Boga Strategy

Boga Strategy

Share

The Ultimate Stock Analyst

14/06/2024

என்ன தொழில் செய்தாலும் அதன் தொழில்நுணுக்கம் தெரியாமல் யாராவது ஜெயிக்க முடியுமா?

எல்லா தொழிலையும் கற்றுக் கொண்டு உழைப்பினை போட்டு லாபம் சம்பாதிக்கிறோம். ஆனால், ஷேர் மார்கெட்டில் மட்டும் காசைப் போட்டால் காசு வரணும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏனோ கற்றுக் கொள்ள நமக்கு மனசே வரமாட்டேங்குது. அவர் சொன்னார், இவர் சொன்னார்னு வாங்கி வித்து எத்தனை தடவை லாபம் பார்க்க முடியும்னு நினைக்கிறீங்க? ஸ்டாக் டிப்ஸ் கொடுப்பவரின் மன / பணநிலை வேறு நம் நிலை வேறு. அதனால் தான் எல்லா நேரமும் ஒத்துப் போவதில்லை.

இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்வது இப்பொழுதைக்கு பணம் சம்பாதிக்க மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். நிஜத்தில் அது மட்டும் பலன் இல்லை. நீங்கள் ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிறீர்கள். அதனை வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க உதவும்.

குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ர மக்கள், அவரவர் தொழில்களுடன் தன் குழந்தைகளுக்கு ஷேர்மார்கெட் தொழில் முறையையும் சேர்த்தே கற்றுக் கொடுக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் பங்குச் சந்தையில் அதிகம் கோலோச்சுகிறார்கள்.

பங்குச் சந்தை தொழில்நுட்பம் என்பது, உங்கள் மூளை செயல்பாட்டில் இருக்கும் வரை உங்களுக்கு வருமானம் கொடுக்கவல்லது. அதை நீங்களே கற்றுக் கொள்ளும் பட்சத்தில் தான் அது உங்களுக்கு கடைசி வரை உதவும்.

உங்கள் தேவைக்கேற்ப , உங்கள் புரிதலுக்கேற்ப எங்கேயாவது, யாரிடமாவது ஷேர்மார்கெட் டெக்னிகல் கற்றுக் கொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தாலும், சுயமாக கற்றுக் கொண்டவர் ஏகலைவன் மட்டுமே. நாமெல்லாம் ஏகலைவன் இல்லை.

ஷேர்மார்கெட்டைத் தொழிலாக மதித்து கற்போம். அதுவும் ஒரு தொழிலாக உங்களை மதித்து பணம் கொடுக்கும்.

Boga Strategy
8248267159

14/06/2024

நிஃப்டி பாபா இன்னிக்கு 23280 - 330க்குள் செட்டில் ஆவார் என்று Boga Strategy சொல்றாரு.

இந்த வாரத்தை முழுசா முழுங்கி, தூங்கிட்டிருக்கும் நிஃப்டி பாபாவுக்கு சனி, ஞாயிறு திங்கள் மூன்று நாட்கள் லீவு விட்டு நல்லா ஓய்வு கொடுக்கும் NSE India வின் அக்கறையைப் பாராட்டுவோம்.

அடுத்த வாரமாவது சார்ஜ் ஏத்திட்டு ஆக்டிவா வாங்க பாபா.

நாமளும் ஞாயிற்றுக் கிழமை போகா ஸ்ட்ராடஜி வகுப்பில் கலந்து படித்துவிட்டு புதுசா வருவோம்.

வாழ்த்துகளுடன்,
Able Arrows,
96773 86773

16/05/2024

அடுத்த டார்கெட் 22440...
அதுக்கு கீழே22160க்கு கீழே க்ளோஸ் ஆகக் கூடாது.

தடாலடியாக இப்பொழுது ஏறாது. இந்த மாதம் கடைசிக்குள் ஆல் டைம் ஹையை உடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

பேங்க் நிஃப்டி 48870க்கு மேல் க்ளோஸானால் அவர் பங்கிற்கு அவரும் மேல் நோக்கி நகர்வார். 47600க்கு கீழ் க்ளோஸானால் மேலும் கொஞ்சம் சரியலாம்.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy,
9677386773

10/05/2024

ஒரு முக்கியமான சப்போர்டை உடைத்து, இன்னொரு முக்கியமான இடத்தில் சப்போர்ட் எடுத்திருக்கிறார். நேற்று வரை 22147 சப்போர்டை உடைக்காது என்றே நினைத்திருந்தேன்.

இன்றைக்கு 22147க்கு மேல் க்ளோஸாகவில்லை என்றால், நிஃப்டியின் டார்கெட் கீழே 21700 ஆகிவிடும். அதனால், இன்றைக்கு கிட்டத்தட்ட 200 பாய்ண்ட்கள் மேலே ஏறி முடிவடைய வேண்டும். பேங்க் நிஃப்டி 47550 மேல் க்ளோஸாக வேண்டும்.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy
96773 86773

08/05/2024

மேலே இருந்து இன்னும் 3% கூட முழுசா விழல. அதற்குள் சிலர் பதட்டப்படுகிறார்கள். 22140 வரை கூட கீழே வரலாம்.

