Indiakutty

Indiakutty

Share

video creator

ஏற்றங்களில் ஏறி நின்றும்
என் வாழ்வில் ஏற்றம் மட்டும்
எட்டிப் பார்க்கவேயில்லை…

உயர உயர மரம் வளர்த்தும்
என் வாழ்வில் உயர்வு மட்டும்
உயர்வாய் இருந்ததேயில்லை…

பசுமைகள் பல படைத்தும்
என் வாழ்வில் சுமையை தவிர
பசுமையை பார்த்ததேயில்லை…

எதையும் குறையில்லாமல் நான் படைத்தும்
என்னை மட்டும் படைத்துவிட்டான்
எல்லாம் குறையாய்..

“உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது”
என்பது பலித்துக் கொண்டிருக்கிறது.

எவ்

09/06/2026

😢 யூடியூப்பை விட்டுட்டோமா? ஒரு மாதம் வீடியோ போடாததுக்கு உண்மையான காரணம் இதுதான் | IndiaKutty

07/05/2026

எங்க ORGANIC சந்தை ரெடி ! நம்ம வீட்டுத் தோட்டத்தில இது வேற Level அறுவடை😱| Organic Harvest Vlog 🌿

இன்று நம்ம வீட்டு Organic Thottathula காய்கறி அறுவடை பண்ணோம்! 🍅🌶 நம்ம வீட்டு உரம், பசுமை மரங்கள், நாட்டு விதைகள் எல்லாத்திலயும் வளர்ந்த காய்கறிகள். இந்த வீடியோல நம்ம ஒவ்வொரு அறுவடையும் எப்படி பண்ணோம்னு, என்னென்ன காய்கறி கிடைச்சுச்சுனு complete vlogல காட்டிருக்கோம்.

Watch till the end to enjoy the natural village vibes and real organic farming lifestyle 🌾🌿

27/04/2026

சோகமும் சந்தோஷமும் சேர்ந்த ஒரு நாள் 🥺❤️வீட்டுத் தோட்டத்தில் குவியும் காய்கறிகள் & குழந்தைகளுடன்
இன்றைய வில்லேஜ் வ்லாக்ல நம்ம வீட்டுத் தோட்டத்தில் இருந்து நிறையா வெண்டக்காய், பருப்புக்கீரை அறுவடை பண்ணோம் 🌿
அதோட சேர்த்து புதுசா நம்ம ட்ரை பண்ணிய garden ideas, creative grow bag setup எல்லாமே share பண்ணிருக்கோம் 😍

பக்கத்து இடத்துல இருந்த செடிகளை எடுத்துக்கிட்டு நம்ம இடத்துல மாற்றின ஒரு சின்ன சோகமான moment-மும் இருக்கு 🥺
அதுக்கப்புறம் நம்ம ஊர்ல ரொம்ப ரேர் ஆன “Tinda” வெரைட்டி கூட first time பார்த்தோம் 😱

குழந்தைகளோட ஜாலியான moments, நம்ம நாயுடன் fun scenes 🐶 எல்லாம் இந்த வீடியோல இருக்கு ❤️

👉 Village life + Organic gardening + Family moments — எல்லாமே ஒரே videoல!

நம்ம ஊரு ஸ்டைலில், இயற்கையோடு இணைந்த இந்த கிராமத்து வாழ்க்கை வீடியோ உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்!

நன்றி!
உங்கள் 'Indiakutty'

22/04/2026

சின்ன இடத்துல பெரிய Garden 😍 | Wall Garden Making + DIY Craft 🛠️🌿
நம்ம சேனலில் கடந்த வீடியோவில் பார்த்த அந்த "Wall Garden" அறுவடை வீடியோவிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு மிக்க நன்றி! அதன் தொடர்ச்சியாக, இந்த இரண்டாம் பாகத்தில் (Part-2) அந்த வலைத் தோட்டத்தை நாங்கள் எப்படி உருவாக்கினோம் என்பதை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறேன்.

இந்த வீடியோவில் நீங்கள் காண்பவை:

வலையில் தோட்டம்: வலைகளைக் கொண்டு எப்படி செங்குத்துத் தோட்டம் (Vertical Garden) அமைப்பது? மண் மற்றும் உரம் சேர்க்கும் முறை.

குட்டி பாப்பாவின் கிராஃப்ட்: தென்னை மரத்துப் பாலையை (Coconut Spathe) வைத்து எங்களது குட்டிப் பாப்பா செய்த அழகான DIY கைவினைப் பொருட்கள்.

இயற்கை வாழ்வியல்: கிராமத்து சூழலில் எளிமையான பொருட்களைக் கொண்டு எப்படி பயனுள்ள விஷயங்களைச் செய்யலாம் என்ற அனுபவம்.

குறைந்த இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கும், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட விரும்புபவர்களுக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீடியோவைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தவறாமல் பகிருங்கள்!

என்றும் அன்புடன்,
Indiakutty

16/04/2026

எப்பவும் கூடை கூடையா 🧺 அறுவடை பண்ணுவோம்! |🌾 ஆனா இன்னைக்கு கூடைக்குள்ளேயே அறுவடை!😍 || INDIAKUTTY

நம்ம வீட்டுத் தோட்டத்துல இந்த முறை புதுசா ஒரு Wall Garden Setup ட்ரை பண்ணினோம் 🌿
வலைய பயன்படுத்தி, மண்ணு நிரப்பி, சைட்ல செடிகள் வளர்க்குற மாதிரி செஞ்சோம்.

அதுல இப்போ கீரைகள் ரொம்ப செம்மையாக வளர்ந்து இருக்கு 😍
இன்றைக்கி அதுல இருந்து நம்ம கீரை அறுவடை பண்ணுற ஒரு சந்தோஷமான வ்லாக்! 🥬

13/04/2026

The Secret of Pure Groundnut Oil 🥜✨ | Traditional Wood Pressed Process

How to Make peanut oil (cold pressed | Wood press | Wooden Cold Pressed | Wood cold press)

for orders WhatsApp 7558121554

**Available all over India 🇮🇳

Production Process: Crushing seeds/nuts to extract oil through wooden cold pressing. That’s it

Process: Crush nuts/seeds to extract oil through wooden cold pressing. That’s it.

❌ NO added preservatives.
❌ NO chemicals.
❌ NO long list of filtering process.

✅ PURE! That’s how oil should be consumed.

✅ Pure and natural cooking and healthy lifestyle
products
✅ Wooden cold pressed oils
✅ Premium Quality products
✅ Free Shipping available** | Delivering all over India

Available products:
Wooden cold pressed oils - Groundnut oil, Coconut oil, Sesame oil,

Shop: https://maps.app.goo.gl/QcVgYdfRm4X4wz8Z8

08/04/2026

"இனி சந்தைக்கே போகமாட்டோம் 😱 | நம்ம தோட்ட காய்கறியில கூட்டான் சோறு வேற லெவல்! 🌿"

ஆடம்பரம் இல்லாத அழகான கிராமத்து வாழ்க்கை. நம்ம தோட்டத்து காய்கறிகளை பறிச்சு, தென்னை மரம் & மாமர நிழல்ல உட்கார்ந்து குடும்பத்தோட கூட்டான் சோறு சாப்பிட்ட அந்த நிமிஷம் தனி சுகம் ❤️ இந்த ஆரோக்கியமான வீடியோ உங்களுக்கு பிடிக்கும்னு நம்புறேன்!

02/04/2026

தோட்டம் சுத்தம் செஞ்சாச்சு! 🧹 குட்டி பாப்பாவுடன் பம்ப் செட் குளியல் & மரவெண்டை அறுவடை! 😍

வணக்கம் மக்களே!

இன்றைய ப்ளாக் ரொம்பவே ஸ்பெஷல். காலையிலேயே எழுந்து தோட்டத்தில் இருந்த செடி கொடிகளை எல்லாம் சுத்தம் செய்தோம். வேலை செய்த களைப்பு தெரியாமல் இருக்க, மரத்தில் தொங்கிய மரவெண்டையை அறுவடை செய்து, 'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியில் பார்த்த ஒரு சூப்பரான 'பிந்தி' (Bhindi) ரெசிபியைச் செய்தோம்.

அதுமட்டுமில்லாமல், தோட்டத்தில் பழுத்திருந்த வாழைப்பழத் தார் ஒன்றிலிருந்து பழத்தை பறித்து குட்டி பாப்பாவுக்கு கொடுத்தோம். வெயில் நேரத்தில் மோட்டார் பம்ப் செட்டில் ஷவர் போல தண்ணீர் பாய்ச்சி அனைவரும் ஜாலியாக விளையாடினோம்.

வேப்பமரத்தடியில், பறவைகளின் சத்தத்திற்கு நடுவே, விறகடுப்பு சமையல் செய்து, பழைய சாதத்தில் தயிர் ஊற்றி பிசைந்து அந்த வெண்டைக்காய் டிஷ்ஷுடன் சாப்பிட்ட போது அவ்வளவு ருசி! இந்த இனிமையான கிராமத்து அனுபவத்தை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.

