Surya Communication
Surya Communication - General Insurance, Health, Travel Insurance Life Insurance Services, Mutual Fu Now, we have added more services LIFE & GENERAL INSURANCE.
The company was started in view to provide the Telecommunication Services in Sampath Nagar,
We are providing Travel / Tickets Booking, Hotel Bookings, booking of the Tirumala Sevas, Sabarimala Dharsan! We do expertise in the Motor Insurance, Health Insurance is one more feather to our services.
17/02/2025
அன்பார்ந்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும்,
எங்கள் மகள் செல்வி மோக்ஷா தனது முதுநிலை கல்லூரி படிப்பில் Case Study புராஜெக்டிற்கு வேண்டி இந்த சர்வே எடுக்கிறார், தாங்கள் இந்த சர்வேயில் பங்கெடுக்க வேண்டும் என்பது எனக்கு மகிழ்ச்சி மற்றும் தேவையும் கூட!
ஒரே நாளில் குறைந்தது 150 நபர்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதால், தாங்கள் அவசியம் பங்கெடுப்பதிவுடன் தங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களையும் பங்கெடுக்க கேட்டுக்கொள்ளவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeqQKUKk-TlvjKyQGxZDgSj4hSyYhB6_eKkhONvL9DpKZAc3w/viewform?usp=dialog
தங்களின் பொன்னான நேரத்தை கொடுத்தமைக்கு நன்றி!
இப்படிக்கு,
K K தினேஷ்குமார், ஈரோடு.
ULIP Returns and Inflation Impact for Different Income Groups Dear Respondent, I am conducting a study on how inflation affects the returns on Unit-Linked Insurance Plans (ULIPs), particularly for investors across different income levels. This survey aims to understand how policyholders perceive inflation’s impact on their ULIP investments and financial deci...
15/01/2022
அன்றைய தினம்... (1997 - 2013) - Telecom, Internet Service Provider
இன்றைக்கு...
(Since 2003) - Insurance, MF Investment Distribution & Advisory Services
03/11/2021
12/08/2019
எங்கள் குடும்பமும் அருகில் உள்ள குடும்பத்தாரும் சேர்ந்து கொண்ட ஒரு பயணம்... அது உண்மையில் ஒரு ஆனந்த அனுபவம்!
இருவீட்டு பிள்ளைகளின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு... பயணம் செல்கிறோம் என்று முடிவெடுத்த தருணத்திலிருந்து!
ஒரு வாரம், 6 நாட்கள்.... ஒரு நாள்... நாளை விடியற்காலை என்று நாட்கள் எண்ணப்பட்டு குதூகழித்த அவர்கள், பயண ஏற்பாடுகளாக குத்துப்பாட்டு, நடனத்திற்கு பாட்டு, இரவு நேர பயணத்திற்கு என்று பாட்டுகள் விரலியில் பதிவு செய்யப்பட்டு தயார்!
வீட்டு மகளீருக்கு சமையல் கட்டிலிருந்து இரண்டு நாட்கள் விடுதலை என்பதே பயணத்தின் உள்நோக்கம், புரிந்து கொண்ட நாங்கள் அனைவரும் ஒத்துழைத்தோம், நமக்கும் இரண்டு நாட்கள் விடுதலை என்பது 'பின் குறிப்பு'! அவர்களும் அனுபவித்தார்கள், அவர்களுடன் கணவன்மார்களும்!
அது ஒரு கோடைகால ஆரம்பம், ஏப்ரல் கடைசி நாட்கள், இரண்டு பகல் ஒரு இரவு!
பிரயாணம் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் என்பதால், அரசு வன இலாக்கவின் கட்டுப்பாட்டில் தான் தங்கும் விடுதிகள் உள்ளது, டாப் ஸ்லிப் (https://www.atrpollachi.com/where-to-stay/) அல்லது பரம்பிக்குளம் (http://www.parambikulam.org/ #) இணையதளத்தில் மட்டுமே சரணாலயத்தில் தங்குவதற்கான இடம் முன்பதிவு செய்ய வேண்டும். தனியாருக்கு இதில் உரிமையில்லை!
பிரயாணம் செய்வதிலேயே நேரம் கழித்து விட கூடாது என்பதுவாக பிரயாண திட்டம் இருக்க, அதிகாலை 2:30 மணிக்கு பிரயாணம் தொடங்கியது. பிரயாணம் ஈரோடிலிருந்து காங்கேயம், பொள்ளாச்சி, வேட்டைக்காரன் புதூர் வழியாக டாப் ஸ்லிப், அங்கு செல்வதற்கு முன்பாக பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் தரிசனம், முதல் தரிசனம் அபிசேகம், ஆராதனைகள், குடும்ப அர்ச்சனை முடித்துக்கொண்டு, மன மகிழச்சியுடன் பிரயாணம் தொடர்கிறது.
தங்கும் விடுதிகள் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தங்கும் விடுதிகள், அங்கு கிடைக்கும் உணவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், அப்படி சென்று தங்கும் விடுதிகள் அருகிலேயே அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு குடும்பம் நமக்கு உணவு சமைத்து கொடுக்க இருக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண் அலுவலகத்தில் பெற்று, செல்வதற்கு முன்பே தொடர்பு கொள்வது நன்று. குழந்தைகளுக்கு தேவையான பால், தயிர், மற்றும் அனைவருக்கும் தேவையான அளவு இறைச்சி கொண்டு செல்ல வேண்டியது அவசியம், இல்லையென்றால் மீண்டும் நாம் சமதளதிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும்.
