Target ZerO Environment Conservation Trust
Target Zer0.... Plastic Free Forest Zone.. Save Forest, Nature, Animal and Your Life...
13/11/2025
வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பின் 31 வது பணி நம் கோவை மருதமலையில் வரும் 16.11.2025 தேதி ஞாயிற்றுக்கிழமை களப்பணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறோம் 🌿
11/11/2025
டார்கெட் ஜீரோ வின் குழு மற்றும் நண்பர்கள் இணைந்து இதுவரை 27 மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து அதன் மூலம் 25 பேர் பட்டம் பெற்றனர் அதில் மூன்று மாணவர்கள் முதுகலை பட்டம். இந்த ஆண்டோடு அதன் எண்ணிக்கை 30 ஆக கூடி இருக்கிறது. இதில் மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பதை காணும் போது மகிழ்ச்சி ☘️🌿நன்றி நண்பர்களுக்கு☘️🌿
22/09/2025
ஓம் நமச்சிவாய 🕉️🔥
கடந்த 12 வாரங்களாக இந்த திருப்பணியை தொடர்ந்து கடுமையாக பல்வேறு சூழ்நிலையை சமாளித்து செய்து வருகிறார்கள்.
இதில் என்னால் மூன்று வாரம் மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை 2 வது மலையில் இருந்து 6 வது மலை வரை சுமார் 60 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பிளாஸ்டிக், மது பாட்டில்களை அகற்றி இருக்கிறார்கள். அந்த மூட்டைகளை 6 வது மலையில் இருந்து கீழே அடிவாரம் வரை சுமந்து கொண்டு வருகிறார்கள் 🔥. இதற்கு கடுமையான உடல், மன உழைப்பு தேவை அதைவிட அர்ப்பணிப்பு உணர்வு மிகவும் முக்கியமானது.
வெள்ளியங்கிரி ஆண்டவர் மலையில் களப்பணியில் கலந்து கொண்ட தோழர்களுடன்🔥🕉️ எனக்கு வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி 🍀
இயற்கைப் பணியே இறைப்பணி 🔥🕉️
15/09/2025
14/09/2025 தென் கைலாயத்தில் இயற்கையின் கரங்களோடு கரம் சேர்த்து கொண்டு இயற்கைக்கு பணி செய்தது நிம்மதியாக உள்ளது🌿☘️ ஓம் நமச்சிவாய🕉️🔥 இயற்கையும் சிவனும் ஒன்றே 🍃 அதை புரியாதவர்களே அசுத்தம் செய்வார்கள்🌱 மக்கள் உணரும் வரை நம் பணி தொடர வேண்டும் 🌱🍃 ஓம் நமச்சிவாய 🔥🕉️
05/09/2025
அனைவருக்கும் இனிய ஆசிரிய தின வாழ்த்துக்களை டார்கெட் ஜீரோவின் சார்பில் தெரிவித்து கொள்கிறேன் 💙❤️....
சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு இந்த தருணத்தில் நான் டார்கெட் ஜீரோவின் சார்பில் ஆசிரிய பெருமக்களிடம் கேட்டு கொள்கிறேன் ❤️🙏
இதுவரை ஒர் ஆசிரியனாக 185க்கும் மேல் சூழல் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு 15000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன் 💯 அதற்கான நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏
அனைத்து ஆசிரியர்களும் சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்🙏🙏🙏
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Telephone
Website
Address
Pollachi