பணி
கிடைக்கக் காரணம்
நூலகம்
கடன் கேட்காத
நல்ல நண்பன்
நூல்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
04/07/2018
for various posting in ReaderSPark
09/09/2017
வாசிக்க....தினமணி 8.9.17 PP. 8
09/09/2017
பெண்ணே நீ
உன் உயிரை மாய்த்து
உலகை விழிக்க செய்தவள்.
உன் மழலை குரலில்
உதித்த ஓர் போராட்டத்திற்கு நியாயம் நிலை நாட்டப்பட்டிருந்தால் நாளைய உலகின் பல உயிர்கள்
உதிரம் சிந்திய உன்னை போன்ற ஏழை இறைவனால் காப்பாற்ற பட்டிருக்கும்.
NEET வேண்டும் என்று கூறும் சில மாமேதைகளுக்கு ஓர் குரல்:
இங்கு பயிலும் எம் சகோதர சகோதரிகள்,
மனனம் செய்து புத்தக வரிகளை அப்படியே எழுதினால் மதிப்பெண் என்ற முறையில் பயின்று தேர்வில் வெற்றி பெற்றவர்கள்..ஆனால், மத்திய அரசின் கேள்வி முறையோ புரிதல் முறை தேர்வை அடிப்படையாக கொண்டது..
கல்வி திட்டமே தேர்விற்கு எதிராக உள்ள நிலையில்.. ஓர் ஏழை குழந்தை தன் வயிற்று பிழைப்பை காப்பற்றி கனவுகளை சுமந்து நாமும் நாளைய டாக்டர் என்ற கனவை சுமந்து தனக்கு கற்பித்த பாடத்தில் எவ்வளவு மதிப்பெண் வேண்டுமோ அதை பெற்ற பின் ..
நடுநிலை தேர்வு என்ற பெயரில் NEET தேர்வினை நடத்தி அதன் அடிப்படையில் மட்டுமே மருத்துவ படிப்புக்கு சீட்டு.. என்பது என்ன நியாயம்!
அடிமட்டத்தை உறுதி செய்த பின் கட்டிடத்தை உயர படுத்துங்கள்-இல்லையேல் உடைவது கட்டிடம் மட்டும் அல்ல..அதில் உறங்கி கொண்டிருக்கும் பல கனவுகள்
விழித்தெழு
சிவகுமார்
06/08/2017
Category
Contact the school
Website
Address
Pollachi
642003
Alerts
Be the first to know and let us send you an email when ReaderSPark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.