நாங்கள் அப்படியே திரும்பி வேட்டைக்காரன் புதூர் வந்து இறச்சி மற்றும் பால் பொருட்கள், மேலும் இரவு வெளியில் வரமுடியாது என்பதால் உள் விளையாட்டு உபகரணங்கள், பந்து, சீட்டு கட்டு போன்றவற்றை வாங்கி கொண்டோம்.
மது பானங்களுக்கு அனுமதியில்லை, இரவில் சத்தாமாக இசை கருவிகள், மற்றும் இசை தட்டுகள் இசைக்க அனுமதியில்லை.
நாங்கள் தங்கியிருந்த அம்புலி இல்லம் டாப் ஸ்லிப் உள்ள சில சிகரங்களில் ஒன்று உச்சம், நிசப்தம் விடுதியை தவிர எங்கும் மின் விளக்குகள் கிடையாது. சுற்றும் முற்றும் பார்த்தால் கறுகும் இருட்டு. இரவு முழுவதும் மின்மினிப் பூச்சிகளின் விடுதியை சுற்றி அருகில் இருந்த மரங்களிலும் செடிகளிலும் பண்டிகை காலங்களில் தொடர் விளக்குகள் கட்டியது போல் அலங்காரம் செய்து கண்ணிற்கும் மனதிற்கும் இதமாக இருந்தது. வன விலங்குகள் வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்க, இருட்டில் அருகில் இருந்தால் கூட தெரியாது, திக் திக் என்று இருந்தது இரவு அனுபவம்.
டாப் ஸ்லிப் தங்கும் அனுபவம் சிறப்பு, மேலும் யானையின் மீது சரணாலயத்தில் ஒரு உலா, அது ஒரு புது நல் அனுபவம் மற்றும் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் அரசு கொடுத்த பேருந்தில் 2 மணி நேர காட்டுக்குள் பயணம், வழிகாட்டி ஒவ்வொரு இடத்தையும் சுட்டிக்காட்டி தமிழிலும் மலையாளத்திலும் விளக்கி கூற, மேலும் கர்ம வீரர் காமராஜர் காலத்தில் தான் இவ்விரு சரணாலயங்கள், பரம்பிக்குளம் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரமும் முன்னேறியது என்று வழிகாட்டி கூறும் போது, அவர் மேல் இருந்த மதிப்பு மேலும் அதிகமானது!
அடுத்தநாள் காலை சரணாலயத்தில் இருந்து கிளம்பி வீடு திரும்பும் வழியில் அமைந்துள்ளது சேதுமடை அங்கே ஆழியாறு அணையில் திறக்கும் தண்ணீர் சேதுமடையில் ஓடை போல வர நன்றாகவே குளித்து விளையாடி மகிழ்ந்தோம், அங்கு குளித்து விளையாடிவிட்டு மாலை கிளம்பி், முன்னிரவு வீடு திரும்ப நல்லதொரு பிரயாணம்!
குறிப்பு: இந்த இரு சரணாலயத்திற்கு சென்று தங்குவதற்கான உகந்த காலம், ஜூலை - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பசுமையாக இருக்கும்.
தீபாவளி திருநாளிலிருந்து நம் அனைவருக்கும் இந்த தீபத்தின் சுடரொளி போல பிரகாசமாய் வாழ்க்கை செம்மை அடைய வாழ்த்துக்கள்!💐
13/08/2018
மத்திய அரசின் *‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா"* பற்றி விரிவாக எனக்கு தெரிந்தவரை எழுதியுள்ளேன் இதை எல்லோரிடமும் கொண்டு போய் சேர்ப்பதை உங்களிடம் விடுகிறேன்... ஏதேனும் தவறு இருந்தால் குறிப்பிடவும்... உங்களால் முடிந்த வரை அனைவருக்கும் எடுத்து கூறவும்... நன்றி 🙏🙏🙏🙏
உங்கள் அனைவருக்குமான வேண்டுகோள்!!!!
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும்
*"ஆயுஷ்மான் பாரத் யோஜனா"*
என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நமது பாரத பிரதமர் அவர்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் மொத்தம் 50 கோடி ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்.....
No-1. முதற்கட்டமாக கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற கூலி தொழிலாளர்கள் உட்பட 10.74 கோடி மக்களுக்கு இதனைக் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
No-2. வங்கி கணக்கு வைத்திருக்கும் 70 வயதுக்குட்பட்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்
No-3. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு பெற முடியும்.
ஆண்டிற்கு ₹1000.00 ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
No-4. பணம் செலுத்தாமலேயே, நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
No-5. இத்திட்டத்தின் கீழ், 100 நோய்களுக்கும் மேல் சிகிச்சையளிக்கப்படும்.
No-6. தடுக்கக் கூடிய 70 நோய்களுக்கும், மற்றும் புற்றுநோய், இதய நோய் போன்ற, ஆபத்து மிக்க, 30 நோய்களுக்கு கட்டாயம் சிகிச்சையளிக்கப்படும்.
No-7. ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் பயனாளியாக இணைய ஆதார் அவசியமில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் இத்திட்டத்தில் பயனாளியாக இணைய முடியும்.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி பயன்பெறுங்கள்...
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். குறள்: 948
... ஜெய் ஹிந்த் ...
04/03/2018
For your Insurance needs you may call me at 9842279643 K K DINESHKUMAR.
17/10/2017
அன்பு நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்கு, தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றியுடன் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
24/06/2017
Friends, hope you all are aware of Central Government on implementation of new GST (Goods and Service Tax), in insurance sector the new tax is 18%, 3% hike from the prevailing rate of 15%.
So, you may call us on or before 29th June 2017 to renew your insurances at current rate.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
107/7, Ist Floor, Selvam Nagar, 2nd Street, Kumalan Kuttai
Erode
638001