இதான் ரேஞ்ச் பௌண்ட் . இந்த மாத இறுதிக்குள் இன்னும் இரண்டு சைக்கிள்கள் இது போல நடக்கலாம். ஏற்கனவே சொன்னது தான். இது ஸ்விங் ட்ரேடர்களுக்கான காலமல்ல. இண்ட்ரா டே மற்றும் பிடிஎஸ்டி ப்ளேயர்களுக்கான காலம்.

கவனமா, சரியான ஸ்டாக்கைப் பிடித்து ட்ரேட் பண்ணவும்.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy

06/05/2024

இந்த மாசம் எப்படிடா கழியும்னு எல்லா ஸ்விங் ட்ரேடர்களும் விரக்தில தான் இருக்கோம்.

இண்ட்ரா டே & BTST -STBT ட்ரேடர்கள் மட்டும் சந்தோசமா இருப்பாங்க. எலெக்‌ஷன் ரிசல்ட் வர்ற அன்றைக்கு அல்லது அதற்கு சற்று முன்பு 23770ஐத் தொடலாம்.

அதுவரை, “ஒரு நாள் வருவார் ஒரு நாள் போவார்... ஒவ்வொரு நாளும் ....” என்று பாட்டுப் பாடிட்டே இருக்க வேண்டியது தான்.

நிஃப்டி பற்றிய தினசரி அப்டேட் கொடுக்கிற அளவிற்கு அடுத்த 20 நாட்களுக்கு பெரிதாக ஒன்றுமில்லை.

அதுவரை, ஏதாவது ஸ்டாக்குகளைப் பற்றி கேளுங்கள். பதில் சொல்கிறேன். கேட்கும் போது, ஹோல்டிங் பீரியட் எவ்வளவு என்பதுடன் கேளுங்கள் ப்ளீஸ்.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy

03/05/2024

இன்றைக்கு 22625க்கு மேல் நிற்கும் வரை காளைகளின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். கொஞ்சம் ஸ்ட்ராங் க்ளோஸாக இருக்கும் பட்சத்தில் அடுத்த வாரமே 23120 என்ற இலக்கைத் தொட அதிக சாத்தியம் உண்டு.

இன்றைக்கு ஐடி ஸ்டாக்ஸ் ஒரு ஷார்ட் கவரிங் கொடுக்கவும் பெரிய வாய்ப்பிருக்கிறது.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy
8248267159

02/05/2024

மறுபடியும் அதே 22770 ஏரியாவில் முட்டிட்டு நிற்கிறது.

இன்னும் ஆயிரம் பாய்ண்ட் ஏறணும். அத்ற்கு இன்னும் 24 ட்ரேடிங் டே இருக்கிறது. அதுவும் இந்த மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் மட்டுமே குறைந்தது 500 பாய்ண்ட்கள் ஏறும்.

அப்ப மீதமுள்ள ஐநூறு பாய்ண்ட்கள் ஏற 20 நாட்களா? அப்படியென்றால் நிச்சியம் ஒரு சின்ன இறக்கம் அல்லது ஐம்பது ஐம்பது பாய்ண்ட்களா ஏறணும்.

நல்ல ஸ்டாக்குகளை வாங்கி வைத்து பொறுமையாகக் காத்திருந்து ட்ரேட் பண்ணுங்க.

22560க்கு கீழ் நின்றால், 22350 வரை கீழே வர வாய்ப்பு இருக்கிறது.

Boga Strategy.

30/04/2024

நேற்று போன ரேலி, நான் எதிர்பார்த்த பேட்டர்ன் அமைவதாக இல்லை.

காளைகள் மிக உக்கிரமாகக் கிளம்பத் தொடங்கியிருக்கிறது. நிஃப்டியின் உச்சம் தொட இன்னும் ஆயிரத்து நூறு பாய்ண்ட்கள் தான் பாக்கியிருக்கிறது.

பேங்க் மற்றும் ஃபினான்ஸியல் ஸ்டாக்குகள் ரேலியின் லீடர்கள்.

29/04/2024

இன்றைக்கும் நாளைக்கு வாலட்டைல் மார்கெட். நாளை நிஃப்டி 22450 பக்கமாக முடிவடையும்.

மற்றபடி ஸ்டாக்குகள் / செக்டார்கள் அடிப்படையில் கவனித்து ட்ரேட் பண்ணவும்.

அடுத்த மாதம் 23770 ஐ நோக்கி ஒரு சூப்பர் டூப்பர் ரேலி இருக்கலாம்.

வாழ்த்துகளுடன்,
Boga Strategy
8248267159

Want your school to be the top-listed School/college in Erode?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Erode

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm