MNM Pollachi
Official page of Maiam IT Pollachi
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் A. பாபு பிரசாத் அவர்களுடன் மய்ய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு மனு அளிக்கப்பட்டது.
#கமலஹாசன் #கமல் #மய்யம் #மநீம
Dream BIG: best ward in Tamilnadu.
Ward 35: Jothi nagar : Pollachi
07/02/2022
பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் A.பாபு பிரசாத் அண்ணன் அவர்கள் வேட்பாளர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கினார்.
19/12/2021
இன்று காலை நமது கட்சி அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் முக்கிய நிகழ்வுகள் , முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர்கள் , அமைப்பாளர்கள் , வார்டு செயலாளர்கள் , கிளை செயலாளர்கள் , நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நன்றி. நாளை நமதே🙏
05/12/2021
கோவை தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் (5.12.21) இன்று வரும் பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் போட்டியிட பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுக்கு விருப்ப மனுக்களை கோவை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு பிரசாத், குழந்தைகள் நலஅணிமாநிலச் செயலாளர் மூகாம்பிகா ரத்தினம்ஆகியோரிடம் வழங்கப்பட்டது, இதில் மாவட்ட அமைப்பாளர்கள் பஷீர், ஜெகதீஸ்வரன் மற்றும் செந்தாமரைக் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
28/11/2021
நமது அன்புத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்கள் உடல் நலம் பெற்று நலமுடன் வாழ பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோயில் சிறப்பு பூஜை மாவட்ட செயலாளர் பாபு பிரசாத் தலைமையில் நடைபெற்றது இதில் ம.பஷீர், R.ஜெகதிஸ்வரன், S.சசிகலா சண்முகசுந்தரம், மகாலிங்கம், கருப்புசாமி, பாக்கியராஜ், சிவகுமார், சர்மிளா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
21/11/2021
அனைவருக்கும் வணக்கம்.
இன்று பொள்ளாச்சி- வால்பாறை மக்கள் நீதி மய்யம் சார்பாக நமது மாவட்ட செயலாளர் திரு. பாபுபிரசாத் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது. இதில் பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர்கள் ; ஒன்றிய , ஊராட்சி செயலாளர்கள் ; நகர செயலாளர்கள் ; வார்டு , கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நன்றி🙏
12/11/2021
07/11/2021
மக்கள் நீதி மய்யம் கோவை தென்கிழக்கு மாவட்டம் (பொள்ளாச்சி-வால்பாறை) சார்பாக இன்று நம்மவர் Dr. கமல்ஹாசன் அவர்களின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தென்கிழக்கு மாவட்ட செயலாளர் A.பாபு பிரசாத் அவர்களின் ஆலோசனையின்படி,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 67 ஆண்கள் மற்றும் 67 பெண்களுக்கு வேட்டி மற்றும் புடவைகளும் மேலும் நம்மவர் துவங்கி வைத்த "ஐயம் இட்டு உண்"என்கிற திட்டத்தின்படி,அவர்களுக்கு மதிய உணவும் நம்மவரின் தொண்டன் திரு.H.செந்தாமரை கண்ணன் அவர்களால், வழங்கப்பட்டது.இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
07/11/2021
வணக்கம்,
நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நம்மவரின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நமது கட்சி ( பொள்ளாச்சி-வால்பாறை ) சார்பாக நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகள். அதன் நிகழ்ச்சிநிரல் பின்வருமாறு :
1. காலை 8 மணிக்கு நமது கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நம்மவரின் பெயருக்கு அர்ச்சனை செய்தல்.
2. காலை 9 மணிக்கு நமது கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல்.
3. காலை 10 மணிக்கு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ரொட்டி, பிஸ்கட், பழங்கள் வழங்குதல்.
4. காலை 11 மணிக்கு ஜோதிநகர் முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல்.
5. மதியம் 12 மணிக்கு பொள்ளாச்சி பஸ்நிலையத்தில் பொது மக்களுக்கு உணவு வழங்குதல்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
MAKKAL NEEDHI MAIAM
Pollachi
642001