வீடியோவில் உள்ளவை:

தோட்டம் சுத்தம் செய்தல்

மரவெண்டை அறுவடை

பம்ப் செட்டில் குளியல்

குக்கு வித் கோமாளி ஸ்டைல் 'பிந்தி' சமையல்

வேப்பமரத்தடியில் பழைய சாதம் விருந்து

29/03/2026

நிஜமாவே இதுக்காகத்தான் இத்தனை நாள் காத்துட்டு இருந்தோம்! 😭 கடைசியில் எங்க ஆசை நிறைவேறிடுச்சு! ✨

இன்றைய வீடியோ ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, நம்ம ஊர்ல அவ்வளவா பார்க்க முடியாத, ரொம்ப ரொம்ப ரேர் வெரைட்டியான "மதிப்பு கத்தரி" (வெள்ளை கத்தரிக்காய்) நம்ம தோட்டத்தில் சூப்பரா விளைஞ்சிருக்கு. அதை ஆசை ஆசையா அறுவடை செஞ்சு, கூடவே பீர்க்கங்காயும் பறிச்சோம்.

இந்த கத்திரிக்காய் தமிழ்நாட்டில் மிகவும் அரிதானது. முதல் முறையாக இத்தனை காய்கள் வந்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது 😍

👉 காய்களை பறித்தது
👉 அரிச்சு ரெடி பண்ணியது
👉 கருவாடு ரோஸ்ட் பண்ணி குழம்பு வைத்தது
👉 கல் செக்கில் மசாலா அரைத்தது
👉 மாமரத்தடியில் குடும்பத்தோடு சாப்பிட்டது

இதெல்லாம் ஒரு அழகான கிராமத்து வாழ்க்கை அனுபவம் 🌿

குழந்தைகள் விளையாடும் காட்சிகளும், மாம்பழங்கள் நிறைந்த மரமும், நாட்டு சமையலும் சேர்ந்து ஒரு முழு குடும்ப வ்ளாக் 🎥

இயற்கையான சூழல்ல, மாமரங்களுக்கு நடுவுல அமர்ந்து:

அம்மியில்/கல் செக்கில் கைப்பட அரைத்த மசாலா 🌶️

விறகு அடுப்பில் ரோஸ்ட் செய்த கருவாடு 🐟

தோட்டத்தில் பறித்த ஃப்ரெஷ் வெள்ளை கத்தரிக்காய் 🍆

இவை அனைத்தையும் சேர்த்து ஒரு கமகமவென குழம்பு வச்சு, மாமரத்தடியில் உட்கார்ந்து, குழந்தைகளுக்கு வடைச்சட்டி சாப்பாடு பிசைஞ்சு கொடுத்த அந்த தருணம் நிஜமாவே வேற லெவல்!

வீடியோவை முழுசா பாருங்க, பிடிச்சிருந்தா நம்ம Indiakutty சேனலுக்கு சப்போர்ட் பண்ணுங்க!

26/03/2026

😍 காலை எழுந்ததும் இயற்கையோட சேர்ந்த எங்கள் கிராமத்து வாழ்வின் ஒரு அழகான காலை 🌿🥘
இன்றைய வீடியோவில் எங்கள் கிராமத்து வாழ்வின் ஒரு அழகான காலை பொழுதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

இன்றைய சிறப்பம்சங்கள்:

விறகடுப்பு சமையல்: காலையிலேயே எழுந்ததும் விறகடுப்பில் சுடச் சுட இட்லி சுட்ட அனுபவம்.

வீட்டுத் தோட்ட அறுவடை: நம் வீட்டில் வளர்க்கும் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) புதினா செடியிலிருந்து அப்போதே பறித்த ஃப்ரெஷ் புதினா இலைகளைக் கொண்டு சட்னி அரைத்தது ரொம்பவே ஸ்பெஷல்.

ஆர்கானிக் சமையல்: நம்ம வீட்டு எலுமிச்சை மரத்தில் பறித்த பழங்களைக் கொண்டு செய்த சுவையான எலுமிச்சை சாதம்.

பாப்பாவுடன் ஒரு மார்னிங்: பாப்பாவுக்கு ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்த அந்தத் தருணங்கள்.

Unboxing: வீடியோவின் இறுதியில் வந்த ஒரு ஸ்பெஷல் கிப்ட் பாக்ஸை உங்கள் முன்னிலையில் பிரித்திருக்கிறோம். அந்த சர்ப்ரைஸ் என்னவென்று வீடியோவை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த வீடியோ உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, உங்கள் கருத்துக்களைக் கமெண்ட்டில் சொல்லுங்க. மறக்காம நம்ம 'இந்தியா குட்டி' சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க!

Want your business to be the top-listed Media Company in Erode?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Erode